சுத்தவெளி எங்கே? அது இருந்த இடத்திலே வேறு என்னவோ அல்லவா இருக்குது. விரிவலை இருந்ததே. போச்சே. அது என்ன ஆச்சு. அதுவும் காணாமல் போய்விட்டதே. இரண்டும் போய் வேறு என்ன வந்திருக்கிறது. அது என்ன?
வெள்ளையாய் இருந்தது ஒரு டம்ளரில். அது பால் என்று சொன்னார்கள். கறுப்பாய் இருந்தது இன்னொரு டம்ளரில். அது பெயர் டிகாக்சன். இரண்டையும் மூன்றாவது டம்ளரில் ஊற்றினார்கள். இப்போ அது வெள்ளையாயும் இல்லை. கறுப்பாயும் இல்லை. நடுத்தரமாக இருக்குது காபி. காபியில் பால் இருக்காது. காபியில் டிகாக்சன் இருக்குது.
காந்தத்தில் இறைவன் இருக்கிறான். ஒரு பெரியவர் சொன்னார். ‘சிக்கெனப் பிடித்தேன்’ – மாட்டிக் கொண்டாயா. எங்கே போவாய். சிக்கிக் கொண்டாயா. நாம் காந்தத்தைப் பிடித்தால் இறைவன் சிக்கிக் கொள்வான். அந்த காந்த எங்கே இருக்கிறது. அதுதான் அந்தச் சுத்தவெளியில் இருக்குது அல்லவா? இமயமலைக்கு மேலே காற்று மண்டலத்துக்கு மேலே உயரமாக போய் மேக மண்டலத்திலா சுத்தவெளி இருக்குது.
அந்தச் சுத்தவெளியில் விரிவலை கரைந்து காந்தமாக இருக்கிறது. அங்கே போய் நாம் காந்தத்தைப் பார்க்கலாம். அது வான் காந்தம். இன்னொரு காந்தம் இருக்கிறது. ஊன் காந்தம். அது எங்கே இருக்கிறது. இமயமலைக்கு அடியிலா. இல்லை. நம்மிடத்திலேயே இருக்கிறது. நாமாக இருக்கிறது அந்தக் காந்தம் நம்மை விட்டுப் போய் விட்டதென்றால் நாம் இல்லை. பிணம். ஊரில் உள்ளவர்கள் ‘தூக்கு தூக்கு’ என்பார்கள். பூசை எல்லாம் நிறுத்தி வைத்திருக்கிறோம். தூக்குங்கள் என்பார்கள். ஏன்? காந்தம் போய்விட்டது.
நம்மிடத்திலே காந்தம் இருக்கிறது. அதற்குப் பெயர் ஜீவ. ஊன் காந்தம். அப்போ ஊன் காந்தத்திலே சுத்தவெளி என்று படித்தோம் அல்லவா? அப்போ ஊன் காந்தத்திலும் சுத்தவெளி இருக்கும் அல்லவா. இருக்கும். ஊன் காந்தம் என்றால் அது எங்கே இருக்கிறது? உள்ளே. அதை நன்றாக கண்டுபிடித்தவன் தமிழந்தான்.
கடவுள் என்று சொன்னான். வழி எல்லாம் யார் சொல்லிக் கொடுத்தார்கள். நடக்கிறது வேறு. கடக்கிறது. அனுமன் கடலில் நடந்தானா? கடந்தானா? கடக்கிறது ரொம்பக் கஷ்டம். அனுமன் கடலை கடந்து சென்றார். ‘நீங்கள் எல்லாம் சூட்கேஸ் கொண்டு வருவீங்க. அதில் என்ன கஷ்டம். ஈஸியாக கொண்டு சொல்வீர்கள். ஆனா அது ரொம்ப கஷ்டம். ஆமா ரொம்ப கஷ்டமாக ஒரு சிலர் சூட்கேஸ் தூக்கிக் கொண்டு போகிறார்கள் தெரியுமா? கஞ்சா வைத்து, தங்கம் வைத்து சூட்கேஸில் கொண்டு போவார்கள். கஷ்டமான ஒரு காரியத்துக்கு பெயர் கடத்தல்’.
