KG Sami1937 — 2006

தவம் – 8

Signed KG Sami

(3) தலையில் பேன் ஊறுவது போல் இருக்கும், எவ்வளவு நேரம் கிண்டிப் பார்த்தாலும் ஒரு பேனும் அகப்படாது. இந்த நிகழ்ச்சி எதைக் குறிக்கிறது? ஒட்டு மொத்தமாக கபாடங்கள் விழிப்புக்கு வராமல் ஒவ்வொன்றாகத்தானே இயக்கத்துக்கு வரவேண்டும். அவை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தான் ஏற்படும். எங்கோ ஒருவருக்கு வரிசையாகவும், தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும் ஏற்படுவதுண்டு. இதுவே மூளைக்குள் ஏற்படுகின்ற அனுபவம்.

துரியம் செய்யும் பொழுது உச்சந்தலையில் கைவைத்து வலச்சுழலாக சுழற்றுவார்கள். அதனால் தவம் செய்யும் பொழுது சுழலும் கூட இடமிருந்து வலமாகச் சுழலுவதாகத் தோன்றும். இது அநேகமாக எல்லோருக்கும் தோன்றக் கூடிய அனுபவம்.

உடற்பயிற்சியில் வலச்சுழல், இடச்சுழல் என்று இருப்பது போல் துரிய தீட்சையிலும் இருப்பதாக நினைத்துக் கொண்டு எங்காவது ஒரு ஆசிரியர் கடைசி சுற்றை வலமிருந்து இடமாக (எதிர்த்திசையில்) சுற்றி விட்டு விடுவார்கள். அதுவே உறுதியாகி அந்தச் சாதகருக்கு இடச்சுழல் தொந்தரவு ஏற்படும். பாதகம் எதுவும் ஏற்பட்டு விடும் என்று பயப்படத் தேவை இல்லை.

துரியம் கொடுக்கும் ஆசிரியர் தனது ஆற்றலை தனது இரண்டு கண்களாலும் சீடனுடைய வலக் கண்ணில் பாய்ச்சுவார். (சீடன் தனது இரண்டு கண்களைக் கொண்டு ஆசிரியரின் வலது கண்ணைப் பார்க்க வேண்டும். இதனால் ஆசிரியருடைய ஆற்றல் சாதகனுடைய மூளை முழுவதிலும் பாய்ந்து வலச் சுழலாகத் தானாகவே சுழல ஆரம்பித்து விடும்.) இதற்கு எதிர்ச் சுழற்றுவது இயற்கைக்கு முரணானது. உண்மை தெரியாத மூடத்தனம்.

இயல்பாகவே எல்லோருக்கும் தவம் செய்யாதவருக்கும் கூட ஆக்கினையிலிருந்து துரியத்துக்கு ஒரு காந்த ஓட்டம் இருந்து கொண்டு இருக்கும். இந்தக் காந்த ஓட்டத்தில் குளிர் காற்று பட்டால் சளி பிடிக்கும். சைனஸ் முதலிய தொந்தரவுகளும் வரலாம். இதைத் தவிர்ப்பதற்காகத் தான் சிலர் திருமண்ணைக் கொண்டு நாமம் இட்டுக் கொள்வார்கள்.

சாதாரணமாகவே எல்லோருக்கும் தவம் எடுக்காதவர்களுக்கும் கூட ஆக்கினையிலிருந்து உச்சிக்கு ஒரு காந்த ஓட்டம் இருக்கும். இதைப் பயன்படுத்தி இறைநிலை உணர்வைப் பெறுவதற்காக வைணவர்கள் ஆக்கினைச் சக்கரத்தில் இருந்து உச்சிக்கு ’திருச் சூரணத்தால்’ கோடு போட்டுக் கொள்வார்கள். அதன் பின் அந்த உணர்வு இடையறாத உள்ளுணர்வாக மாறி விடும். துரிய தவம் நன்கு வரும்.

துரிய தவம் கொஞ்சம் கூடுதலான நேரம் செய்வதால் நீண்ட காலமாகச் செய்து வருவதால் உலக மறதி ஏற்படும். இறை உணர்வு ஏற்படும். புலன் உணர்வுகள் தலை காட்டா. யாரோ நமது அறிவை ‘ஜிவ்வென்று’ பிடித்து இழுத்து இறைநிலையோடு இணைத்துக் கட்டி வைப்பது போல் தோன்றும். அந்த நிலையில் ‘மனோன்மணி’ மையம் (pineal gland). தானாகவே திறந்து கொண்டு விடுவதும் உண்டு. உடம்பு இருப்பதோ, உலகம் இருப்பதோ, உலகத்தாரோடு கொள்ளுகின்ற பல விதத் தொடர்புகள் இருப்பதோ மறந்து போய் விடும். ஆனந்த நிலை ஏற்படும். ‘ஆன்’ என்றால் மனிதன். ‘அந்தம்’ என்றால் தெய்வம். தெய்வமே மனிதனாக இருப்பது மனதுக்கு இயல்பாகவே பிடிபடும். இது துரியாதீத நிலைக்கு அஸ்திவாரம்.

இந்நிலையைத் தான் ‘சித்தி’ என்றார்கள். ‘இறைநிலை உணர்வு’ சித்தியாகி விட்டது. கைவலயமாகிவிட்டது என்று பொருள். இதையே ‘பரவசம்’ என்று சொல்வதுமுண்டு. அதாவது புலன்கள் வசமாக இருந்த மனதைக் கொண்டுபோய் இறைவனின் வசமாக கொடுத்து விட்டு இருப்பது. இந்த நிலையை எய்தியவர்களில் லாகிரி வஸ்துக்களில் கிடைக்கக் கூடிய மனமயக்க சுகத்தோடு இந்தப் பரவச நிலையை ஒத்திட்டுப் பார்த்து இரண்டும் ஒன்று போல் இருப்பதைக் கண்டு திகைப்பார்கள். இரண்டிலும் ‘உலக மறதி’ ஏற்படும். இரண்டிலும் ‘புலன் உணர்வு’ அறுபடும்.

ஆனால் முன்னதில் அறிவு மயங்கி மழுங்கிப் போய் விடும். தவநிலையில் அறிவு விழிப்பிலும், உயர்வை நாடியும் இருக்கும். இரண்டையும் பற்றி அறிவாளிகள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த யாரோ சில அசடர்கள் ‘பரவசம்’ வேண்டாமென்று மது மயக்கத்திற்கே போய் விட்டார்கள். இதைவிட மோசம் என்னவென்றால் கஞ்சா, அபின் போன்ற நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணி அறிவை மழுக்குகின்ற வஸ்துக்களை ஆன்மீக வஸ்துக்களாக ஆக்கி விட்டார்கள். சில துறவிகளும், சில மடங்களும் இதில் அகப்பட்டுக் கொண்டு தவித்துப் போய் இருக்கிறார்கள்.

லாகிரி வஸ்துக்களை மட்டுமே உட்கொள்வதுதான் ஆன்மீகம் என்ற ஒரு தவறான கருத்தும் ஏற்பட்டுள்ளது. மனவளக்கலையில் துரியம் என்பதை சீக்கிரமாக கொடுத்து விடுகிறோம். ஆனால் முற்காலங்களில் குண்டலினி யோகம் மடங்களிலும், ஆசிரமங்களிலும் இருந்த பொழுது அவ்வளவு சீக்கிரமாக கொடுத்துவிட மாட்டார்கள். அதற்கு காரணங்கள் உண்டு.

நன்கு நீண்ட காலம் துரிய தவம் செய்வதால் மனோசக்தி பெருகி இறைநிலை உணர்வு கூடி சித்தியாகி விட்டிருக்கக் கூடும். ஆனால் அறிவுக்கு மேம்பாடு வந்திருக்காது. குணநலம் வந்திருக்காது. அதனால் பெருகி இருக்கக் கூடிய மனோசக்தி உலகியல் இன்பங்களுக்குச் செல்விடக் கூடும். கோப, தாபங்களில் ஈடுபட்டு விபரீத விளைவுகளை அடையக் கூடும்.

துரிய தவம் செய்வதினால் மூளைக் கபாடங்கள் எல்லாம் திறக்கும். இயக்கத்திற்கு வரும் என்று பார்த்தோமல்லவரா ? குண்டலினி சக்தி மூளையின் உள்ளே பாய்ந்து சுழன்று (வலச் சுழலாக) வருவதால் மூளையில் உள்ள வேண்டாப் பதிவுகள் நீங்கும். தூய்மை ஏற்படும். இந்த ஆற்றல் பிராரப்த கர்மத்தைப் போக்குவதற்கு உதவுகிறது.

Keep reading

More from the archive

Puthiya Bharathi

ஆசான் நிகழ்த்திய அற்புத சாதனை

1976, ஜூன் மாதம், முன்பாதி. நமது ஆசான் அவர்கள் காரைக்காலில் 7 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி ஒன்றினை நடத்திக் கொடுத்து விட்டுக் கூடுவாஞ்சேரிப்…

Arulnithi Muthappan

தியாகச் செம்மல் வேதாத்திரி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதோ, எழுபத்தொன்றோ, சரியாக நினைவிலில்லை. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. கூடுவாஞ்சேரியில் மகரிஷிகளுடைய இல்லத்தின் எதிர்புறத்தில்…

Granthaalayam

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…

KG Sami

தவம் - 49

கடைசி வரைக்கும் சுழல் தெரியாது. அழுத்தம் அதிகமாகி நிலை கொண்டுவிடும். Concentration ஆகிவிடும்.உட்கார்ந்து கொடுப்பதா, நின்று கொண்டு கொடுப்பதா. உங்கள்…

Granthaalayam

விதி

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!விதி என்றால் என்ன? நம்ம நாடு…

KG Sami

தவம் - 32 – ஏ

அதனால் தான் நமக்கு ஜீவ காந்தப் பெருக்கம் ஏற்படுகிறது. இது ஒரு தந்திரமான டெக்னிக். கண்ணாடிப் பயிற்சியில் அதிகமாக ஜீவகாந்தம் ‘மளமள’ வென ஏறுகிறது.…