அந்த ஆற்றல் புகையை மட்டும் இழுக்க முடியாது. புகையிடம் செல்லாது. இப்படி ஒரு பொருளிலிருந்து ஒரு முழ உயரம் தள்ளி உள்ள இடத்தில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது என்று நமது மகரிஷிகள் யூகித்தார்கள்.
யூகம் பண்ணி உச்சிக்கு மேலே ஒரு முழ உயரத்தில் நினைத்துப் பார்த்தார். என்ன இருக்கிறது. ஒன்றுமில்லைதான். ஒன்றுமில்லாத இடத்தை நினைத்துப் பார்த்தார்கள். மனம் அங்கே நிக்குது. ஏதாவது இருந்தால் தானே நினைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் அல்லவா, அது தவறாகப் போய் விட்டது.
உச்சிக்கு மேலே ஒரு முழ உயரத்தில் நினைக்க முடியும். அங்கே இருக்கக்கூடிய அரூபத்தை நினைக்க முடியும். சுத்தவெளியை அல்ல. ஆனால் பொருளற்ற தன்மை. காற்று தான் இருக்கிறது. Things – பொருள் ஏதும் இல்லை. உச்சிக்கு மேலே ஒரு முழ உயரத்தில் நினைத்தால் இந்த உடலை மறந்து விட்டு மனம் வெளியே போய் விடுகிறது இல்லையா? ஆனால் ஒரு முழத்துக்கு மேலே நினைக்க முடியாது. இழுத்துவிடும் இந்த உடம்பு.
என்ன உடம்பு? கொஞ்சம் வெளியே போய்விட்டு வா என்றால், நீ நேரடியாகப் போக நினைக்கிறாயே என்று மனதைப் பிடித்து உடல் இழுத்து விடும். அவ்வளவு நெருக்கம். சிநேகிதம். ஆகவே கொஞ்சம் விட்டுப் பார்க்கிறது. இந்தத் தவம் மகரிஷிகளுக்கு நன்றாக இருந்தது. துவாதசாங்க தவம் உச்சிக்கு மேலே.
துரியாதீத தவமும் துவாதசாங்கக் கருத்தும் நமது நாட்டில் ஏற்கனவே ‘சலாமணி’யில், பழக்க வழக்கத்தில் அனுபவத்தில் இருந்திருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. ஏதோ மகரிஷி ARP Training போனார். உச்சிக்கு மேலே பூமிக்கு மேலே ஒரு முழ உயரத்தில் புகையில்லை. அதைக் கொண்டு வந்து தன் தலையில் வைத்துக் கொண்டார் என்று நினைக்காதீர்கள். அனுபவத்தில் தெரிந்து கொண்டார்.
நீங்கள் குட்டு வாங்கி இருக்கிறீர்களா, Monitor இடம். நான் நன்றாக வாங்கி இருக்கிறேன். எதற்காக வாங்கினேன் என்றால் தாமதமாக வருவேன். அதற்குத்தான் வாங்கினேன். தினமும் தாமதமாக வருவேன். அப்போ ‘குட்டு மாஸ்டர்’ என்று ஒருவன் இருப்பான். பயங்கரமானவன். ‘டேய் இவனுக்கு ஒரு குட்டு போடுடா’ என்று வாத்தியார் சொல்வார். ‘அவன் வந்து உடனே குட்டு போட்டுத் தொலைச்சா பரவாயில்லை, வலியோட போய்விடும்’ என்று தோன்றும். அவன் அப்படி என்பான், இப்படி என்பான், எச்சி தொட்டு கையைத் தூக்குவான், மேலே வச்சிட்டு தலைக்கு மேலே ஆட்டுவான். ஒவ்வொரு செகண்டுக்கும் உயிர் போய் திரும்ப வரும். இப்போ மனம் எங்கே இருக்கு? உச்சிக்கு மேலே கொஞ்சம் Negative ஆக இருக்கும் School –ல் வலி, குட்டு என்று.
