May the whole world may enjoy prosperity, happiness, wisdom and peace
May the whole world may enjoy
வாழ்க வளமுடன்

இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களது பணிவான வணக்கங்கள்.

எங்கள் தந்தை இயற்கையுடன் இணைந்து 11 வருடங்கள் ஆனபிறகு மிக தாமதமாக இந்த இணையத்தை உருவாக்கி உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம்.

தாமதத்திற்கு சிலபல காரணங்கள், இருப்பினும் 2011 –ஆம் ஆண்டு இணையதள உருவாக்கம் ஆரம்ப கட்ட வேலை ஆரம்பித்து நிறுத்தப்பட்டது, முழுமையான காரணம் அறியோம். அதன் தொடர் நிகழ்வாக, பாண்டிச்சேரியை சேர்ந்த திரு தேவிதிருவளவன் ஐயாவின் சீரிய முயற்சியின் பயனாக ஒரு புத்தகம் உருவாக்கும் பணி தொடங்கியது. (மாமனிதர் K.G சாமி) அதன் வெளியீட்டு விழா மட்டும் 2015 MAY 02 ஆம் தேதி புதுவையில் நடந்தது. புத்தகம் பொது பார்வைக்கு இல்லாமலேயே.

மேலும் சமீபகால முன்னேற்றமாக பல வாட்சப் குருப்புகள் ஆன்மீகத்திற்கு என ஏற்படுத்தப்பட்டு அவற்றுள் சில, பல நல்ல தகவல் களமாக செயல்படும் விதத்தை பார்க்கும் வாய்ப்பு அமைய பெற்றோம்.

அவற்றில், எங்கள் தந்தையின் ஆன்மீக உரைகள் பகிரப்பட்டு வந்ததை அறிந்தவுடன், அவை யாரிடம் இருக்கும் என அறிய ஆவல் கொண்டோம். இந்த ஆர்வத்திற்கு முதல் காரணகர்த்தா தெய்வதிரு பேராசிரியர் அந்தியூர் ரவி அவர்களே.

அவற்றில், எங்கள் தந்தையின் ஆன்மீக உரைகள் பகிரப்பட்டு வந்ததை அறிந்தவுடன், அவை யாரிடம் இருக்கும் என அறிய ஆவல் கொண்டோம். இந்த ஆர்வத்திற்கு முதல் காரணகர்த்தா தெய்வதிரு பேராசிரியர் அந்தியூர் ரவி அவர்களே.

அவரின் கடின உழைப்பு, மூலம் திரட்டப்பட்ட 41 தலைப்புகள், அடங்கிய ஆன்மீக உரை தொகுப்பு எங்களின் தந்தையை இன்றைய தலைமுறையினரிடமும் அறிமுகப்படுத்தியது.

எங்கள் தந்தையின் 40 வருடகால வேதாத்திரிய தொடர்பு, தொண்டு, அதற்கான உழைப்பு என கண்டு வளர்ந்த எங்களுக்கு, ஆன்மீகம் அந்நியமாகவே இருந்தது என்பதை ஒளிவின்றி ஒப்பு கொள்கிறோம்.

இவற்றிடையே, தெய்வத்திரு, அந்தியூர் ரவி அவர்களால் எங்களுக்கு அளிக்கப்பட்ட, உரை தொகுப்பை கேட்கும் போது, ஆன்மிகக் கருத்துக்களை வேதாத்திரிய விரிவுரைகளை இவ்வளவு எளிமையாக புரியும் வண்ணம், எள்ளளவும் வேதாத்திரிய சிந்தனையில் இருந்து, வழுவாமல் பிறழாமல் திரிபு செய்யாமல் கூறிய பாங்கு நினைத்து ஆச்சரியப்பட்டோம்.

எங்களின் குடும்ப நிகழ்வுகளை, வேதாத்திரியின் பாடத்தின் மேற்கோளாக சொன்ன விதம் எங்கள் ஆர்வத்தை தூண்டியது. எங்கள் குடும்ப நிகழ்வுகள் மீண்டும் நினைத்து பார்க்க உதவியது.

