தலைகீழாக நிற்பது உண்டு. கும்பகம் முதலான பிராணயாமப் பயிற்சிகள் செய்து அதனால் ஏற்படக்கூடிய சூட்டினால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கக் கூடிய குண்டலினி சக்தியை ஆக்கினைக்கு கொண்டு வருவது உண்டு.
இப்படி பல கடுமையான பயிற்சிகள் வைத்திருந்தனர். நமது அருள் தந்தையவர்கள் தன்னுடைய தல சக்தியை பயன்படுத்தி ஒரு சாதகனுக்கு மூலதாரத்தில் இருக்கக்கூடிய குண்டலினி சக்தியோடு தன் கை மூலம் பிரயோகம் கொண்டு முதுகுத் தண்டு வழியாகக் கொண்டு வந்து ஆக்கினைச் சக்கரத்தில் வைத்து விடலாம்.
அதன்பின் அந்தச் சாதகன் தன்னிடத்தில் உயிர் இருப்பதை அறிந்து கொள்வான். வேறு எந்த முறையும் கிடையாது. யாராலும் அறிந்து கொள்ள முடியாது. அவ்வாறு உயிர் மேல் மனம் வைப்பதால் இது ஒரு நல்ல தவமாக அமையும். அதாவது மனம் கொஞ்சம் பிசிறு இல்லாமல் மனம் நம் சொல்கேட்டு நாம் செலுத்தக்கூடிய இடத்தில் சென்று அதற்கு வீரியமும், ஆற்றலும் கூடி நல்லதைக் கண்டுபிடிக்கக் கூடிய ஆற்றலும், நல்லதைச் செய்யக்கூடிய ஆற்றலும், கெட்டது இருந்தால் அதைவிட்டு விடவும், மனதை தூய்மைப்படுத்தவும், மேன்மைப்படுத்தவும், மனதை இறைவன் வரைக்கும் செலுத்தவும் உள்ள பயிற்சிகளைத் தான் ‘எளிய முறைக் குண்டலினி’ எனவும், மனவளக்கலை என்றும் சொல்லப்படுகிறது.
இதுதான் நமது அருள்தந்தை அவர்கள் செய்த புரட்சி, சாதாராணமாக மனிதர் எவர் ஒருவராக இருந்தாலும் வேண்டியது நான்கு விஷயங்கள். இந்த நான்கு விஷயங்கள் இருந்தால் எவர் வேண்டுமானாலும் இந்த யோக சாதனையை செய்யலாம். நான்கில் ஒன்று உடல் அது இருக்கிறது. இன்னொன்று உயிர். அதுவும் இருக்கிரது. அதற்கு மேல் வேண்டியது விருப்பம். இது வேண்டுமா, நமக்கு வேண்டுமா என்ற விருப்பம். நான்காவது முயற்சி. இதற்கு வழி சொல்கிறார்கள்.
அந்த வழியிலேயே நாம் பயிற்சிகள் செய்து மனதை அறிந்து, உயிரை அறிந்து, தெய்வத்தை அறிந்து தெய்வத்தின் இயக்கத் திறமையை செயல் விளைவுத் தத்துவம் அறிந்து நல்லவர்களுக்கு நல்லது செய்வதும் தீயவர்களுக்குத் துன்பம் செய்வதும் தான் தெய்வத்தின் இயற்கை. அதுதான் செயல் விளைவுத் தத்துவம். ‘கர்மா தியரி’ (Karma Theory).
யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்து சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷமாக அவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் இருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டலாம். அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறை வீணாகப் போய்விடும் என்பதைக் கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களைக் கேட்டாலோ, விசாரித்துப் பார்த்தாலோ மூன்று தலைமுறை வரைக்கும் அந்தப் பழைய பாவங்கள் செய்துவிட்டு சந்தோஷமாகவோ இருந்தவர்கள் கிடையாது.
மூன்றாவது தலைமுறைக்காரர் முன் தலைமுறையினர் செய்து பாவத்துக்கு எல்லாம் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ‘மாதா, பிதா செய்ததெல்லாம் மக்கள் தலை மேலே’ என்ற செயல் விளைவுத் தத்துவத்தை மக்களுக்கு விளங்கும்படியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆகவே செயலை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் மனவலக்கலையின் நோக்கம். அவ்வாறு ஒழுங்குப்படுத்திக் கொள்வதற்கு பழக்கத்தின் காரணமாக அது முடியாது. ஏனென்றால் பழக்கத்துக்கு அதிக வலு இருக்கிறது. அந்த வலுவை மீறி நமது செயலை நல்ல செயலாக மாற்றிக் கொள்ள, அதாவது புண்ணிய செயலாக மாற்றிக் கொள்ள முடியாது. முடியாது.
அந்த மாதிரி இருக்கக்கூடிய மனதுக்குத் தான் இதை மாற்ற வேண்டும் என்பதும் மனம்தான். இதை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துச் செயல்படுத்துவதும் மனம்தான். ஆகவே மனதைத் தள்ளிவிட்டு ஒன்றுமே இல்லை. வாழ்க்கையே இல்லை. ஞானமே இல்லை. ஏன் மனதைக் கழித்து விட்டுப் பார்த்தால் பிரபஞ்சமே இல்லை.
அந்த மனதுக்குள் இவ்வளவு அற்புதங்கள் இருக்கிறது என்று தெரிந்துதான் நமது அருள் தந்தை அவர்கள் மனவளக் கலையை மற்றவர்களுக்கு கொடுத்து, அவர்கள் இறைவனை உணர்ந்து செயல் விளைவுத் தத்துவத்தை உணர்ந்து அந்த அறநெறி பிரகாரம் இயல்பாக வாழ்வதற்கு எல்லோருக்கும் பொருத்தமான இது ஒன்றும் கடுமையான பயிற்சி கிடையாது.
நமது மனவளக்கலையில் தவம் செய்வதற்கு நல்ல உடல் நலம் வேண்டும். உடல் நலத்துக்கு எளிய முறை உடற்பயிற்சி வகுத்திருக்கிறார்கள். அதைச் செய்வதற்கு கையும், காலும் இருந்தால் போதும். எட்டு வயது முதல் எண்பது வயது முதியவர் வரை யாரும் கற்றுக் கொண்டு செய்து உடல்நலத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். தவத்தை பிரச்சனை இல்லாமல் செய்யலாம். நோய் எதுவும் இருந்தால் தவம் செய்ய முடியாது.
முற்காலத்தில் சித்தர்கள் செய்து வந்த காயகல்ப பயிற்சியும் அருள் தந்தை அவர்கள் மீண்டும் வடிவமைத்து, அதையும் எளிமைப்படுத்தி யார் ஒருவரும் ஒரு 3 நிமிடம் செய்து உடலும், மனதும் மேம்படக் கூடிய ‘Semi Physical Yogic Exercise’ காயகல்பம் அதனையும் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த எளியமுறை உடற்பயிற்சி, எளியமுறை காயகல்பப் பயிற்சி, எளியமுறை குண்டலினி யோகப் பயிற்சி இந்த மூன்றையும்தான் நமது உலக சமுதாய சேவாசங்கம் அதன் அருள்பணி துறையாகிய மனவளக்கலை மன்றங்கள் கிளை மூலமாக ஆங்காங்கு கொடுத்து வருகிறது.