KG Sami1937 — 2006

தவம் – 22

Signed KG Sami

எப்படியோ பூமியை விட்டு விடுவது இல்லை என்ற நிலையில் சந்திரன் இருப்பதால் வளைத்துப் போட்டு அதுவரைக்கும் பூமி என்று சொல்லுங்கள்.

சந்திரன் வரைக்கும் பூமிதான். என்ன அப்புறப்படுத்தி விடலாம் என்று பார்க்கிறீர்களா நம்ப சந்திரனை. சந்திரன் வரை பூமிதான். ஆகவே சந்திரனை நினை மனமே. நினைத்துக் கொண்டேன். இப்போ எங்க இருக்கிறீங்க? சந்திரனிலா, இல்லை பூமியில் தான் இருக்கிறீர்கள். ஏன்? சந்திரனும் பூமியே.

ஆகவே சந்திரனை நினைக்க வச்சாச்சு. இப்போ நான் எங்கே இருக்கிறேன்? பூமியில் இருக்கிறேன் இல்லையில்லை சந்திரனில் இருக்கிறேன். விலகியாச்சு. இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் மைல் தாண்டியாச்சு. எனவே சந்திரனில் தான் இருக்கிறேன். சந்திரனை மனம் நினப்பதால் உலகத்தின் பேரில் மனதுக்கு இருந்த பற்று நீங்கும்.

அப்படின்னா நீங்க Free. போங்க மேலே. நான் தூக்கிக் கொண்டு விட்டு விடுகிறேன் என்று மகரிஷிகள் சொல்கிறார்கள். இன்னும் மேலே போங்க. என் கூடவே வாங்க. நான் மேலே போறேன். என் கூடவே வாங்க, என்னோடு இணைத்துக் கொள்ளுங்கள் உங்கள் மனதை.

மேலே போனால் போனால் நட்சத்திரங்கள் எல்லாம் தலையில் இடிக்குது. நட்சத்திரங்களை எல்லாம் தாண்டிப் போங்கள். ஊடுறுவிப் போங்கள். போங்க, போங்க அப்புறம் என்ன? நட்சத்திரங்களையே காணோம். நட்சத்திர மண்டலம் (Universe) எல்லாம் தாண்டிப் போயாச்சு என்று நீங்க பாட்டுக்கு அங்கேயே நின்று விடாதீர்கள். பக்கத்திலே பக்கத்திலே இருக்கும் அந்த Universe நீங்க பாட்டுக்கு போய்க் கொண்டே இருங்கள். திரும்பிப் பார்த்தால் காணோம். ஏன்? அவ்வளவு தொலைவு அது (Universe) போய் விட்டதால். 2000 கோடி ஒளியாண்டு diameter உள்ள Universe-ஐக் காணோம். அவ்வளவு தூரம் நாம் விலகி வந்து விட்டோம் என்று ஒரு system நமது அருள் தந்தையவர்கள் தமது உய்த்துணர்வின் காரணமாக, அதாவது துரியமே செய்து கொண்டிருங்கள். அதுவே துரியாதீதமாக மாறிப் போய்விடும் என்று சொன்னார்கள் பாருங்கள். அது நமது மகரிஷிகளுக்கு வந்து கொண்டிருந்தது. இல்லையென்றால் இவ்வளவு அறிவுக் கூர்மை வந்து அனுமானங்கள் செய்து அனுமானங்கள் நிஜமாகக் கூடிய அளவுக்கு வந்திருக்கிறது.

நண்பரோட சிஷ்யர் என்ற முறையில் உரிமையோடு கிண்டல் பண்ணுகிறார். ஆ, துரியாதீத தீட்சை வாங்கி விட்டீர்களா? உச்சிக்கு மேலே ஒரு முழ உயரத்தில் கொண்டு வந்து நிறுத்துவாரே. ஹாஹ்… ஹாஹ்ஹா என்று சிரிப்பார். என்ன கேவலமான கற்பனைகளைப் பண்ணிக் கொண்டு என் நண்பர் இந்த “வேதாத்திரி மகரிஷி” ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிகிறார். நல்ல தமாசாக இருக்குது. ‘உச்சிக்கு மேலே ஒரு முழ உயரத்தில் கொண்டு போய் நிறுத்துகிறாராம்’ என்று நையாண்டி செய்கிறார்.

