KG Sami1937 — 2006

அருளும் பொருளும்

Signed Granthaalayam

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)

பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.

ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத் தேவை யானது.  இதனை காசு, பணம், பண்டங்கள் என வகைப்படுத்தலாம்.

மற்றொன்று:   உறுதியாக இருப்பது, நிலையாக இருப்பது. இதனைக் கருத்தில் கொண்டு தெய்வத்திற்கும், பொருள் என்றனர். இதில், குழப்பமில்லாமல் இருப்பதற்காக தெய்வத்தைப் பரம்பொருள், மெய்ப்பொருள் என்றனர் தமிழர்கள்.

தெய்வம் 

நான்கு நாட்கள் அன்ன ஆகாரமின்றி பட்டினி கிடந்தவனுக்கு உணவே தெய்வம். நான்கு வருடம் தொழில் சரிவர இல்லாமல் இருப்பவனுக்கு தொழிலே தெய்வமாகத் தோன்றும்.

இதனையே மையப்படுத்தி நமது முன்னோர்கள் இறைவன் அன்னமயம் என்றும் செய்யும் தொழிலே தெய்வம் என்றும் போற்றி வந்தனர்.

எனவேதான் தெய்வத்திற்கு நிகராக காசு பணத்தையும், காசு பணம் சம்பாதிப்பதற்கு ஆதாரமாக உள்ள உத்தியோகத்தையும், தெய்வமாகவே போற்றினர். எனவேதான் இதனை மதிக்கவும் செய்தனர். வள்ளுவமும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனப் பகர்கின்றது. பொருள் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை  நடத்த முடியுமா? முடியாது. எனவேதான் காசு பணத்தை  தெய்வத்திற்கு நிகராக மதிக்கிறோம். பொருள் என்றாலே தெய்வத்தைத்தான் குறிக்கும். பொருளின் மதிப்பை உணர்ந்ததால் தெய்வத்துக் குண்டான பெயரைக் கொண்டு வந்து காசு பணத்திற்கும் பொருள் என்று  வைத்தார்கள்.

காசு, பணம் இவற்றைப் போற்றக் கூடியவர்களாக பாது காக்கக் கூடியவர்களாக, நாம் இருக்கலாம். ஆனால் நாம் அதற்கு அடிமையாகிவிடலாமா!

 

போதை

போதையிலே பல போதை உண்டு. அதெல்லாம் நமக்குத் தெரியும். சேர்த்து வைக்கிறது ஒரு போதை. மேலே மேலே சேர்த்து வைக்கிறது ஒரு போதை. எண்ணி எண்ணி பார்க்கிறது ஒரு போதை.

காசைக்கொண்டு பின்வரும் காலத்திற்கு பயன்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் சேர்த்து வைத்தனர் - ஒரு  எறும்பு மாதிரி, ஓரு எலி மாதிரி... சேர்த்து வைத்த இருப்பு இருந்தால்தான் இவனுக்கு தைரியமே.

இதன் காரணமாக காசு சம்பாதிக்கணும், காசு சம்பாதிக் கணும், நிறைய காசு சம்பாதிக்கணும், எப்படியாவது சம்பாதிக்கணும், திருடியாவது சம்பாதிக்கணும், பொய் சொல்லி யாவது சம்பாதிக்கணும், கொலை பண்ணியாவது சம்பாதிக்கணும், அடிச்சுப் பிடிங்கியாவது சம்பாதிக் கணும்... என்ற வெறியில் இறங்கிவிட்டான். இந்த காசு சிந்தனையில் இறங்கியவனுக்கு வேறெந்த சிந்தனையும் வரவில்லையே! சிந்தனைக்கு மயக்கம் வந்து விட்டதே! அதனாலேதான் பொருள் மயக்கம் என்றனர் நமது முன்னோர்கள். இதைத்தான் ஆசை என்றும் ஆசையே துன்பத்திற்கெல்லாம் காரணம் என்றும்   சொன்னார்கள்.

தேவை என்ன, என்ற கணக்கீடும் தேவைக்கு மேல் வரும் காசை நல்லவர்க்கும் நற்சிந்த னையாளர்க்கும் நல்ல காரியங் களுக்கும் தர்மம் செய்யலாமே -  இதுவும் கூட ஞானமல்லவா.  

ரொம்ப முக்கியமானது காசு, காசு இல்லைனா செத்தே போயி  டுவோம் பட்டினியால்.. இங்கே தான் காசு பணம் எவ்வளவு  நமக்குத் தேவை என்று எடை போட்டு பார்க்கத் தெரியணும். தேவைக்கு மேல் வந்து போச்சுன்னா ...

தேவை என்பது ஒரு சமயம் குறைவாகவோ மற்றொரு சமயம் கூடுதலாகவோ இருக்கும் என்பதால் தேவைக்கு மேல் சம்பாதிக்க  வேண்டும்.

விளைவை எண்ணி யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்ற புத்தி வந்து விடும் இதுவே  ஈகை.                     

பொருளாதாரம்

ஆகவே, பொருளாதாரத்திலே நான்கு அங்கங்கள் உண்டு. அவையாவன

1.  ஈட்டல் (சம்பாதித்தல்)

2.  காத்தல் (சேமித்தல்)

3. துய்த்தல்    (பண்டமாக, பொருளாக மாற்றி நற்காரியங் களாக அனுபவித்தல்)      

4. பிறர்கிடுதல்(வறியோர்க் கும், நல்லோர்க்கும் கொடுத்தல்)

ஈதல்

இப்படிப் பார்க்கும்போது நல்லவர்களுக்கு பணத்தைக் கொடுப்பதை ஈதல் என்றும், நல்ல விஷயத்திற்காக கொடுப்பதை அருளுதல் என்றும் சொல்வ துண்டு.

தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் இவனது தேவையை குறைத்துக் கொண்டு துன்பப் படுகிறவர்களுக்கு உதவுதல், இது தெய்வீக குணம். தெய்வம் மட்டுமே பிறர் நலம் கருதும். பிறருடைய நலனை யார் கருதுகிறார்களோ அவர்களே அருளாளர்கள். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் கொடுக்கும் ஈகை குணமும் உண்டு. இக்குணமே இறைகுணம். அதுவே  இறைவன், தெய்வம்.

இறைவன் எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருப்பான். கொடுத்துக் கொண்டே இருப்பவனும் இறைவன்தான்.

ஈகை செய்திடுவோம்  

தெய்வம் கொடுப்பதற்காகவே இருக்கிறது. அருள் என்பது தெய்வீகம். பொருள்(காசு) என்பது லௌகீகம்.

வாங்கும் கடனும் தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுக்கும் இது நமது மஹரிஷி அவர்களின் கருத்து. இதனைக் கருத்தில் கொண்டு ஈகை என்ற பண்பின் மூலம் கொடுப்பது புத்திசாலித்தனம். நம்மிடம் இருப்பதை பிறர்க்குக் கொடுத்தால் இந்த இடத்தினை நிரப்பிட வரும். வரும்., ஏனென்றால் கொடுப்பவன் இறைவனே. எனவே கொடுத்தால் வரும் - கொடுக்க கொடுக்க வரும்.

செயல்படுத்திப் பாருங்கள். நன்மை நிச்சயம் விளையும்.

- நினைவில் உங்களோடு., Kgs.

Keep reading

More from the archive

Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

KG Sami

தவம் – 37

தலைகீழாக நிற்பது உண்டு. கும்பகம் முதலான பிராணயாமப் பயிற்சிகள் செய்து அதனால் ஏற்படக்கூடிய சூட்டினால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கக் கூடிய…

Kannimuthu

அறம் + தவம் = அருள்

அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது, அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன?…

KG Sami

தவம்-13

ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஐயோ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட வில்லையா ? நீங்கள் தவம் செய்யவில்லை…

Muthappan

பூக்களும், பூவையரும்

முப்பது ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் எங்கள் ஊருக்கு மாதாந்தோறும் வருவார்கள். 3 நாள் இருப்பார்கள். 3 நாளும் நான் உடன் இருப்பேன் எல்லோருக்குமாக அவர்கள்…

KG Sami

தவம் - 3

மிகப் பழங்காலத்தில் பிராணாயாமத்தில் மூலம் அவரவர்களும் தாங்கள் மூலாதாரத்திலிருந்து உயிர்ச் சக்தியை ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வருவார்கள்.…