KG Sami1937 — 2006

தவம்-6

Signed KG Sami

மேலேற்றப்பட்ட குண்டலினி சக்தி ஆக்கினையில் பல காலம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தால் மனக்கட்டுப்பாட்டை மீறி, உடலுக்கும், மனதுக்கும் பல தொந்தரவுகளை உண்டு பண்ணும். இது பற்றி முந்தைய கட்டுரைகளில் சொல்லப்பட்டிக்கிறது. அந்த தொந்தவுகள் எல்லாம் வராமல் இருப்பதற்காகவும் தான் சாந்தி யோகம் பயன்படுகிறது.

ஆக்கினைத் தவம் வாங்கி அதிக பட்சம் 15 நாட்கள் கழிந்த பின்னர்தான், சாந்தியோகம் முன்பெல்லாம் கொடுக்கப்பட்டது. இப்பொழுதெல்லாம் இந்தக் காலம் 4 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சங்கடங்களுக்குத் தீட்சை கொடுத்தவர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே தீட்சை கொடுத்தவர், தீட்சை எடுத்தவரைத் தனது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

தீட்சை எடுத்தவர் எங்காவது வெளியூர் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியரிடம் சொல்லி விட்டுத் தான் செல்ல வேண்டும். இதெல்லாம் தீட்சை கொடுப்பதற்கு முன்பே செல்லப்பட்டிருக்க வேண்டும். மனவளக்கலை மன்றங்களில் கடைபிடிக்கப் படுகின்ற சம்பிரதாயங்கள் தான் இவை எல்லாம்.

இவ்வளவு சம்பிரதாயங்களையும் மீறி, தீட்சை எடுத்தவருக்குப் பல சங்கடங்கள் வரலாம். முகத்திலோ, கண்ணிலோ சூடு தெரியலாம். ஜுரம் வரலாம். வயிற்று வலி, வயிற்றுப் பொறுமல் போன்ற உஷ்ண வியாதிகள் வரலாம். அப்படி வந்துவிட்டால், உடனடியாகச் சாந்தி யோகம் கொடுத்து விட வேண்டும். நான்கு நாட்கள் ஆகவில்லையே என்று காத்திருக்கத் தேவையில்லை. அப்படிக் காத்திருந்தால் நிலைமை முற்றி விடும். பின்னர் நமது கட்டுப்பாட்டை மீறியும் விடும். உடனடியாக சாந்தி கொடுத்து விட்டிருந்தால் பிரச்சனையின் நிழல் கூட வந்திருக்காது.

சாந்தி யோகத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை செய்ய வேண்டுமென்றால், வாரத்திற்கு இரண்டு வேளை என்பது பதில். அந்த இரண்டு வேளையும் வெள்ளி காலையும், மாலையும் என்பது மரபு. தேவைப்படுபவர்கள் நடுவில் செய்வாயோ, புதனோ, காலையோ, மாலையோ ஒரு வேளை, இரு வேளை கூட்டிக் கொள்ளலாம். இன்னும் அதிகத் தேவை உள்ளவர்கள் சில, பல நாட்கள் தொடர்ந்து 15 நாட்கள் வரை கூட இருவேளையும் செய்து வரலாம். அவ்வளவும் உடலுக்கும், மனதுக்கும் நல்லது தான். சாந்தியைப் பல காலம் செய்வதால் எந்தப் பிரச்சனையும் வராது. மனதையும், உடலையும் அமைதிப்படுத்துவதால் தான் அதற்குச் ‘சாந்தி தவம்’ என்றே பெயர்.

அந்தத் தவம் அதிகமாகச் செய்வதால் உடல் குளிர்ச்சி அடையலாம். உடல் செல்களின் காந்தத் துருவ இணைப்பு ஒரு ஒழுங்குக்கு வரும். நிலைக்கும். இதனால் நாள் பட்ட கர்ம நோயும் தீரும். (இது தான் வியாதி. இது தான் மருந்து என்று சரியாகத் தெரிந்து கொடுத்தாலும் அந்த வியாதி தீராது. எந்தக் கர்மப் பதிவுகள் உடலில் இருகின்றனவோ அந்தப் பதிவுகள் எல்லாம் துன்பமாக மாறி தீர்ந்து போன பின் தான் அந்த நோய் அகலும் இதைத் தான் ‘கர்ம நோய்’ என்பார்கள்). இது போல் எதனாலும் தீராத ‘கர்ம நோய்கள்’ நமது தவ முறையில் தீருகின்ற வழிகள் இன்னும் மூன்று உள்ளன. அவை 1. துரியாதீதம் 2. காயகல்பம் 3. கண்ணாடிப்பயிற்சி.