K.G சாமியை நேரில் சந்தித்திராத சில நல்லவர்களின் உதவியுடன் பல ஆன்மிக உரைகள், கைவரபெற்றோம்.

இவையுடன் சேர்ந்து, அவரின் புகைபடங்களின் தொகுப்பு சேர்க்கும் கோரிக்கையை தெரிந்த அறிந்த பலருக்கு வேண்டுகோள் ஆக்கினோம். பலர் எங்கள் கோரிக்கையை படித்தனர். மறந்தனர். சிலர் எங்கள் கோரிக்கையை ஏற்று K.G சாமியின் எழுத்துக்கள் புகைப்படங்கள், உரைகள் கொடுத்து உதவினர். சிலர் எங்கள் கோரிக்கையை மற்றவருடன் பகிர்ந்து எங்களுக்கு உதவினர்.

இந்த சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட எங்களுக்கு பல அனுபவங்களை கிடைப்பதற்கு, நிதர்சனங்களை உணர்ந்து பார்க்க இயற்கையுடன் இணைந்த K.G சாமியின் ஆற்றல் வழிகாட்டியது.

K.G சாமி அவர்களின் அனுக்க தொண்டர்கள், சிஷ்யர்கள் என கூறிக்கொண்டவர்கள் அனு அளவும் அசையாமல் உதவினர்.

எங்கள் தந்தையின் ஆன்மிக நற்பிரதிபலிப்பை முகமறியா அன்பர்கள் வலிய முன்வந்து உதவுகையில் முகமறிந்து அவரின் ஆன்மிக வட்டத்துக்குள் கூடவே வலம் வந்த அவரின் சிஷ்யர்களால் (?) அவ்வுதவி கிடைக்க பெறாததை கண்டு ஆச்சரியம் கொள்கிறோம். அல்லதை தவிர்த்து நல்லதை நினைத்து எங்களின் “ஒலிநாடா மற்றும் புகைப்படங்கள் தேடல்” முயற்சியை தொடர்கிறோம்.

அடுத்த தலைமுறையினருக்கும், நிகழ்கால ஆன்மீக ஆர்வாளர்களுக்கும் எங்களின் இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்பதுடன், எங்கள் தந்தையின் ஆன்மிக உழைப்பு, அர்பணிப்பு, வேதாத்திரியின் மேல் கொண்ட அன்பு, வேதாத்திரியத்தின் மேல் இருந்த பற்று, புலமை, அவரின் எழுத்தாற்றல், கவிதை எழுதும் திறன், பேச்சாற்றல் ஊருக்கு உதவும் பண்பு, 40 வருடகால தவ வாழ்க்கை உலகம் அறிய செய்ய வேண்டும், எங்களின் தந்தையின் புகழ் உழைப்பு உணரபட வேண்டும் என்ற சுய நலம் சார்ந்த முயற்சியே இந்த இணையதளம்.

இதைபடிக்கும், உங்களுக்கு எங்களின் அன்பான வேண்டுகோள்.

  • உங்களுக்கு K.G சாமியுடன் அறிமுகம் இருந்தால் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
  • அவரின் உரைதொகுப்பு, எழுத்து, கருத்துபதிவுகள், புகப்படங்கள் இருந்தால் பகிரவும்.
  • இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களுக்கு ஆன்மிக ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
  • இந்த இணையதளம் உங்களுக்கு எந்த வகையிலும் ஏற்புடையதாக இருந்தால் எங்களை வாழ்த்துங்கள்.
  • உங்களுக்கு உள்ள கருத்து வேறுபாடுகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முடிவாக வேதாத்திரி மகரிஷியை தாத்தா என்று அறிந்த எங்களுக்கு, அவரின் ஆசிர்வாதமும், எங்கள் தந்தையின் வழிகாட்டுதலும் துணை இருக்கும் என நம்பும்….

வாழ்க வளமுடன்

  • கனக திருமேனி
  • கனக அருண்மொழி
  • கனக இனியன்
  • கனக ஞான குரு

Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami
Life History of KG Sami