KG Sami1937 — 2006

சௌக்கியம்

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து

வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

சௌக்கியம்னா என்னன்னு தெரியுமா? உடம்பு நல்லா இருக்குதான்னு அர்த்தம். பிறர் நலத்துல நமக்கு எவ்வளவு தூரம் அக்கறைன்னா, யாரைப் பார்த்தாலும் சௌக்கியமான்னு கேட்கிறோம். கேக்கறவங்க சௌக்கியமா இருக்கணுமே? அதை அவங்க திருப்பி கேட்டுருவாங்க, நான் சௌக்கியம், நீங்க சௌக்கியமா?ன்னு. அப்போ முதன்மையானது எது? உடல் நலம். அனைவரிடமும் அது ஏறக்குறைய இருக்கறதில்லை அல்லது முழுமையாக இருக்கறதில்லை. உடல் நலம் இல்லாமல் வேறு எந்த நலம் கிடைக்கும்? இல்லாத உடல் நலத்தை ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு? முன்னொரு காலத்துல எல்லோருக்கும் உடல் நலமாக இருந்தது. இந்தக் காலத்துல யாருக்குமே உடல் நலமில்லை. காரணம், அந்த காலத்தில் எல்லோரும் உழைப்பாளிகளாக இருந்தார்கள். உழைப்பு இல்லாவிடினும், வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலுக்கு வலு தேடிக்கொண்டார்கள். விஞ்ஞானம் முன்னேற, முன்னேற தொழில் எதுவாக இருந்தாலும் அதில் உடல் உழைப்பில்லை அல்லது உடல் உழைப்பு மிகவும் குறைச்சல் என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. உடலுக்கு, உடல் அவயங்களுக்கு, உள் உறுப்புகளுக்கு வேண்டிய இயக்கங்கள் இல்லாததுனால உடல் வலு குறைந்து, வியாதியஸ்தர்கள்தான் உலகத்துல அதிகமாக இருக்காங்க. உடல் நலத்தை பேணுவதறக்கு என்ன செய்யணும்? உடற்பயிற்சி செய்யணும். உடற்பயிற்சி செய்தால் மட்டுமே, உடல் நலத்தை பேண முடியும்.

அன்பர்களே!

நாம அடுத்தவங்க மேல சரியான சிரத்தை உள்ளவங்களா  இருந்தா, அவங்ககிட்ட சௌக்கியமான்னு கேட்டுட்டு, சந்தோசமான்னு அடுத்த கேள்வி கேட்கணும். வாழ்க்கையில சௌக்கியம், சந்தோசம் இரண்டும் வேணும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? சௌக்கியம் உடலில் இருக்கக் கூடியது, சந்தோசம் மனதில் இருக்கக் கூடியது. உடலுக்கு வேண்டிய நன்மையை உடலால்தான் பெற முடியும், மனதுக்கு வேண்டிய நன்மையை மனதால்தான் பெற முடியும்.உடலுக்கு வேண்டிய நன்மையை உடலை இயக்கி, அதாவது உடற்பயிற்சி மூலம் பெறலாம். மனதிற்கு வேண்டிய நன்மையை எப்படி பெறுவது? மனதை இயக்கித்தான் பெறணும். மனதை திருந்திய வழியில் இயக்கணும். இது வரைக்கும் திருந்தாத வழியில் இயங்கிய மனதால் கோபம், கவலை, பொறாமை, வெறுப்பு, பகையை தவிர வேறு ஏதாவது கிடைத்ததா? ஒன்றுமில்லை. அதே மனதை திருந்திய வழியில் இயக்கினால், சந்தோசம், மகிழ்ச்சி, உற்சாகம், ஆனந்தம், அன்பு, கருணை, ஈகை, அருள் போன்ற நன்மைகளை பெறலாம். பிறர் மேல நாம எப்படி அக்கறை காட்டறமோ, அவ்வாறுதான் பிறர் நம் மேல அக்கறை காட்டுவாங்க.

அன்பர்களே!

