KG Sami1937 — 2006

உயிர்

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு

எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை ஆகாசம் என்று நாம் சொல்கிறோமே, அதைதான் விஞ்ஞானிகள் particle என்று சொல்கிறார்கள். பிரபஞ்சத்தின் அடிப்படை particle. அதுதான் மனிதனுடைய அடிப்படை மூலக்கூறு. Fundamental particle, atomic particle என்று சொல்லக்கூடிய அந்த particleதான் universeனுடைய அடிப்படை. தத்துவ ஞானத்தில் ஆகாசம் என்பது பிரபஞ்சத்தினுடைய அடிப்படை. பிரபஞ்சம் வேற, universe வேறயா? இல்லை. அதே போல ஆகாசம் வேற, particle வேற இல்லை. அந்த particle பற்றி விஞ்ஞானத்தில் நல்லா தெளிவுபட ஆராய்ச்சி பண்ணி வைச்சிருக்காங்க. அது தற்சுழல் உடையதுன்னு தெரிஞ்சு வைச்சிருக்காங்க. ஆகவே ஆகாசம் என்பது தற்சுழலுடையது. அது பல்வேறு நிலைகளில் இருக்கும். கண்ணுக்கு தெரியாத சின்ன துகள் அது. தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, அதே போல சுழலக் கூடிய மற்றவற்றை ஒரளவுல தள்ளி நிறுத்திக் கொண்டு, எந்த ஒன்றையும் நெருக்கி இடித்து கொள்ளாமல், எந்த ஒன்றும் மற்றொன்றை விட்டு ஓவிடாமல், ஒன்றை ஒன்று தள்ளி பிடிச்சுகிட்டு ஒரு tight pack ஆக பிரபஞ்சம் முழுவதும், நட்சத்திரங்கள், கோள்கள் போக மிச்சமுள்ள பிரதேசத்திலும் வியாபித்திருக்கிறது. அதை cosmic energy, universal magnetism, ether என்று விஞ்ஞானத்துல சில, பல பேர்ல சொல்றாங்க. மேலும் அவங்க சௌகரியத்திற்காக electron, proton, neutronன்னு பிரிச்சிருக்காங்க. மற்றபடி இந்த மூன்றும் ஒன்றுதான்.

அண்டவெளி முழுவதும் நிரம்பி உள்ள நிலையில் அதனை மகாகாசம் என்கிறோம். அதே ஆகாசம் தனித்தனியா இருக்கிறதை விட்டுட்டு கூட்டம், கூட்டமா சேர்ந்து ஒன்றை ஒன்று தொடாமல் இடைவெளியை குறைத்துக் கொண்டு நெருங்கி இயங்குமானால், நெருக்கத்துக்கு தக்கவாறு, அந்த கூட்டத்தில் இருக்கக்கூடிய number of particlesக்கு தக்கவாறு நாம் அதனை ஐந்து பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். ஒரு சின்ன கூட்டம்னா காற்று, கூட்டம் கொஞ்சம் நெருக்கமா இருந்தா அதுல ஒரு சூடு வரும் அப்ப நெருப்பு, இன்னும் கொஞ்சம் நெருக்கமா இருந்தா உக்காந்துரும் ஆனா, ஓடும் அப்ப நீரு, இன்னும் கொஞ்சம் நெருக்கமா இருந்தா இருந்த இடத்தை விட்டு நகராது கெட்டிப் பொருள் அப்ப மண். இதைத்தான் பூதம்னு சொல்லுவாங்க. பூதம்னா இந்த பேய், பிசாசுன்னு சொல்றாங்களே அது இல்லை. உண்மையில் பூதம் என்பது பௌதம் என்ற சமஸ்கிருத சொல்லினுடைய பிரிவு நிலை. பௌதம் என்றால் physical phenomenon என்று அர்த்தம். ஆகாசமே தனது மடிப்பு நிலையில் இந்த பூதங்களாக மாறுகின்றது. இப்படி ஐந்து பூதங்களாக மாறி உள்ள நிலையில் ஆகாசத்தை பூத ஆகாசம் என்கிறோம். அதே ஆகாசம் அண்டவெளியில பெரிய அளவில இருக்கிறதுனால அதனை மகாகாசம் என்கிறோம்.

அன்பர்களே!