அன்பர்களே, விலை மதிக்க முடியாத சொத்து நமக்கு கிடைத்திருக்கிறது. அது ‘துரியாதீத தவம்’ நாம் கொடுக்கக் கூடிய தொகை அற்பம் இருபத்தைந்து ரூபாய். ‘அருட்செல்வர்’ என்ற பட்டம் உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பட்டத்துக்கு என்ன விலை?

ஒரு சேதி தெரியுமா உங்களுக்கு? 1968லிருந்து அதே இருபத்தைந்து ரூபாய்தான். அப்படியே இருக்கிறது. இது நீங்கள் செய்த அதிர்ஷ்டம். அந்த இருபத்தைந்து ரூபாய் வாங்கி என்ன பண்ணுவார் மகரிஷி உங்களுக்கு தெரியுமா?

ஒரு வேட்டி, ஒரு துண்டு எடுப்பார்கள். காரா பூந்தியில் ‘மணி காரா பூந்தி’ என்று ஒன்று பெரிசா இருக்கும். பூந்திதான் தித்திப்பாக இருக்கும். பெரிய திராட்சை அளவு பெரிசா இருக்கும். அதைக் கொஞ்சம் வாங்கிக் கொள்வோம். மிச்சம் இருக்கும். மிச்சம் பணம் இருக்கும். அவரிடம் கொடுப்போம். ‘மணி பூந்தியை’ distribute பண்ணுவோம். கொண்டாட்டம் துரியாதீதம் தீட்சை வாங்கிக் கொண்ட நாள். ஒரு வேட்டி, ஒரு துண்டு, கொஞ்சம் மணி காரா பூந்தி கையில் இருக்கிற மிச்ச காசை கொடுப்போம். ஐந்தாறு பேர் கூடிக் கொண்டால் Grand ஆக இருக்கும்.

நான் ‘துரியாதீதம்’ எடுக்கும் அன்று தனி ஆளாக மாட்டிக் கொண்டேன். மொத்த செலவும் நானே செய்ய வேண்டியதாகி விட்டது. இப்போ நீங்க ‘துரியோதீத தவம்’ எடுப்பதற்கு நீங்கள் எவ்வளவு செலவு பண்ணுகிறீர்களோ அதே செலவை அந்தக் காலத்தில் நான் பண்ணி இருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை. சும்மா ஒரு Formality. காசு வாங்கிக் கொண்டா நாம் கொடுத்தோம். விலை மதிப்பு இல்லாத ஒன்றுக்கு என்ன இதையெல்லாம் தெரிந்து கொண்டு உங்களுடைய சீடர்களுக்கு தெரிவித்து அவர்களுடைய அறிவு நிலையை மேம்படுத்தலாம்.

நமது அருள் தந்தையவர்கள் சொல்வார்கள். உலகம் அநாதையாகக் கிடக்கிறது. நம்மையும் விட்டுவிட்டால் உலகம் என்ன ஆகும்? முழுப் பொறுப்பையும் நாம் எடுத்துக் கொண்டாக வேண்டும். ஆகவே இந்த உலகத்தை அதனுடைய அழிவுப் பாதையை போக்கி, தடுத்து நிறுத்தி, திருப்பி நல்வழிக்கு கொண்டு வரக்கூடிய நிலையை செய்தாக வேண்டும். அது கொஞ்சம் ‘குருவி தலையில் பனங்காய் வைத்த மாதிரி’ அமையும் என்றாலும் வேறு வழி இல்லை. இதுதான் வழி. இதுதான் சரியான வழி. அந்த வகையில் அருட்பேராற்றல் நம்மை எல்லாம் ஈடுபடுத்தி இருக்கிறது அல்லவா. அதனுடைய தேர்வுக்காக நன்றி தெரிவித்து சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.

நமது அருள் தந்தையவர்கள் நமது இயக்கத்துக்கு பெயர் வைத்தார்கள் அல்லவா. ‘உலக சமுதாய சேவா சங்கம்’. அந்த ‘உலகம்’ என்ற வார்த்தையை வைத்துத் தொடங்குவது எல்லாம் சிறப்புறும், வெற்றி பெறும் என்பது தமிழ் இலக்கிய கூற்று. ஒரு நூல் தொடங்குவது என்றால் அதற்குச் சில குறிப்பிட்ட வார்த்தைகள் முதலில் வைத்துத் தொடங்குவது என்று சில குறிப்புகள் இருக்கும்.

