KG Sami1937 — 2006

தீதும் நன்றும்

Signed KG Sami

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)

இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு கஷ்டத்தை கொடுக்கிறார்?ன்னு புலம்புறாங்க. ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க தீதும் நன்றும் பிறர் தர வாரா.

ஒருத்தர் நல்லவர், எந்த கெடுதலும் செய்யல, ஆனா கஷ்டப்படறார்ன்னா, அவர் எவ்வளவு காலமா நல்லவர்னு  யோசிச்சு பார்க்கணும். ஒருவர் கஷ்டப்படறார்னா,  கஷ்டம் கொடுத்திருக்கார்னு அர்த்தம். எப்ப கொடுத்தார்ங்கறது யாருக்கும் தெரியலே. ஏன், அவருக்கே கூட  தெரியாம இருக்கலாம். நாம எல்லோரும் சின்ன வயசுல எத்தனை மூட்டை பூச்சிகளை  நசுக்கி கொன்னு-ருப்போம்? எத்தனை கொசு, எறும்புகளை சாகடிச்சிருப்போம்? எத்தனை   ஓணானை      அடிச்சி-ருப்போம்? அதெல்லாம் எப்படி துடிதுடிச்சு செத்திருக்கும்? சின்ன வயசுல தெரியாம செஞ்சது, இதெல்லாம் தப்பில்லைன்னு நெனைச்சிட்டி- ருக்கோம். தெரியாம குத்தினா ரத்தம் வராதா என்ன? கத்தி வெச்சிருக்கிறவன்  கை ஜாக்கிரதையா இருக்கணும். இறைவனோட  கணக்குல, அஜாக்கிரதையா  இருக்கிறது என்பதுவும் ஒரு குற்றம்.

எல்லாத்துக்கும்  நிச்சயமா  உரிய விளைவு  உண்டு.

நாம செஞ்ச  தப்பு  மட்டுமில்லாம,  நம்ம  முன்னோர்கள்  செஞ்ச  பாவமும்  நம்மைத்தான்  சேரும்.  தீதும்  நன்றும் அடுத்த  வீட்டுக்காரன், எதிர்த்த  வீட்டுக்காரன்  குடுத்ததில்லை  நாமே சம்பாரிச்சது தான். நாமேன்னா, நாம மட்டுமில்லை. நம்ம முன்னோர்கள் சம்பாதிச்சது. ஏன்னா, முன்னோர்கள்  வேற, நாம வேற இல்லை.  மரம் வேற, கிளை வேறயா?, ரெண்டும் ஒன்னுதான். அதே மாதிரி தகப்பனும், மகனும் ஸ்தூலத்தால பிரிந்திருந்தாலும்,  உடம்பால  வேறாயிருந்தாலும், உயிரால ஒன்னுதான்.  அதே உயிர்தான் இங்கும் இருக்கிறது.  அதனால தான், தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்பாங்க அதனால தகப்பனார்  செய்தவையெல்லாம் மகனுக்கும் வரத்தான் செய்யும். இதெல்லாம் இறைவன் போட்ட  சட்டம்,  இதை தப்புன்னு சொல்ல முடியுமா? எப்படி அப்பாவோட சொத்து புள்ளைக்குச் சொந்தமோ,  அதே மாதிரி அவர் செஞ்ச பாவ புண்ணியங்களும்  புள்ளையையே சேரும். அம்மா மாதிரி மூக்கு, அப்பா மாதிரி நெத்தின்னு சொல்லி  கேள்விப்பட்டிருக்கீங்கல்ல?. அந்த உடல் வாகையும் யாராலும் தள்ள முடியாது, உடல் நோயையும் தள்ள முடியாது. பரம்பரை  காரணமாக பாவமும் வரும், புண்ணியமும் வரும். இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னாங்க. தீதும் நன்றும் பிறர் தர வாரா நாமே நமது செயலைக் கொண்டு சம்பாதித்துக் கொள்வதுதான் நல்லதும் கெட்டதும். நாமே செய் ததுதான், தெரியாம செஞ்சி-ருப்போம், இல்ல மறந்திருப்போம். நாம் செய்தது  கொஞ்சம்னா, நமது முன்னோர்கள் செய்தது மீதி.  இறைவன் மேல எந்த  தப்பும்  கிடையாது. கணக்கை  சரியா வெச்சுட்டு, கணக்கை  சரியா தீர்க்கிற வேலையைத்தான் செய்வாரே தவிர, அவர் நமக்கு கெடுதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் துன்பம் உண்டு பண்றதுனாலே அவருக்கு என்ன லாபம்?

