KG Sami1937 — 2006

தவம் – 20

Signed KG Sami

நமது பிரபஞ்சத்தை Universe ஆக எடுத்துக் கொண்டு, அது 2000 கோடி ஒளியாண்டு diameter இருக்கிறது என்று சொல்லி, எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது. இந்தியாவின் எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது. வடக்கு எல்லை. நேபாளமா, திபெத்தா என்னவோ ஒன்று இருக்கணுமே. அது என்ன? ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லை என்றால் அதுதான் தெய்வம். ஒன்றுமே இல்லை என்று ஒரு பெயர் இருக்க முடியும். மங்கலமா ஒரு பெயர் வைப்போமே. இறைவன், தெய்வம் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் தத்துவஞானிகள்.

On the way ஒன்றை விட்டுவிட்டு போய் விட்டோம். அதுதான் துவாதசாங்கம். துரியாதீத தவத்தில் சொல்லப்பட்டிருக்கும் துவாதசாங்கத்தைக் கடந்து போய் அப்பால் நின்றோ பார்ப்போமே. Front –ல் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பார்த்தாச்சு. அங்கிருந்து திரும்பி பார்ப்போம்.

’துவாதசம்’ என்ற வார்த்தைக்கு ‘பன்னிரண்டு’ என்று அர்த்தம். ‘அங்கம்’ என்றால் என்ன? இந்தக்காலப் பசங்களுக்குத் தமிழே தெரிய மாட்டேங்குது. இது சமஸ்கிருதம். சங்கம் என்றால் உடல். சங்க லட்சணம் என்றால் உடம்பினுடைய அழகு. துவாத சாங்கம் என்றால் பன்னிரெண்டு உடம்பு என்று அர்த்தம். அப்படி நேராக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. உடம்புக்கு பன்னிரெண்டு அளவு மேலே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் பூடகமாகவே சொல்வார்கள் ஆன்மீகத்தில். தெளிவாக பளிச்சென சொல்லி இருந்தால் ஆன்மீகம் மேலே வந்து இருக்கும். அது மாதிரி பூடகமாக சொல்லிச் சொல்லி அதுக்கு வெவ்வேறு ஆளுங்க வெவ்வேறு அர்த்தம் சொல்லி அதுல ஒரு புதுக் குழப்பம் வந்து சேரும்.

உடம்புக்கு 12  (Measure) அளவுக்கு மேலே. அதை நாம் அங்குலம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இன்ச் என்றும் எடுத்துக் கொள்ளலாம். உடம்புக்கு மேலே என்றால் தலைக்கு மேலே என்று அர்த்தம். அங்குலம் என்றால் ஆளாளுக்கு அங்குல அளவு வேறுபடும். அங்குலம் என்றால் விரலினுடைய thickness.

என்னுடைய தகப்பனாருடைய விரலினுடைய thickness என் விரலினுடைய thickness ஐப் போல இரண்டு மடங்கு இருக்கும். இப்போ யாருடைய அளவு. ஜவுளிக் கடைக்குப் போய் விவகாரம் பண்ணிக் கொண்டு வந்து விடுவார் எங்கப்பா. இது எத்தனை முழம் வேட்டி? எட்டு முழம். எங்கே அளந்து பார்ப்போம் என்று அளந்து பார்த்து ஆறே முக்கால் முழம் தான் இருக்குது என்பார். அவ்வளவு நீளமாக மொத்தமான கை. இப்படி விவகாரம் வருதே. பன்னிரெண்டு அங்குலம் என்றால் ஒரு முழம் என்று வைத்துக் கொள்ளுங்கள். உச்சிக்கு மேலே ஒரு முழ உயரத்தில் மனதைச் செலுத்துங்கள் என்று சொல்லி இருப்பார்களே. அங்கே என்ன இருக்குது. மறுபடியும் ஒன்றுமில்லை.

உடலிலேயே வாசம் பண்ணிய மனதை பிரித்துக் கிளப்பி  தூக்கிக் கொண்டு போய் அல்லவா அந்தச் சுத்தவெளியில் கொண்டு போய்ச் சேர்க்கணும். சாமானியப்பட்ட காரியமா அது. அதுக்குச் சில Steps ஐ நாமே ஏற்படுத்தி விட்டோமேயானால் அந்த Steps ல் ஏறி மேலே போகலாம்.

