Certificate வரும். இப்பொழுதே உங்களை பிரம்ம நிலைக்கு உயர்த்தி விட்டேன். உங்களை பிரம்ம ஞானி என்று அறிவித்து விட்டேன். கூன் விழுந்து உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வார்கள்.
இப்பொழுது முதல் நீங்கள் எல்லோரும் பிரம்ம ஞானிகள். எல்லோரும் 4 அங்குலம் உயர்ந்து விடுவார்கள். ஆனால் இன்று முதல் நீங்கள் எவருக்கும் அளவிலோ, முறையிலோ, எண்ணத்தாலோ தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்துக்கோ, பிற்பாலத்துக்கோ, உடலுக்கோ கெடுதல் செய்யக் கூடாது. அங்கே போனால் தானே அதற்கு ஒரு வழி கிடைக்கும். Harsh ஆக ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.
ஐயா தயவு செய்து வழி விடுகிறீர்களோ. நான் அந்தப் பக்கம் போக வேண்டும். ஒரு வார்த்தை கூட பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது. யாருடைய மனமோ, உடலோ உங்களால் பாதிக்கப்படக் கூடாது.
மனிதன் என்று கூட மகரிஷிகள் சொல்ல மாட்டார்கள். எந்த ஜீவனுக்கும் துன்பம் தரக்கூடாது என்று சொல்வார்கள். அது தான் பிரம்மஞானம். முதலில் சொன்ன Condition-லிருந்து கொஞ்சம் தளர்த்தி அடுத்த point சொல்வார்கள்.
‘முடிந்தவரை துன்பப்படுகிறவர்களுடைய துன்பம் போக்க உதவி செய்யுங்கள்’ ’நாம் பாட்டுக்கு போகிறோம். வருகிறோம்.’ இதைப் புரிந்து கொள்ள வேண்டும். குருவாக இருக்கக் கூடியவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார். நாம் முழு ஞானியாக ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பிரம்ம ஞானியாக இறைவனை உணர்ந்தவராக ஆக வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்.
இறைவனை உணர்ந்துகொண்டால் ஒரே இறைவன் தான் எல்லோர் இடத்திலும் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் நான் யாருக்கு கெடுதல் பண்ணினாலும் எனக்கே கெடுதல் பண்ணியதாக அர்த்தம் அல்லவா? ஆகவே யாருக்கும் கெடுதல் பண்ணக் கூடாது. அதன் பின் யாரும் வருந்தக் கூடாது. யார் வருந்துகிறார். அவர் யார்? பிரம்மம். நாம் வருந்துகிறோம்.
எனக்கு அரிப்பு எடுத்தால் நான் சொரிந்து விடுகிறேன் அல்லவா. அது போல் மற்றவர்கள் வருந்தினால் அவர் வருத்தத்தைப் போக்க வேண்டும். அதற்கு ‘relaxation’ கொடுக்கிறார்; முடிந்தவரை, என்று. பிரம்ம ஞானம் பெற்றவர்கள் எந்த அளவில் இதைக் கடைபிடித்து வருகிறார்கள் ஒரு அளவில் இதைக் கடைபிடித்து வருகிறார்கள்.
அதன்பின் நீங்கள் ஆசிரியர் பயிற்சிக்கு போகிறீர்கள். வாத்தியார் வேலை கொடுக்கிறார்கள் பாருங்கள். அது மாதிரிதான் இதுவும்.
நான் பத்தாம் வகுப்பு படித்தேன் பதினொன்றாம் வகுப்பு படிக்கப் போனேன். என்னை வாத்தியார் வேலைக்கு இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள். வாத்தியாருக்கு அவ்வளவு பஞ்சம். ஏதோ கையெழுத்து போடச் சொன்னார்கள். இரண்டு, மூன்று மாதம் பயிற்சி கொடுத்தார்கள். யாருக்குத் தெரியும். ஒன்றும் விளங்கவில்லை.
ஒரு பள்ளிக் கூடத்தில் கொண்டு விட்டார்கள். நான் ஒரு வாத்தியார். நான் வந்து ஆறாம் வாய்ப்பாடும். ஏழாம் வாய்ப்பாடும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நானே இதைச் சொல்லிக் கொடுப்பேனே என்பீர்கள். எனக்கு இந்த ஆறாம் வாய்ப்பாடும். ஏழாம் வாய்ப்பாடும் வராது. ஆனாலும் பத்தாம் வகுப்பில் முதல் வகுப்பில் பாஸ் பண்ணி வந்தாச்சு. அப்போ படிக்கும் பொழுது கணக்கு எப்படி போட்டீர்கள் என்று கேட்கிறீர்களா. எழுதி, எழுதி பார்ப்பேன்.
இப்போ வாத்தியார் வேலைக்குப் போய் எப்படிச் சொல்லிக் கொடுப்பேன். எனவே வாத்தியார் வேலைக்குப் போன பிற்பாடு இந்த இரண்டு வாய்ப்பாட்டையும் எழுதி படித்து தவறில்லாமல் படித்து பின் சொல்லிக் கொடுக்கக் கற்றுக் கொண்டேன்.
