KG Sami1937 — 2006

தவம்-9

Signed KG Sami

நமக்கு மூன்று விதமான பதிவுகள் உண்டல்லவா? அதில் முதலாவது ஆகாம்ய கர்ம பதிவுகள். இவை புறமனத்தால் பதியும் என்று சொல்லுவார்கள். ஆக்கினைச் சக்கரத் தவம் புறமனதில் நிகழக்கூடியது. அகத்தவத்தால் ‘ஆகாம்ய கர்மம்’ என்பது இது வரை செய்யப்படாத வினை. ஆனால் சஞ்சித, பிராரப்த கர்மங்களின் தன்மைக்கேற்ப கூடிய விரைவில் செய்ய இருக்கின்ற செயல்கள், அப்படிப்பட்ட செயல்களை செய்ய விடாமலே தடுத்து விடும்.

     ஆக்கினைச் சக்கரத் தவம் செய்வதால் மனதுக்கு பழக்கதிலிருந்து விடுதலை கிடைக்கும். ‘இது தவறு’ என்று தெரிய வந்தாலும் அதைச் செய்யாமல் தன்னால் தடுத்துக் கொள்ள முடியாது. மாறாக மீண்டும் மீண்டும் அதையே செய்யத் தூண்டும். ஏற்கெனவே இருக்கின்ற பதிவுகள் தான் பழக்கமாக மாறுகின்றன. பழக்கத்தின் காரணமாக திரும்பவும் அதையே செய்வதால் பழக்கத்தின் தீவிரம் அதிகமாகிறது.

’பழக்கம்’ ‘செயல்’ ‘செயல்’ ‘பழக்கம்’ என்று மீண்டு கொள்ள முடியாத ஒரு பரிதாப நிலை மனித குலத்தையே ஆட் கொண்டுள்ளது. ஆகவே தவறு செய்கிறவர்களின் மேல் பரிதாப உணர்ச்சி தான் ஏற்பட வேண்டும் ஏளனமோ, வெறுப்போ தீர்வாகாது.

இந்நிலையில் ஆக்கினைச் சக்கரத் தவம் செய்வதால் மனதுக்கு பலம் கூடுகிறது. இதனால் தன்னையே எதிர்த்து தானே வெற்றி கொள்ள முடிகிறது. பதிவுகள், அதாவது, பழக்கமானது பாவம் செய்யத் தூண்டினாலும் அறிவு ஆக்கினைச் சக்கரத் தவத்தின் காரணமாக விழிப்பு நிலையிலே இருந்து விழிப்பு நிலை பலம் பெற்றிருப்பதால், ‘இது தவறு நான் செய்ய மாட்டேன் ஊஹூம் நான் செய்யவே மாட்டேன்’ என்ற மன உறுதி ஏற்படுகிறது.

ஆனால் நல்லதிலே உறுதியாக நிற்பதற்கு எது சரி? எது தவறு? ஏன் சரி? ஏன் தவறு? என்ற விளக்கம் கிடைக்க வேண்டுமே இந்த விளக்கம் இல்லாமற் போனவர்கள் தான் தீமையிலே கூட உறுதியாக இருக்கிறார்கள்.

ஆக்கினைத் தவம் புறமனதிலே வேலை செய்கிறது. செயல்கள் புற மனதினால் எண்ணப்பெற்று புறமனம் அந்தச் செயலைச் செய்து, புறமனம் விளைவை அனு போகிக்கிறது. அனு போகத்தின் இன்பம் தோன்றும் போது அது இன்னும் வேண்டும். நாளையும் வேண்டும் என்ற் ஆசைப்படுகிறது. விளைவைப் பற்றிச் சிந்திக்க புறமனதிலே செய்யப்படும் ஆக்கினைச் சக்கரத் தவத்தால் முடியாது. அங்கே தான் ‘துரிய தவம்’ உதவுகிறது. ’துரிய தவம்’ நடு மனதில் நடைபெறுகிறது. மூளையின் செல்கள் எல்லாம் இயக்கத்திற்கு வருவது அங்கே தான்.

துரியத்தில் நடுமனதில், மூளையில் ஆயிரம் கபாடங்கள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ‘Brain Cells’ என்பதைத் தான் கபாடங்கள் என்பார்கள். ஆயிரம் என்றால் பல, எண்ணிக்கை அற்ற என்று பொருள் (1000 என்று அர்த்தமில்லை ஆயிரம் பேர் வந்திருந்தார்கள் என்றால் 1000 பேர் வந்திருக்கிறார்கள் என்ற அர்த்தமில்லை. நிறைய பேர் வந்திருந்தனர். ஆயிரம் சொன்னேன், கேட்கவில்லை. பல முறை சொன்னேன் கேட்கவில்லை என்று பொருள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்).

