KG Sami1937 — 2006

பூக்களும், பூவையரும்

Signed Muthappan

முப்பது ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் எங்கள் ஊருக்கு மாதாந்தோறும் வருவார்கள். 3 நாள் இருப்பார்கள். 3 நாளும் நான் உடன் இருப்பேன் எல்லோருக்குமாக அவர்கள் கூறும் விளக்கங்கள் போதா என்று நான் வேறு கேள்வி-பதிலாக விளக்கங்கேட்டுக் கொண்டே இருப்பேன். நான் கேள்வி கேட்டு வாயோ, மனமோ சோர்ந்து விட்டால் கூட, அவராகவே, உரக்க சிந்தித்தல் (thinking loud) என்ற முறையில் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். இரவு தூங்கும் வரை விளக்கம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

      இந்நிலையில் மாதா மாதாம் அவர் எங்கள் ஊருக்கு வருவது நின்று விட்டது. 30 நாட்களுக்கு மேல் என்னால் அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது. அதனால் அவர் எந்தெந்த ஊருக்குப் போகிறாரோ, அந்தந்த ஊருக்கெல்லாம் நானும் போய் விடுவேன். இரண்டு மூன்று நாட்களுக்கு உடன் இருப்பேன். அல்லது அவர் கூடுவாஞ்சேரியில் இருந்தால் அங்கேயே போய் இருப்பேன். அவர் சென்னை சென்றால், நானும் அவருடன் சென்னை செல்வேன். அவர் கூடுவாஞ்சேரி வந்தால் நானும் கூடுவாஞ்சேரிக்கு வந்து விடுவேன். வழியில் உள்ள ஊர்கள், சந்திக்கின்ற நபர்கள் எதிர்படுகின்ற சூழ்நிலைகள் பற்றியெல்லாம் அவர் தாமாகவே விளக்கங்கள் சொல்லிக் கொண்டே இருப்பார். என் உள்ளம் தகவல்களாலும், விளக்கங்களாலும் தூர்ந்து கொண்டே இருக்கும்.

      அப்படித்தான் ஒரு நாள் நாங்கள் சென்னை மண்ணடியிலிருந்து சென்னை கோட்டைக்கு வந்து கொண்டிருந்தோம். மகரிஷிகள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. போக வேண்டிய வழியை விட்டு விலகிச் சென்றார். ‘என் கூடவே வாருங்கள். உங்களூக்கு ஒரு வினோதம் காட்டுகிறேன்’ என்று சொல்லி முன் சென்றார். ஒரு பூக்கடை வந்தது. நிறைய பூக்கடைகள் வந்து கொண்டே இருந்தன. அதுமாதிரி பல பூக்கடைத் தெருக்கள் வந்து கொண்டே இருந்தன. மகரிஷிகள் கொஞ்சம் சுற்றி சுற்றி வந்தார். ஒரு பெரிய விஹாரமான பிரதேசத்தில் இருந்த நூற்றுக் கணக்கான பூக்கடைகள் அத்தனையையும் எனக்குக் காட்டி விட வேண்டும் என்பது மகரிஷிகளுடைய நோக்கமாக இருந்தது எனக்குத் தெரிய வந்தது.

      கடைகளில் இருக்கின்ற பூக்களில் உட்கார்ந்து தேனீக்கள் தேன் உண்டு கொண்டிருப்பதை இதுவரை நான் பார்த்ததில்லை. அங்கு பார்த்தேன். சென்னையின் அந்த பகுதிக்கே பூக்கடை என்று தான் பெயர். அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கும் பூக்கடை என்றே பெயர். ’சரி போகலாமா?’ என்ற மகரிஷிகளின் குரல் காதில் விழுகிறது. நான் தூக்கத்தில் இருந்து வெளிப்படுவதுபோல், கண்களை மெல்லத் திறக்கிறேன். ஒரு பூக்குவியலைல் இருந்து வெளி வருகிறோம். என்ன பார்தீர்களா? என்று கேட்டு விட்டு மகரிஷிகள் என்னையே பார்த்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் அறிவு ஆப்செண்ட் ஆகிவிட்டிருந்தது.

      ’இந்த இடத்தில், ஒரு நாளில், ஒரு லட்ச ரூபாய் Turn over ஆகிறது! (அப்போதைய 1 லட்சம் இப்போது 1 கோடி) கொடுக்கவும், வாங்கவுமாக ஒரு நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய தொகை புரள்கிறது, உபயோகமில்லாத விஷயத்திற்காக!’ என்றார்கள் மகரிஷிகள். கிறுகிறுப்பு நீங்காத நிலையில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, எதையும் பார்க்காத நிலையில், என்கையோ மனதை வைத்துக் கொண்டிருந்த நான் ‘உபயோகமில்லாத’ என்ற வார்த்தையை கேட்டதும் திடுக்கிட்டு மகரிஷிகளைப் நேரிட்டுப் பார்த்தேன்.

      ’இத்தனைப் பூக்களால் சமுதாயத்திற்கு என்ன பயன்? இவ்வளவு பூக்களையும் உற்பத்தி செய்யவும் வியாபாரம் செய்யவுமாக எவ்வளவு பொருள் அழிகிறது. எத்தனை பேருடைய உழைப்பு வீணாகிறது. எண்ணிப் பாருங்கள். நம் நாட்டு பெண்களைப் போல் எந்த நாட்டிலாவது பெண்கள் இவ்வளவு அதிகமாகப் பூ வைத்துக் கொள்கிறார்களா? பூ வைத்துக் கொள்வதனால் எவ்வளவு நன்மை கிடைத்து விடுகிறது?

      ’நம் நாட்டைப் போல் வேறு நாடுகளில் இறைவழிபாட்டிற்கும் இவ்வளவு மலரைப் பயன்படுத்துகிறார்களா? ஆங்காங்கெல்லாம் பெண்கள் இல்லையா? இறைவழிபாடு இல்லையா? இரு வகையில் அலங்காரம் தான் இல்லையா? நம் நாட்டில் உற்பத்தியாகின்ற, உபயோகமாகின்ற மலர்களின் எண்ணிக்கையை எண்ணிப் பாருங்கள். இவற்றினால் காரியாம்சமாக ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன என்று எண்ணிப் பாருங்கள். இவ்வளவு உழைப்பையும், நேரத்தையும் செலவையும் இதைவிட வேறு வேறு நல்ல காரியங்களுக்குச் செலவிட்டால்?...’

      மகரிஷிகளுடைய தீர்க்கமான சிந்தனையும் அந்தச் சிந்தனையிலிருந்து மிதந்து வந்த கேள்விகளும் என் மனதில் சுளீர் என்று உறைத்தன. மகரிஷிகளின் உளப்போக்கிற்கு நான் உடனேயே வந்து விட்டேன். தொடர்ந்து இதுபற்றி அவர் கூறிக் கொண்டே வந்த விளக்கங்கள் மொத்தமும் எனக்கு இயல்பான உடன்பாடாகவே இருந்தன. தொடர்ந்து மகரிஷிகள் கூறிக் கொண்டே வருகிறார்கள்.

      ’ஒவ்வொரு வீட்டிலும் பட்ஜெட் போடுகிறார்கள். மாதா மாதம் மளிகைக்கு இவ்வளவு, அரிசிக்கு இவ்வளவு என்றெல்லாம் பட்ஜெட் போடுகிறார்கள். காஸ்மெட்டிக்ஸூக்கு இவ்வளவு என்று ஒரு தொகையும் உண்டு. காஸ்மெட்டிக்ஸ் செலவு தேவையா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் பூவின் பங்கு என்ன? அந்த வீட்டில் நான்கைந்து பெண்களில் இருந்து தினமும் அவர்கள் வெளியில் செல்லக்கூடியவர்களாக இருந்தால், மொத்த பட்ஜெட்டில் பாதி பூவிற்கே போய் விடுகின்ற நிலை உள்ளது. அந்தக் குடும்பத்திற்கு ஏன் கடன் வராது? அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கு எப்படிக் கல்யாணம் ஆகும்? பையனை எப்படிப் படிக்க வைப்பது?

      எந்த ஒரு நல்ல விஷயத்தையும், உடனே செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்வது என்ற கொள்கை உடைய நான் அன்று முதற் கொண்டு என் மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். (அவர்களாகவே பூ வங்கிக் கொள்வதை நான் தடுப்பதும் இல்லை என்பது வேறு விஷயம்).

காலவோட்டத்தின் என் மனதில் ஒரு கருத்து உருவாயிற்று. ‘பென்களுக்கு பின் புத்தி’ என்பார்கள். ‘பின் போன்ற மதியினர்’ என்று அந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, கூடிய சீக்கிரம் பூ வைத்துக் கொள்வதை பெண்கள் தாங்களாகவே விட்டு விடுவார்கள். இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடத்திற்குள் இது நடக்கும்? என்று என் மனதில் ஒரு கருத்து உருவாயிற்று.

இப்பொழுது பாருங்கள். பெரும்பாலான பெண்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பூ வைத்துக் கொள்வதில்லை. ஆனால் பூ வைத்துக் கொள்வது போல் வேறு எதையோ வைத்துக் கொள்கிறார்கள். தானாகவே வந்து விடக் கூடிய ஒரு சீர்திருத்தத்தை நாமாகவே மேற்கொள்ளல் அறிவுடமை!

Keep reading

More from the archive

KG Sami

தவம்-13

ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஐயோ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட வில்லையா ? நீங்கள் தவம் செய்யவில்லை…

Granthaalayam

விதி

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!விதி என்றால் என்ன? நம்ம நாடு…

KG Sami

அருட்செல்வி அவர்களுக்கு எழுதிய மடல்.

K.G சாமி ஐயா அவர்கள் அவர்தம் நண்பர் பேராசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்களின் மகள் அருட்செல்வி அவர்களுக்கு எழுதிய மடல்.அன்பு மகள் அருட்செல்விக்கு…

KG Sami

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை…

KG Sami

தவம் – 37

தலைகீழாக நிற்பது உண்டு. கும்பகம் முதலான பிராணயாமப் பயிற்சிகள் செய்து அதனால் ஏற்படக்கூடிய சூட்டினால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கக் கூடிய…

KG Sami

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…