KG Sami1937 — 2006

தவம் - 44

Signed KG Sami

அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று எண்ணி கீழே கிடந்ததைத் தூக்கி டமால், டமால் என்று அடித்தார் ஒரு அடி. நெப்போலியன் பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டார். கதையில் சொல்கிறார்கள். நாம் சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் அவன் தூக்கி வைத்து அடித்தது துப்பாக்கி அல்ல. பீரங்கி. அவன் மேலேயே அது விழுந்து அவனைச் சாகடித்து விட்டது.

தலைவனுக்கு சேனாதிபதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது பீரங்கியும் தூக்க முடிகிறது பாருங்கள். பீரங்கி என்று தெரிந்த பிற்பாடு அதைத் தான் மேலே போட்டுக் கொண்டு செத்துப் போய்விட்டார். நீங்கள் நினைத்த வெற்றி வர வேண்டும் என்றால் அதில் 5 விஷயங்கள் சம்மந்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். அது நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள்.

ஒன்பது மைய தலம், பஞ்ச பூத நவக்கிரக தவம் என்ற இரண்டு தவங்களும் உங்கள் வீரியத்தை அதிகப்படுத்தும். உங்கள் ஆற்றலை அதிகப்படுத்தும். இதை நீங்கள் செய்து வருகிறீர்கள். செய்து வாருங்கள். பின் ஆறு மாதம் செய்துவிட்டு, ஒரு வருடம் விட்டு என் எடை 56 கிலோ தான் இருக்கிறது என்று சொல்லக் கூடாது. அப்படியே தான் இருப்பீர்கள். கொம்பு ஒன்றும் முளைத்து விடாது. புரிகிறதா நான் சொல்வது. ஆனால் வாழ்க்கையில் வெற்றி அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். அதை recognise பண்ணிக் கொள்வதற்கு பொறுமை வேண்டும். திறமையும் வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒரு பத்து வருடத்துக்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள். இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள். பத்து வருடங்களாக தவம் செய்ய ஆரம்பித்திருந்தீர்கள் என்றால் அப்பொழுது தான் வித்தியாசம் தெரியும்.

நீங்கள் அடைந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு மேன்மை உடனே விண்ணென்று, திண்ணென்று சூ மந்திரக் காளி வெளியாகிக் கடவது. உடனே effect தெரிவது மாதிரி எல்லாம் இருக்காது. ஆனாலும் நீங்கள் மேம்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனோ சக்தி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வெற்றியும், மேன்மையும் நாளுக்கு நாள் அடைந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.

ஒருவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. மூன்று மாதம் கழிந்த பிறகு அவன் சிங்கப்பூர் போய் விட்டான். பின்னர் ஒரு வருடம் கழித்துத் தான் வருகிறான். வந்தவுடன் எங்கே என் குழந்தை என்று கேட்கிறான். அதற்கு மனைவி இடுப்பில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். குழந்தை எங்கே என்று கேட்கிறாயே? என்கிறாள். இல்லை. குழந்தை பெரிசாய் இருக்குதே. அதுதான் கேட்டேன். அதற்கு அவள் நான் குழந்தை அப்படியே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நீ பெரிசாக இருக்கிறது என்கிறாயே. வளர்ச்சியில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா, அது சிறிது காலம் பார்க்காமல் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். தினம் பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு வளர்ச்சி தெரியாது.

அப்படி இருக்க உங்களுக்கு ஒரு ஆதங்கம், சளிப்பு, ஏக்கம் வேண்டியதில்லை. ஆகவே எனக்குச் சிறப்புத் தவம் இருந்தால் சொல்லிக் கொடுங்களேன். நான் மேம்படுவதற்கு பெரிய ஆற்றல் ஏதாவது இருந்தால் எனக்கு சொல்லிக் கொடுங்களேன் என்று என்னிடம் கேட்கிறார்கள். பெரிய பெரிய தவமா, தடிமனா ஏதாவது சொல்லி கொடுங்களேன் என்று என்னிடம் கேட்கிறார்கள். அதுதான் இந்தப் பேராசை.

இன்றைக்கு இந்த உலகத்தில் இருக்கிற trend என்ன? பணக்காரன் ஆக வேண்டும். பெரிய பணக்காரனாக ஆக வேண்டும். அவனைவிட பணக்காரனாக ஆக வேண்டும். இவனைவிட பணக்காரனாக ஆக  வேண்டும். இதைக் கொண்டு வந்து அருள் துறையிலும் fit பண்ணுவார்கள். தேவையில்லை.