நீங்க நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா, கவலைப்படும் போது மனம் வாடியிருப்பது தெரிய வரும். யார் மேலயாவது நீங்க கோபமா இருக்கும் போது, உங்க மனசுக்குல புகுந்து பாருங்க, அது எப்படி இருக்குன்னு. கோபம் வந்த மனம் இனிமையா, உற்சாகமா இருக்குமா? இருக்காது. முதலில் கோபம் மனதில் தலையெடுக்கும். பிறகு அந்த கோபம் ஒரு வெறுப்பையோ, சாபத்தையோ, வருத்தத்தையோ உண்டு பண்ணும். அப்படியில்லாமல் மனதுக்கு பொதுவான நன்மையை கொடுத்தோமேயானால், கோபமும் வராது, கவலையும் வராது, பொறாமையும் வராது, பகையும் வராது. மனம் தெய்வீகமான, களையான, திருப்தியான நிலையை அடையும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? உடல்நலத்தை பேணுவதற்கு உடற்பயிற்சி என்ற முறையில் உடலை பயன்படுத்தியது போல் மனதிற்கு நன்மை உண்டு பண்ணுவதற்கு மனதைத்தான் பயன்படுத்த வேண்டும். இதுல பிரச்சனை என்னன்னா, மனம் தான் நம்மை பயன்படுத்திக்கொண்டிருக்கிறதே தவிர நமக்கு மனதை பயன்படுத்த தெரியவில்லை. அதனாலதான், மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம், மனம் போல மாங்கல்யம்ன்னு சொல்லி வைச்சிருக்காங்க. மாங்கல்யம்னா தாலின்னு அர்த்தமில்லை, நன்மைன்னு அர்த்தம். ஆனா, மனசு நாம சொல்றபடி கேட்குதா? அது பாட்டுக்கு அதோட போக்குல போகுது. ஒரு ஓடம் எப்படி ஓடிக் கொண்டேயிருக்குமோ, அவ்வாறு மனம் தனது பழைய போக்கில் போகின்றதே தவிர, அது சரியில்லை என்று தெரிந்தாலும் அதனால் விலக முடிவதில்லை. மாற வேண்டும் என்று நினைத்தாலும் மாற முடிவதில்லை. இந்த விஷயம் பல பேருக்கு ஆச்சரியமா இருக்கும். என் மனசு என் பேச்சை கேட்காம யார் பேச்சை கேட்கும்?ன்னு நினைப்பீங்க. உதாரணமா, ஒருத்தர் சிகரெட் பிடிக்கறாரே, அவருக்கு அது கெடுதல்னு தெரியாதா? சிகரெட் பிடிக்கறதால, செலவு ஆகுது, இருமல் வருது, உடம்பு கெட்டுப்போகுது அதனால அதை விட்ரணும்னு அவரு நினைக்கலையா? விடணும்னு நினைச்சும் விட முடியாம தவிக்கறாரே, ஏன்? மனமே, சிகரெட் மேலே ஆசைப்படாதேன்னு மனசு கிட்ட சொல்லியும் அது கேட்க மாட்டேங்குதே ஏன்? இப்படிப்பட்ட மனதைத் திருத்தி, நற்குணங்களை கொண்டு வராமல் நாம் எப்படி நன்றாக இருக்க முடியும்?

அன்பர்களே!

மனதை எவ்வாறு நெறிப்படுத்துவது என்று பார்ப்பதற்கு முன்பாக சில அடிப்படையான விஷயங்களை பற்றி சற்று சிந்திப்போம். உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் எவ்வாறு ஒரே சீராக நடைபெற்றுக் கொண்டுள்ளது என்பதை என்றாவது நீங்கள் சிந்தித்து பார்த்திருக்கின்றீர்களா? சூரியன், சந்திரன், கோள்கள் எல்லாம் எப்படி ஒரு ஒழுங்கமைப்போடு இயங்கி வருகின்றன? பருவ காலங்கள் நான்கும் எவ்வாறு சரியாக மாறி மாறி வருகின்றன? இதையெல்லாம் செய்வது யார்? இந்த கேள்வி, கவலை எல்லாம் மிருகங்களுக்கு கிடையாது. மனிதனும் ஒரு உயர்ந்த ஜாதி மிருகந்தான்னாலும், அவனுக்கு கூடுதலா ஒரு கஷ்டம் இருக்குது. நான் ஏன் பிறந்தேன்? ஏன் வாழறேன்? எப்படி வாழணும்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போகணும்?ங்கற தேடுதல் தான் அது. இந்த கேள்விகளெல்லாம் மிருகங்களுகோ, ஏன் சாதாரண மனுஷங்களுக்கோ கூட எழாது. மனிதனா பிறந்து ரொம்ப கஷ்டப்படறவங்களுக்கும், ரொம்ப சுகப்படறவங்களுக்கும் தான் எழும். இதனைக் குறித்து ஒவ்வொருவரும் சிந்திப்பது மிகவும் தேவை.

- நினைவில் உங்களோடு kgs.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 19

அந்த தைரியத்திலே அலாரம் வைத்துக் கொண்டு தூங்குவீர்கள் பாருங்கள். ரயிலுக்குப் போகிறவர்கள் அந்த அலாரம் இல்லையெனில் என்ன செய்வீர்கள். அலாரம் வைத்துக்…

Meena Kumaran

’வாழ்க வளமுடன்!’ என்று கூறுவது தவறா? இலக்கணம் என்ன சொல்கிறது?

நமது இயக்கத்தில் வாழ்க வளமுடன் என்கின்ற ஒரு தாரக மந்திரத்தை நமது அருள் தந்தை அவர்கள் உருவாக்கிச் சேர்த்திருக்கிறார். இது மனவளக்கலைஞர்களாகிய நம்மால்…

KG Sami

ஜீவ காந்தப் பெருக்கம்

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்பேரறி வாளன் திருஎன்றார் வள்ளுவர்.ஊர்ப் பொது கிணற்றில் அல்லது குளத்தில் நீர் நிறைந்திருந்தால் அது எவ்வாறு ஊர்…

KG Sami

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

பணத்தைப் பரிகொடுத்த சிலர் மகரிஷிகளிடம் புகார் சொல்வார்கள். மகரிஷிகள் சொல்கின்ற பதில்: ‘எனக்குத் தெரிந்து நான் பாவம் செய்ததில்லை. எனது பெற்றோரும்…

KG Sami

வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா

15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களால்…