KG Sami1937 — 2006

தவம் – 25

Signed KG Sami

நமது அருள் தந்தையவர்கள் தமது பயணங்களில் சில சமயம் மேற்கால பயணம் போவார். சில சமயம் கிழக்கால பயணம் போவார். அப்படி கிழக்கால பயணம் போகும்போது நம்ம ஊர் அம்மையார் ‘நான் வருகிறேன்’ என்று உடன் கிளம்பினாராம் ஒரு முறை.

அவர்களுக்கு நிறைய செல்வம் உண்டு. செல்வம் நிறைய இருந்தால் அதைத் தங்கமாக மாற்றி புதைத்து வைத்து விடுவது ஒரு தினுசு அல்லது கருப்பாக்கி விடுவது ஒரு தினுசு. அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் அதை எல்லாம் நகையாக மாட்டிக் கொண்டு விட்டார்கள். மாட்டாத இடமெல்லாம் கூட மாட்டிக் கொண்டு விட்டார்கள். அவர்களின் எடையை விட நகைகளின் எடை அதிகம்.

இரண்டு பேரும் பழக்கம் பக்கம் உட்கார்ந்து கொண்டு போகிறார்கள். மகரிஷி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். ராத்திரி நேரம் மேகமெல்லாம் இல்லை. கோடானு கோடி நட்சத்திரங்கள் நாம் பார்த்தே அறியாத அளவிலான எண்ணிக்கையில் விசாலத்தில் நட்சத்திரங்கள். மகரிஷிக்கு ‘இரும்பூது’ வந்துவிட்டது.

’இரும்பூது’ என்றால் பெருமகிழ்ச்சி. துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும். பகிர்ந்து கொள்வதற்காக பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் “பார்த்தாயா அம்மா ஜன்னல் வழியாக” என்று சொல்ல அந்தப் பெண்மணி “ஆமாம் சாமி, பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படியே வைர, வைடூரியங்களைக் கொட்டி இறைத்தது மாதிரி இருக்கு சாமி” என்றாராம்.

அடுத்த தலத்தில் பார்த்து விடுங்கள். வைர, வைடூரியங்கள் கொட்டி இறைக்கப்பட்டிருக்கும். அதில் என்ன சந்தோஷம். அதுக்கு அந்தாண்ட என்ன இருக்குது. ஆசையைப் பார். எட்டி பார்த்தால் ஒன்றையும் கானோம். ஆ, எவ்வளவு தூரம் ஒன்றுமில்லாமல் இருக்குது. போய் போய் போய் தானற்றுப் போகிற வரைக்கும் போகிறோம். அந்தப் பஞ்சபூத நவக்கிரக தவத்தில் கடைசியாக.

துரியாதீத தவம், சிவகளம், பஞ்சபூத நவக்கிரக தவம். கடைசியாக இறைநிலையை தான் போய்க் காண்கிறோம். ஒரு வழிக்கு இரண்டு வழி கற்றுக் கொண்டோம். இன்னும் ஏதாவது வழி இருக்காதா. கஷ்டமான வழி அதே சமயத்தில் more useful வழி ஏதாவது இருக்காதா என்று நமது அருள் தந்தையவர்கள் தேடிக் கண்டுபிடித்த தவம்தான் ‘நித்யானந்த தவம்’.

இறைவனை சுலபமாகக் காண்பதற்கு, அங்கே இங்கே போகத் தேவையில்லை. 2000 கோடி ஒளியாண்டு diameter தாண்டினால் அல்லவா சுத்தவெளியைப் பார்க்கலாம். ‘இருந்ததனை இருந்தபடி எடுத்துக்காட்டி’ என்று சொன்னார் பாருங்கள். அந்த மாதிரி இருந்த இடத்தில் பார்க்கலாம். அதைத் தான் பார்க்கிறோம்.

