KG Sami1937 — 2006

தவம் - 46

Signed KG Sami

உடலுக்கு நோய், மனதுக்கு பைத்தியம், வாழ்க்கையே முடிந்து போனவனும் உண்டு. சரியான வழி, சுலபமான வழி முறை தெரியாது. இப்போ நாம் இவ்வளவு சுலபமான வழிமுறை மகிமையான வழிமுறையைக் கண்டுபிடித்து சாதித்து விட்டோம்.

இப்போ ஆக்கினைச் சக்கரத்துக்கு வந்தாச்சு. ஆள்காட்டி விரல்தான் உபயோகிக்க வேண்டும். ஒரு சிலருக்கு ‘நடுவிரல்’ வருகிறது. நீளமாக இருப்பதாலோ என்னவோ நான் பார்த்திருக்கிறேன். நடுவிரல் என்பது பழைய காலத்தில் ஆணவத்துக்கு உரிய விரல். ஆணவம், கண்மம், மாயை என்று சொல்வார்கள் பாருங்கள். அது என்னவோ நடுவிரல் வேண்டாம்.

ஆக்கினைச் சக்கரத்தின் வழியாக உயிர்ச்சக்தி ஓடத் தயாராக இருக்கும். எல்லாம் science தான் வேறு ஒன்றும் இல்லை. அதனைப் பயன்படுத்தி ஒருமுறை தொடுவது மூன்று முறை சுழற்றுவது தொடுவதற்கு ஆள்காட்டி விரல். சுழற்றுவதற்கு மூன்று விரல். ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல். 3 விரலாலும் சுழற்றுவது, தொடாமல் சுழற்றுவது. தொடுவதற்கு ஆள் காட்டி விரல் . தொட்டும் சுழற்ற வேண்டும். பொட்டு அகலத்துக்கு நாலணா அல்லது ஒரு ரூபாய் நாணயம் அகலத்துக்கு மூன்று விரலால் சுழற்ற வேண்டும்.

அப்போ என்ன நடக்குது. ஏற்கனவே மேலே வந்த உயிர்ச்சக்தி பூரிப்பு அடைகிறது. Force கிடைக்கிறது. அதனால் அதை சுலபமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. நான் ஏற்கனவே சொன்ன அந்த வார்த்தைகளை இப்பொழுது சொல்ல வேண்டும். ஆக்கினைச் சக்கரத்தில் உங்களுடைய சக்தி ஒரு உணர்தலாகத் தெரியும். ஊருணர்வாகத் தெரியும்.

கூர்ந்து கவனித்துப் பாருங்கள். மென்மையாகத் தெரியும். புதிதாகப் பொட்டு வைத்த மாதிரி. அல்லது அந்த இடத்தில் மட்டும் காற்று அடிப்பது மாதிரி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரித் தெரியும். நீங்கள் ஒரு மாதிரிச் சொன்னீர்கள் என்றும், மற்றவர்கள் எனக்கு வரவில்லையே என்று நினைப்பார்கள். அங்கே மட்டும் ஒரு நரம்பு அசைகிற மாதிரி, அந்த இடத்தில் ஒரு முடிக்கற்றை காற்றில் புரண்டு அசைவது மாதிரி, கூசுவது மாதிரி, அரிப்பது மாதிரி, சூடு மாதிரி, குளிர்ச்சி மாதிரி, ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரித் தெரியும். உங்களுக்கும் இதில் ஏதாவது ஒரு மாதிரி தெரிந்திருக்கும். கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

சூடாக இருந்தாலும், குளிர்ச்சியாக இருந்தாலும் வேறு மாதிரி இருந்தாலும் அழுத்தமாகத் தான் இருக்க வேண்டும். நீங்கள் பயிற்சி செய்ய, பயிற்சி செய்ய ஒரு அழுத்தமாக, ஊருணர்வாகத் தோன்றிவிடும். இப்பொழுது நன்கு கூர்ந்து கவனியுங்கள் என்று சொல்லி விட்டு, விட்டுவிட்டு 3 தரம் கொடுக்க வேண்டும். தொடுவது, சுழற்றுவது, தொடுவது, சுழற்றுவது அதன்பின் தாள ஓசை.

