KG Sami1937 — 2006

அடைந்தே ஆக வேண்டும் வீடு பேறு

Signed Puthiya Bharathi

திருநெல்வேலிநெல்லை SKY டிரஸ்ட்அறிவுக்கூடத்திறப்புவிழாவுக்குச்சென்றிருந்தேன். மன்றஅன்பர்ஒருவர்வீட்டில்தங்கியிருந்தேன்அவர்கள்வீட்டுப்பையன்ஒருவன்பிரம்மஞானி. என்னை ஏதோ வேடிக்கைப் பொருளாகத் தனது நண்பர்களுக்குக் காட்ட அவர்களை அழைத்து வந்திருந்தான். எல்லாம் ஓர் 20 வயது பையன்கள் நாலைந்து பேர், ஒன்றாகக் கல்லூரியில் படிப்பவர்கள், வந்திருந்தனர். ஆன்மீகவாதிகளைப் பற்றி ஓர் இளப்பமான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பவர்களாக அவர்களது பார்வையே தெரிவித்தது. ’என்ன, தம்பிகளா! என்ன வேண்டும்?’ என்றேன் நான்.

 உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமாம்’ என்றான் வீட்டுப்பையன். ‘கேட்கட்டுமே’ என்றேன் நான். ஒரு பையன் தயங்கித் தயங்கிக் கேட்கிறான். ’அது என்ன வீடுபேறு? அதை அடையத்தான் வேண்டுமா? விருப்பமில்லாதவர்களை விட்டு விட வேண்டியது தானே? எனக்கு அது வேண்டாம். அதனால் நான் என்ன கெட்டு விடப் போகிறேன்?’.

 குரலிலே ஓர் ஆன்மீக விரோதம் தெரிந்தது. அவர்களுக்கு நான் கூரிய பதில் இது; ’இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் சுழற்சி இயக்கங்கள் தான். எதுவுமே எங்குமே நேராகப் போய்க் கொண்டிருப்பதில்லை. புறப்பட்ட இடத்திற்கே ஒவ்வொன்றும் வந்து சேர்ந்து விடுகின்றது. எல்லாமே உருண்டை உருண்டையாக அண்டவெளியில் உள்ளன. அவற்றினுடைய இயக்கமும் சுழலும், வட்டமாகத்தான் உள்ளன. வானத்தில் கோள்களும், நட்சத்திரங்களும் போடுகின்ற கோலங்கள் வினோதமக இருக்கும். சந்திரன் தன்னைத் தானே சுற்றுவதோடன்றி, பூமியை வட்டமடிக்கிறது. சந்திரன் அண்டவெளியில் போடுகின்ற கோலம் ஜிலேபியை நினைவுப்படுத்தும். பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது. சூரியனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, தொலை தூரத்திலுள்ள ஏதோ ஒரு பூதாகாரமான நட்சத்திரத்தை சுற்றி வருகின்ற முயற்சியில் அண்டவெளியில் பயங்கரமான வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதே கதைதான் பிரபஞ்ச முழுவதும். எங்குமே எதுவுமே சும்மா இருப்பதில்லை. ஓடுகின்றன. நேராகவும் ஓடுவதில்லை. வளைவும், வட்டமும் போடுகின்றன’.

’வட்ட மென்றால்? எந்த இடத்திலிருந்து இயக்கம் ஆரம்பித்ததோ, அதே இடத்திற்கு மீண்டும் போய்ச் சேர்ந்து விடுதல். நீங்கள் படித்த விஞ்ஞானம் இது தானே?’ இவ்வினாவிற்கு, ‘ஆமாம்’ என்றார்கள் நண்பர்கள். நான் சொன்னேன்: ‘இந்த உலகத்தில் சுமார் 108 மூலகங்கள் உள்ளன. 108உம் அதனதன் அணுவால் ஆனவை. அணு என்பதோ பல துகள்களால் ஆனது. இவை ஒவ்வொன்றும் தற்சுழல் இயக்கம் உடையது. அத்தோடு, இன்னொன்றை நடுவில் வைத்து வலம் வரக் கூடியவை. வலம் வருதல் என்றால் புறப்பட்ட இடத்தில் வைத்து வலம் வரக் கூடியவை. வலம் வருதல் என்றால் புறப்பட்ட இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுதல். இதுவும் விஞ்ஞானந்தான், சரிதானா?’

’சரிதான்’.

’கடலிலிருந்து புறப்பட்ட நீராவியானது மழையாகக் குளிர்ந்த பின் பல வடிவத்தைப் பெற்று, இறுதியில் கடலுக்கே வந்து விடுகிறது. இதுவும் ஒரு பூர்த்தியான வட்டமல்லவா?’ இந்த என் வினாவுக்கும் ‘ஆமாம்’. என்று அவர்கள் விடையளித்தனர்.

’காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?’,

திடீரென்று நான் இப்படிக் கேட்கவே அவர்கள் பிரமித்துப் போனார்கள். ஒருவன் சொன்னான், ‘இட்லி’. அவனைப் பார்த்து நான் சொன்னேன்: ‘இல்லை என்கிறேன் நான்?’ நண்பர்கள் முகத்தில் கேள்விக் குறி. ‘ஒவ்வொரு வேளையும் நீங்கள் அத்தனை பேரும் மண்ணைத் தான் தின்கிறீர்கள். தினமும். மண்ணைத் தின்கிறீர்கள். இது வரையில் உங்கள் வாழ்க்கையில் தின்றதும், இனித் தின்னப் போவதும் மண்ணைத்தான், நீங்களென்ன? எல்லோருமே ஆனந்தமாக மண்ணைத் தான் தின்று கொண்டு வருகிறார்கள்.’

