KG Sami1937 — 2006

வான் காந்தம், ஜீவ காந்தம்

Signed KG Sami

வான் காந்தம், ஜீவகாந்தம் எவ்வளவு மகிமையான வஸ்துக்களாக இருந்து கொண்டு எவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் செய்து கொண்டு இருப்பது தெரியாமல் இருக்கிறது. கடவுள் மாதிரி ஜீவகாந்தமும் கடவுள் காந்தமும் கடவுளே.

கடவுள் God in Action செயல் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கடவுள் தான் ஜீவகாந்தம். அப்படி என்றால் கருப்பாக ஒன்றுமே இல்லாமல் இருக்கிறதே அது என்ன? அதுவும் காந்தம் தான். அதற்குள்ளும் காந்தம் அடங்கி இருக்கிறது. இறைநிலையில் காந்தம் In Inaction காந்தம் செயல்படாமல் இருக்கும் காந்தம். கடவுள் செயல்பட்டால் காந்தம். இப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.

நம் உடலில் ஐந்து பூதங்கள் இருக்கிறது. அதில் ஒரு பூதம் ஆகாசமாகிய உயிர். அதுவே விண். அது தற்சுழல் உடையது. அப்படி என்றால் காந்தம் உற்பத்தி பண்ணும். அப்படி என்றால் நமது உடலுக்குள்ளேயும் காந்தம் உற்பத்தி ஆகிறது அதுதான் ஜீவகாந்தம். இங்கே குறைந்தது என்றால் அங்கே கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் குறைந்தது என்றால் அமெரிக்காவில் கடன் வாங்கிக் கொண்டு அவஸ்தைப்படுகிற மாதிரி. அதிகமாக இருக்கிற இடத்திலிருந்து குறைவாக இருக்கிற இடத்திலிருந்து கடன் வாங்கி கொள்ளலாம்.

ஜீவகாந்தம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது வான்காந்தத்திலிருந்து பெற்று இட்டு நிரப்பிக் கொள்ளலாம். அதனால் ஒன்று குறைவு இல்லை. வாங்கும் திறன் Receptivity வேண்டும். அதுவும் கொஞ்சம் முன் பின்னாக இருக்கும். அது ஏன் முன் பின்னாக இருக்கிறது. கடவுளே தான் காந்தமாக இருக்கிறான்.

அப்படி என்றால் கடவுளிடம் அல்லவா கையேந்த வேண்டும். கடவுளிடம் செல்லும் போது சுத்தமாக கை, கால் கழுவிக் கொண்டு மேல் துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அது ஒரு தகுதி இல்லையா கடவுளை நெருங்குவதற்கு.

வான் காந்தத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஜீவகாந்தத்துக்கு தகுதி வேண்டும் அல்லவா? அந்தத் தகுதி நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்லி விட்டேன். அதை நீங்கள் develop பண்ணிக் கொள்ளுங்கள். யாருக்கும் கெடுதல் செய்யாதவர்களாக மட்டுமல்லாமல் யாருக்கும் கெடுதல் நினைக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஒருவன் வெறும் பொறாமை பிடித்தவன். எழுந்து போய் ஒன்றும் செய்ய மாட்டான். ஆனால் எதிர்பார்ப்பு இருக்கும். உட்கார்ந்த இடத்திலே இருந்து கொண்டு அவன் நல்லா இருக்கானே நான் நன்றாக இல்லையே என்று நினைத்துக் கொண்டு இருந்தான். பொறாமை குணம் இருந்தால் அவன் கடவுள் இருக்கும் பக்கம் கூட நெருங்க முடியாது. அவர்கள் உடலிலே ஜீவகாந்தம் வற்றிப் போகும். காந்தத்தை வேறு விதமாக பெற்றுக் கொள்வதற்கு மூன்று வழிகள் இருக்கிறது. வேறு விதமாக பெற்றுக் கொள்ளக்கூடிய காந்தத்தைக் கூட வெளிப் போக்கி விடும்.