அப்படிப் பார்க்கும் போது உடம்பு மனதில் வாசம் பண்ணி நீண்ட காலம்  வாசம் பண்ணி சினேகிதர்களாகப் போய் விட்டார்கள். இணை பிரியாத சினேகிதர்களாகப் போய் விட்டார்கள். உடம்பும், மனதும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். நீங்கள் என்னதான் சூதுவாது பண்ணினாலும் அவர்களைப் பிரிக்கவே முடியாது.

அப்படி இருக்குபோது இந்த மனதை எப்படி அழைத்துக் கொண்டு போவது – சுத்தவெளிக்கு ? ஆகவே நமது அருள் தந்தையவர்கள் யோசனை செய்கிறார்கள்.

நமது அருள் தந்தையவர்கள் இளைஞராக இருந்த காலத்தில் 2வது உலகச் சண்டை வந்தது. அப்போ எல்லா இளைஞர்களையும் பிடித்து பிரிட்டிஷ் அரசாங்கம் பயிற்சி கொடுத்தார்கள். ARP training என்று அதற்குப் பெயர். (Anti Ride Protection). யுத்த காலத்தில் விமானத்தில் ஏறி தாக்கினார்கள் என்றால் நாம் நம்மையும் சமுதாயத்தையும் எப்படி காப்பாற்றுவது என்பதற்கு ஒரு பயிற்சி.

அதில் முதல் அறிவுரை- குப்புறப்படுத்துக் கொள்வது. புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் மேலே விழுந்து படுத்துக் கொள்வது என்பது மாதிரி இல்லை. குப்புறப்படு. குப்புறப் படுத்துக் கொண்டு பாரு. அதாவது குண்டு போட்டு விட்டார்கள். கட்டிடம் எல்லாம் உடைந்து போச்சு. ஆங்காங்கு தீ பற்றி எரிகிறது. குண்டு போட்டதனால் குண்டிலிருந்து ஏற்பட்ட புகை, தீயினால் வேறு புகை.

இந்தப் புகையில் அழுகுரல் கேட்கிறது. அதைப் போய் தூக்கிக் கொண்டு வர வேண்டும். ஒரு பெண்மணி அலறுகிறாள். அவர்களை அழைத்துக் கொண்டு வர வேண்டும். எது கட்டிடம், எது வாசல், எது தெரு என்றெல்லாம் ஒன்றும் தெரியாது – புகையினால். அதனால் நீ குப்புறப்படுத்துக் கொண்டு பார்த்தால் எல்லாம் தெரியும்.

எவ்வளவு புகை இருந்தாலும் பூமிக்கு ஒரு முழ உயரத்துக்கு மேலே தான் மிதந்து கொண்டு இருக்குமாம். இது எனக்கு அனுபவமில்லை. மகரிஷி அவர்களும் அனுபவப்பட்டதுமில்லை. ஆனால் சொல்லப்பட்டது மகரிஷி அவர்களுக்கு. அதாவது பூமிக்கு ஒரு ஆற்றல் இருக்கிறது. என்னவென்றால் தன்நோக்கி எல்லாவற்றையும் இழுக்கிற ஆற்றல்.

Keep reading

More from the archive

KG Sami

சுபிதாவின் முதல் பிறந்தநாளுக்காக

புதுவை அருட்செல்வர் ஜானகிராமன் ஐயா அவர்களின் மகள்சுபிதாவின் முதல் பிறந்தநாளுக்காககே.ஜி. சாமி ஐயா அவர்களால்எழுதி அளிக்கப்பட்ட அருமையான மரபு வாழ்த்துப்…

KG Sami

வான் காந்தம், ஜீவ காந்தம்

வான் காந்தம், ஜீவகாந்தம் எவ்வளவு மகிமையான வஸ்துக்களாக இருந்து கொண்டு எவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் செய்து கொண்டு இருப்பது தெரியாமல் இருக்கிறது.…

KG Sami

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை…

KG Sami

தவம் - 44

அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று எண்ணி கீழே கிடந்ததைத் தூக்கி டமால், டமால் என்று அடித்தார் ஒரு அடி. நெப்போலியன் பார்த்துச் சிரித்துக் கொண்டே…

KG Sami

தவம்-4

நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக்…

KG Sami

தவம் - 38 A

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம்…