KG Sami1937 — 2006

தவம் – 33

Signed KG Sami

ஆகவே ஜீவகாந்தம் ஒரு minimum critical level ஐ விட குறைந்து விடக் கூடாது. குறைந்து போனால் conversion ஏற்பட்டு சூடு உண்டாகும். அப்படியெல்லாம் நமக்கு வரக்கூடாது. எவ்வளவு உழைத்தாலும் ஜீவகாந்தம் செலவானால் இருப்பு ஈடுகட்டிக் கொள்ளும் என்ற நிலை, அந்த அளவுக்கு கொண்டு போக வேண்டும் இருப்பை.

அதாவது வீட்டில் ஒரு பத்து கோடி ரூபாய் கருப்பு பணம் இருக்கிறது. அவர் வீட்டில் கல்யாணம் திடீரென்று வருகிறது. அவர் கவலைப்படுவாரா? இருப்பில் இருந்து எடுத்து செலவு பண்ணுவார். நம் வீட்டில் கல்யாணம் வருகிறது என்றால் கடன் வாங்குவோம். அவர் வீட்டில் கல்யாணம் வந்தால் இருப்பதை வெளியே எடுத்து விடுவார். இருப்பு அதிகம் இருந்தால் செலவைப் பற்றிக் கவலை இல்லை. ஜீவகாந்தமும் அதிகம் செலவைப் பற்றிக் கவலை இல்லை. இது மாதிரி ஆகக்கூடிய செலவு அதிகமாகும் போது மற்ற ஒன்பதைப் போய்க் கெடுக்கும்.

உழைப்பாற்றல் ஜீவகாந்தம் செலவாகிற நல்ல வழியில் ஒன்று. இரண்டாவது புலன் இயக்கம். கண்ணால் பார்க்கிறோம். அப்படியானால் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஓடியாடி பாடுபட்டு காசு, பணம் சம்பாதிக்க வேண்டுமே அதற்கு கண், காது நல்லபடியாக இயங்கினால் தானே முடியும். இந்தச் செலவால் ஜீவகாந்தம் drain out ஆகி விடக்கூடாது. ஜீவகாந்தம் எப்பொழுது drain out ஆகும் stock குறைவானால். இந்த மாதிரி புலன் இயக்கத்தால் ஜீவகாந்தம் செலவானால் அது அநாவசியம்.

மூன்றாவது எண்ணம். நீங்கள் சும்மா எதையாவது நினைத்துக் கொண்டு இருப்பீர்கள் அல்லவா. அது ஜீவ காந்தச் செலவு. நீங்கள் பேசாமல் இருக்கிறேன் என்று சொல்லக் கூடாது. மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் அல்லவா? நல்ல எண்ணமும் ஓடிக் கொண்டிருக்கலாம். அதற்கும் ஜீவகாந்தம் செலவாகும். நீங்கள் கெட்ட எண்ணம் எண்ணிக் கொண்டே இருந்தால் ஜீவகாந்தம் ‘சரசர’ வென செலவாகும். ஆகவே எண்ணமாக மாறி செல்வாவது ஜீவகாந்தம் அல்லவா. நாம் சிந்தித்தாலும், ஆராய்ச்சி பண்ணினாலும், திட்டங்கள் தீட்டினாலும் ஜீவகாந்தத்தின் இருப்பு குறைந்து போய்விடக் கூடாது. அந்த அளவுக்கு stock அதிகப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

நான்காவது இரத்த ஓட்டம். Double pumping station ஒரு செகண்ட் கூட ஓய்வெடுக்காமல் அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு எவ்வளவு ஜீவகாந்தம் தேவை round a clock, round the year, round the life யோசித்துப் பாருங்கள். எவ்வளவு வருகிறது. எவ்வளவு இருக்கிறது. எவ்வளவு செலவாகிறது என்பதைப் பொறுத்து உங்களுக்கு இருதயம் நன்றாக இயங்குகிறது. நன்றாக இயங்கவில்லை என்ற நிலை.