அட ஆமா அது கஷ்டம். தாண்டு. எங்கே. கிருபானந்த வாரியார் சொல்வார். உள்ளே. எங்கு மனதுக்குள் தாண்டு. மனம் என்றால் என்ன? ஜீவகாந்தம். ஜீவகாந்தம் என்றால் என்ன? இறைவெளி, விரிவலை கூட்டு. விரிவலை யாருக்கு வேண்டும்? அதை விடுங்கள். இறைவெளி அங்கே இருக்கிறதா? எங்கேயாவது எழுந்து போக வேண்டுமா. வேண்டாம் நம்மிடத்திலே அது நாமாக நமக்குள்ளே கண்டு கொள்வது தான் நித்யானந்த தவம்.
அந்தம் Process-ஐ இப்படி வைத்தார்கள். முதலில் ஆக்கினைச் சக்கரத் தவம். மனம் அமைதி நிலைக்கு வருகிறது. புலன்களிலிருந்து விடுதலை. ஆக்கினைச் சக்கரத் தவம் செய்த பின் துரியம். அடக்க நிலை. அமைதி நிலை. நாம் போகிற இடம் பெரிய இடம். சுத்தபத்தமாக போக வேண்டும். கோயிலுக்கு எதிரில் தெப்பக்குளம் வைத்தார்கள் பாருங்கள். கை, கால் கழுவிக் கொண்டு முடிந்தால் ஒரு குளியல் போட்டுக் கொண்டு ஈரத் துணியுடன் போய் சாமி கும்பிடு. அப்போ இறைநிலை சகஜமாக மனதில் வரும்.
அதுபோல கால், கை சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள ஆக்கினைச் சக்கரத் தவம், துரிய தவம் செய்துவிட்டு மனம் அமைதி நிலைக்கு வந்தபின் மனதை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் மனதை உடலுக்குள்ளே ஓட்டுகிறோம். ஆமாம் மனதை ஓட்டுகிறோம்.
மனம் என்றால் என்ன? ஜீவகாந்தமே மனம். இப்போ ஜீவகாந்தம் மேலும் கீழுமாக ஏறுகிறது. இறங்குகிறது. வழி என்ன வழி? என்று நீங்கள் சொல்கிறீர்கள். அந்த வழி என்ன கரடு முரடானதா. கத்தி ரோடா, தார் ரோடா. இல்லை மலேஷியாவில் போட்டிருக்கிற மாதிரி ரப்பர் ரோடா. எங்க பாண்டிச்சேரியில் ஒரு பிட் ரப்பர் ரோடு போட்டிருக்கிறார்கள். ஒரு Trial-க்காக. அந்த ரப்பர் ரோடா?
வழி என்ன வழி. செல்கள் ஊடே போகணும். Body Cell ஊடே போக வேண்டும். என்ன தான் அந்த Body Cellகளில் ஜீவகாந்தம் இருந்தாலும் Plain ஜீவகாந்தம் மனம். மேலும் கீழுமாக போகும் போது Body Cells-ஐ நீவும், உரசும், ஊடுருவும். முடிக்கும், சீப்புக்கும் உள்ளது மாதிரி. சிக்கு இல்லாத முடி என்று வைத்துக் கொள்ளுங்கள். சீப்பு போட்டு எழுக்கும் போது Some Friction இருக்குமா இல்லையா. முடியில் சிக்கும் இல்லை. எண்ணெய் தடவி இருக்கிறீர்கள். நல்ல பெரிய பல் உள்ள சீப்பாக இருந்தாலும் சீவும் போது ஒரு Friction ஏற்படும். அந்த மாதிரி ஒரு Friction ஏற்படும். மனதுக்கும், Body Cell களுக்கும்.
இதனால் நல்ல ஆழ்ந்து, அமைதியாக, நீளமாக தவம் செய்து, பல நாள் செய்து பார்க்கும் போது தெரியும். ஆமாம் உடலுக்குள் Body Cells இருக்கிறது. அதாவது Gross Wave Length உள்ள மனதுக்கு இவ்வளவு தான் தெரியும். உடலுக்குள் இத்தனை Body Cells இருக்குதா? இப்படி Arranged Way ஆக இருக்குதா?