பஞ்ச பூத நவக்கிரகத்தில் நிறைய மேன்மைகள் இருக்கிறது என்று சொல்லிவிட்டோமா? வீட்டிற்குப் போய் விழுந்து, விழுந்து, எழுந்து, எழுந்து பஞ்ச பூத நவக்கிரக தவம், மகரிஷி கேசட், மகரிஷி குரல் தலைமாட்டிலேயே வைத்துக் கொண்டு தூங்குவார்கள். நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் பார்த்திருக்க மாட்டீர்கள். எனக்கு வயசும் ஆகுது. அனுபவமும் அதிகமாகுது. சுற்றி சுற்றி வருகிறேன். அல்லவா. தலை மாடிலேயே வைத்திருப்பார்கள். தூக்கத்தில் இருந்து எழுந்த உடனே பஞ்சபூத நவக்கிரக தவத்தில் தான் முழிக்க வேண்டுமாம். சுப்ரபாதம் பாடுவது மாதிரி பஞ்சபூத நவக்கிரக தவத்தின் மேல் ஒரு வெறி இருக்கிறது. அது கூடாது.

நல்ல தவம்தான் பிரம்மாதமான தவம்தான். வாழ்க்கை மேம்பாடும் வரும். விஞ்ஞானம் இருந்தாலும் அதன் மேல் ஒரு வெறி இருக்கக் கூடாது. இருந்தால் அதில் ஒரு மாற்று குறைந்து போகும்.  Effect குறைந்து போகும். நீங்கள் தான் loose பண்ணுகிறீர்கள். ஆகவே செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதும் என்று மகரிஷி சொல்கிறார்கள். மாதத்துக்கு நான்கு தவம் ஆகி விடும்.

தேவையும், ஆர்வமும் அதிகம் இருந்தால் தினமும் கூட செய்யலாம். ஆனால் மற்ற தவங்களை பண்ணி விடக் கூடாது. காலையில் பத்து மணிக்கு நீங்கள் எல்லாம் ladies காலையில் எல்லா வேலைகளையும் செய்து விட்டு ஒரு சீரியலை கட் பண்ணி விட்டு பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து விடலாமா? கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சாயங்காலம் 3 மணிக்கு ஒரு சினிமாவை கட் பண்ணி விட்டு இண்டோர் சினிமா ஒரு தவம் செய்யலாமா?

எந்த ஊருக்கோ போயிருந்தேன். அங்கே ஒரு டி.வி.யை காட்டினார்கள். அந்த டி.வி.யை கழுத்தை ஆட்டாமல் பார்க்க முடியாது. முழுசாக பார்க்க வேண்டுமானால் ஒரு 50 அடி தள்ளி உட்கார்ந்து தான் பார்க்க முடியும். அந்த மாதிரி டி.வி. வைத்துக் கொண்டிருந்தால் யாருக்கு பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்ய தோன்றும். உலகியல் அனுபவங்களில் இருக்கிற மோகத்தை குறையுங்கள். ஆன்மீகத்திலும் இருக்கிற மோகத்தைக் குறையுங்கள். எதிலும் மோகம் கூடாது. ஒன்பது மைய தவம், பஞ்ச பூத நவக்கிரக தவம் மற்றும் கண்ணாடி பயிற்சி வாழ்க்கையில் அனேக மேம்பாடுகளையும் தரக்கூடிய தவம். மேற்கொண்டு நாளை சிந்திக்கலாம்.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 32

5mm, 4mm thickness-ல் என்றெல்லாம் கண்ணாடி இருக்கிறது. 1mm thickness-ல் கூட கண்ணாடி இருக்கிறது. சினிமாவில் fighting scene-ல் பயன்படுத்துவார்கள்.…

KG Sami

தவம் – 5

ஆக்கினைச் சக்கரத் தவத்தை உருவகப் படுத்தி (Symbolic) பலவிதமாகத் தமிழ்நாட்டுச் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். நிறைய பாடல்கள் அப்படிப் பட்டவை…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

1976 இன் இறுதியில் ஒரு நாள் மகரிஷிகள் பாண்டிச்சேரிக்கு வர இருக்கிறார். அது ஒரு வெள்ளிக் கிழமை பகல் 12 மணி போல் அவர் வந்து சேர வேண்டும்.…

KG Sami

தவம் - 49

கடைசி வரைக்கும் சுழல் தெரியாது. அழுத்தம் அதிகமாகி நிலை கொண்டுவிடும். Concentration ஆகிவிடும்.உட்கார்ந்து கொடுப்பதா, நின்று கொண்டு கொடுப்பதா. உங்கள்…

Granthaalayam

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலையை புலன்களால் உணர்ந்து…

KG Sami

தவம் - 38 A

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம்…