அதற்குப் பின் காற்று ஓட்டம். Double துருத்தி நெஞ்சுக்குள்ளே இறைவன் design பண்ணி இருக்கிறான். இரண்டும் காற்றை உள் வாங்க வேண்டும். வெளித்தள்ள வேண்டும். உள் வாங்க வேண்டும். வெளித்தள்ள வேண்டும். கொல்லன் பட்டறையில் துருத்தியை வைத்துக் கொண்டு வேலை செய்வான் ஒரு பையன். அந்தப் பையனுக்கு சம்பளம் கொடுத்தால் தானே துருத்தியை இயக்குவான். நாம் எதையாவது இழந்தால் தானே நுரையீரல் வேலை செய்யும். அந்த மாதிரி நுரையீரல் வேலை செய்யும் போது மூச்சு விடும்போது எந்த ஆற்றல் செலவாகும். மின்சாரமா. இல்லை ஜீவகாந்தம் தான் அது.

அடுத்தது செரிமானம். நாம் பாட்டுக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து போய் விடுகிறோம். அந்த ஒரு வேலை பார்ப்பதற்கு ஒரு ஆள் வேண்டுமே. அது தான் செரிமானம். மகரிஷி நன்றாக சிரிக்க சிரிக்க சொல்வார்கள். வேறு யார் செய்வார்கள். ஜீவகாந்தம் செலவு பிடிக்கக் கூடிய வேலையை யார் செய்ய முடியும். நாம் தான் செய்தாக வேண்டும். தன்னில் தானாக ஜீவகாந்தம் செலவாகி அதன் வேலையைச் செய்கிறது.

அடுத்தது வெளியேற்ற வேகம். புரிந்து கொண்டு அன்றாடம் dispose பண்ணியாக வேண்டும். அதற்கு ஒரு pressure இருந்தால் தானே வெளியேறும். ஜீவகாந்தம் செலவானால் தான் அந்த pressure ஐ ஏற்படுத்தி maintain ஆகி காலையில் ஒரு தடவை, இரண்டு தடவை அந்த வேலை சுலபமாக நிகழும். கழிவுப் பொருள் வெளியேற்ற வேகத்துக்கு ஜீவகாந்தம் செலவாகிறது.

நமது உடலில் ஒரு Laboratory இருக்கிறது. அது வந்து Harmone ஆகவும் Enzyme ஆகவும் இரத்தத்தை மாற்றிக் கொண்டு இருக்கிறது. அந்த Laboratory Function-க்கு என்ன Fuel போடப் போகிறீர்கள்? Gas or Petrol ஜீவகாந்தம்தான். ஜீவகாந்தம் செலவானால் தான் எச்சிலே சுரக்கும். இன்னும் மற்றதெல்லாம் சுரக்கும்.

ஒன்பது நோய் எதிர்ப்பாற்றல் திருடன் வராமல் ஆழியாரில் பாதுகாக்க கூர்க்கா நிற்கிறார்கள். சம்பளத்துக்காக வேலை செய்கிறார்கள். சம்பளம் கொடுக்காவிட்டால் வீட்டுக்குப் போய் விடுவார்கள். ஆகவே பாதுகாப்பு நடவடிக்கையாக நோய் எதிர்ப்பாற்றல் என்பதை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் அதையும் ஏமாற்றிவிட்டு நோய் வந்துவிடும். அப்படிப்பட்ட நோயை அடித்து விரட்டி வெளியேற்றி விட வேண்டும். உடல் மறுபடியும் நலமாக வேண்டுமானால் அதற்கும் ஜீவகாந்தம் செலவு வேண்டும். இப்படி பத்து விதமாக ஜீவகாந்தம் செலவாகிறது. நாம் அசட்டையாக இருக்கிறோம்.