ஆரம்பத்தில நாம தப்பு செய்யச் செய்ய, இறைவன் விட்டுட்டாரு. திருந்திருவாங்க, மாத்திக்குவாங்க, உணர்ந்துக்குவாங்கன்னு விட்டுட்டாரு. ஏன்னா ஆறாவது  அறிவை அவர் நமக்கு கொடுத்திருக்கிறாரே! ஆறாவது அறிவு இறைவனுடைய  அம்சம். ஆகவே, தவறு  செய்வதற்கும், பாவம் செய்வதற்கும்,  தண்டனை  வருவதற்குமே, கால  இடைவெளி யானது  ஏழு தலைமுறைக்கும் நீளும்னு வள்ளுவர்  சொல்லியி ருக்காரு. நம்மை முதல் தலைமுறை என்று வைத்துக் கொண்டால்  கூட, ஏழு தலைமுறைக்கும் சேர்த்து  127  பேர்  வருவாங்க.  இப்படி ஏழு தலைமுறைக்கும்  சேர்த்து 127 பேர் செஞ்ச  பாவத்தை  ஒருத்தராலேயே  தீர்க்க முடியுமா என்ன? ஆனால் தீர்க்கலாம். அது எப்படி?

முதல்ல, இனிமேல்  நாம் ஜாக்கிரதையா இருக்கணும். அப்புறம் செயல் விளைவு தத்துவத்தை உணர்ந்தி ருக்கணும். இனிமேல் துன்பம் விளைவிக்கக் கூடிய  செயல்களை செய்யக் கூடாது  இரண்டாவது, பழசையெல்லாம், அதாவது பழைய பாவப்பதிவுகளை நீக்குவதற்கு தவம் செய்ய வேண்டும். அதாவது, இறைவன் மேல் மனம்  வைத்து  செய்யக்  கூடிய தவம் செய்ய வேண்டும். உடனே  ஆமாங்க நானும் பத்து வருஷமா தவம் செய்யறேன், ஆனா கஷ்டம் தான் வந்ததுன்னு  சொல்லக்கூடாது.  பத்து வருஷம் தவம் செஞ்சீங்க சரி., எத்தனை வருஷம் பாவம் செய்திருப்பீங்- கன்னு கணக்கு வெச்சுருக் கீங்களா? ஆகவே, ஒருத்தர் முப்பது வருஷமா.., முன்னூறு வருஷமா..  செய்த பாவத்துக்கும், இப்ப பத்து வருஷமா.. செய்த தவத்துக்கும்  சரியா போயிடுமா என்ன? பாக்கி இருக்கத்தானே செய்யும்? எனவே, இந்த  தலைமுறையிலேயே  ஏழு  தலைமுறைக்கும் செஞ்ச  பாவம் போக, முனைந்து, முனைந்து முடிந்த அளவு தவம் செய்ய வேண்டும். அதிக தவம் செய்ய, செய்ய 2, 3 தலைமுறைக்கு  அப்புறம் நம்ம பழைய கணக்கெல்லாம்  தீர்ந்து, எதிர்காலத்தில் நம்ம  பேரன்  பேத்தி  சந்தோஷமா இருப்பாங்க. இதைத்தான் பாரதியார் செய்க தவம், செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் என்று சொன்னார்.

வள்ளுவரும்

வேண்டிய வேண்டியாங்கு  எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்

என்று கூறியிருக்கிறார்.                                                                                                                                                         

ஆகவே, சோர்வு இல்லாமல் சிந்திக்க வேண்டும். கஷ்டம் வரும்போது, ஒரு சோர்வு மனப்பான்மை வரும். ஆனால், விடாமுயற்சியோடு, வைராக்கி யத்தோடு, திட சித்தத்தோடு, கஷ்டங்களை சகித்துக்கொண்டு தவம் செய்வது ஒன்றுதான் உய்வதற்கு உண்டான சரியான வழி. இதனையும் சிந்தனைக்கு எடுத்துக்கலாம்ல!

- நினைவில் உங்களோடு., Kgs.

Keep reading

More from the archive

Puthiya Bharathi

அடைந்தே ஆக வேண்டும் வீடு பேறு

திருநெல்வேலிநெல்லை SKY டிரஸ்ட்அறிவுக்கூடத்திறப்புவிழாவுக்குச்சென்றிருந்தேன். மன்றஅன்பர்ஒருவர்வீட்டில்தங்கியிருந்தேன்அவர்கள்வீட்டுப்பையன்ஒருவன்பிரம்மஞா…

KG Sami

தவம்-4

நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக்…

Granthaalayam

சீர்திருத்தமும் முன்னேற்றமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!நமது வாழ்க்கையை சீராகவும்,…

KG Sami

தவம்-10

துரியாதீதம் பற்றிய விவரம் பரஞ்சோதி மகானுக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியெல்லாம் ஒரு யோக நிலை கிடையாது என்று சொல்லி வந்தார். துரியாதீத நிலையைப்…

Kannimuthu

வியப்பு

மனவள்க்கலையில் நமது ஆசான் அருள் தந்தை அவர்கள் வகுத்தருளியுள்ள பஞ்சபூத நவகிரக தவக் கருத்துக்களோடு மேற்காணுகின்ற வள்ளார் அவர்களுடைய பாடலை ஒத்துப்…

KG Sami

தவம் – 17

பெரிய உருவத்தை யார் எடுத்தார்கள். கடவுளால்தான் முடியும். கண்ணன் எடுத்தார் ‘விஸ்வ ரூபம்’ அப்படி எடுக்கும் போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும்…