இறைநிலை தெய்வம் உண்டு. அதற்கு உருவம் இல்லை என்ற தெளிவிலே அறநெறியைப் பற்றி வாழ முடிகிறது. முடியும் என்று நமது அருட்தந்தை அவர்கள் கொடுத்துள்ள அடிப்படையான கொள்கை திட்டம்.
எந்த ஜீவனுக்கும் துன்பமளிக்காமலும், இயன்றவரை அந்த ஜீவனை துன்பத்திலிருந்து விடுவிப்பதும் என்று வாழ்பவன் தான் மனிதன். இதை இரண்டொழுக்கப் பண்பாடு என்று நமது அருள் தந்தை அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த இந்லையிலே மனித குலத்தை அதன் தவறான போக்கிலிருந்து தடுத்து காப்பதற்கு ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்ற ஒரு நிறுவனத்தை நமது அருள் தந்தையவர்கள் நிறுவினார்கள்.
இதில் பயிற்சி முறைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு நல்ல விஷயமும் பயிற்சி இல்லாமல் வராது. பயிற்சி என்றால் என்ன? செய்வது, திரும்பச் செய்வது, விடாமல் செய்வது, செய்து கொண்டே இருப்பது. அதுதான் பயிற்சி. அதை ஆங்கிலத்தில் practice என்பார்கள்.
இந்தப் practices-ஐ கற்றுக் கொடுப்பதற்காக பயிற்சி வைக்கிறார்கள். அந்தப் பயிற்சியை courses என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எதற்காக courses? Practises-ஐ சொல்லிக் கொடுப்பதற்காக courses. அகத்தாய்வு பயிற்சிகள் முதலான பயிற்சிகள் எதற்கு? இதுவரைக்கும் நம்மிடம் ஏற்பட்ட தீய பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ள பயிற்சி. இனி மனிதனுக்கு உரிய பயிற்சி, நல்ல பயிற்சிகளை கற்றுக் கொள்வதற்காக பயிற்சி என்று பயிற்சிகளை நமது அருள் தந்தையவர்கள் கொடுக்கிறார்கள்.
அதில் ஆசிரியர் பயிற்சி என்று ஒரு பயிற்சி இருக்கிறது. அந்த ஆசிரியர் பயிற்சியை அநேகர் எடுத்துக் கொள்கிறார்கள். எடுத்துக் கொண்டு நல்ல விதமாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நல்ல கணவனாக, நல்ல மனைவியாக, நல்ல தாயாக, நல்ல தந்தையாக, நல்ல மக்களாக, நல்ல சகோதர, சகோதரிகளாக வாழ்கிறார்கள். யார்? அருள்நிதியர்கள்.
இதற்கு ’பிரம்மஞான பயிற்சி’ போதுமே. ஆசிரியர் பயிற்சி எதற்காக? எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல மனவளக்கலைஞனாக, நல்ல மனிதனாக விளங்குவதற்கு என்ன வேண்டுமோ அதை அகத்தாய்வு ஐந்தாம் நிலை பயிற்சியில் அது எது? ‘பிரம்ம ஞான பயிற்சி’. இதை ஐந்து பயிற்சிகளிலும் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
மனிதனுக்கு ஆசை என்பது கூடப் பிறந்தது. ஜீவன் என்று வரும் பொழுதே ஆசை வந்து விடுகிறது. அந்த ஆசை பேராசையாக மாறக்கூடாது. இந்த அடிப்படையான விஷயம் உங்களுக்குத் தெரியும். அது எந்நிலையிலும் பேராசையாக மாறி விடக்கூடாது.
பேராசை என்றால் என்ன? எது நமக்குத் தேவை இல்லையோ அது மேல் ஆசைப்படுவது பேராசை. எது நமக்கு அதிகபட்சமோ அதுமேல் ஆசைப்படுவது பேராசை. இது அடிப்படையான இலக்கணம். நமக்கு 4 இட்லி போது. 5வது இட்லி சாப்பிடலாமென்றால் அது பேராசை. காலை சாப்பாட்டுக்கு “அல்வா” வேண்டும். இது பேராசை. தேவை இல்லாதது மேல் ஆசை. அளவே கூடுதலாக போனால் அது பேராசை.
இந்த அளவுகோலை வைத்துக் கொண்டு ஆசிரியர் பயிற்சியை எடை போட வேண்டும். அல்வா ரொம்ப நல்லது அல்லவா, இட்லி நல்லது அல்லவா? நல்லது தான். ஆனால் பேராசை என்று ஒதுக்குகிறோமே. அளவுக்கு மிஞ்சினால் அமிதமும் நஞ்சு. தேவை இல்லாததை சேர்த்து வைத்தால் நமக்கே இடையூறு. எல்லாம் ஆசை ஒழுங்கு தற்சோதனையில் நீங்கள் தெரிந்து கொண்ட சமாச்சாரம் தான். நினைவு படுத்திப் பாருங்கள்.
இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி எடுக்கப் போகிறீர்கள். உங்களில் ஒருவருக்கு ‘இன்ஜினியராக’ வேண்டும் என்று ஆசை. வேண்டியதுதான். ஆனால் அவர் மெடிக்கல் சீட்டுக்கு apply பண்ணுகிறார். தமாஷாக இல்லை. இன்னொருவருக்கு டாக்டராக வேண்டும் என்று ஆசை. அவர் இன்ஜினியர் சீட்டுக்கு apply பண்ணுகிறார். தமாஷாக இல்லை.