கையைத் தூக்கி இறக்கி, தூக்கி இறக்கி energy ஐ பாஸ் பண்ணுவதற்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். இதை அகத்தாய்வு இரண்டாம் நிலையிலேயே கற்றுக் கொடுத்திருப்பார்கள். ‘தெய்வீக சக்தி பாய்கிறது’ ‘அருட்பேராற்றல் பாய்கிறது’ என்ற வாசகத்தைச் சொல்ல வேண்டும். அவர் காதில் விழும்படி சொல்ல வேண்டும்.
அப்பொழுது அவருக்கு ’consciousness’ ஏற்படும். ‘தெய்வீக சக்தி பாய்கிறது ‘அருட்பேராற்றல் பாய்கிறது’. அலை அலையாக பாய்கிறது. பாய்ந்து நிரம்பட்டும். உடலும் உள்ளமும் தூய்மையும், மேன்மையும் பெறுமாக. இடப்புறமும், வலப்புறமும், நடுப்புறமும் கொடுக்க வேண்டும். ஒரே சீராக கொடுக்க வேண்டும். வேகமாகவும் கொடுக்கக்கூடாது. ரொம்ப மெதுவாகவும் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்த பின் அருட்காப்பு கொடுக்க வேண்டும்.
’அருட்பேராற்றல் இரவும், பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக’ என்ற வாசகத்தை உச்சரிக்க வேண்டும். அவர் காதில் படும்படியாகச் சொல்ல வேண்டும். அது life long இருக்கும். அவ்வப்போது வந்து renew பண்ணிக் கொண்டு போவார்கள்.
அதாவது உங்கள் அப்பா உங்களுக்கு 10,000 ரூபாயைக் கொடுத்து ஒரு தொழில் தொடங்கு என்று சொன்னார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிட்டீர்கள். ஆனால் சம்பாதித்து போட்டீர்களா? இல்லையா? நீங்கள் சாப்பிட்டீர்கள். அதிலிருந்து பணத்தைச் செலவு செய்தீர்கள். ஆனால் சம்பாதித்த இலாபப் பணத்தை எடுத்து அதில் போடுகிறீர்கள். பின் எடுக்கிறீர்கள். அந்த மாதிரி அதை மூலதனமாக வைத்துக் கொண்டு அதை rotation பண்ணுகிற மாதிரி இந்தக் ‘காப்பு அவருக்கு நிரந்தரமாக இருக்கும். அவ்வப்போது அவர் வாங்கிக் கொள்கிற காப்பு அதை boost பண்ணிக் கொடுக்கும் என்று சொல்லி உடல் முழுவது அருள் வளையங்கள் கொடுக்க வேண்டும்.
உடல் முழுவதும் ‘Cover’ பண்ணுகிற மாதிரி கொடுக்க வேண்டும். தலையை மட்டும் சுத்தக் கூடாது. இப்பொழுது கண்களை மூடச் சொல்லுங்கள். அவர் அரைக்கண் திறந்த நிலையில் இருக்கிறார். தீட்சை கொடுக்கும்போது கண்கள் மூடி இருக்க வேண்டும்.
’அன்னைக்கு வணக்கம்’. உங்கள் அம்மாலை நினைத்து வணங்கிக் கொள்ளுங்கள். ‘தந்தைக்கு வணக்கம்’ அப்பாவை மானசீகமாக நினைத்து வணங்கிக்கொள்ளுங்கள். ‘அருள்தந்தை யோகிராஜ், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வணக்கம். அதாவது ‘ஆசானுக்கு வணக்கம்.’
’ஆசானுக்கு வணக்கம்’ என்றால் யாருக்கு கொடுப்பார்கள். உங்களைத்தான் ஆசானாக எண்ணுவார்கள். நீங்கள் தான் இப்பொழுது அவருக்குத் தெய்வம். ஆசான். வேதாத்திரி மகரிஷியை யார் பார்த்தார்கள். என்னமோ ஒரு படம் வைத்திருக்கிறார்கள். நீங்கள் வேதாத்திரி மகரிஷியை நினைக்கச் சொன்னால் இப்போ அந்த effect வராது. இப்பொழுது ஆசானுக்கு வணக்கம் என்று சொல்லிக் கொள்ளுங்கள். மகரிஷிகளுக்கு உரிய மதிப்பை நாம் கொடுக்க பழகிக் கொடுத்த பின்னர் அவரே கண்டுபிடித்துக் கொள்வார். இப்பொழுது அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வணக்கம் என்று சொல்வோம். பின்னாளில் ஆசானுக்கு வணக்கம் என்று சொல்வோம். பின்னாளில் ஆசானுக்கு வணக்கம் என்று மாற்றி கொள்வோம்.
இப்பொழுது கண்களை மூடிக் கொள்ளுங்கள். மூலதாரத்தில் தொட்டு குண்டலினி சக்தியை எழுப்பப் போகிறேன். தயாராக இருங்கள். இன்னொரு கையை என்ன பண்ணுவது. இது பெரிய சிக்கல் தெரியுமா. இன்னொரு கையை மூடி முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொள்ள வேண்டும். இரபீந்திரநாத் தாகூர் வைத்திருப்பாரே அந்த மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும்.
குனிந்து கொடுக்க வேண்டும். பின் எப்படி கொடுக்கக் கூடாது. உட்கார்ந்து கொண்டு கொடுக்கக்கூடாது. ஏன் உட்கார்ந்து கொண்டு கொடுக்கக் கூடாது. ஒரு தவறும் கிடையாது. பின் நீங்கள் தானே எழுந்திரிக்கப் போகிறீர்கள். அது ஏன் உட்கார வேண்டும். பின் எழுந்திருக்க வேண்டும். எனவே குனிந்து கொடுப்பது மிகவும் சிறந்தது.
