எனக்கு 100 வயது ஆகி விடும். இந்த ஆசை சரியா? தப்பா? என்னால் Judge ஆக பணியாற்ற முடியாது என்று தெரிந்தும் நான் Judge ஆக இருப்பது எவ்வளவு உயர்வு தெரியுமா? அதில் உங்களுக்கென்ன இடைஞ்சல், நஷ்டம் என்று கணக்குப் போடுவது தவறு. ஆசை வேண்டாத ஆசை, முரணான ஆசை என்று சொன்னோம் அல்லவா. அதற்கு மகரிஷி அவர்கள் சொன்ன உதாரணம்.
கேள்வி:
ஆன்மீகம் தொடர்பாக பாரத நாட்டுக்கு தனிச் சிறப்பும், பெருமையும் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல சித்தர்கள் வாழ்ந்து மக்களுக்கு நல்ல பல கருத்துக்களைக் கொடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் ஒரு புண்ணிய நாடாக இருந்து வருகிறது. அந்த வகையில் நமது அருள் தந்தை அவர்கள்தோன்றி முற்காலத்தில் கடினமுறையாக் இருந்து வந்த ‘குண்டலினி யோகப் பயிற்சியை’ எளிமைப்படுத்தி மக்களிடையே பரப்பி வருவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. மக்கள் நேரிடையாக வாழ்க்கையில் கற்று கடை பிடிக்கக் கூடிய சூழ்நிலைகள் இருக்கிறதா?
பதில்:
மனதுக்கு பயிற்சி கொடுக்காமல் மனதை வைத்துக் கொண்டு வாழ முடியாது. ஏனென்றால் எந்தெந்த கருவிகளை நாம் கையாள்கிறோமோ அந்தக் கருவிகளைக் கையாளுவதற்கு ஒரு பயிற்சி வேண்டும். பேனா பிடிப்பதற்குக் கூட ஒரு பயிற்சி எடுத்தோம். மனதைப் பிடிப்பதற்கு ஒரு பயிற்சி எடுத்தோமோ? என்ன?
அந்தப் பயிற்சியைத் தான் ‘யோகம்’ என்று நம் நாட்டில் உருவாக்கி மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். யோகம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கலத்தல், ஒன்று கலத்தல் என்று பொருள். எதுவும், எதுவும் கலத்தல்.
வெளியேறி பிரிந்து செலக் கூடிய மனமும், அந்த மனதுக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய உயிரும் ஒன்றுபட வேண்டும். தனித்தனியாக இருப்பதாகவும், ஒன்றைவிட்டு ஒன்று தனியாக இருக்கும் நிலை மாற்றி மனதைக் கொண்டு வந்து உயிரிலே செலுத்த வேண்டும். அது தான் தவம் என்று வள்ளுவர் சொல்கிறார்.
‘தன்னுயிர் தான் அறப்பெற்றானை ஏனைய
மண்ணுயிர் எல்லாம் தொழும்’.
என்று ‘தவம்’ என்ற அதிகாரத்தில் வைத்து உயிரை அறிந்தால் தான் தவம் என்கிறார்.
நாம் மனதை எதையாவது நினைத்து வெளியே அனுப்பிக் கொண்டு இருக்கிறோம். அதை தலைகீழாக ‘reverse process’ என்ற முறையில் வெளியே பிரிந்து செல்லக்கூடிய மனதை எடுத்து உயிரிலே கொண்டு வந்து வைப்பதுதான் தவம்.
இந்த மாதிரி மனதைக் கொண்டு உயிரிலே திருப்பும் போது உயிர் அறியப்படும். “உயிரை அறிந்தால் தான் ஆன்மீகம்” என்பதுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம். இந்த உயிரை அறிந்தால் தான் ஆன்மீகம்” என்பதுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம். இந்த உயிரை அறிந்து கொள்வதற்கு முற்காலத்தில் நம்மிடத்திலேயே உயிர் இருந்தும் கூட அவரவர்களும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
தன்னிடத்திலேயே இருக்கக் கூடிய உயிரைத் தானே அறிந்து கொள்வதற்காக ஆரம்ப காலங்களில் பல விதமான முயற்சிகள் எடுத்தார்கள். தலைகீழாக நின்று பார்த்தார்கள். மேலே வர வேண்டும் அது. உடல் முழுவது பரவி இருந்தாலும், மூலாதாரத்தில் உயிர் அதிகமாக தேங்கி இருக்கிறது. அதை முதுகந்தண்டு வழியாக ஆக்கினைச் சக்கரத்தில் வைத்தால் தான் உயிரை கவனிக்க முடியும்.
அவ்வாறு கொண்டு வருவதற்கு முற்காலத்தவர்கள் எடுத்த பிரயத்தனங்கள் பல. அதில் கடுமையானது, கொடுமையானது கூட உண்டு. ஒன்று நெற்றியில் ஏதோ ஒரு முள்ளால் கீறிக் கொள்வது என்பது உண்டு.