KG Sami1937 — 2006

தவம்-10

Signed KG Sami

துரியாதீதம் பற்றிய விவரம் பரஞ்சோதி மகானுக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியெல்லாம் ஒரு யோக நிலை கிடையாது என்று சொல்லி வந்தார். துரியாதீத நிலையைப் பற்றி கிண்டலும், கேலியும் செய்வார். மனம் உடலை விட்டு வெளியேறக் கூடாது. வெளியேறவும் முடியாது என்பது அவருடைய கருத்து.

ஆனால் அப்படி ஒரு நிலை உண்டு என்பதில் மகரிஷிகளுக்குச் சந்தேகம் இல்லை. அந்த நிலையைத் தானே கண்டுபிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து வந்தார்.

துரியாதீதம் என்பது இறைநிலையாகத் தானே அனுபோகமாக மாறி நிற்பது என்று மட்டும் அவருக்குத் தெரிய வந்தது.

இறைநிலை என்பது என்ன? அது எப்படி இருக்கும்? என்பதைப் பற்றி எல்லாம் ஆன்மீக உலகத்தில் பெரும் குழப்பம் நிலவியது. அது உருவமுடையது என்று தான் பெரும்பாலானோர் கருதி வந்தார்கள். அந்த உருவத்திலும் ஆயிரம் உருவங்கள் கற்பிக்கப்பட்டன.

மனம் எதை நினைத்தாலும் அதுவாக ஆகும் என்ற அடிப்படையில் தெய்வத்தை நினைத்தால் தெய்வமாக மாறி விடும். இப்பொழுது என்ன உருவமுடைய எந்த தெய்வத்தை நினைப்பது. இது நிற்க, தெய்வத்துக்கு உருவம் கிடையாது என்ற கருத்துரும் நீண்ட நெடுங்காலமாக சொல்லப்பட்டுக் கொண்டுதான் வந்திருந்தது. நான்கு வேதங்களிலும் பதினெட்டு உபநிடதங்களிலும் தெய்வத்துக்கு உருவம் கொடுக்கப்படவில்லை.

இதையுமறிந்த நமது அருள்தந்தையவர்கள் தமது உய்த்துணர்வைச் செலுத்தி மேலும் ஆராய்ந்தார். விஞ்ஞானத்தில் அவர்களுக்கு இருந்த அறிவும் அவருக்குத் துணை செய்தது. விஞ்ஞானத்தில் உலகம் ஒரு உருண்டை என்றார்கள். இது சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம் என்றார்கள். நமது சூரிய குடும்பம் போல் கோடிக்கணக்கான சூரிய குடும்பங்கள் கொண்டது பிரபஞ்சம் என்றார்கள்.

அந்தப் பிரபஞ்சத்துக்கு அப்பால் ஒன்றுமில்லை என்றார்கள். வேதங்களில் சொல்லப்பட்ட தெய்வம் அரூபம் என்பதையும் விஞ்ஞான முடிவையும் மகரிஷிகள் இணைத்து ஆராய்ந்தார்கள். அந்த ஒன்றுமில்லை என்பது எல்லை இல்லாதது என்ற விஞ்ஞான கருத்தையும் சிந்தித்தார்கள். அதற்கு தத்துவத்திலும் இறைநிலை என்பது உருவமற்றது, எல்லையும் கிடையாது என்று தான் சொல்லப்படுகிறது.

ஆகவே பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள சுத்தவெளி தான் தெய்வம். அந்தச் சுத்த வெளியை நினைத்தால் மனம் தெய்வமாகிவிடும் என்று முடிவு செய்தார்கள். நாம் ஏதோ ஒரு பொருளை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்றால் அதன் வடிவமும், குணமும் மனதில் பதிவாகி இருக்கும். அந்தப் பதிவு தந்த mould ஐ வைத்துக் கொண்டு மனம் அந்தப் பொருளாக எத்தனை தடவை வேண்டுமானாலும் வடிவமும், குணமும் எடுப்பது அதற்குச் சுலபம். ஆனால் உருவமில்லாத ஒரு பொருளை நினைக்கவும் முடியாது. அந்த உருவம் இல்லா பொருளாக மாறவும் முடியாது.

இந்தச் சிக்கல் காரணமாகத் தானோ, என்னமோ மனதை இறைநிலையாக மாற்றுகின்ற துரியாதீத தவத்தை முற்கால மகான்கள் விட்டு வைத்தார்கள்.

Keep reading

More from the archive

Puthiya Bharathi

அடைந்தே ஆக வேண்டும் வீடு பேறு

திருநெல்வேலிநெல்லை SKY டிரஸ்ட்அறிவுக்கூடத்திறப்புவிழாவுக்குச்சென்றிருந்தேன். மன்றஅன்பர்ஒருவர்வீட்டில்தங்கியிருந்தேன்அவர்கள்வீட்டுப்பையன்ஒருவன்பிரம்மஞா…

KG Sami

தவம் – 43

ஒரு செயலைத் தெரிந்து செய்யும் போது ஒரு பலன் ஏற்படும். தெரியாமல் செய்யும் போது வேறு பலன் ஏற்படும். காரியம் ஒன்று தான். பென்சில் சீவுகிறோம் என்று…

KG Sami

எல்லோரிடமும் இணக்கம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…

KG Sami

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…

KG Sami

வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா

15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களால்…

KG Sami

தவம் - 46

உடலுக்கு நோய், மனதுக்கு பைத்தியம், வாழ்க்கையே முடிந்து போனவனும் உண்டு. சரியான வழி, சுலபமான வழி முறை தெரியாது. இப்போ நாம் இவ்வளவு சுலபமான வழிமுறை…