பெருமாள் கோயிலுக்கு போயிருக்கீங்களா? அங்கே ஒரு விசேஷமாச்சே. ‘சடாரி’ அதைக் கொண்டு வந்து தலையில் வைக்க ஐயங்கார் வருவார். நீங்களும் பவ்யமாக தலையை நீட்டுவீர்கள். என்னோட அனுபவத்தைச் சொல்கிறேன். இடிச்சிடுவாரோ, ஓரம் வேறு ஷார்ப்பாக இருக்கும். கனமாக இருக்கும். ஏதாச்சும் இடித்து விடுவாரோ என்று தோன்றும். நான் சேர்ந்திருந்த இயக்கமோ சு.ம.இயக்கம். பக்தி என்பதே கிடையாது. வேறு ஏதோ நினைப்போம். பக்தி இருந்தால் மட்டும் தலையை எங்கே நினைக்கப் போகிறீர்கள்? தலைக்கு மேலே ஏதாவது நினைப்பீர்களா? என்னமோ தெய்வீகமான உணர்வு ஒன்று வருமே அதுதான் துவாதசாங்க அனுபவம்.
உடலுக்கு மேலாக நினைப்பது. உடலுக்கு மேலாக நினைத்தால் நீதி உணர்வு, நியாய உணர்வு எல்லாம் இருக்கும். இல்லை என்றால் Bios என்று சொல்லக்கூடிய சார்பு நிலை வந்துவிடும். நம்ம உடம்பு, நம்ம உடம்போட சேர்ந்து பிறந்த சித்தப்பா, சித்தாப்பாவோட பையன் என்று இந்த உடம்போட சார்பு நிலைகள் வந்து போகும். நீங்கள் உடம்புக்கு பிரதானம் கொடுத்து இருந்தீர்கள் என்றால்.
மனம் உடம்போட சாரவில்லை பிரிந்து நிற்குது என்று வைத்துக் கொள்ளுங்கள். நியாயம் என்றால் நியாயம் என்று தோன்றும். இதற்கு உதாரணம்.
எமனைத் தெரியுமா? தர்பாரில் இருக்கிறார் எமன். அப்போது ஒவ்வொரு ஜீவனாகப் பிடித்து நிறுத்துகிறார்கள். அதில் ஒரு பெண்ணும் இருக்குது, ஒரு குழந்தையும் இருக்குது. ஐயோ பாவம் என்று எமன் நினைக்கலாமா? அதெல்லாம் நினைக்கக் கூடாது. நியாயம் என்றால் நியாயம்தான். இந்த உடலைப் பற்றிய நினைவு இருந்தால்தான் அந்த சார்பு வரும். உடலைப் பற்றிய நினைவு அந்த நேரத்தில் வரக் கூடாது. அதற்காக என்ன பண்ணினார்கள் தெரியுமா?
எமனுடைய உச்சந்தலைக்கு மேலே ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஒரு வாள், கூர்மையான வாளைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். எதில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள் என்றால் கயிறிலோ, இல்லைத் தாம்புக் கயிறிலோ அல்ல, ஒரு மயிரில். ஏன் மயிரில் கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள் என்றால், எமன் எப்பொழுதாவது நீதி தவறினால் சர்ரென்று அறுத்துக் கொண்டு கத்தி தலியில் பாய்ந்து விடும். குடல் எல்லாம் பொத்துக் கொண்டு கீழே விழுந்து விடுவான். அப்படி ஒரு சிஸ்டம் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். இது கதை. கருத்து மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த கத்திக்கு பயந்து கொண்டு நியாயத்தை எடுத்துச் சொல்வான். எமனுடைய நினைவு எங்கே இருக்கும்? கத்தியிலே இருக்கும். பழக்க வழக்கத்திலும் இதைக் கொண்டு வந்தார்கள்.
கரகம் ஆடுகிறார்களே, அவர்களுக்கு கரகம் ஆடுகின்ற போது மனம் எங்கே இருக்கும்? கரகத்திலேதான் இருக்கும். கரகம் எங்கே இருக்கும். உச்சிக்கு மேலே ஒரு முழ உயரத்தில். இன்னும் விட்டுப் போன பழக்க வழக்கங்களைச் சொல்கிறேன்.
