KG Sami1937 — 2006

தவம் – 30

Signed KG Sami

எண்ணெய் எங்க வீட்டில் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. பெரும்பாலும் வீட்டில் எள் எண்ணெய் தான் இருக்கும். அதை நல்லெண்ணெய் என்று சொல்வார்கள். அந்த எண்ணெய் நாக்குக்கும், உடலுக்கும் வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். உடலுக்குக் கூட அவ்வளவு உகந்ததாக இருக்காது. விளக்குப் பயிற்சிக்கு அந்த எண்ணெய் ஆகாது.

ஏன் ஆகாது. மகரிஷிகளைக் கேட்டு பார்த்தேன். நல்லெண்ணெயிலிருந்து வரக் கூடிய Vibration ஆன்மீகத்துக்கு ஆகாது. உடலுக்கு நல்லதோ அல்லது கெட்டதோ அது வேறு கேள்வி. ஆனால் ஆன்மீகத்துக்கு நல்லெண்ணெய் ஆகாது. அதற்கு மேல் அவர்கள் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு எண்ணெய் வைத்திருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் நல்லெண்ணெயை எந்தத் தெய்வத்தோடு இணைத்திருக்கிறார்கள். சனி பகவான். அப்போ நல்லெண்ணெய் ஊற்றி ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சியாகிற விளக்குப் பயிற்சி செய்தால் சனீஸ்வரன் உள்ளே வந்துவிடுவாரோ? சனீஸ்வரனைக் கண்டால் நாம் மிரளக் கூடாது. அது தனி. அது ஜோதிட சாஸ்திரம். சனியைப் போல நல்லவன் கிடையாது. அவன் ஏன் நம்மைத் துன்பப்படுத்துகிறான்? நம்மிடம் அவ்வளவு Stock இருக்கிறது.

அந்தக் காலத்தில் ஈயம் பூசுகிறவன் என்று ஒருவன் வருவான். பித்தளைப் பாத்திரங்கள் தற்காலத்தில் இல்லாததால் அவன் வருவதில்லை. அவன் தெருவெல்லாம் போய் பித்தளைப் பாத்திரங்களை வாங்கிக் கொண்டு சேர்த்து வைத்துக் கொண்டு ஈயம் பூசுவான்.

பாத்திரத்தை நன்றாக சுத்தம் பண்ணுவார்கள் முதலில். பாத்திரத்தில் அழுக்கு படிந்திருக்கும். புளி, இலை, செங்கல் பொடியையும் சேர்த்து இடித்து பொடித்து தென்னை மட்டை, பனை மட்டை போன்றவற்றை தேய்க்கிற பிரஷ்ஷாக உபயோகித்துக் கொண்டு தேய்ப்பார்கள். இரண்டு காலுக்கு மத்தியில் வைத்து அதை தேய்ப்பார்கள். ‘கருக்கு கருக்கு’ என்று சத்தம் கேட்கும்.

எனக்கு கற்பனை சக்தி அதிகம். அந்த சத்தம் ‘அய்யோ வலிக்குதே வலிக்குதே’ என்று கத்துவது போல இருக்கும். பின் இந்த மாதிரி தேய்த்தால் எப்படி இருக்கும்? ஏன் தேய்த்தான். அதில் அவ்வளவு கறை இருக்கிறது. அவன் மேல் கோபித்துக் கொள்ளலாமா? இதுபோல சுத்தம் பண்ணவில்லை என்றால் ஈயம் ஏறாது.

அப்படி என்றால் சனீஸ்வரன் உங்களைத் துன்புறுத்துகிறான் என்றால் உங்களிடம் அவ்வளவு கறை இருக்கிறது. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரை மட்டும் ஏன் விட்டுவிட்டான். அவனிடம் பாவப் பதிவு குறைவாக இருக்கிறது. அதனால் சனீஸ்வரனை கெட்டவனாக நினைக்காதீர்கள்.

ஆகவே நமது உடலிலே இருக்ககூடிய தூய்மைக்குத் தக்கவாறு, நமது ஆன்மாவிலே இருக்கக்கூடிய தூய்மைக்குத் தக்கவாறு வான்காந்தம் உள்ளே வரும். அதனால் தான் தவம் செய்த பிற்பாடு ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி செய்ய வேண்டும். தவம் செய்கிறவர்கள் ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி செய்ய வேண்டும். தவம் ஒரு நாள் செய்யவில்லை என்றால் ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி செய்யக் கூடாது என்றில்லை. நேற்று தவம் செய்தீர்கள் அல்லவா? உங்களுக்கு தூய்மை வந்திருக்கும் அல்லவா தவத்தின் காரணமாக.