அதே ஆகாசம் அதாவது particle, அதுல ஒண்ணாகிய electron ஒரு கம்பியில ஓடினா என்ன பேரு? The flow of electron is called electricity. Electron கம்பியில் ஓடும்போது மின்சாரம் என்று பெயர் பெறுகிறது. அதே ஆகாசம் உடம்புல ஓடினா அது சித்தாகாசம். “சித்” என்றால் உயிர் என்று அர்த்தம். சமஸ்கிருதத்துல சித்தாகாசம் என்று சொல்வதைதான் தமிழில் உயிர் அல்லது ஆன்மா அல்லது ஆத்மா அல்லது ஜீவன் என்று சொல்கிறார்கள். நமது உடலில் இருந்தால் ஜீவன் அல்லது உயிர், வெளியில் இருந்தால் ஆகாசம் அல்லது particle. அப்போ எது உயிராக இருக்கிறது? electron, proton, neutron போன்ற particleதான் நம்மிடத்தில் உயிராக இருக்கிறது. எது உயிராக இருக்கிறது? ஆகாசமே நமது உடம்பில் உயிராக இருக்கின்றது. எது உயிராக இருக்கின்றது? எது பூதமாக மாறியதோ அதுவே மாற்றமில்லாமல் நம்மிடத்தில் உயிராக இருக்கின்றது. எது கம்பியில ஓடினா மின்சாரமோ அதுவே நம்மிடத்தில் உயிராக இருக்கின்றது.

அன்பர்களே!

நம்மிடத்தில் உயிராக இருக்கக்கூடியது ஆகாசம். து கல்லு மாதிரி, நீரு மாதிரி, காற்று மாதிரி கிடையாது மிகவும் நுட்பமானது. நுட்பமோ நுட்பமானது, பரம நுட்பமானது. ஆகவே எதனையும் தடுக்காது. இங்க ஒரு கண்ணாடி இருக்குது பாருங்க, அது நம்ம பார்வையை தடுக்கலை பாருங்க. இதனை ஒளி ஊடுருவக்கூடிய தன்மை என்று சொல்வார்கள். அதே மாதிரி ஆகாசம் எதையும் மறைக்காது. உதாரணத்துக்கு நீராவி எடுத்துக்கங்க. நீராவி வெந்நீர் பானையிலிருந்து வெளியே வருது. அந்த வெந்நீர்ப் பானைக்கு அந்த பக்கத்துல தோசைக் கல்லை நிப்பாட்டி வைச்சிருந்தா, நீராவி தோசைக்கல்லை மறைக்குமா? மறைக்காது. ஆனா நீராவி நிலாவை, சூரியனை மறைச்சுருதே, அது எப்படி? ஏன்னா, அந்த நீராவி கொஞ்சம் அடர்த்தியா இருக்குது, அதுக்கு பேரு மேகம். எவ்வளவு அடர்த்தியா இருந்தாலும் ஆகாசம் எதையும் மறைக்காது. இந்த பிரபஞ்சம் முழுவதும் ஆகாசம்தான், ஆனா எந்த நட்சத்திரத்தையும் மறைத்ததா தெரியலையே! அப்ப ஆகாசம் எவ்வளவு நுட்பமானதுன்னு தெரிஞ்சுக்கங்க. இப்போ ஒரு திரைச்சீலை தொங்குதுன்னு வைச்சுக்கங்க, ஒரு பக்கம் இருக்கற காத்து திரைசீலையைத் தாண்டி மறு பக்கம் போயிருது. அந்த பக்கம் இருக்கற காத்து இந்த பக்கம் வந்துருது. இது போல ஒரு பொருளை ஊடுருவி இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கம் போறதுக்கு சில பொருள்களாலதான் முடியும். தண்ணி கூட துணிய அந்தாண்ட தாண்டீரும், அதுக்கு வடிகட்டறதுன்னு சொல்லுவாங்க. ஆனா ஆகாசம் எதையும் தாண்டிப் போயிடும், அவ்வளவு மென்மையானது. சுவருக்குள்ளயும் இருக்கும், அதை தாண்டியும் போயிடும். சுவருக்குள்ள ஆகாசம் இருக்கான்னு கேக்கறீங்களா? சுவரு எதால ஆனது? கல்லாலானதுதானே? அதனால தான் செங்கல்லத் தூக்கி தண்ணியில போட்டா அதுக்குள்ள இருந்து காத்து வருது. கல்லுல இடுக்கு இருக்கு. அந்த மாதிரி எந்தப் பொருளிலும் மிகச் சன்னமான இடுக்கு இருப்பதுனால ஆகாசம் அதுக்குள்ள புகுந்து போயிடும்.

ஆகவே ஆகாசத்தை யாராலயும், எதனாலயும் தடுக்க முடியாது. இப்படிப்பட்ட ஆகாசம் நம்ம உடம்புல எப்படித்தான இருக்குதோ தெரியலை, ஏன்னா அந்த பக்கமும் இந்த பக்கமும் ஓடிவிடக் கூடியது அது. நம்ம உடம்பை விட்டு எப்ப ஓடிருமோன்னு பயந்துட்டிருக்கிறோம். ஓடிருச்சுன்னா அதுக்கு பேரு மரணம். நிச்சயமா மரணம் வரத்தான் போகுது, தடுக்கவே முடியாது. வேணும்னா தள்ளிப் போடலாம். உயிர் (ஆகாசம்) அவ்வளவு மென்மையாக இருக்கறதுனால ஓடத்தான் பார்க்கும். உயிர் நம்ம உடம்புக்குள்ள ஒடிக்கொண்டிருக்கிறது, ஆனா உடம்பை விட்டு ஓடலை. ஒரு விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்துல நமது உடம்புல உயிர் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே உயிர்தான் தேவை, பயிற்சி, செயல், விளைவு, அனுபவம், அனுபோகம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற கட்டங்களை தாண்டும் போது மனமாக மாறுகின்றது.

எது மனம்? உயிரே பத்துக் கட்ட பரிமாணத்திற்கு பிறகு உணர்ச்சி, தேவை, முயற்சி அப்படீன்னு மனமாக மாறுகிறது. ஆகவே மனம் என்ற ஒன்று கிடையாது, உயிர் என்ற ஒன்றுதான் இருக்கின்றது. வெளிச்சம்னு என்ற ஒன்று கிடையாது, மின்சாரம் என்ற ஒன்றுதான் இருக்கின்றது. எப்படி மின்சாரமே வெளிச்சமாக மாறுகிறதோ, அவ்வாறு உயிரே மனமாக மாறுகிறது. வெளிச்சத்தை சேமிக்க முடியாது, ஆனா மின்சாரத்தை சேமிக்கலாம். மனதை சேமிக்க முடியாது, உயிரை சேமிக்கலாம். ஆகவே உயிரை சேமிக்கணும். எந்த அளவுக்கு அதிகமாக சேமிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு அதிலிருந்து வரக்கூடிய மனம் அழுத்தமாக இருக்கும், ஆற்றல் கூடியதாக இருக்கும். ஆதலால்தான் நாம் உயிரை சேமிப்பதற்காக அதிலிருந்து வெளியே போய்க் கொண்டிருக்கின்ற மனதை தடுக்கிறோம். மனதைக் கொண்டு போய் அது எதிலிருந்து வந்ததோ அந்த உயிருல கொண்டு போய் வைச்சுரணும். இதைத்தான் “தவம்” என்று சொல்லுவார்கள். உயிர் மேல் மனம் வைச்சு செய்தால்தான் அதுக்கு பேரு தவம். தவம் என்று ஒரு அதிகாரம் இருக்குது திருக்குறள்ல. அதுல ஒரு குறள் சொல்றேன் கேளுங்க,

“தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்.”