கர்ம நோயை எதிர்க்க ‘சாந்தி யோகம்’ செய்வதென்றால் தொடர்ந்து செய்து வரவேண்டும். தினந்தோறும் செய்ய வேண்டும். இரண்டு வேளையும் செய்து வர வேண்டும். மூன்று மாதம் செய்து வர வேண்டும். அதற்குள் அந்த நோய் அகன்று விடும். இல்லையென்றால் இன்னும் ஒரு மூன்று மாதம் நீட்டித்துக் கொள்ள வேண்டும். இல்லாகட்டத்தில் மேல் நிலைத் தவம் எதுவும் செய்யக் கூடாது.

இவ்வாறு உடல் நலத்திற்காகச் ‘சாந்தி யோகம்’ செய்வதில் தொந்தரவுகளும் உண்டு. மூலாதாரம் மண்ணுக்குரிய மையமாகையால், சப்த தாதுக்களில் மண்ணுக்குரிய தாதுவாகிய வித்துவின் உற்பத்தி அதிகமாகும். அதனால் பால் உணர்வுகள் கூடுதலாகும். பால் உறவில் வல்லமையும் கூடும். இவற்றைச் சமாளித்துக் கொள்ளக் கூடிய அறிவு பலமும், குணச் சிறப்பும் ஏற்கெனவே பெற்றிருக்க வேண்டும். பால் உணர்வில் வல்லமையின்மை போன்ற பலகீனங்களையும் இந்தத் தொடர்ந்த சாந்தியோகம் சரிப்படுத்தும்.

மலட்டுத் தனம் கூடச் சாந்தியோகம் சரிப்படுத்தும். பால் உணர்வு கருவிகளுக்குப் பக்கத்திலேயே மூலாதாரம் இருப்பதால், பால் உணர்வு வெறியும் (Craving) இந்தத் தவம் தொடர்ந்து செய்வதால் உண்டு பண்ணப்படக் கூடும். சாந்தி யோகத்தால் பெரிய நன்மைகளையும் உண்டு பண்ணிக் கொள்ளலாம். அல்லது கஷ்டங்களை நீக்கிக் கொள்ளலாம்.

இயற்கையில் சில நிலவரங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தைப் பயன்படுத்திச் சொன்னால் magnetism என்றும் demagnetism என்று சொல்லலாம். Demagnetism த்தை ஜீவகாந்த சிதைவு நிலை என்று வைத்துக் கொள்ளலாம். magnetism த்தை ஜீவ காந்த உறுதி நிலை என்று கொள்வோம். இந்த ஜீவகாந்த உறுதி நிலை (magnetism) அதாவது ஜீவ காந்தம் சிதையா நிலையானது அருகம் புல், வேம்பு, துளசி போன்ற தவரங்களில் இருப்பதை உணரலாம். மிருகங்களில் பசு, யானை, மயில், மான் முதலிய உயிரினங்களில் இருப்பதை உணரலாம். குழந்தைகளிடத்திலும், பெண்களிடத்திலும் ஜீவகாந்தம் அதிகம் இருப்பது தெரிய வரும். நல்லவர்களிடத்திலும், ஞானிகளிடத்திலும் இது ஏராளம் உண்டு. நவரத்தினம் போன்ற கற்களிலும், வெள்ளி, பொன் போன்ற உயர் உலோகங்களிலும் இது உண்டும்.

ஜீவகாந்த சிதைவு (demagnetism) என்பது கழிவுப் பொருட்களில் உண்டு. நாய், பன்றி, பூனை, ஆந்தை, கோட்டான், வௌவால் போன்ற உயிரினங்களில் இது உண்டு. இந்த மாதிரி demagnetism உள்ள உயிரினங்களோடு நாம் தொடர்பு கொள்ளும் போது அல்லது 3 அடி தூரத்துக்குள்ளாக நாம் நெருங்கி இருக்கும் போது ஜீவகாந்த சிதைவுக்கு உள்ளாவோம். அதாவது ஜீவகாந்தம் இழக்கப்பட்டு யாருக்கும் பயனற்றுப் போகும். ஆகவே இந்த மாதிரி சூழ்நிலைகளைத் தவம் செய்பவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஜீவகாந்த உறுதி நிலையை இந்தச் சூழ்நிலைகள் (demagnet) குலைத்து விடும். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்பதையும், தொடுவதையும், கொஞ்சுவதையும் யோகிகள் (நாம் தான்) தவிர்த்தேயாக வேண்டும்.