மனம்கூட எங்கும் தேடிக் கொண்டு போகத் தேவையில்லை. தேடிப் போன மூலிகை காலில் அகப்பட்டது மாதிரி. மூலிகைக்கு மேலே நின்று கொண்டு மூலிகையைத் தேடி அலைந்த மாதிரி நாம் நித்யானந்த தவம் இருக்கும் போது பஞ்சபூத நவக்கிர தவம், சிவகள தவம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நித்யானந்த தவம் செய்து பார்த்தவர்களுக்கு, உணர்ந்தவர்களுக்கு நன்கு விளங்கும்.

நித்யம் ஆனந்தம். ஆன் என்றால் என்ன? மனிதன். அந்தம் என்றால் என்ன? ஏ.பி. நாகராஜன் ‘திருவிளையாடல்’ படத்தில் சொல்வார். ‘ஆதியும் நீயே, அந்தமும் நீயே’ – அவர் குரல் ஒரு வெண்கலக் குரல் அப்படியே காதில் ஒளிக்குது. சுட்டு சாம்பலாக்கி விட்டார். பாண்டியன் கெஞ்சுகிறான். ‘நாளைக் காலை பொற்றாமரைக் குளத்துக்கு வா’ என்று இறைவன் சொல்வார். பொற்றாமரைக் குளத்தில் ‘நக்கீரா’ என்று கூப்பிடுவார்.

நக்கீரர் குளத்திலிருந்து குளித்து விட்டு வருபவர் போல, ‘ஆதியும் நீயே, அந்தமும் நீயே’ என்று சொல்லிக் கொண்டே வருவார். எந்த இடத்திலேயும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். ‘ஆதி’ என்றால் தெரியும். நமது அருள் தந்தை அவர்களும் சொல்லி இருக்கிறார்கள். ‘அந்தம்’ என்றால் என்ன என்று சொன்னவர்கள் எனக்குத் தெரிந்து குறைவு. அந்தம் என்றால் கடைசி. கடைசி என்றால் என்ன? முடிவு.

’கோடி’ என்றால் Crore இல்லை. The End. அத்தோடு சரி. நம்ம தமிழன் இருக்கிறானே அவனுக்கு ரொம்ப நிறை மனம் அதிகம். எண்ணிக் கொண்டே போனான். ஒன்று, இரண்டு, மூன்று ஊருக்கு நான் சென்று நான்கு, ஐந்து, ஆறு நாளை வருவேன் பாரு. (இன்னும் கொஞ்சம் சதோஷப்படுவீர்கள்). ஏழு, எட்டு, ஒன்பது என்ன வேண்டும் தின்பது பத்து, நூறு, ஆயிரம் படித்துத் தேறு சீக்கிரம்.

அர்த்தமுள்ள Rhyme இது. ஆயிரத்துக்கு மேலும் எண்ணிக்கை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தான். அத்தோடு சரி என்று இருந்து விட்டான். அதுதான் கோடி. கோடி என்றால் Crore இல்லை. The End. எண்ணிக்கை அத்தோடு தீர்ந்தது. ‘கோடி கொடுத்தா ஓடியே போயிடுவான்’. ஒருவனிடம் கோடி இருந்து போச்சுன்னு வச்சுக்கோங்க, அவனுக்கு இறைவனுக்கு சமமான பட்டம் ‘கோடீஸ்வரன்’.

இப்போ கோடீஸ்வரன் என்றால் ‘பிச்சைக்காரன்’ என்று அர்த்தம். ஏனென்றால் கோடிக்கு மேலே மில்லியன், பில்லியன், ட்ரில்லியன், குவாண்டிலயன், செப்டில்லியன், சப்டில்லியன், அக்டோவ்லியன், நோவில்யன். 1 பக்கத்தில் 27 முட்டை போட்டான் பாருங்க இங்கிலீஷ்காரன். நாம 1க்கு பக்கத்தில் 7 முட்டை போடு போதும். அதோடு முடிந்து போச்சு. சந்தோசம்.

அந்தம் என்றால் அதற்கு அப்பால் ஒன்றும் இல்லை. அதுவே முடிவு, கோடி – கடைசி. கோடி வீட்டு கோமளா. எங்க ஊர் காரைக்கால் பக்கத்தில் கோட்டுச்சேரி என்ற கிராமம். ஒவ்வொரு ஊரிலும் சாமி இருக்கும். அதற்கு ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைத்து விடுவார்கள். எங்க ஊரு சாமி பெயர் ‘கோடீஸ்வரன்’. கோடீஸ்வரன் என்றால் 100 இலட்சத்துக்கு சொந்தக்காரன் என்ற் அர்த்தம். எவ்வளவு உள்ளதோ அவ்வளவும் அள்ளிக் கொடு.

