KG Sami1937 — 2006

ஜீவ காந்தப் பெருக்கப் பயிற்சி – எச்சரிக்கையும், பாதுகாப்பும்

Signed Puthiya Bharathi

’வான் காந்தம்’ – ‘ஜீவ காந்தம்’ என, காந்தமானது இரண்டு வகைப்படும். எது அண்டவெளியிலே வான் காந்தமாக இருக்கிறதோ, அதுவே நமது உடலிலே, ஜீவ காந்தமாக இருக்கிறது. ஜீவ காந்தம் வான் காந்தத்தில் கலப்பதும், வான் காந்தம் ஜீவ காந்தத்தில் புகுவதுமாக இருக்கின்றன. வான் காந்தம், ஜீவன்களுக்குள் புகுகின்ற வழிகள் நான்கு என்பார்கள் நமது அருள் தந்தை அவர்கள். அவை:- 1) உணவு மற்றும் நீரிலிருந்து 2) சுவாசத்தின் மூலமாக, 3) பூமையத்திலிருந்து 4) அண்ட வெளியிலிருந்து.

     அண்டவெளியிலிருந்து வருவதே மிகவும் அதிகம். எந்த நேரமும் அண்டவெளியில் நிரம்பியுள்ள வான் காந்தமானது நமது உடலிலே பாய்ந்து கொண்டேயிருக்கிறது. அவ்வாறு அதுவாகவே வருவதோடன்றி, நாம் நமது முயற்சியினால் ஈர்த்துக் கொள்வதற்கும், உறிஞ்சிக் கொள்வதற்க்கும் உரிய வழிகளை, ஜீவ காந்தப் பெருக்கப் பயிற்சிகள் என்ற பெயரில், நமது மகரிஷி அவர்கள் மனவளக்கலை பயிற்சி முறைகளில் இணைத்துள்ளார்கள்.

     மனித உடலில் ஜீவ காந்தத்திற்கு மதிப்பும், பயனும் அதிகம். மனவளக்கலைஞர்களுக்கு அது மேலும் பலவிதத்திலும் பயன்படும். இவ்வாறான ஜீவ காந்தப் பெருக்கத்திற்குப் பயிற்சிகள் சிலவற்றை மனோவசிய, மாந்திரீக முறைகளில் சிலர் கையாளுகிறார்கள். அவர்களுக்கு ஏற்படுகின்ற நன்மையை விட, தொந்தரவுகளும், ஆபத்துக்களும் தான் மிகவும் அதிகம். அவற்றைத் தாம் தவிர்த்து மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்போடும் செய்கின்ற ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சிகளை மகரிஷிகள் நமக்குப் போதிக்கிறார்கள்.

     அத்தகு ஓர் எச்சரிக்கை வழியே, காலையிலேயே இந்தப் பயிற்சிகளை முடித்து விட வேண்டும் என்பது, காலையில் என்றால், சூர்யோதயத்திற்கு 3 மணிநேரம் முன்பு தொடங்கி, 3 மணி நேரம் பின்பு வரை, அதை, சராசரியாகக் காலை 3 மணி தொடங்கி, 9வரை என்று வைத்துக் கொள்ளலாம். அதிலும் காலை 3இலிருந்து 4.30வரை என்கின்ற முன் ஒன்றரை மணி நேரமும், 7.30லிருந்து 9வரை என்கின்ற பின் ஒன்றரை நேரமும், மேற்சொன்ன எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புகளைப் பொருத்தவரை, மத்தியமான காலங்கள் தான். நடுவில் உள்ள 3 மணி நேரமும், உத்தமமானது. அதிலும் 4.30 to 6. அதி உத்தமமான காலமாகும். எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் இதற்கான காரணங்களை ஆராயலாம்.