’பூ’ என்று தொடங்குவது, ‘உலகம்’ என்று தொடங்குவது. உலகம் யாவையும் தாமுள வாக்கலும். நமது அருள் தந்தையவர்களும் ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்று தனது இயக்கத்துக்கு பெயர் வைத்த தோடல்லாமல் அவர் எழுதிய முதல் நூல். வேத நூல். உலக சமுதாய சேவா சங்கத்துக்கு வேத நூல். அந்தப் புத்தகமும் உலக சமாதானம் என்று வந்திருக்கிறது பாருங்கள்.

ஆகவே நம்மிடத்தில் இறைநிலை அதிகமாக எதிர்பார்க்கிறது. மகரிஷிகளை முன் வைத்து நம்மை எல்லாம் சேர்த்து எதிர்பார்க்கிறது. அதற்குத் தக்க தரத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய தரம் உலக சமுதாய சேவைக்காக பயன்படும். அப்படி நம்மை புடம் போட்டுக் கொள்வதற்காக அருள் தந்தையவர்கள் சிறப்புத் தவங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நமது அருள் தந்தையவர்கள் சமீப காலமாக இந்த நித்தியானந்த தவத்தை ஏற்படுத்தி அதை அதிகமாக வலியுறுத்துகிறார்கள். என்ன அந்த நித்தியானந்த தவத்தில் அப்படி ஒரு விசேஷம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நித்தியானந்த தவம். இது ஒரு பகுபதம். பிரிக்கப்படக்கூடிய வார்த்தை. தவத்தை நிறுத்தி விட்டீர்கள் என்றால் நித்தியானந்தம் என்று வருகிறது. ‘நித்தியம்’ என்றால் நிரந்தரமான, அழியாத, என்றும் இருக்கக்கூடிய கால நிர்ணயம் சொல்ல முடியாத என்று அர்த்த.

இராமாயணத்தில் ஒரு சம்பவம். கதை வரும். நீங்கள் நினைவு கூர்ந்து சொல்ல வேண்டும். நீங்கள் எடுத்துச் சொல்லப் போகிற சபையை வசீகரப்படுத்திக் கொள்வதற்கும் அதப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கோள் காட்டிச் சொல்லும்போது புராணத்தில் சொல்லப்படுகிற சாரத்தை எடுத்துக் கொண்டு சக்கையைத் துப்பிவிட வேண்டும்.

இராவணன் என்று ஒரு கொடியவன். அவன் ஏற்கனவே கொடியவன். அந்த கொடுமையின் Intensity-ஐ அதிகப்படுத்திக் கொள்ள இராட்சதர்கள் தவம் செய்தார்கள் அல்லவா? அதுபோல் இவனும் தவம் செய்து மூன்றரை கோடி ஆண்டு வாழ்நாள் கேட்டு வாங்கிக் கொண்டான். மூன்றரை கோடி ஆண்டு வாழ்வது என்றால் அலுத்துப் போகாதா? கதையில் என்னவோ இப்படி எல்லாம் எழுதி இருக்கிறார்கள். இவன் புத்திசாலியா, முட்டாளா என்பதை அவன் தம்பியை வைத்துத்தான் எடை போட வேண்டும்.

அவன் தம்பி கும்பகர்ணன். இரண்டு பேரும் ஒரே சமயத்தில் உட்கார்ந்தார்கள்.

Keep reading

More from the archive

KG Sami

தவம் - 35

வான் காந்தம் வரவு இயற்கையாக வருவதைவிட விளக்கிலும், கண்ணாடியிலும் வருவது அதிகம். இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் நீங்கள் பயிற்சி…

KG Sami

இறைவனும் இறைநீதியும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும்,…

KG Sami

தவம் - 49

கடைசி வரைக்கும் சுழல் தெரியாது. அழுத்தம் அதிகமாகி நிலை கொண்டுவிடும். Concentration ஆகிவிடும்.உட்கார்ந்து கொடுப்பதா, நின்று கொண்டு கொடுப்பதா. உங்கள்…

KG Sami

தவம் – 38

சாதாரணக் குடிமகன் எவர் ஒருவராலும் உடலும், உயிரும் இருந்தால் போதும். விருப்பமும், முயற்சியும் கூட்டிக் கொண்டால் இந்த உடற்பயிற்சி, காயகல்பப் பயிற்சி,…

Granthaalayam

இறைவன் அன்னமயம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலை, உயிர் நிலை, மனநிலை,…