புதுவை அருட்செல்வர்
ஜானகிராமன் ஐயா அவர்களின் மகள்
சுபிதாவின் முதல் பிறந்தநாளுக்காக
கே.ஜி. சாமி ஐயா அவர்களால்
எழுதி அளிக்கப்பட்ட அருமையான மரபு வாழ்த்துப் பா ………..
ஓராண்டு நிறைவுற்றே ஈரா மாண்டில்
எடுத்தடி வைசுபி தாவின் ஆயுள் நூறாய்
சீரோங்கச் சிறப்போங்கச் செல்வம் கல்வி
சிறிதேனுங் குறை யாமல் முழுமை யாகப்
பேராளர் வேதாத்திரி ஞானச் செல்வர்
சானகிராம் தவச் செல்வி சுபிதா தந்தைப்
பேரோங்கப் புகழ்வீங்கப் பூரிப் பாலே
புளகாங் கிதம் பொங்கச் சிறந்து வாழ்க !!
தளர்நடையால் கிளர்வூட்டும் சுபிதா வாழ்வில்
தாய்க் குலத்தின் தனிச்சிறப்பை மீட்டு மாதர்
தளர்நடையைக் கிளர்நடையாய் மாற்றி அந்த
தாய்க்குலத்தின் சேய்க்குலமே ஆண்கள் என்று
விளைவுசிறப் புறுசெயலால் விளக்கிக் காட்டி
வாழ்வாங்கு வாழ்ந்து பிறர் வாழவைத்து
தலையான மகளி வளென்றவனி போற்றத்
தரணிக்கோர் அணியாக தழைத்து வாழ்க !