KG Sami1937 — 2006

தவம் – 26

Signed KG Sami

என்ன வேண்டும் உங்களுக்கு? சள்ளை இல்லாமல் வாழ வேண்டும். அவ்வளவு தான். சரி அப்புறம் பரவச நிலைக்கு வாங்க. அங்கே ஒரு சள்ளையும் கிடையாது. மனதை மட்டும் அங்கே வைத்துவிட வேண்டும்.

மனம் அங்கேயே இருந்து கொண்டிருக்கும் பட்சத்தில் உலக வாதனைகள் நம்மைப் பின் தொடரா. நாம் நாமாக இருக்கலாம். இறைவனாக இருக்கலாம். அதுவாகவே இருக்கலாம். அந்த நிலையை இறுதி நிலையை எய்துவதற்கு இந்த நித்யானந்த தவம் உதவும். எய்தியதை கை நழுவ விடாமல் இருப்பதற்கு இந்த தவம் உதவும்.

அந்தப் பரவச நிலையை சிவகள நிலையிலும் நாம் அடைகிறோம். பஞ்சபூத நவக்கிரக தவ நிலையிலும் நாம் அடைகிறோம். ஆனால் இது வித்தியாசமானது. அடைந்தால் அடைந்தது தான். அப்படியே இருக்கலாம். அதுவாகவே இருக்கலாம். அது நம்மை விடாது. அந்த விளக்கத்தைத் தான் நாம் இப்போது பார்த்தோம். மகரிஷி எவ்வளவு கெட்டிக்காரர் என்றால் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் சில சமயம் மறந்திடுவாங்க நம்ம மக்கள். அதனால் மறவாத நிலையை இயல்பாக இருக்கக்கூடிய ஒரு தவத்தை கொடுத்திருக்கிறார். அதுதான் நித்தியானந்த தவம்.

நீங்கள் எல்லோரும் காந்த தத்துவம் தெரிந்தவர்கள். அதனால் இதை விளக்கிச் சொல்வது ரொம்ப எளிது. தெய்வம் வேறு, காந்தம் வேறு இல்லை. வார்த்தை தான் இரண்டாக இருக்கிறதே தவிர விஷயம் ஒன்றுதான். தெய்வம் வேறு, காந்தம் வேறு இல்லை.

அந்தத் தெய்வம் சிலிர்த்தது. இறைத் துகள்கள் திரண்டன. விண்ணாக மாறியது. விண்ணிலே இருக்கக்கூடிய சுழற்சி, சுழல், அலை விரிவலையாக மாறியது. விரிவலை என்றால் என்ன? ஒரு Centre Point இருக்கும். ஆனால் வட்டம் இருக்காது. Circle என்றால் ஒரு Centre Point-ம்,  Circumference என்று சொல்லக்கூடியது. இவ்வளவுதான். இப்படியும் சொல்லலாம். Centre Point இருக்கும். Radius இருக்காது என்றால் Circumference-க்கு எங்கே போறது? சின்ன வட்டம், பெரிய வட்டம் எப்படிச் சொல்வது?

ஆகவே விரிவலை என்பது விரிந்து கொண்டே இருக்கும். அது அதுக்கு நிரந்தரம். விரிந்து கொண்டே, விரிந்து கொண்டே இருக்கும். ஆனால் எங்கிருந்து விரிந்து கொண்டே இருக்கும். விண்துகளிலிருந்து விரிந்து கொண்டு இருக்கும். விண்துகளிலிருந்து எந்த இடத்திலிருந்து விரிந்து கொண்டு இருக்கும். மையத்திலிருந்து விரிந்து கொண்டே இருக்கும். மையத்தில் என்ன இருக்கிறது? சுத்தவெளி இருக்கிறது. அப்போ சுத்தவெளியானது சுத்த வெளியிலிருந்து சுழன்று எழுந்து தன்னை நாடிச் செல்கிறது.

அப்போ சுத்தவெளி எங்கே இருக்கிறது? அதைத் தேடிக் கொண்டு போகிறார்கள் விஞ்ஞானிகள். அதைப் பின்னால் சொல்கிறேன். விரிவலை பின்னால் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். குறுகிய மனப்பான்மை எங்கேயோ போய்விடும். தான், தனது போய் விடும். அவ்வாறு செல்லக்கூடிய விரிவலையை ஏந்தி, தாங்கி அணைத்துக் கொள்கிறது. எது சுத்தவெளி?

திருப்பூரில் ஒரு பெண் இருக்கிறாங்க. கூட்டி, பெருக்கி, அள்ளிக் கொண்டு வந்து குப்பைக் கூடையில் கொண்டுவந்து போடுவது மாதிரி சில ஜனங்க தங்களுடைய அந்தரங்கங்களை என்னிடம் வந்து சொல்வார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

என் பொண்ணை நானே கொன்று விட்டேன் என்றார்கள். ஏனம்மா என்றேன். விநாயகர் மாதிரி அது ‘கொழுக் மொழுக்’ என்று இருக்கும். அது மேலே எனக்கு ரொம்ப ஆசை. அதை அப்படியே கட்டிப் பிடித்துக் கொள்வேன். ஒரு காலை எடுத்து இந்தப் பக்கம் இட்டுக் கொள்வேன். இன்னொரு காலை எடுத்து அந்தப் பக்கம் இட்டுக் கொள்வேன். ஒரு கையை எடுத்து அக்குளில் இட்டுக் கொள்வேன். இன்னொரு கையை எடுத்து இன்னொரு அக்குளில் இட்டுக் கொள்வேன். அது தொப்பை, என் தொப்பை, அது நெஞ்சு, என் நெஞ்சு எல்லாம் ஒன்றாக இருக்கும். அதை அப்படி கட்டிப் பிடித்துக் கொள்வேன்.

மக்கள் பாசம் என்ன பண்ணும் தெரியுமா? இறுக்கிப் பிடித்துக் கொண்டது. அந்த நேரம் பார்த்து கணவன் வந்துவிட்டார். சரி, என்று எழுந்து கொள்ளலாம் என்று பார்த்தால், குழந்தை உட்கார மாட்டேங்குது. நிற்க மாட்டேங்குது. பொத்தென்று விழுந்துவிட்டது. நடந்த கதை எல்லா குப்பையையும் கொட்டி விட்டுப் போய் விடுவார்கள்.

அன்பர்களே, தாய்க்கு என்ன சந்தோஷம் தெரியுமா? குழந்தையைத் தொட்டுக் கொண்டே இருப்பது. நீங்கள் கவனியுங்கள். மன்றத்துக்கு ஜனங்க வருவாங்க. குடும்பமும், குண்டலினி யோகமும் அல்லவா. குழந்தைகளை அழைத்து வருவார்கள். குழந்தை ஓடி விளையாடும். இழுத்து, இழுத்து வைத்துக் கொள்வார்கள். ‘நீ விடும்மா பரவாயில்லை’ என்றால் ‘அது தொந்தரவு பண்ணும்’ என்பார்கள். அதெல்லாம் இல்லை. கிட்ட வைத்து அந்த human heat-ஐ Enjoy பண்ணனும். அந்த ஜீவகாந்தத்தைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மடியில் தூக்கி வைத்துக் கொள்வார்கள்.

சுத்தவெளிக்குத் தான் குழந்தை எது? விரிவலை. அது Third Generation என்னவோ வைத்துக் கொள்ளுங்கள். அந்த சுத்தவெளி விரிவலையை இறுக்கி அணைக்கிறது. அன்பு காரணமாக அப்பா இருக்கிறார்களா, அம்மா இருக்கிறார்களா, அண்ணன், தம்பி, மற்ற யாரும் இல்லை. ஆகவே இறுக்கி அணைக்கவே நொறுங்கிப் போகிறது.

எங்க தாத்தா ஒருத்தர் இருந்தார். ‘சுத்து முறுக்கு’ என்றால் அவருக்கு கொள்ளை ஆசை. ஒரு பல் கூட கிடையாது. கடிப்பது வேறு கடினம். கடினமாக இருந்து கடித்துத் தின்றால் தான் அதுவும் ருசி. ‘இங்கே கொண்டாடா’ என்பார். கொடுப்பேன். எடுப்பார். அந்த முறுக்கை எடுத்து இரண்டு கைகளுக்கிடையே வைத்து அணைப்பார். இறுக்குவார். நொறுக்குவார். பௌடராக்கி விடுவார். சுத்து முறுக்கு என்ன ஆச்சு? கரைஞ்சு போச்சு. பௌடராச்சு. இங்கே விரிவலை நொறுக்கப்பட்டு சுத்தவெளியில் கரைந்து போகுது.

Keep reading

More from the archive

KG Sami

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…

KG Sami

Thalattu Vethathri - 60

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !அருட் தந்தையின் அருள் வாரிசாம் உலகநலத் தொண்டர் , மூத்த பேராசிரியர் திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களின் அருட்கவிகள் அடங்கிய…

KG Sami

குரு வணக்கம்

அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்றுஅவ்வறிவு ஒன்றுமுதல் ஆறதாகிக்கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்கோடான கோடி எண்ணிஅனுபவித்துக்கண்டபலன் எனையறிய…

Granthaalayam

அன்பும் சிவமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ…

Puthiya Bharathi

ஆசான் நிகழ்த்திய அற்புத சாதனை

1976, ஜூன் மாதம், முன்பாதி. நமது ஆசான் அவர்கள் காரைக்காலில் 7 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி ஒன்றினை நடத்திக் கொடுத்து விட்டுக் கூடுவாஞ்சேரிப்…

KG Sami

அருள்நிதியர் திறனூக்கப் பயிற்சி – 1

இறைநிலை தெய்வம் உண்டு. அதற்கு உருவம் இல்லை என்ற தெளிவிலே அறநெறியைப் பற்றி வாழ முடிகிறது. முடியும் என்று நமது அருட்தந்தை அவர்கள் கொடுத்துள்ள…