இந்த திருக்குறளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? தன்னிடத்தில் “உயிர்” என்று ஒன்று இருப்பதை ஒருவர் தீர்க்கமாக தெரிந்துகொண்டால் அவர் தவசீலர். எல்லோரும் அவரை போற்றுவார்கள் என்று அர்த்தம். நம்மிடத்தில் இருக்ககூடிய ஆகாசம், அதை நாம் இப்பொழுது அதனுடைய சிறப்பு கருதி உயிர் என்றும், ஆத்மா என்றும் ஆன்மா என்றும் சொல்லுகின்றோம். இப்போ இந்த ஆன்மா எங்கிருந்து வந்தது? அது பெருமளவுல எங்கிருக்குது? காற்றாக, நீராக, நெருப்பாக, நிலமாக, ஜீவனாக மாறாம எங்க இருக்குது? அண்டவெளியில இருக்குது. நம்மிடத்தில் உயிராக இருக்கக்கூடிய அது அண்டவெளியில இருந்து வருது. இந்த உடம்பு அது இருப்பதற்கு சௌகரியமாக இருப்பதால் அது இந்த உடம்புல இருக்குது. இந்த உடம்பு கெட்டுப் போச்சுன்னு வைச்சுக்கங்க, ‘இனிமே இதுல நாம இருக்க முடியாது’ன்னு அது புறப்பட்டு போயிடும். அதைத்தான் நாம் மரணம் என்று சொல்கிறோம். சரி, இப்போ மரணம் ஆகிப்போச்சு, அது எங்கே போகும்? குளத்திலிருந்து ஒரு குடத்துல தண்ணி எடுத்துட்டு வரீங்கன்னு வைச்சுக்கங்க. திடீர்னு குடத்தை விட்டுட்டீங்க, அது விழுந்து உடைஞ்சு போச்சு. இப்போ குடத்துல இருந்த தண்ணி எங்கே போகும்?அது எங்கிருந்து வந்ததோ அங்கே போகும். அண்டவெளியில இருந்த ஆகாசம் நம் உடம்பில் இருக்கும் போது உயிர் என்ற பேரைப் பெற்று பல சிறப்புகளெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. இந்த உடம்பு உடைஞ்சு போச்சுன்னா அந்த ஆகாசம் எங்கே போகும்? அது பொறந்த வீட்டுக்குத்தானே போகணும்? ஆகவே அண்டவெளிக்குப் போயிரும். செத்தவங்களோட உயிரெல்லாம் அண்டவெளிக்குப் போயிடணும். ஆனா அதெல்லாம் அவ்வளவு சுலபமா, அவ்வளவு சீக்கிரமா போறதில்லை. கொஞ்ச காலம் இங்கதான் இருக்கும். அதுதான் ஆவி. சில பேர் மிரண்டு போய் பேயிம்பாங்க, அதெல்லாம் கற்பனை.

அன்பர்களே!

அந்த ஆகாசமே உயிராக, ஆவியாக இருக்கிறது, அந்த உயிர் நான் முதல்லயே சொன்னமாதிரி எதையும் மறைக்காது, எது வழியாயும் பூந்து போயிரும். அப்படியாகப்பட்டது அண்டவெளிக்கு போக முடியாமல் இங்கேயே கொஞ்ச காலம் இருக்கும், அதுக்கு அப்புறமாத்தான் போகும். ஏன்னா அதுக்கு பளு ஏறிப் போச்சு. மண்ணு கனமானது, அதை விட லேசானது நீரு, அதை விட லேசானது நெருப்பு, அதை விட லேசானது காற்று, அதை விட லேசானது, சர்வ லேசானது ஆகாசம், அதாவது உயிர். அப்படின்னா அது gas baloon மாதிரி மிதந்து, மிதந்து, மேலே போக வேண்டியது தானே? பசங்க எல்லாம் நீட்டமா நூல்ல பிடிச்சுட்டு தெருவுல ஓடுவாங்களே, அதுதான் gas baloon, பார்த்திருக்கீங்களா நீங்க? டேய்! சாப்பிட வான்னு கூப்பிட்டா அந்த பையன் என்ன செய்வான் தெரியுமா? அவ்வளவு நீட்ட நூலுள்ள பலூனை வீட்டுக்குள்ள கொண்டு வர முடியாது. அந்த gas baloonக்கு குனிஞ்சு எல்லாம் வர தெரியாது. அதனால அதை ஒரு கல்லுல கட்டி வைச்சுருவான். எப்படி கல்லிலே கட்டப்பட்டு விட்டால் gas baloon மேலே போக முடியாமல் மிதந்து கொண்டிருக்குமோ, அதே மாதிரி பளு காரணமாக ஆகாசமும் மேலே போவதில்லை. ஒரு பளு, ரெண்டு பளு இல்லை, மொத்தம் மூணு பளு. ஆணவம், கன்மம், மாயைதான் அந்த மூணு பளு. அந்த மூணு பளுவையும் தூக்கி கொண்டு, ஆகாசத்தால தன்னுடைய சொந்த இடமான அண்டவெளிக்கு போக முடியறதில்லை. அதனால என்ன பண்ணுது? அப்படி, இப்படின்னு உலாவிக் கொண்டே இருக்கும். எப்பதான் போகும்? இந்த ஆணவம், கன்மம், மாயையெல்லாம் காலா காலத்துல தீரும். அதெல்லாம் தீர்ந்ததுக்கு அப்புறம் ஆன்மாவுக்கு விடுதலை கிடைச்சிரும். அது போயே போயிரும். இது சட்டு புட்டுன்னு ஆகிற காரியமில்லை. அதற்கு சில, பல தலைமுறைகள் ஆகும்.

அன்பர்களே!