     பூமி தன்னைத் தானே 24 மணி நேரத்தில் ஒரு சுற்று என்ற விகிதத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. தரை மட்டத்தில், மணிக்கு 1000 மைல் என்ற வேகம். தரைக்கு மேல் 10 மைல் வரைக்கும் அடர்த்தியாகவும், 100 மைல் உயரம் வரைக்கும் மெல்லியதாகவும். காற்று மண்டலம் இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றும் போது, இந்தக் காற்று மண்டலமும் சேர்ந்து சுற்றுகிறது. தரை மட்டத்தில் பூமி மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றுமானால் காற்று மண்டலத்தில் அவ்வேகம் இன்னும் இன்னும் அதிகமாக இருக்கும்.

     காற்று மண்டலத்தை தாண்டினால் வான் காந்த மண்டலம், அது நிலையாக, இயக்கமற்று இருக்கும். அதனுடைய அழுத்தம் காற்று மண்டலத்தை அழுத்திக் கொண்டிருக்கும். காற்று மண்டலம் சுழல்கிறது. வான் காந்தமோ நிலையாக இருக்கிறது. அதனால் வான் காந்தமும் காற்று மண்டலமும் உரசலுக்குள்ளாகும். காற்று மண்டலத்தின் மென்மையினாலும், வான் காந்தத்தின் அழுத்தம் காரணமாகவும், வான் காந்தம் காற்று மண்டலத்தில் சரசரவெனக் கரையும். இதனால் தான், எந்த நேரமும் வான் காந்தத்தால் காற்று மண்டலத்தில் பிரவேசிக்க முடிகிறது. காற்று மண்டலமும் வான் காந்தக் கரைசலாக திகழ்ந்து, அந்த வான் காந்தத்தை ஜீவ ராசிகளெல்லாம் எடுத்துக் கொண்டு சுகப்படுகின்றன. நீரிலே கரைந்துள்ள காற்றை மீன்கள் சுவாசிப்பது போல், காற்றிலே கரைந்துள்ள வான் காந்தம் ஜீவராசிகளுக்குப் பயனாகிறது.

     இந்த அடிப்படையில் மேலும் சிந்திக்கலாம். பூமிக்கு 2 விதமான இயக்கம் உண்டு. 1) தற்சுழற்சி, 2) சூரியனைச் சுற்றி வருதல். சூரியனைச் சுற்றி வருகின்ற முயற்சியில் பூமியானது மணிக்கு 66,000 மைல் என்ற வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு இன்னொரு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, பூமியானது வான் காந்தத்தை மணிக்கு 66,000 மை வேகத்தில் முட்டித் தள்ளிக் கொண்டு ஓடும். அதனால், வான் காந்தம் காற்று மண்டலத்தை முட்டுகின்ற இடத்தில் மட்டும் அபரிமிதமாகப் பாயும். அம்மாதிரியான நேரம் தான் காலை 3 மணி தொடங்கி 9 மணி வரையிலான 6 மணி நேரம் பூமி வான் காந்த மண்டலத்தை முட்டித் தள்ளிக் கொண்டு செல்வது 24 மணி நேரமும் தான் என்றாலும், நாம் இருக்கக் கூடிய பகுதி இந்தக் காரியத்தைச் செய்வது அந்தக் காலை நேரத்தில் தான், நாம் இருக்கக் கூடிய இடம்தான் பூமியினுடைய முகம் என்று வைத்துக் கொண்டால், அந்த முகமானது பூமியினுடைய ஓட்டத்தில் முன் பக்கமாகத் திரும்புவது காலை 3 மணி தொடங்கி, 4.30 வரை மோதுதல் சாய்வாகஇருக்கும். 4.30 மணிக்கு மேல் மோதுதல் முழுமையாகி, 7.30 மேல் வரை மோதுதல் சரிவடைகிறது. அதனால் தான் காலை 4.30 தொடங்கி 7.30 வரை அந்த மூன்று மணி நேர காலத்தில் வான் காந்தம் காற்று மண்டலத்தில் நுழைவது அவ்வளவு அதிகமாக இருக்கிறது.