ஆகவே மூளையை ’ஆயிரம் இதழ் தாமரை’ என்று சொன்னார்கள் என்றால், அதற்கு எண்ணிக்கையற்ற கபாடங்கள் என்று பொருள். துரிய தவம் செய்யும் பொழுது அத்தனை கபாடங்களும் இயக்கத்திற்கு வந்து அதிகரிக்கிறது. சிந்தனையாற்றல் கூடுகிறது. நல்லது, கெட்டது விளங்குகிறது. இவ்வாறு விளக்கங்கள் கிடைத்துப் போவதால் அவற்றைச் செயலாற்றும் திறனை ஏற்கெனவே ஆக்கினைச் சக்கரத் தவத்தால் பெற்று விட்டோம். ஆக்கினையும், துரியமும் செய்வதால் நல்லறிவு ஏற்பட்டு நல்ல பழக்க வழக்கங்களிலேயே நிற்க முடிகிறது அறியாமை அகல்கிறது. தவறு செய்யாத விழிப்புணர்வு கூடுகிறது. இந்நிலையைத் தான் ‘பிராரப்த கர்மத்தை’ அகற்றுகிறது துரிய தவம் என்று சொன்னார்கள்.

சஞ்சித கர்மம் பதிவாகி இருக்கக் கூடிய இடம் கருமையம். ஆகவே அது அவ்வளவு சுலபமாக போக்கி விட முடியாது. நீண்ட காலம் துரிய தவம் செய்வதும், துரியாதீதத்தை ஆழ்ந்த செய்வதும், இதற்கு உதவும். இதை எடுத்துக் கூறக் கூடிய செய்யுள் ஒன்று உண்டு. அது

”தன்னை யறிந்த தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்

பின்னை வினையை பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவனரு ளாலே”

சென்னியில் வைத்த சிவனருள் என்பது துரியம், துரியாதீதத்தைக் குறிக்கும். முன்னை வினை என்பது பிராரப்த, சஞ்சித கர்மங்கள்.

     துரியாதீதம் செய்யும் போது நமது கருமையம் இறைநிலையோடு இணைகிறது. இறைநிலை என்ற பெரு வெள்ளம் பரிபூரணமான தூய்மையுடையது என்பதால் அதனோடு இணைகின்ற போது நமது கருமையரும் கொஞ்சம் கொஞ்சமாகத் தூய்மை பெற்று விடுகிறது.

ஆன்மீக நூல்களில் வள்ளலார் நூலில் கூட துரியம், துரியாதீதம் என்ற சொற்கள் வரும். ஆனால் எங்கும் யாரும் அதை விளக்கவில்லை. அந்தத் தத்துவத்தை இன்னார் செய்தார் என்றும் குறிப்பில்லை. ஆக்கினைச் சக்கரத் தவத்தையும், துரிய தவத்தையும் நமது மகரிஷிகள் பரஞ்சோதி மகானிடம் முறையாகக் கற்றுக் கொண்டார்.

பரஞ்சோதி மகானிடம் சாந்தி, ஆக்கினை முதலிய தவங்களை மகரிஷிகள் நேரிடையாகக் கற்றுக் கொண்டார். துரியம் கற்றுக் கொள்ளுமுன்னரே அவருக்குத் துரியம் வந்து விட்டது. அதனால் தலைபாரம் போன்ற கஷ்டங்கள் தோன்றி அவற்றை மகரிஷிகள் தைரியமாக தாங்கிக் கொண்டார்கள்.

Keep reading

More from the archive

Granthaalayam

இறைவனும் இறைநீதியும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

KG Sami

தவம் - 32 – ஏ

அதனால் தான் நமக்கு ஜீவ காந்தப் பெருக்கம் ஏற்படுகிறது. இது ஒரு தந்திரமான டெக்னிக். கண்ணாடிப் பயிற்சியில் அதிகமாக ஜீவகாந்தம் ‘மளமள’ வென ஏறுகிறது.…

Kannimuthu

பிறவித் தொடர் தத்துவதில் செய்த புரட்சி

வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,நவயுகத்திற்…

Granthaalayam

இறைவன் அன்னமயம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலை, உயிர் நிலை, மனநிலை,…

Granthaalayam

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

KG Sami

தவம் – 33

ஆகவே ஜீவகாந்தம் ஒரு minimum critical level ஐ விட குறைந்து விடக் கூடாது. குறைந்து போனால் conversion ஏற்பட்டு சூடு உண்டாகும். அப்படியெல்லாம் நமக்கு…