காயகல்ப விளக்கத்திலே Body Cell ஐப் பற்றி விளக்குகிறோம் அல்லவா? அது இங்கே அனுபோகத்துக்கு வரும். நாலு மாதம் இல்லை, நாலு வருடம் செய்யுங்கள். அதன்பின் இரண்டு இருந்தால்தானே Friction. இங்கே சீப்பால் சீவும்போது முடி இருப்பது தெரிய வருமே. இங்கே Cells-ஐக் கண்டுபிடித்தீர்கள். இந்த உரசல் ஏற்பட இரண்டு பொருள் தேவையாச்சு. இன்னொரு பொருள் என்ன? ஜீவகாந்தம். ஜீவகாந்தம் மனதுக்கு புலப்படும்.
உடல் முழுவது ஜீவகாந்தத்தை விட்டு கீழே விட்டு, மேலே வாங்கி, மேலே விட்டு, கீழே வாங்கி கால ஓட்டத்தில் Body Cells தெரிய வரும். ஜீவகாந்தம் இருப்பது தெரிய வரும். இதுவே பெரிய Achievement.
இன்னும் பல காலம் நீங்கள் செய்ய செய்ய ஜீவகாந்தம் என்னமோ Split ஆக தெரியுதே அது என்ன? ஒன்று விரிவலை. இன்னொன்று சுத்தவெளி இருப்பது மெல்ல புலப்பட்டு விடும். நமது உடம்பிலே சுத்தவெளி இருக்கிறது. In the shape of the body, in the size of the body சுத்தவெளி இருக்கிறது. இங்கேயே இருக்கிறது. ஏன் அடுத்த வீட்டில் எட்டிப் பார்க்க வேண்டும். கோயில் ஏன்? குளம் ஏன்? சொல்லுங்க பார்ப்போம்.
நமது ஜீவகாந்தத்தில் சரிபாதியாக சுத்தவெளி இருக்கிறது. அப்போ அப்படியே இருங்கள். என்ன செய்கிறீர்கள்? இப்போ இறைவனைக் கண்டு கொண்டேன். காந்தமாக இறைவனைக் கண்டு கொண்டேன். இன்னும் செய்ய செய்ய, அவசரம் கூடாது. அந்தத்துக்கு போய் ஆகணும். இந்தச் சுத்தவெளி வான் காந்தத்திலும் இருக்கிறது. சரி பாதியாக வான் காந்தம் எங்கே இருக்கிறது. நமது உடலுக்கு just வெளியே இருக்கிறது. நமது சருமம். சருமத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கக் கூடிய முடி. இதைத் தழுவி இருக்கிறது. ஆமாம். இருக்கும்.
நீங்க இரண்டு சுத்தவெளி சொல்லி விட்டீர்கள். உடலுக்குள் ஒரு சுத்தவெளி. உடலுக்கு வெளியே ஒரு சுத்தவெளி. சுத்தவெளி இரண்டு இருக்க முடியுமா. ஒரே சுத்தவெளி தான் extend ஆகி வெளியே இருக்கிறது. அதே சுத்தவெளி infilter ஆகி உள்ளே இருக்கிறது.
அந்தச் சுத்தவெளியில் தான் உடல் மிதக்குது, உருளுது, புரளுது, போகுது வருது, தோன்றது, மறையுது. ஆனால் அந்த சுத்தவெளி அப்படியே இருக்கிறது. இதில் இரட்டிப்பு சந்தோஷம். இன்னொரு சந்தோஷம் இருக்குது. இந்த வான் காந்தத்திலே இருக்கிற பாதி சுத்தவெளியும், ஊன் காந்தத்திலே இருக்கிற சுத்தவெளியும் ஒன்றுதான் என்பதைக் கண்டுபிடித்தோம்.
வான்காந்தம் எதுவரைக்கும் இருக்குது. பஞ்சபூத நவக்கிரக தவத்தில் கண்டுபிடித்தோம். பிரபஞ்ச எல்லை வரைக்கும் இருக்கிறது. அதற்கு அப்பால் என்ன இருக்கிறது. சுத்த சுத்தவெளி இருக்கிறது. அப்போ மூன்று சுத்தவெளி இருக்கிறது. பிரபஞ்சத்துக்கு வெளியே ஒன்று. பிரபஞ்சம் முழுவதும் ஒன்று இருக்கிறது. உடலுக்குள் ஒன்று இருக்கிறது. அப்போ மூன்று வெளியும் ஒன்றுதான்.