நமக்கு குறுகிய காலத்திலே ஒரு முழுமையான விளக்கம் மனித ஆற்றலைப் பற்றி வந்துவிட முடியாது என்றாலும், சுருக்கமாகச் சில குறிப்புகளை மாத்திரம் நான் கொடுக்க முடியும். அந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டு நீங்கள் சிந்திக்கச் சிந்திக்க முழுமையான விளக்கம் உங்களுக்கே கிட்டிவிடும். ஏனென்றால் உங்கள் அறிவு ஒரு இயற்கையின் சுரங்கம் - இயற்கையின் நிதி. You can see the beauties of Nature all over the World and in the vast Universe; but the secrets of Nature are within your Mind. அவ்வளவு இயற்கை அழகும், உலக முழுவதும் பரவி இருந்தாலும் இயற்கையிலேயுள்ள எல்லா ரகசியங்களும் மனிதனின் அறிவிலேதான் இருக்கின்றன. அத்தகைய அறிவு ஏன் எல்லை கட்டப்பட்டு விட்டது என்று பார்த்தோமேயானால் பழக்கத்தின் வழியே ஆங்காங்கு ஏற்பட்ட தேவை, அனுபவம், செயல்கள் இவற்றை ஒட்டி நம்முடைய எண்ணங்களும் செயல்களும் பழக்கமாகி விட்டன. ஒவ்வொரு பழக்கமும், ஒவ்வொரு செயலும் அப்படியே உடல் செல்கள், உயிர்ச்சக்தி, ஜீவகாந்தம், புலன்கள், அறிவு என்ற ஐந்து வகையின் கூட்டியக்க விளைவாகப் பதிவாகிவிட்டது. அந்தப் பதிவுகள் ஜீவகாந்தத்தின் தொடர் இயக்க விளைவாகப் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். அதன் வழியே நாம் செயலாற்றிக் கொண்டிருப்போம். அதனால் துன்பமோ, இன்பமோ, அமைதியோ, பேரின்பமோ எவற்றுள் எது ஒன்றாலும் வரலாம். ஆயினும் இப்பொழுது என்ன வேண்டும்? சிந்தனை. இங்கு வினையும் விளையும் என்ற இயற்கை நியதியினை நினைவு கொள்ளல் வேண்டும். எந்தச் செயலிலும் நோக்கம் உண்டு; திறமையும் உண்டு. இவ்விரண்டும் கொண்டு செயல் புரியும்போது இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள் இவற்றிற்கு ஏற்ப, தக்க விளைவு தவறாமல் வரும். இது மாற்ற முடியாத இயற்கை நியதி. இதனை மறவாது நினைவில் கொண்டு சிந்திக்க வேண்டும்.

நாம் என்ன செய்கிறோம், என்ன செய்ய வேண்டும்? ஏன் நமது தேவைக்கும் விருப்பத்திற்கும் மாறான விளைவுகள் வரும் வகையில் செயல்களைச் செய்கிறோம்? நாம் ஒன்று விரும்புகிறோம், வேறொன்று விளைகிறதே, அதற்குக் காரணம் என்ன? என்று சிந்தனை செய்தால் போதும். இதுவரையில் வெளி உலகையே பார்த்துக் கொண்டு புலன்கள் மூலமாக அனுபவித்த அனுபவங்களாலே மாத்திரம் அறிவை எல்லைகட்டிக் கொண்டிருந்த நிலை மாறி, அவ்வளவு அனுபவங்களுமே எங்கே பதிந்திருக்கின்றனவோ, இந்தப் பிரபஞ்ச ரகசியங்கள் அத்தனையும் எங்கே அடக்கமாக இருக்கின்றனவோ அந்த இடத்துக்குப் போய் விடலாம். சிந்தனையின் மூலமாகச் சிந்திக்கும் போதே உள்ளொடுக்கம் உண்டாகிறது மனிதனுக்கு. அந்தச் சிந்தனையின் மூலமாக அமைதி உண்டாகிறது; கூர்மை உண்டாகிறது; தெளிவு உண்டாகிறது. அந்த உள்ளொளியிலே நாம் என்ன செய்ய வேண்டுமென்பது தெளிவாகப் புரிந்துவிடும். அதேபோல என்னென்ன தவறு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். திட்டமிடுவது, பின்பற்றுவது வெற்றி பெறுவது என்பன அடுத்த செயல்கள்.

Keep reading

More from the archive

Granthaalayam

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…

Kannimuthu

அறம் + தவம் = அருள்

அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது, அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன?…

Kannimuthu

துரியாதீதம் தந்த தூயவர்

தாடியின்மடியில்தலைவைத்தால், தோன்றும்இன்பம்தோன்றிடுதே! – மேவிப்போய்அம்மெய்ப்பொருள்தன்னோடு பொல்லாநினைவைப்பூட்டிவிடின். – அப்போ,காயம்இருப்பதும்தெரியாது!…

Granthaalayam

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…

KG Sami

தவம் - 38 A

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம்…