15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற
யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது
திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களால்
அப்போதே மேடையிலேயே எழுதி அளிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதைகள்
கடவுள் என்ற தத்துவத்தை கற்றவர்கள் பல்லோர்
தடபுடலாய் சொற் சேர்த்து சொன்னார் - கட + உள்
என்று சொல்லினையே பிட்டுப் பொருள் கூறி
என்னுள்ளும் உள்ளபொருள் காட்டினவர் யார் ?
எங்கும் உளது என்றார் எட்ட வழி காட்டினரோ
எங்கள்வே தாத்திரியார் கிட்டேகி - அங்கே
அமர்த்தி அதுநீயே நீயேஅது காண் என்றார்
நிமிர்த்தி எங்கள் நெற்றி தொட்டே.