நமது உடலில் வான்காந்தம் வருவதும், போவதுமாக இருக்கிறது. Stock இருக்க வேண்டும். அது நமது உடலின் கொள்ளளவு தான் என்றில்லை. உடலின் கொள்ளளவை விட எத்தனை மடங்கு வேண்டுமானாலும் வான்காந்தத்தை ஈர்த்து ஜீவகாந்தமாக மாற்றி தக்க வைத்துக் கொள்ளலாம். அதுதான் இயற்கையாகவும் நடக்கும். அதுதான் ஜீவகாந்தப் பெருக்கம் என்று மகரிஷி வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்த ஜீவகாந்தப் பெருக்கம் இயற்கையாகவும் நடக்கும் நம்மைக் கேட்காமலேயே, நாம் நல்லவர்களாக இருந்தாலே போதும். ஜீவகாந்தம். வளராது (குறையாது). பெருகும். ஜீவகாந்தத்தைச் செயற்கையாகவும் பெருக்கிக் கொள்ளலாம். இந்த இரண்டு முறைகளையும் நமது அருள் தந்தையவர்கள் வகுத்து கொடுத்திருக்கிறார்கள்.

அவை (1) தீபப் பயிற்சி, (2) கண்ணாடிப் பயிற்சி இரண்டு பயிற்சிகளையும் செய்யும் பொழுது நாம் துல்லியமாக செய்முறைகளையும் சரியாகச் செய்ய வேண்டும். இல்லையெனில் ஜீவகாந்தம் பெருகுவதற்காக நாம் உட்கார்ந்து இருக்கிறோம். அந்த ஜீவகாந்தம் குறைவாகப் பெருகும். அல்லது நேரச் செலவுக்குத் தக்கவாறு ஜீவகாந்தப் பெருக்கம் இருக்காது.

இந்தச் செயல்முறைகள் கொஞ்சம் விரிவானது. கொஞ்சம் வினோதமானது. நாம் அதை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டு நுணுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். விளக்குப் பயிற்சி என்று சொல்லி நமது அருள் தந்தையவர்கள் கொடுத்திருக்கிறார்கள். “அந்த விளக்குப் பயிற்சிக்கு விளக்கு தானே எங்க வீட்டில் இருக்குது” என்று சொல்வார்கள். சரி, நல்லதாகப் போச்சு. சிரமப்பட வேண்டியதில்லை. வெள்ளைக்காரன் என்றால் பாவம். அவன் மெழுகுவர்த்தியைத் தான் பயன்படுத்துவான்.

Keep reading

More from the archive

Meena Kumaran

’வாழ்க வளமுடன்!’ என்று கூறுவது தவறா? இலக்கணம் என்ன சொல்கிறது?

நமது இயக்கத்தில் வாழ்க வளமுடன் என்கின்ற ஒரு தாரக மந்திரத்தை நமது அருள் தந்தை அவர்கள் உருவாக்கிச் சேர்த்திருக்கிறார். இது மனவளக்கலைஞர்களாகிய நம்மால்…

KG Sami

தவம்-11

துவாத சாங்கம் என்று நாம் செய்கின்ற தவம் துரியாதீத தவத்தில் வருகிறது. துவாத சாங்கம் போய் சென்று பின் துரியம் போய் இறங்கி வந்து வாழ்த்துவதும் உண்டு.…

Kannimuthu

துரியாதீதம் தந்த தூயவர்

தாடியின்மடியில்தலைவைத்தால், தோன்றும்இன்பம்தோன்றிடுதே! – மேவிப்போய்அம்மெய்ப்பொருள்தன்னோடு பொல்லாநினைவைப்பூட்டிவிடின். – அப்போ,காயம்இருப்பதும்தெரியாது!…

Arulnithi Muthappan

செந்தன்மையும் சினமும்

குரு வீட்டிற்கு விருந்துக்காகச் சென்ற சிஷ்யனாகிய நான் சினிமா பார்த்து விட்டு பாதி ராத்திரியில் மகரிஷிகள் படுத்திருந்த சங்கக் கொட்டகைக்கு வந்து…

KG Sami

தவம்-4

நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக்…

KG Sami

தவம் – 42

இயற்கை உட்பாதத்தை அனுப்பி நமக்கெல்லாம் தண்டனை கொடுத்து கடமையைச் செய்யும் விதமாக இறைவன் வருகிறான். இந்த மாதிரி வேலையை அவனுக்கு வைக்கக் கூடாது. இந்த…