கிராமத்தில் பெண்கள் நல்ல தண்ணீர் எடுப்பதற்காக தொலைதூரம் செல்வார்கள். அங்கே தான் நல்ல தண்ணீர் கிடைக்கும். எத்தனை நடை நடக்கிறது என்று இடுப்பில் ஒரு குடம், இடுப்புக் குடத்துக்கு மேலே ஒரு சொம்பு, கையில் ஒரு சொம்பு, தலையில் ஒரு பானை. இந்தப் பெண்ணுடைய மனம் எங்கே இருக்கும்? கையில் இருக்கும் சொம்பிலா அல்லது இடுப்பில் இருக்கும் குடத்திலா அல்லது தலையில் இருக்கும் பானையிலா? தலையில் இருக்கும் பானையில்தான். ஏன்? கொஞ்சம் பேலன்ஸ் தவறிப் போச்சுன்னா என்ன ஆகும்? அதைவிட மோசமான ஒன்று தலையில் இருக்கும். பானைத் தண்ணீர் தழும்பி தழும்பி உடலில் ஊத்தும். ஆகவே தழும்பக் கூடாது என்பதற்காக ரொம்ப ஜாக்கிரதையாக கழுத்தை வைத்திருப்பார்கள்.
ஆகவே இது ஒன்றும் புதிது இல்லை. வேதாத்திரி மகரிஷி அனுமானமாக செய்தது. Artificial இல்லை. இயற்கையான ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறார்கள். ஆகவே உச்சிக்கு மேலே ஒரு முழ உயரத்தை நினைப்போம். மனம் உடலிலிருந்து பிய்த்துக் கொள்ளும். அப்புறம் அடுத்த Step கொடுத்திடுவோம் மனதுக்கு.
இன்னொரு உண்மை என்னவென்றால், மனம் உடம்போட ஒட்டிக்கும் என்று சொன்னோம் அல்லவா, இன்ப துன்பங்களை நீண்ட காலம் உடலிலே இருந்து அனுபவித்தா, இந்த உலகத்தோடும் மனம் ஒட்டிக் கொள்ளும். உலகம் என்றால் மனதுக்கு ரொம்ப பிடிக்கும்.
நீங்களே சொல்லுங்கள் – உங்களுக்கு பூலோகம் பிடிக்குமா அல்லது சனிலோக பிடிக்குமா? ஆ, நம்ம பூமி. பூமி தான் நமக்கு முக்கியமான கிரகம். ஆகவே இந்தப் பூலோகத்தில் இருந்து எவ்வளவு காலமாக இன்ப துன்பங்களை துய்த்து வந்ததால் தந்திரம் பண்ண வேண்டும்.
பூலோகம் அதை விட்டு வெளியே போக வேண்டும். நான் ஒன்று சொல்கிறேன். அது பூலோகமா இல்லை இல்லை வேறு லோகமா, சொல்லுங்கள். பூலோகமா வேறு லோகமா? பூலோகம்தான். ஏனென்றால் அது பூலோகத்தை விட்டு வெளியே போவதே இல்லையே. இரண்டு லட்சத்து முப்பதாயிரம் மைல் என்ற எல்லை தாண்டாது.
நாம் இரண்டு பேரும் ஒன்றாகவே இருப்போம். Shaken பண்ற தூரம். உன்னைச் சுத்தி சுத்தி நான் வர்றேன். நீ எங்கே போனாலும் நான் உன் பின்னாலேயே வருகிறேன். பூமியைச் சுத்தி சந்திரன் வருவதை Graphics –ல் போட்டுப் பாருங்கள். அதாவது சந்திரன் கொஞ்ச தூரம் பூமிக்கு முன்னே போகும். கொஞ்ச தூரம் பின்னே போகும். பூமி சூரியனைச் சுற்றுகிறது அல்லவா. அது கூடவே போக வேண்டும். அதாவது கொஞ்ச தூரம் முன்னே போகும், கொஞ்ச தூரம் பின்னே போகும். இப்படியாக ஜாங்கிரி சுத்துவது போல இருக்கும்.