நண்பர்கள் முகத்தில் பெரிய ஆச்சரியக் குறி!. ‘நீங்கள் தின்றது மற்றும் அனுபோகிப்பது எதுவாயிருந்தாலும், அது இந்த மண்ணிலிருந்து வந்தது தானே? நம் வாழ்க்கைப் பொருள்கள் அனைத்துமே மண்ணிலிருந்து தோன்றி, நமக்குச் சில அனுபோகங்களை கொடுத்து விட்டு, மறுபடியும் மண்ணாய்ப் போகின்றன. ஆகவே இங்கேயும் வட்டம்!’

’இப்படி எங்குமே எல்லாமே வட்டங்களாக இருக்குகின்ற போது, ‘நான் மட்டும் நேர்க்கோடு’ என்றால் எப்படி? நீங்களும் வட்டங்கள் தான்! பூர்த்தியாகாத வட்டங்களாக உள்ளீர்கள். பிரபஞ்ச நியதிப்படி, நீங்கள் போடுகின்ற வட்டமும் பூர்த்தி ஆகித்தான் ஆக வேண்டும். உங்களில் ஒவ்வொருவரும் இறைநிலையிலிருந்து, தேவ நிலையிலிருந்து. புறப்பட்டு – விண்ணாகிப் பஞ்ச பூதங்களாகி, தாவரமாகி, ஐயறிவு விலங்காகி, மனிதராகி இருக்கிறீர்கள். அடுத்தது? தேவ நிலைதான்! அதாவது வீடுபேறு. இதெல்லாம் இதுவரைக்கும் உங்களுக்குத் தெரியவில்லை. இப்போது தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அடைய இருப்பது தேவ நிலைதான்!

’இதையெல்லாம் அறிவாளிகள் யாரும் மறுக்க முடியாது.. ஒப்புக் கொள்ளுங்கள். தேவநிலையை அடைய நீங்கள் இதுவரை முயலவில்லை. இனி மேலாவது முயலுங்கள். இறைநிலையிலிருந்து புறப்பட்ட நீங்கள் அந்த இறை நிலைக்கே சென்று விடலாம். இவ்விஷயம் இயற்கையானது. விருப்பமும், முயற்சியும் தான் வேண்டும். இதை மறுப்பதும், இதில் தாமதிப்பதும் தான் மனித இனம் இதுவரைக்கும் சந்திக்கின்ற துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைந்துள்ளன. இந்தத் திருப்பம் பெற்று விட்டீர்களானால், மனம் நிறைவாக இருக்கும். இனம் புரியாத குற்ற உணர்வு ஒன்று இப்போது உங்கள் மனதில் இருந்து கொண்டிருக்கிறது. அது நீங்கி விடும்.

’சரியான ஆன்மீக முறையைக் கண்டு பிடித்து விட்டீர்களானால், இந்தப் பிறவியிலேயே இறைவனை அடையலாம். இருந்து புறப்பட்ட இடத்துக்கே சென்று விடலாம். இந்த வாழ்க்கையும் இனிதாக அமையும் ஆனால் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்: உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ; அடைந்தே ஆக வேண்டும் வீடுபேறு. நீங்கள் ஒப்புக் கொள்வீர்களோ, மாட்டீர்களோ; அடைந்தே ஆக வேண்டும் வீடுபேறு. நீங்கள் முயலுவீர்களோ, மாட்டீர்களோ; அடைந்தே ஆக வேண்டும் வீடுபேறு. Sooner is better’. நண்பர்கள் திகைத்தனர் பதில் ஏதும் சொல்லவில்லை. எழுந்து போய் விட்டனர்.

இந்நேரம் அவர்கள் மன்றத்தில் சேர்ந்திருப்பார்கள் என்று எதிர் பார்க்கலாம். இதுவரையில் சேரவில்லை என்றாலும், எவ்வளவு தாமதிக்க முடியுமோ, அவ்வளவு தாமதித்து விட்டு, அவர்களோ, அவர்கள் சந்ததியினரோ மன்றத்தில் சேர்ந்து தான் ஆக வேண்டும்.

கடவுளுக்கு உருவம் இல்லை என்று சொன்னால், உருவம் இல்லாமல் ஒரு விஷயம் இருக்க முடியுமா? என்கிறார்கள். ஒரு விஷயம் என்ன, எத்தனையோ உண்டு. மனதுக்கு உருவம் இல்லை. காந்தத்துக்கு உருவம் இல்லை. நியூட்டன் கண்டு பிடித்த புவியீர்ப்பு ஆற்றலுக்கு உருவமில்லை. அன்புக்கு உருவமில்லை…

Keep reading

More from the archive

Granthaalayam

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை…

KG Sami

தவம் – 41

Certificate வரும். இப்பொழுதே உங்களை பிரம்ம நிலைக்கு உயர்த்தி விட்டேன். உங்களை பிரம்ம ஞானி என்று அறிவித்து விட்டேன். கூன் விழுந்து உட்கார்ந்து…

KG Sami

தவம் – 20

நமது பிரபஞ்சத்தை Universe ஆக எடுத்துக் கொண்டு, அது 2000 கோடி ஒளியாண்டு diameter இருக்கிறது என்று சொல்லி, எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது.…

Granthaalayam

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு…

KG Sami

தவம்-7

வேக இயக்கங்களோடு தொடர்பு கொண்டு தானும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது மனம். இந்த இயக்கம் மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து நடை பெற்றுக்…

Arulnithi Muthappan

தியாகச் செம்மல் வேதாத்திரி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதோ, எழுபத்தொன்றோ, சரியாக நினைவிலில்லை. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. கூடுவாஞ்சேரியில் மகரிஷிகளுடைய இல்லத்தின் எதிர்புறத்தில்…