ஆகவே அந்தம் என்றால் அதற்கு அப்பால் ஒன்றுமில்லை. அதுவே முடிவு. முடிவுக்கப்பால் ஒன்றுமில்லை என்று அர்த்தம். ஆன்-மனிதன். ஆன் என்றால் மனிதன். நமக்கு நல்லா தெரிந்த வார்த்தை சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் டிவியிலும், ரேடியோவிலும் ஒரு பாட்டு போடுவான். ‘நாம் இருவர்’ படத்தில் பேபி கமலா என்ற நடிகை ஆடிக் கொண்டே பாடியது. பாடிக் கொண்டே ஆடியது. நல்ல குரல் வளத்தில் பாடியது. ‘மகான் காந்தி மகான் - மகான் காந்தி மகான்’ என்ற பாடல். ‘மகான்’ என்றால் பெரிய மனிதன் என்று அர்த்தம். மகரிஷி கிண்டலாக சொல்வார்கள். ‘அட நம்ம பெருமாளு’. பெரிய மனிதன் என்ற அர்த்தம் பழக்க வழக்கத்தில் விட்டு விட்டோம். அர்த்தத்தை விட்டு விட்டோம். வார்த்தையை வைத்து இருக்கிறோம்.

ஆன் என்றால் மனிதன். அந்த ஆன் + அந்தம். இப்போ கொண்டு கூட்டுங்கள். ‘ஆனந்தம்’ ‘ஆனந்தம்’ என்றால் என்ன? மனிதனின் முடிவு. ஓ, மனிதனின் முடிவு மரணமா? அவன் கதை முடிந்தது என்கிறார்கள். அவன் மரணமுற்றுப் போனால் முடிவு என்கிறார்கள். மனிதனின் முடிவு என்றால் மரணம் என்று அவசரமாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. இங்கே மனிதன் முடிந்து அவன் மகன், பின் அவன் மகன், பின் அவன் மகன் ‘மனிதம்’ முடிய வேண்டும்.

அதாவது தாவரம் முடிந்து புழு வந்தது. புழு முடிந்து பூச்சி வந்தது. பூச்சி முடிந்து ஊர்வன வந்தது. ஊர்வன முடிந்து மிருகங்கள் வந்திருக்கிறது. மிருகங்கள் முடிந்து நல்ல வேளையாக மனிதன் வந்திருக்கிறான். அவனும் முடிந்து விடுவானா, மாட்டானா? இல்லை கடைசி வரைக்கும் ‘மனிதன், மனிதன்’ தானா? ‘மனிதன்’ என்ற தத்துவத்தின் முடிவு என்ன? மனிதத்தின் முடிவு தெய்வம்.

’ஆனந்தம்’ என்றால் என்ன? தெய்வ நிலை. பரவச நிலை. நாம் நம் வசமாக இல்லாமல் பொருள்களின் வசம் இல்லாமல் புலன்களின் வசம் இல்லாமல் இறைவன் வசமாகப் போய் விடுவது தான் பரவசம். யார் வசமாக இருக்க வேண்டும். தெய்வத்தின் வசம் இருக்க வேண்டும்.

அந்த மாதிரி இருந்தால் சண்டை, சச்சரவு, வம்பு, தும்பு, கல்யாணம், காட்சி இருக்குதோ இல்லையோ, கடன், கண்ணி ஒன்றும் இல்லையே. Comparatively ரொம்ப நல்லது தான்.

Keep reading

More from the archive

Kannimuthu

அறம் + தவம் = அருள்

அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது, அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன?…

KG Sami

தவம் - 38 A

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம்…

KG Sami

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…

Granthaalayam

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை…

Granthaalayam

எல்லோரிடமும் இணக்கம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…

Granthaalayam

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…