இறந்த உயிர் மறுபடியும் பிறக்குமா? பிறக்காது. ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரம் வருது. எப்படி வருது? விதை போட்டால் வரும். விதை போடாமலும் தாவரம் வரும் தெரியுமா உங்களுக்கு? இந்த அரைக்கீரை தெரியுமா உங்களுக்கு? அதை ஆஞ்சு ஆஞ்சு சாப்பிட்டுட்டு குச்சியெல்லாம் கொண்டு போயி உங்க வீட்டு கொல்லை பக்கத்துல நட்டு வைங்க. அதுக்கு தாராளமா தண்ணி ஊத்துங்க. அது நல்லா தழைஞ்சுட்டு வந்துரும். விதையும் வேணாம், ஒண்ணும் வேணாம். அதே மாதிரி சில மரத்தையும் வெட்டி வெச்சாப் பொழைச்சுரும். உதாரணமா ஆலங்கிளைய வெட்டி வெச்சு, நிறைய தண்ணி ஊத்தி, வைக்கோல் புல்லை சுத்தி வைச்சு, வெய்யில் தாக்காமல், பூச்சி தாக்காமல் இருக்க அதுல சாணத்தை பூசி மொழுகி வைச்சீங்கன்னா அது கூட கிளை விட்டுரும். இந்த தாவரங்க எல்லாம் கிளை விடற மாதிரி நாமளும் கிளை விட்டுக்கிறோம். எப்படின்னு கேக்கறீங்களா? நமது உடம்பும், நமது உயிரும்தான் நமது குழந்தையாக வருகிறது. இதை வேற மாதிரி சொல்லப் போனா விதை போட்டு முளைக்கறதாவும் வைச்சுக்கலாம். விந்து, நாதம்னு சொல்லப்படற ஆணுடைய விதையும், பெண்ணோட விதையும் கர்ப்பப்பையில் ஊன்றி அவை ஒன்றாக கலந்து முளைத்து, பத்து மாதம் வளர்ந்து, பிறகு குழந்தையாக வெளியே வந்து வாழத் துவங்குகிறது. குழந்தை எங்கிருந்து வருகிறது? அவரவருடைய தாயார், தகப்பனாருடைய உடலாகவும், உயிராகவும் இருந்து, பிறகு அங்கிருந்து திரிந்து வந்து குழந்தையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே மரமும், கிளையும் சூக்குமமா, ஸ்தூலமா ஒட்டிக்கிட்டு இருக்கற மாதிரி தகப்பனும், மகனும் ஸ்தூலமா ஒட்டிகிட்டு இல்லாமல், சூக்குமமா ஒட்டிகிட்டு இருக்காங்க. ஸ்தூலம்னா பார்த்தால் தெரியும், சூக்குமம்னா பார்த்தால் தெரியாது. அதனால் தான் தான் ஆடாட்டியும் தன் சதை ஆடும்னு சொல்றாங்க. உடல்கள் வேறு வேறாக இருந்தாலும் உணர்வுகள் ஒன்றி இருக்கும். ஆகவே அவரவர்கள் குழந்தைகள் தான் அவரவர்களுக்கு மறுபிறவி. இறந்து பிறப்பதற்கு முன்னால் இறக்காமலேயே பிறந்து விடுகிறார்கள். இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

- நினைவில் உங்களோடு kgs.

 

Keep reading

More from the archive

Arulnithi Muthappan

தியாகச் செம்மல் வேதாத்திரி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதோ, எழுபத்தொன்றோ, சரியாக நினைவிலில்லை. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. கூடுவாஞ்சேரியில் மகரிஷிகளுடைய இல்லத்தின் எதிர்புறத்தில்…

KG Sami

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு…

KG Sami

வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா

15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களால்…

Kannimuthu

பிறவித் தொடர் தத்துவதில் செய்த புரட்சி

வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,நவயுகத்திற்…

KG Sami

தவம்-12

பெரும்பாலும் ஆசிரமங்களிலும், மடங்களிலும் தான் இந்த தவம் செய்யப்பட்டது. சமுதாய விரிவாக அந்த காலத்தில் வரவில்லை. ஆசிரமங்களிலும், மடங்களிலும் செய்யும்…

Kannappa

மனிதரில்மட்டும்ஏன்வேறுபாடு?

ஜன்னல்ஓரம்உட்கார்ந்துஇட்லிதின்பதுஎனதுவழக்கம். ஒருநாள்வெளிப்பக்கம்ஒருகாக்கைபறப்பதும்ஜன்னலில்வந்துஉட்கருவதுமாகத்தவித்துக்கொண்டிருந்தது.…