KG Sami1937 — 2006

Thalattu Vethathri - 60

Signed KG Sami

வாழ்க வையகம் !                              வாழ்க வளமுடன் !

அருட் தந்தையின் அருள் வாரிசாம் உலகநலத் தொண்டர் ,
 மூத்த பேராசிரியர் திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களின் அருட்கவிகள் அடங்கிய அருமையான ஒரு கையெழுத்துப் பிரதி நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதிலுள்ள அருட்கவிகளை வாரா வாரம் தங்களுக்கு சிறு விளக்கங்களோடு அளிக்க உள்ளோம்,…….

 எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த
 தமிழ்க் கவிஞர்களும் அவர்தம் கருத்துக்களும், இன்றளவும்
 அவர்கள் தம் பாடல்கள் வழி,

 நம்மிடையே உயிர்ப்போடு இருந்து கொண்டுள்ளது…….


 அவ்வகைளில் அன்பர்கள் ஐயா அவர்களின் சிந்தனைத் துளிகளை
 அவர்தம் எண்ண அலைகளை, அவர்களின் கவிகளின் வழியே உள்வாங்கி
 அவர்தம் கருத்துக்களைச் சிந்தித்து உளம் மகிழ அன்போடு வேண்டுகிறோம்.

இனி திரு. கே. ஜி. சாமி   ஐயா அவர்கள் உங்கள் முன் அவர்தம் அருட்கவிகளின்  வழியே உரையாடல் நிகழ்த்த உள்ளார்கள்

 இந்த வாய்ப்பினை அளித்த இறையாற்றலுக்கும், அருட்பேராற்றலுக்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்……..

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் 60 ஆம் ஆண்டு விழாவுக்காக, காரைக்கால் மெய்விளக்க தவமையத்தின் சார்பில் 5.8.1971 ல் சென்னை மண்ணடி தங்கசாலையில் வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்திதழாக எழுதப்பட்ட கவிதை………

ஆராரோ ஆரிரரோ ஆனந்தப் பாலருந்தி
 ஈராரைந் தாண்டு கண்ட வேதாத்திரி கண்வளராய்..

ஒருபிறவிக் குள்ளாக மறுபிறவி என்னுமந்த

அறுபதுக்கு மப்பாலே அடியெடுத்து வைக்குமையா

அறுபதுக்கும் மப்பாலே வருங்குழந்தைக் குணமென்பார்

சிறுவயது முதற்குழந்தை குணங்கொண்டாய் கண்வளராய்

 ஊனக்கண் சோர்வுற்றாய் உலக சமாதான மதற்கான திட்டம் ஆக்குதற்கே

அன்பொளியை வீசுமுந்தன் ஞானக்கண் எங்களிடை நிரந்தரமாய்த் திறந்திருக்க

ஊனக்கண் இமைசேர்க்க உன்னருளால் பாடுகிறோம்

கண்ணன் வாய் மண்ணிலவன் அன்னை கண்டாள் அண்டமெலாம்

அண்ணலுன்வாய்ச் சொல்லினிலோ அனைத்துமவைத் தத்துவங்காண்

பண்ணொழுகத் தத்துவங்கள் படைத்தீந்தாய் கண்வளராய்

மண்ணவரை மாற்றுமொரே அருள்மார்க்கம் கண்டவரே

எண்ணிடவே ஏலாமல் மன்னுதுன்பம் இல்லையெனப்

பண்ணிடவே என்னவழி என்றவர் உள்கண் திறக்க

என்ன அந்த இன்பதுன்பம் ? இன்பதுன்பம் துய்ப்பவன் யார் ?

என்ன எனக் கேட்பவன் யார் ? என விளக்கித் தெளிவித்தாய்

தரைமேடு பள்ளம் ஒக்கும் உணர்ச்சி இன்பதுன்பமெனும்

உரையால்மெய் உயிரறிவு பரமுணர்த்தி இன்பதுன்பக்

கரையாகக் காட்டிவைத்தாய் கடவுளெனுந் தத்துவத்தை

விரையாமல் அறிவொடுக்கி உயிருணர்ந்தோம் பாமரரும்

எல்லாமே யாமாக யாமேயெல் லாமாக

உள்ளநிலை தெள்ளெனவே உணர்வித்தாய் கண்வளராய்

கள்ளமனம் தூய்மைபெற தூய்மையொடு திண்மைபெற

உள்ளவழி ஒன்றெளிது அவ் வழிகாட்டுங் கண்வளராய்

வினைப் பயனாம் பதிச்சுமையை விலக்கிடுநல் வழிவகுத்தாய்

வினைத்தூய்மை மனத்தூய்மைக்கு உறைவிடமே கண்வளராய்

நினைக்கமனம் நிர்மலத்தை நிர்மலமாம் நிர்மலமாய்

வினைப்பதிவு நீங்கித் தூளி ஆட்டுகிறோம் தாலேலோ

வண்ணமணிக் கலந்தொட்டெம் வல்லிருட்டுத் துயிலெழுப்பி

திண்ணமதி தெள்ளறிவு தந்தாண்டாய் கண்வளராய்

செந்நெல்வயல் சூழ்காரை மெய்விளக்கத் தவமன்றக்

கன்னல்மன மாணாக்கர் களித்தாட்டக் கண்வளராய்…………

குறிப்பு :  பொது வாக பிள்ளைத் தமிழ் இலக்கியம் என்பது தமக்கு பிடித்த தலைவனையோ அல்லது இறைவனையோ, அறிவில் சிறந்த பெரியோரையோ குழந்தையாக பாவித்து அவர்கள் மீது பாடப்பெறும் ஓர் அருமையான இலக்கியவகையாகும்.

இது ஆண்பால் பிள்ளைத் தமிழ் மற்றும் பெண்பால் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும் இதில் ஆசிரியர் மகரிஷி அவர்களை குழந்தையாகப் பாவித்து அவர்தம் சிறப்புகளை தாலாட்டு போல் பாடி அவரையே தொட்டிலில் இட்டு தூங்க வைப்பதாக அமைத்துள்ள பாங்கு அருமையிலும் அருமை.

                                அடுத்த பதிவு விரைவில்…………………

                   வாழ்க வளமுடன் ! 

Keep reading

More from the archive

KG Sami

நீங்களும் சித்தராகலாம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த…

KG Sami

தவம் – 43

ஒரு செயலைத் தெரிந்து செய்யும் போது ஒரு பலன் ஏற்படும். தெரியாமல் செய்யும் போது வேறு பலன் ஏற்படும். காரியம் ஒன்று தான். பென்சில் சீவுகிறோம் என்று…

KG Sami

தவம்-11

துவாத சாங்கம் என்று நாம் செய்கின்ற தவம் துரியாதீத தவத்தில் வருகிறது. துவாத சாங்கம் போய் சென்று பின் துரியம் போய் இறங்கி வந்து வாழ்த்துவதும் உண்டு.…

Kannimuthu

பிறவித் தொடர் தத்துவதில் செய்த புரட்சி

வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,நவயுகத்திற்…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

1976 இன் இறுதியில் ஒரு நாள் மகரிஷிகள் பாண்டிச்சேரிக்கு வர இருக்கிறார். அது ஒரு வெள்ளிக் கிழமை பகல் 12 மணி போல் அவர் வந்து சேர வேண்டும்.…

Granthaalayam

மாயையும் ஞானமும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம்.…