வாத்தியார் வேலைக்கு நமது அரசாங்க ஆள் எடுப்பது மாதிரி இருக்கிறது. நாம் ஆசிரியர் பயிற்சி கொடுப்பது. நான் வாத்தியார் வேலைக்குச் சேர்ந்த பிற்பாடு வாய்ப்பாடை படித்து விட்டு பின் சொல்லிக் கொடுத்தது போல சந்தர்ப்ப வசமாக அல்லது அசந்தர்ப்ப வசமாக அருள்நிதிகளாக பட்டம் வாங்கி விட்டீர்கள் என்றால், பட்டதுக்கு தகுந்தாற்போல் உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் அருள் நிதியர் திறனூக்கப் பயிற்சி.
மனித குலம் நம்மை நம்பித் தான் இருக்கிறது. ஆன்மீகம் என்று சொல்வீர்கள். அது எப்படி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். இது ரொம்ப காலமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இது இப்போ உச்ச நிலைக்கு வந்துவிட்டது.
ஆன்மீகம் என்று சொல்லி ஆன்மாவைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். ஆன்மீகம் என்ற பெயர் சொல்லிக் கொண்டு சொத்து எல்லாம் பராமரித்துக் கொண்டு இருப்பது. குருவுக்கு என்ன வேலை மடத்தில் இருக்கும் சொத்துக்களை எல்லாம் பரிபாலனை செய்து கொண்டிருக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் ஒரு மாறுதல், வந்துவிட்டது. சொத்து நிறைய சேர்ந்து விட்டது என்றால் அரசாங்கம் பங்கு கேட்கும். எனவே ஆஸ்பத்திரியும், கல்லூரிகளும் கட்டி வருகிறோம். ஆன்மிகம் என்றால் என்ன. நாங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. Social Service செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் ஆஸ்பத்திரி கட்டி இருக்கிறோம். College கட்டி இருக்கிறோம். இதற்கு வேறு ஆட்கள் இருகிறார்கள். நன்றாக நிர்வாகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தடம் புரண்டு போய்விட்டது. ஆன்மீகம்.
மக்களைத் தவறு செய்யாமல் காக்க வேண்டும். மக்களைத் தவறு செய்ய விடக்கூடாது. அந்த விதமாக அவர்களை educate பண்ணி அவர்கள் தவறியும் தவறு செய்து விடாமல் நீங்கள் போதனைகளும், சாதனைகளும் கொடுத்து அவர்களைக் காக்க வேண்டும். அதற்குத் தவம் செய்து இறைநிலை உணர்ந்து உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
இதெல்லாம் சரி. ஆன்மீகத்தின் நோக்கம் என்ன? இலக்கு என்ன? உங்களுடைய இலக்கு என்ன? மக்க துன்பப்படுகிறார்கள். யாராக இருந்தாலும் தாங்கள் பண்ணிய பாவத்துக்குத் தக்கவாறு செயல்விளைவுக்குத் தக்கவாறு தண்டனை அனுபவிக்கிறார்கள். தண்டனை பெற்றே தீர வேண்டும். தலைமுறை மாறிவிடும். அவன் பாவம் செய்தான். செத்துப் போய் விட்டான். என்ன பிரயோஜனம் நானும் பாவம் செய்கிறேன். மக்கள் கஷ்டப்படுவார்கள். ஆகவே நீங்கள் துன்பப்படக்கூடாது. அதுதான் எங்கள் நோக்கம் என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள்.
”ஜனங்களே ஜனங்களே நீங்கள் துன்பப்படக் கூடாது”. அதற்கு என்னங்க பண்ணனும் நீங்கள் யருக்கும் துன்பம் கொடுக்கக் கூடாது. அது என்னால் முடியவில்லையே. எங்கள் அப்பா குடிகாரன் அவர் போன வழியிலேயே நானும் போகிறேன். இதற்கு நான் வழிமுறைகள் சொல்கிறேன். நீங்கள் திருந்தி நீங்கள் நல்வழியிலே செல்வதற்குரிய போதனைகளும், சாதனைகளும் கற்றுக் கொடுக்கிறோம். வாருங்கள். இது தான் ஆன்மீகம். இந்த மாதிரி எங்கேயாவது, யாராவது செய்கிறார்களா? இந்த மாதிரி சேதி என்று தெரியுமா? அந்த ஆன்மீக வாதிகளுக்கு.
மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் உலகம் இருக்கிறது. துன்பம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி துன்பம் கொடுப்பதற்கு மனிதர்களுக்கு மனிதர்களே போதும். இவன் செய்த பாவத்தைத் தொலைக்க அவனை உதைக்கிறான். அவன் செய்த பாவத்தை தீர்க்க இவனைக் கடிக்கிறான். இப்படி ஒருவருக்கொருவரே பாவத்தைப் போக்கிக் கொண்டிருகின்றனர் மனித குலத்தில்.
இது அப்படியும் போதவில்லை. Escape ஆகிவிடுகின்றனர். ஆகவே இயற்கை உட்பாதம் (Natural Calamities) என்னவென்று தெரியுமா? சுனாமி ஏன் வருகிறது? ஒருவருக்கொருவர் செய்து கொண்ட பாவம் அவரவர்கள் தீர்த்துக் கொள்ளவில்லை. தேக்கம் வந்து விடுகிறது. அந்தத் தேக்கத்தைத் தீர்க்க இயற்கை உட்பாதமாக இறைவனே வந்து தீர்க்க வேண்டி இருக்கிறது. இறைவனுக்கு சந்தோஷமாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்.