சாதாரணக் குடிமகன் எவர் ஒருவராலும் உடலும், உயிரும் இருந்தால் போதும். விருப்பமும், முயற்சியும் கூட்டிக் கொண்டால் இந்த உடற்பயிற்சி, காயகல்பப் பயிற்சி, தவப் பயிற்சி மூலமாக அவரவர்களும், தங்கள் வாழ்க்கையில் வெற்றி, மகிழ்ச்சி, மன நிறைவு, பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும்.
ஆசிரியர் பயிற்சிக்கு ஒரு வயது வரம்பு வைத்திருக்கிறார்கள். சில பேர் அக்கிரமம் என்கிறார்கள். எப்பொழுது வயது வரம்பு வைத்தார்கள் தெரியுமா? ஆசிரியர் பயிற்சி ‘open to all’ என்ற ஒரு நிலை இருந்தது.
மௌனம் நிறைவு விழாவில் ஒரு பயிற்சி. Hall Accommodation போதாது என்று இன்னொரு பயிற்சி. மொத்தம் இரண்டு பயிற்சி தான். அதிக ஆர்வமாக மகரிஷி கிட்ட வந்து உட்கார்ந்து விடுவார். எழுந்து நின்று தீட்சை கொடுப்பது என்ற் ஒரு நிலை இருந்தது பாருங்கள்.
ஒரு வரிசையை உட்கார வைத்து இன்னொரு வரிசையை எழுந்திருக்க வைத்து விடுவார்கள். அந்த மாதிரி எழுந்து நிற்கிற ஐயா உட்கார்ந்து இருக்கிறவர் விழுந்து விடுவார். உட்கார்ந்து இருப்பவர் அப்படியே உட்கார்ந்து இருக்கிறார். எழுந்து நிற்பவர் அவர் மேல் அப்படியே விழுந்து விடுகிறார். இவர்களெல்லாம் எதற்கு ஆசிரியர் பயிற்சிக்கு வருகிறார்கள். யார் சொன்னது மகரிஷி சொன்னார்கள்.
நான்கு நாள் முன்பு ஈரோட்டிலிருந்து ஒரு பெண்மணி என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். பொங்கல் வாழ்த்து சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஜனவரி 1 அன்று வாழ்த்து சொன்னால் எனக்குப் பிடிக்காது. நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.
இருவரும். பேசிக் கொண்டு இருந்தோம். என்னை ‘அப்பா, அப்பா’ என்று கூப்பிடும் அந்தப் பெண்மணி ரொம்ப சீனியர். அந்த காலத்து சிநேகிதம். ஈரோட்டைச் சேர்ந்தவர் தான் அந்தப் பெண்மணி. வேறு வேறு சிநேகிதம். தஞ்சாவூர் சிநேகிதம், பாண்டிச்சேரி சிநேகிதம் என்று ஒவ்வொரு ஊரிலும் சிநேகிதம் இருக்கும்.
நம் கையில் வித்தை இருக்கிறது அல்லவா? அருட்காப்பு கொடுப்பது, வாழ்த்து சொல்வது, அவர்கள் கெடுதல் நீக்குவது, நன்மை கொடுப்பது என்று இதெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுக்க மாட்டேன்கிறீர்களே. அதற்கு நான் “திருப்பி அடிக்கும், பரவாயில்லையா?” என்றேன். நீங்கள் அருட்காப்பு கொடுப்பதை சாமான்யமாக நினைக்கிறீர்கள். அதற்குள் இருக்கும் சமாச்சாரத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.
அந்தப் பெண்மணியோட பையனுக்கு விபத்து நடந்தது. அந்தப் பெண்மணி அந்த அருட்காப்பு கொடுப்பதை எனக்கே கற்றுக் கொடுத்து விடுங்கள். நானே செய்து விடுகிறேனே என்றது.
எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் அதை ஒருவர் வைத்திருப்பது சரியல்ல. அந்த மாதிரி அருட்காப்பு சொல்லும்போது அவர்களுடைய பாவப்பதிவு பிரதிபலித்து நம்மிடம் வரும். ஏற்றுக் கொள்ளத் தயாரா? சமாளிக்க முடியுமா என்று சொன்னேன்.
சமாளிப்பது என்றால் தவம் செய்து தான் சமாளிக்க முடியும். ஆனால் தவம் செய்தால் தானே, தவம் செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்வது இல்லை. மன்றத்து பக்கமே வருவது இல்லை. அப்படியே வந்தாலும் ஒரு சேரிலே உட்கார்ந்து விட்டு எழுந்து போய் விடுவார்கள்.
இவர்கள் ஒரு தவசிரேஷ்டத்தின் மூலமாக மக்களுக்கு நன்மை செய்யும் ஆற்றலை எவ்வாறு பெற முடியும்? பலருக்கு அசாதாரணமாக நன்மை செய்யக்கூடிய வித்தையை நூறு பேருக்கு கற்றுக் கொடுக்க நான் ரெடி. ஆனால் பலருக்கு நன்மை செய்யக்கூடிய அந்த வித்தையை கற்றுக் கொண்டு பெட்டியில் வைத்து தூங்குவதால் என்ன லாபம்? அந்தப் பெண்மணி 60. வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர். இவர் ஆசிரியர் பயிற்சிக்கு வந்திருக்கிறார். என்ன இலாபம்?
அன்பர்களே, இப்பவெல்லாம் ஜனங்க நன்றாக படிக்கிறார்கள். பி.ஏ., எம்.ஏ. படிக்கிறார்கள். நன்றாக கவனித்தீர்களா? அத்தனை எம்.ஏ. இருக்குது நாட்டில். எதுக்கு என்று கேட்டேன். போரடிக்குது அதனால் படிக்கிறேன் என்றார்கள். எம்.ஏ. History, எம்.ஏ. தமிழ் சும்மா tuition வைக்காமல் படித்து எவராலும் தேறி விட முடியும். எதற்காக அம்மா படிக்கிறார் என்று கேட்பேன். சும்மாதான் படிக்கிறேன் என்று சொல்லும் House Wife.
அன்பர்களே, எம்.ஏ. வரலாறு படிப்பதில் ஒரு இலாபம் உண்டு. மனிதர் குல வரலாறுகளை தெரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட வரலாறு உள்ள சமுதாயத்தை எப்படி திருத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். இதற்காகப் படிப்பது என்றால் பரவாயில்லை.
எம்.ஏ. தமிழ் படிப்பதிலும் ஒரு இலாபம் உண்டு. தமிழ் நம்ம மொழி. தமிழ் மொழியில் இல்லாத தத்துவமே கிடையாது. தமிழ் இலக்கியத்திலும் தத்துவம். தமி மொழியிலும் தத்துவம் உண்டு. தமிழ் படிக்க, படிக்க மனம் விரியும். அப்படிப்பட்ட ஆற்றல் உள்ளது தமிழ். சஸ்கிருதமும், தமிழும் ஒரே காலத்தில் தோன்றினாலும் தமிழ் இன்னமும் அழியாமல் இருப்பதற்கு காரணம் இதுதான். தமி இன்னமும் பேசிக் கொண்டு இருக்கிறோம். சமஸ்கிருதம் ஏட்டில்தான் இருக்கிறது. பேச்சு வழக்கில் இல்லை.
எம்.ஏ. படித்தால் இலாபம் உண்டு. அதற்காக படிக்கிறேன், என்றால் பரவாயில்லை. University-யில் எவ்வளவு படிப்பு இருக்கிறது. அவ்வளவையும் படித்து முடித்து விடுவது என்று ஒரு சிலர் இருக்கிறார்கள். அதுவும் பெரும்பாலும் பெண்கள்தான். நான் சொல்வேன் கல்யாணம் பண்ணிக் கொண்டு படி என்பேன்.