விளக்கில் பசு நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். திரி ஒரு மல்லிகை மொட்டு அளவுக்குச் சிறியதாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கை நாம் உட்கார்ந்திருக்கக் கூடிய level-ல் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் தரையில் உட்கார்ந்திருந்தோம் என்றால் விளக்கும் தரையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் நாம் நாற்காலியில் உட்கார்ந்திருந்தோம் என்றால் விளக்கையும் ஒரு நாற்காலியில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் உட்கார்ந்திருக்கக்கூடிய லெவலுக்கு, விளக்கு இருக்கக்கூடிய லெவலுக்கும் உயர்வு, தாழ்வு இருக்கக்கூடாது.

ஒரு  மூன்றடி முதல் ஐந்தடி வரை நாம் உட்கார்ந்திருக்கக்கூடிய இடத்திலிருந்து விளக்கு தள்ளி இருக்க வேண்டும். அருகே இருந்தால் ஜீவகாந்தம் நிறைய பெருகும் என்று நினைக்கக் கூடாது. அருகே இருந்தால் கண்ணில் எரிச்சல் வருகிறது. எனவே விளக்கை எட்டத்தில் வைத்துக் கொள்வோம் என்று நினைக்கக் கூடாது. மூன்றில் இருந்து ஐந்தடி தூரம் வரை விளக்கு இருக்க வேண்டும் என்பது தான் சரியான அளவு.

எரிகின்ற தீபச்சுடரை ஒரு நிமிடம் பார்க்க வேண்டும். பின்னர் கண் புதைக்க வேண்டும். எவ்வளவு நேரம் விளக்கைப் பார்க்கிறோமோ அதை அலுப்பு ஏற்படாவிட்டாலும் நமக்கு இரண்டு கைகள் இருக்கிறது என்று அப்போது தான் தெரிய வரும். தோள்பட்டை தான் கைகளைத் தாங்கிக் கொண்டிருப்பது தெரியும். கை கனமாக இருக்கும். தோள்பட்டை வலிக்கும் என்று நேரத்தை குறைத்து விடக் கூடாது. வலி தாங்க முடியவில்லை என்று நினைக்கிறீர்களா.

மகரிஷி ஒரு வழி சொல்கிறார்கள். ஒரு தலையணையை எடுத்து மடியில் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இல்லையெனில் உங்கள் முழங்கைகளுக்கு முட்டுக் கொடுத்துக் கொள்ளுங்கள். Adjustment சரியாக இருக்க வேண்டும். இந்த முயற்சியில் தலை குனிந்து விடக் கூடாது. போதுமான அளவு தலையணை உயரம் இல்லை என்றால் தலை குனிந்துவிடும். தலை குனிந்து விட்டால் கழுத்துக்கு ஒரு பொருந்தா உணர்வு ஏற்பட்டு ஜீவகாந்தம் அப்படியே செலவாக ஆரம்பித்து விடும். வலியாக மாறி செலவாவது ஜீவகாந்தம் தானே எனவே வலி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Keep reading

More from the archive

KG Sami

அருள்நிதியர் திறனூக்கப் பயிற்சி – 1

இறைநிலை தெய்வம் உண்டு. அதற்கு உருவம் இல்லை என்ற தெளிவிலே அறநெறியைப் பற்றி வாழ முடிகிறது. முடியும் என்று நமது அருட்தந்தை அவர்கள் கொடுத்துள்ள…

KG Sami

தவம் – 2

முற்காலத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த முறை பிராணாயாமம். பிராணன் என்றால் இரண்டு பொருள். ஒன்று காற்று. இரண்டு உயிர். (தமிழிலும் அப்படி ஒரு வார்த்தை…

KG Sami

தவம் – 25

நமது அருள் தந்தையவர்கள் தமது பயணங்களில் சில சமயம் மேற்கால பயணம் போவார். சில சமயம் கிழக்கால பயணம் போவார். அப்படி கிழக்கால பயணம் போகும்போது நம்ம ஊர்…

Granthaalayam

உயிர்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை ஆகாசம்…

Kannimuthu

வள்ளார் வழி

காற்றாலே, புவியாலே: சுகன்மத னாலே”கனலாலே, புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலெ பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே.வேற்றாலே…

KG Sami

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை…