KG Sami1937 — 2006

ஜீவ காந்தப் பெருக்கம்

Signed KG Sami

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு

என்றார் வள்ளுவர்.

ஊர்ப் பொது கிணற்றில் அல்லது குளத்தில் நீர் நிறைந்திருந்தால் அது எவ்வாறு ஊர் மக்களுக்குப் பயன்படுமோ அவ்வாறு நல்ல அறிவாளிகளிடத்தில் ‘திரு’ இருந்தால் உலகத்துக்குப் பயனாகும் என்று சொன்னார்.

’திரு’ என்றால் என்ன? ‘திரு’ என்றால் ‘அருள்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே உலகப் பயன்பாட்டுக்காக நாம் கருத்துக்களையும் அறிவுகளையும் சேர்த்துக் கொள்கிறோம். சேகரித்துக் கொள்கிறோம்.

நமது மனவளக்கலை, அதனுடைய சிறப்பு பல. அதிலே ஒன்று ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி என்று நமது அருள் தந்தை அவர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். ‘ஜீவகாந்தம்’ என்பதே நமது அருள் தந்தை அவர்கள் வைத்த பெயர்தான். அதற்கு முன் ஜீவனும் உண்டு. காந்தமும் உண்டு. ‘Animal Magnetism’ என்று சொல்வார்கள். அதன் இருப்பு, உபயோகம் முதலியன தெளிவாக இல்லை.

காந்தம் என்பதைப் பற்றி நாம் தான் விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். காந்தம் என்ற சொல்லுக்கு ‘இழுப்பது’ என்று அர்த்தம். கவர்ச்சி உடையது. ‘சூரிய காந்தி’ காந்தம் என்றால் இழுப்பது, இழுக்கபடுவது, கொள்ளல், தள்ளல் என்ற இரண்டும் சேர்ந்தால் காந்தம் என்று நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். அந்தக் காந்தம் நமது உடலிலே இருக்கிறது. உலகிலே இருக்கிறது. பிரபஞ்ச முழுவது இருக்கும் பொழுது அதற்கு வான் காந்தம் என்று பெயர். நமது உடல் வரையில் இருக்கும் பொழுது அதற்கு ‘ஜீவகாந்தம்’ என்று பெயர்.

பிரபஞ்ச முழுவதும் விண்துகள்கள் நிரம்பி இருக்கிறது. உதிரியாகவோ, கூட்டமாகவோ இருக்கிறது. விண்துகள்கள் உதிரியாக இருக்கும் பொழுது அவை சுழல்கின்றன. அதாவது தற்சுழல் உடையவை. அவ்வாறு சுழலும் போது அந்த விண்துகளைச் சுற்றிலும் என்ன இருக்குமோ அதில் உரசும். உரசுவதால் சாதாரணமாக உலகத்தில் இரண்டும் பொருட்கள் உரசிக் கொண்டால் சத்தம் வரும். இடி, பிடி வரும் பாருங்கள். அந்த மாதிரி விண்துகள்களைச் சுற்றிலும் இருக்கக்கூடிய சுத்தவெளியிலே உரசும் பொழுது பிறப்பதுதான் காந்தம். விண்துகள்கள் ஓயாமல், ஒழியாமல் காந்த உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரி விண்துகள்கள் எத்தனை இருக்கின்றன. எண்ண முடியாது.

பிரபஞ்சம் ரொம்பப் பெரியது. 2000 கோடி ஒளியாண்டு diameter பிரபஞ்சம் ரொம்ப விரிவானது. அதில் தூசு என்றெல்லாம் சொல்ல முடியாது. அதைவிட மிகச் சிறியதாக இருக்கக் கூடிய விண்துகள்கள் மில்லியன், பில்லியன், டிரில்லியன், குவாண்ட், டில்லியன், செப்டில்யன், அக்டோவில்யன், நோவில்லியன்.

அதாவது ஆயிரம் என்றால் அதற்கு பக்கத்தில் 3 சைபர் போட வேண்டும். மில்லியன் என்றால் அதற்கு பக்கத்தில் இன்னும் 3 சைபர் அதாவது 1க்கு பக்கத்தில் 6 சைபர் போட வேண்டும். பில்லியனுக்கு 1க்கு பக்கத்தில் 9 சைபர் போட வேண்டும். இப்படியாக 1க்கு பக்கத்தில் 27 சைபர் போடும் வரை எண்ணிக்கையைக் கண்டுபிடித்து விட்டான். ஆனால் நாம் ஒன்றுக்குப் பக்கத்தில் ஏழு சைபர் போட்டு The End என்று அத்தோடு நிறுத்திவிட்டோம். அதுதான் கோடி. கோடி என்றால் The End என்று அர்த்தம்.

இங்கிலீஸ்காரனோ, ஜெர்மன்காரனோ எவ்வளவு பெரிய நம்பர் கண்டுபிடித்தாலும் அந்த நம்பரைக் கொண்டு விண்துகள்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. அவ்வளவு விண்துகள்களும் ஓயாமல், ஒழியாமல் சுழன்று கொண்டே இருக்கும். இந்தியாக்காரனும், சைனாக்காரனும் ஒரே காரியம் பண்ணிக் கொண்டே இருக்கிறான். தெரியுமா உங்களுக்கு. ‘பிரஜோத்பத்தி’ குழந்தை உற்பத்தி பண்ணிக் கொண்டே இருப்பது. அந்த மாதிரி விண்துகள்கள் காந்தத்தை உற்பத்தி பண்ணி தள்ளிக் கொண்டே இருக்கிறது. ஆகவே காந்தம் இறுக்கமாக, நெருக்கமாக, அடர்த்தியாக வானத்தில் இருக்கிறது. அதுதான் வான் காந்தம்.

அந்த வான்காந்தம் நமது Generator-ல் புகுந்து மின்சாரமாக மாறுகிறது. அது சைக்கிள் காயலில் உள்ள காந்தமாக இருந்தாலும் சரி. சைக்கிள் காயலில் ஒரு காந்தம் இருக்கிறது. தெரியுமா உங்களுக்கு. வேறு எந்த Generator ஆக இருந்தாலும் சரி காந்தத்தை மின்சாரமாக மாற்றுகிற வித்தையைத் தான் Generator செய்கிறது.

எவ்வளவு காந்தம் அதில் செறிந்திருக்கும். தீர்ந்துவிடுமே. அதைக் கொண்டு வந்து கொடுக்கிறோமோ Recharge பண்ணுவதற்கு Generator-ல் காந்தம் தீர்ந்து போய்விட்டது. கொஞ்சம் Recharge பண்ணிக் கொடுங்க என்றா சொல்கிறார்கள். அது தினமும் இழக்கின்ற காந்தத்தை உடனுக்குடன் Recharge பண்ணிக் கொள்கிறது. எங்கிருந்து வான் காந்தத்திலிருந்து.

இதையெல்லாம் செய்தியாகக் கேட்டுக் கொள்கிறீர்கள். வியக்க மாட்டேன்கிறீர்கள். அதிகமாக சந்தோஷப்படுகிற மாதிரியான சமாச்சாரம். இப்போ துக்கப்படுகின்ற மாதிரியான சமாச்சாரம் ஒன்று சொல்லட்டுமா?

பங்குக்கு பெட்ரோல் கிடைக்கிறதா? எல்லாம் ஒரு நாற்பது வருடத்துக்கு தான். அப்புறம் எல்லாம் Dry ஆகிவிடும். பயமாக இருக்கிறதா? அப்புறம் சமையலுக்கு என்ன பண்ணுவது? Gas வராது என்கிறார்களே Gas, Petrol வராது என்கிற நிலையில் மனிதர்களாகிய நாம் என்ன செய்யலாம். எல்லோரும் சேர்ந்து கும்பலாய் கூடி ‘மாரத்தான் ஓட்டம்’ ஓடுகிறார்களே அது மாதிரி நாமும் ஓடி கடலில் குதித்துவிட வேண்டியது தான். வேறு வழி?

மின்சார அடுப்பு வந்துவிடும். கவலைப்படாதீர்கள். பொருளாதார ரீதியாக சரியாக இல்லை. விரைவில் வந்துவிடும் சிலிண்டர் கிடைக்கவே இல்லை. ஒரே ஒரு சிலிண்டர் கடையில் இருக்கிறது தருகிறேன் என்கிறார்கள். நீங்கள் முந்நூறு ரூபாய்க்கு வாங்குவீர்களா? ஐந்நூறு ரூபாய்க்கு வாங்குவீர்களா? ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாவது வாங்கிக் கொள்வீர்கள். என்ன விலை கொடுத்தாலும் வாங்கி விடுவீர்கள். மின்சார அடுப்பு சகஜமாக வீட்டிலும் வந்துவிடும். முதுகு சொரிந்து விடுவதற்குக் கூட மின்சாரக் கருவி வந்துவிடும்.

இவ்வாறு பல வழிகளில் வான்காந்தம் நமக்கு உபயோகமாக இருக்கிறது. ஜீவகாந்தம் உபயோகமாக இருக்கிறதா? ஆமாம். ஜீவகாந்தமும் உபயோகமாக இருக்கிறது. கார் ஓட்டிக் கொண்டு வருகிறது ஜீவகாந்தம் கொண்டு வந்து ஆழியாரில் இறக்கி விட்டுவிட்டுப் போகிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்கிறீர்களா? காக்கிச் சட்டை போட்டுக் கொண்டு ஒருவர் கார் ஓட்டிக் கொண்டு வந்தார் அல்லவா? அவர் கை, கால் ஆட்டி, ஓட்டி ஏதேதோ பண்ணிக் கொண்டு வந்தாரே அவர் உடலில் ஜீவகாந்தம் இல்லையென்றால் இந்த மாதிரியெல்லாம் அவரால் செய்ய முடியுமா?

ஜீவகாந்தத்துக்கு பத்துவிதமான உபயோகங்கள் இருக்கிறது. அதில் ஒன்று ‘உடல் உழைப்பு’. அந்த டிரைவர் உடலில் ‘ஜீவகாந்தம்’ இருந்தால்தால் இங்கே ஆழியார் வரை கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். அப்போ ஜீவகாந்தம் எவ்வளவு உதவியாக இருக்கிறது பாருங்கள் நமக்கு. ஒன்று மட்டும் இல்லை. இன்னும் எவ்வளவோ உதவிகள் ஜீவகாந்தம் நமக்குப் பண்ணிக் கொண்டே இருக்கிறது. மற்றவர்களிடத்தில் இருந்தும் ஜீவகாந்தம் வரும். ஜீவகாந்தம் தான் அன்பாக மாறுகிறது. அனுசரணையாக மாறுகிறது. ஆதரவாக மாறுகிறது. ஜீவகாந்தம் தான் வாத்தியாருக்கு அறிவாக மாறுகிறது.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 41

Certificate வரும். இப்பொழுதே உங்களை பிரம்ம நிலைக்கு உயர்த்தி விட்டேன். உங்களை பிரம்ம ஞானி என்று அறிவித்து விட்டேன். கூன் விழுந்து உட்கார்ந்து…

Kannimuthu

அறம் + தவம் = அருள்

அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது, அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன?…

KG Sami

தவம் – 42

இயற்கை உட்பாதத்தை அனுப்பி நமக்கெல்லாம் தண்டனை கொடுத்து கடமையைச் செய்யும் விதமாக இறைவன் வருகிறான். இந்த மாதிரி வேலையை அவனுக்கு வைக்கக் கூடாது. இந்த…

KG Sami

எல்லோரிடமும் இணக்கம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…

KG Sami

தவம் – 25

நமது அருள் தந்தையவர்கள் தமது பயணங்களில் சில சமயம் மேற்கால பயணம் போவார். சில சமயம் கிழக்கால பயணம் போவார். அப்படி கிழக்கால பயணம் போகும்போது நம்ம ஊர்…

Granthaalayam

மாயையும் ஞானமும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம்.…