நிறைய அன்பர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேலியில் ஒரு முறை 1983ல் 18 பேருக்கு தீட்சை கொடுக்க வைத்து விட்டார்கள். மகரிஷி சொன்னார்கள். K.G. சாமியை கொடுக்கச் சொல்லுங்கள். நான் காயகல்பம் நடத்தப் போகிறேன் என்று போய் விட்டார்கள். 18 பேருக்கு குனிந்து நிமிர்ந்தால் என்னாகும் சொல்லுங்கள். பல தடவைகள் குனிய வேண்டும். பல தடவைகள் நிமிர வேண்டும் என்பதால் உட்கார்ந்தும் கொடுக்கலாம் தவறு ஒன்றுமில்லை.
நாம் செய்கிற வேலைக்கு மரியாதையாக குனிந்து கொடுப்பது சிறந்தது. மூலாதாரம் என்றால் என்ன? டாக்டருக்கு படித்திருந்தால் நன்றாக இருக்கும். டாக்டர் அங்கிருந்து வருவார். அவர் கையை வைப்பார். அவர் கை வைக்கும் இடத்தில் ‘இருதயம்’ இருக்கும். நாம் தடவி, தடவிப் பார்த்து இங்கேதான் ‘படக் படக்’ என்று கேட்கிறது. எனவே இங்க தான் இருதயம் இருக்கும் என்று தீர்மானிக்கிறோம். ஏனெனில் நமக்கு anotomy தெரியாது. நிலத்திலிருந்து ஒரு 2 அங்குலம் மேலே. அதுதான் ஆசன வாய்க்கு 2 அங்குலம் மேலே. அது தான் மூலாதாரம் இருக்கும் இடம். இன்னொரு செய்தியைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அங்கே, இங்கே தொட்டு விட்டாலும் அது இழுத்துக் கொள்ளும். ஐயோ, நாம் சரியான இடத்தில் தொட்டுக் கொண்டிருக்கிறோமா அந்த ஐயாவுக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாது என்ற எண்ணம் வேண்டாம். அதுவே இழுத்துக் கொள்ளும். கையை படுக்கை வாட்டில் வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும். ஒரு கால் மடக்கி மண்டி போட்டுக் கொண்டும், அமர்ந்து கொள்ளலாம். தவறு ஒன்றும் இல்லை.
மூலாதாரத்தில் ‘சொல்லித் தட்ட வேண்டும்’ ‘குண்டலினி சக்தி குவிந்தெழுக’ – இது மகரிஷிகளுடைய வாக்கியம். தெய்வீக சக்தி திரண்டெழுக. எதுகை, மோனை எல்லாம் இருக்கிறது பார்த்தீர்களா? எழுக, எழுக என்று சொல்லிவிட்டு கத்தும் போது ‘ஸ்ஸ்’ என்று சத்தம் கேட்காது. காத்து அடிக்காது. ஆனால் ‘ஸ்ஸ்’ என்று காத்து மோதுவது போல் ஒரு response இல்லையெனில் இன்னொரு முறை ‘உயிர்ச்சக்தி ஓங்கி எழுக’ என்று சொல்லி கழற்றினீர்கள் என்றால் நம் கையில் response வரும்.
Response வந்த உடன் ‘வாழ்க வளமுடன்’ என் கையோடு உங்கள் ஞாபகத்தைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி முதுகுத் தண்டு வழியாக கைகளை வேகமாக மேலே ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வர வேண்டும். கழுத்தில் வந்த பின் இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். வேகமாக என்பதை முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சில பேர் தண்டு வடத்தில் வந்து Slow ஆனதால் block ஏற்பட்டு அதனால் உடலுக்கும், மனதுக்கும் தொந்தரவு ஏற்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம் பொறுப்பாசிரியருக்குத் தன் மேலேயே சந்தேகம். ஏறுமோ, ஏறாதோ என்று சந்தேகத்தில் மெதுவாக மேலே கடத்திக் கொண்டு வருவது போல் கொண்டு வரும்போது எங்கேயாவது ஒரு மையத்தைச் சந்திக்கும் போது அங்கே நின்றுவிடும். அதற்கு chance கொடுக்காமல் வேகமாக கழுத்து வரை கொண்டு வந்துவிட வேண்டும். கழுத்தில் வந்த உடன் இடது கை விரலையும் சேர்த்துக் காதுக்கு மேலே கொண்டு வந்து வைத்துவிட வேண்டும். தீட்சை முடிந்து போச்சு தெரியுமா உங்களுக்கு?
இப்போ எதிரில் வந்துவிட வேண்டும். முற்காலத்தில் பிரணாயாமம் மூலமாக இந்த குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் உணர்வதற்கு இரண்டு வருடமாகும். அப்புறம் சுவாதிஷ்டானத்திற்கு உயர்த்துவதற்கு இரண்டு வருடமாச்சு. அவ்வாறு ஆறு, இரண்டு, பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வந்ததை நாம் பன்னிரெண்டே விநாடியில் மேலே கொண்டு வந்து விடுகிறோம்.
இவ்வளவு சுலபமாக இருக்கக்கூடிய காரியத்தை முற்காலத்தில் எவ்வளவு சிக்கிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு பயமுறுத்தினார்கள். நிஜமாகவே கஷ்டப்பட்டார்கள். அதாவது இதை உயர்த்திக் கொள்வதற்கும் கஷ்டம். உயர்த்திக் கொள்கிற Process-ம் கஷ்டம்.