     சரி, இதில் இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயத்தை ஆராய வேண்டி இருக்கிறது. அதாவது, அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தான் வான் காந்தம், தப தப என்று பூமியில் அபரிமிதமாகக் கொட்டுகிறது. அதனால் நாமிருக்கின்ற பகுதிக் காற்று மண்டலத்தில் கரைந்து இருக்கக் கூடிய களங் முற்ற ஜீவ காந்தமானது தூய வான் காந்தத்தின் கடுமையான மோதுதலைத் தாங்க முடியாது. (இங்கே இருப்பு கொள்ள முடியாமல்), காற்று மண்டலத்தின் மேல் பகுதிக்குத் தாவி விடுகிறது. அதனால் இங்கே இருக்கக் கூடிய வான் காந்தமானது, காலையில் மட்டும், முழுத் தூய்மையில் இருக்கிறது. அது நமது உடலில் ஜீவ காந்த பெருக்கப் பயிற்சியின் போது தூய்மையோடு பாய்கிறது. நமக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத பாதுகாப்புக் கிடைக்கிறது. இதுதான் நாம் மேற்கொள்ளுகின்ற எச்சரிக்கை. இவ்வெச்சரிக்கையும் இதில் பொதிந்துள்ள தத்துவங்களும் பிற மனோகாந்தப் பயிற்சியாளர்களுக்குத் தெரியா.

     ’சரி, களங்கமுற்ற ஜீவ காந்தம் என்றால் என்ன?’ என்பதைப் பார்க்கலாம். மனித உடலில் இருக்கின்ற வரை அது ஜீவ காந்தம். மரணத்தின் போது உடலை விட்டு வெளியேறுகின்ற போது, காற்று மண்டலத்திலும், அதிலுள்ள வான் காந்தத்திலும் அது திடுக்கென்று கரைந்து கலந்து விடாது. சில பல காலம் ஒரு தொகுதியாக அப்படியே மிதந்து கொண்டிருக்கும். இதைத் தான் ஆவி என்றும், பேய் பிசாசு என்றும் சொல்கிறார்கள். நாம் இதை முன்னாள்ஜீவ காந்தம் என்னலாம்.நாம் ஜீவ காந்தப் பெருக்கப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளபோது, இது தான் நம்மால் கவரப்பட்டு, களங்கத்தோடு நம்முள் பிரவேசமாகும். வான் காந்தத்தோடு அது கலந்து நமக்குள்ளே வந்து விடக் கூடிய ஓர் ஆபத்து காலை 9 மணி முதல் மறுநாள் காலை 3 வரை இருக்கிறது. அதனால் தான் அந்த நேரத்தை நாம் தவிர்க்கிறோம். பாதுகாப்பான நேரத்தில் பயிற்சி செய்து வான் காந்த மிகுதியால் நாம் பெற வேண்டிய ஒன்பது விதமான மேன்மைகளையும் மட்டும் தாராளமாகப் பெற்றுக் கொள்கிறோம்.

Keep reading

More from the archive

Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

Granthaalayam

இன்சொல்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!உலக மக்கள் எல்லோரும் மன…

KG Sami

தவம் – 17

பெரிய உருவத்தை யார் எடுத்தார்கள். கடவுளால்தான் முடியும். கண்ணன் எடுத்தார் ‘விஸ்வ ரூபம்’ அப்படி எடுக்கும் போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும்…

KG Sami

அருள்நிதியர் திறனூக்கப் பயிற்சி – 1

இறைநிலை தெய்வம் உண்டு. அதற்கு உருவம் இல்லை என்ற தெளிவிலே அறநெறியைப் பற்றி வாழ முடிகிறது. முடியும் என்று நமது அருட்தந்தை அவர்கள் கொடுத்துள்ள…

KG Sami

இறைவனும் இறைநீதியும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

KG Sami

தவம் – 40

பிரம்ம ஞானத்தைப் பெறுவதற்கு அந்தக் காலத்தில் குருவோடு கூடி இருக்க வேண்டும். குரு சிஷ்ய பரம்பரை என்று சொல்வார்கள். குருவுக்குத் தெரிந்ததெல்லாம்…