மாதவிலக்குக் காலம் மூன்று நாட்களிலும் பெண்களுடைய கருப்பையில் இந்த மாதிரி ஒரு ஜீவகாந்த சிதைவு நிலை ஏற்படுகிறது. கடந்த 30 நாளில் பெண்களுடைய ஜீவகாந்தமே கருப்பையில் உட்சுவர் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கும். குழந்தை உருவானால், அது கருப்பையோடு ஒட்டிக் கொள்ளாமல், அதைத் தனியாக வைத்திருந்து, அந்தப் பையோடு குழந்தை வெளிவருவதற்காக இயற்கை செய்த ஏற்பாடு இது. குழந்தை உருவாகவில்லை என்றால் அந்த உள் சுவர் (பனிக்குடம்) வயதாகிப் பழுதுபட்டு பயனற்றதாகி விடும். தொடர்ந்தும் அது அங்கே இருப்பது கருப்பைக்கும், பெண்ணுக்கும் கெடுதலைத் தரும். எனவே இயற்கையனது ஜீவகாந்தச் சிதைவு நிலையை ஏற்படுத்தி அந்தப் பழைய உள் சுவரை அரைத்துக் கரைத்து வெளியேற்றும். இது தான் தீட்டு என்று சொல்லப்படும். மாதவிலக்கு கால கட்டத்தில் பெண்களுடைய கருப்பையிலும், உடல் முழுவதிலும், உடலைச் சுற்றிலும் ஜீவகாந்தச் சிதைவு இருக்கும். அந்தக் காலகட்டத்தில் அத்தகு பெண்களைத் தவம் செய்பவர்கள் தொட்டாலோ, அருகில் சென்றாலோ ஜீவகாந்தச் சிதைவு ஏற்படும். மாதவிலக்கான பெண்களிடத்தில் ஏற்படக்கூடிய ஜீவகாந்தச் சிதைவு நிலை பிணத்திலும் ஏற்படும். பிணத்தில் ஜீவவித்துக் குழம்பு இல்லை. எனவே உயிர்த்துகள்களும் இரா. உயிர்த்துகள்கள் இல்லையெனில் ஜீவகாந்தம் இருக்காது. அதற்குப் பதிலாக அந்தப் பயனற்றுப் போன பருஉடல் பஞ்சபூதங்களோடு கலப்புறுவதற்காக இயற்கையானது ஒரு ஜீவகாந்தச் சிதைவு நிலையை ஏற்படுத்துகிறது. அந்தச் ஜீவகாந்தச் சிதைவு நிலை தான் பருஉடல் அணு அடுக்கைப் பிரித்து அணுஅணுவாக மாற்றி பஞ்சபூதங்களோடு கலப்புறச் செய்கிறது. அப்படிப்பட்ட ஜீவகாந்தச் சிதைவு நிலை பிணத்தின் உடல் முழுவதும் இருக்கும். பிணத்தை சுற்றிலும் 3 அடி தூரத்திற்கும் இருக்கும். அந்தக் களத்தோடு (field) தொடர்பு கொள்ளக்கூடிய ஜீவகாந்தத்தைத் தாக்கி, ஜீவகாந்தம் சிதைந்து போகும். யாருக்கும் பயனற்றுப் போகும். ஆகவே தான் பிணத்தின் பக்கத்தில் போகக் கூடாது. ஆனால், சில தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் இந்த மாதிரி ஜீவகாந்தச் சிதைவு நிலைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்போது நாம் சாந்தி யோகத்தில் இருந்து கொண்டால் ஜீவகாந்தச் சிதைவு ஏற்படாது.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 28

இப்போ சுத்தவெளியினுடைய இருப்பு, அதனுடைய பெருமை எல்லாம் யாருடைய பெருமையாக நினைக்கிறீர்கள். நமது பெருமையாக நாம் என்றால் யார்? தெய்வம். தெய்வத்தின்…

KG Sami

தவம்-12

பெரும்பாலும் ஆசிரமங்களிலும், மடங்களிலும் தான் இந்த தவம் செய்யப்பட்டது. சமுதாய விரிவாக அந்த காலத்தில் வரவில்லை. ஆசிரமங்களிலும், மடங்களிலும் செய்யும்…

KG Sami

தவம் – 18

மேலே தூக்கி விட்ட உடனே ‘ஆக்கினைச் சக்கரத் தவம்’ வந்து விடும் யாருக்கும். அப்பவே தெரியும். தீட்சை எடுத்த அன்றே ‘ஆக்கினைச் சக்கரம்’ தெரியும். ஆனால்…

KG Sami

தவம்-13

ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஐயோ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட வில்லையா ? நீங்கள் தவம் செய்யவில்லை…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

1976 இன் இறுதியில் ஒரு நாள் மகரிஷிகள் பாண்டிச்சேரிக்கு வர இருக்கிறார். அது ஒரு வெள்ளிக் கிழமை பகல் 12 மணி போல் அவர் வந்து சேர வேண்டும்.…

Kannimuthu

துரியாதீதம் தந்த தூயவர்

தாடியின்மடியில்தலைவைத்தால், தோன்றும்இன்பம்தோன்றிடுதே! – மேவிப்போய்அம்மெய்ப்பொருள்தன்னோடு பொல்லாநினைவைப்பூட்டிவிடின். – அப்போ,காயம்இருப்பதும்தெரியாது!…