தாளத்தை எடுத்து மெலிதாக ஒரு தட்டு தட்ட வேண்டும். மெல்லிய ‘டிங்’ சத்தம் வரும். அதிலிருந்து ஒரு ‘vibration’ அவசியம் வரணும். முதலில் வேகமாக வந்து பின் குறைந்து மெதுவாக அந்த சத்தம் அடங்கும் வரை காத்திருக்க வேண்டும். அடுத்த தட்டு தட்டி விடக் கூடாது ஏன்? Concentration Purpose.

இங்கே மணி, கிணி ஓசை ஒன்றும் கிடையாது. பின் எதற்காக இது? தாளத்தை தட்டியவுடன் ‘டிங்’ என்ற ஓசை (சத்தம்) கேட்டது. காற்றிலே ஒரு அலை வரும். சத்தத்தின் மூலமாக காற்றிலே ஒரு அலை வரும். அந்த அலை வந்து மோதும். ஆக்கினைச் சக்கரத்திலே மோதும். தெரியாதவர்களுக்கும் தெரிந்து போகும். So புறத்தூண்டுதல் தான்.

இந்த ஓசை முதலில் நல்லா கேட்டது. இப்போ காணோமே, இல்லை கேட்குது. கொஞ்சமாக கேட்குது என்று அவர் அந்த ஓசை பின்னாலே போவார். அதை ஏற்படுத்துவதற்காக 3 முறை செய்கிறோம். அடுத்த தவத்துக்குத் தாளம் வேண்டியதில்லை. அந்த மாதிரி 3 முறை கொடுத்துவிட வேண்டியது. தாளம் கொடுப்பதற்கு முன்னால் ஒருமுறை Touch – தாளம் கொடுத்தபின் ஒருமுறை Touch, இரண்டாவது முறை தாளம் கொடுப்பதற்கு முன் ஒரு  Touch என்று கொடுத்துக் கொண்டே இருந்தால்தான் வந்து விடுவது அவர் Consciousness-க்குத் தெரிய வரும்.

இப்பொழுதெல்லாம் என்னுடைய அனுபவம் என்னவென்றால் நாங்கள் ஆரம்ப கால கட்டங்களில் மண்டி போட்டு சண்டி வாங்கிக் கொண்டு இருப்போம். ‘இன்னமும் வர மாட்டேன்குது, இன்னமும் வர மாட்டேன்குது’ என்பார். இப்பொழுது தொட்டவுடன் ’புஸ்’ என்று எழுந்து விடுகிறது. இப்போ நான் பார்ப்பது 3வது Generation. உடனே வந்து விடுகிறது. தலையை ஆட்டி விடுகிறார்கள். நீ என்னய்யா கேட்கிறது. ஆமாம் என்று தலையை ஆட்டி விடுகிறார்கள். நாம் செய்த தவம் அவர்களுக்கு Transfer ஆகிவிடுகிறது. பாட்டன் சொத்து பேரனுக்குத்தானே. அந்த மாதிரி அவர்கள் தலையை ஆட்டி விட்டார்கள் என்றால் நீங்கள் தொந்தரவு பண்ணாதீர்கள்.

தலையை ஆட்டாத பட்சத்தில் எட்ட, கிட்ட காட்டுவது நமது இயக்கத்தில் ஒரு குழப்பம். அதாவது Touch கொடுங்கள் என்றால் இப்போ நாம சொன்னோமே ஒரு விரலால் தொட்டு கொஞ்சம் கையை எட்ட எடுத்து அரை சென்டி மீட்டர் தூரத்தில் எடுத்து 3 விரலால் சுழற்ற வேண்டும் அல்லவா. Touch கொடுப்பா என்றால், pump அடிப்பார். இது touch அல்ல.

பொறுப்பாசிரியர் தீட்சை கொடுக்கும்போது எட்ட இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் அல்லவா. ஆகவே touch கொடுப்பது என்றால் பம்ப் அடிப்பது என்று நினைத்து கொள்கிறார். என்ன செய்ய வேண்டும். கையை கிட்டே வைத்துக் கொள்ள வேண்டும். உடல் சூடு தெரிவது போல் கையை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அவருக்கு அவருடைய சக்தி தெரிகிறதோ இல்லையோ, நமது உடல்சூடு தெரியும். இதை அவர் தனது குண்டலினி சக்தி என்று நினைத்துக் கொள்வார். எதை நினைத்தாலும் சரி, அப்புறம் கையை எடுத்துவிட வேண்டும். காணோம் என்று தேடுவார். கண்ணைத் திறந்து தேட மாட்டார். மறுபடியும் கையைக் கிட்டே கொண்டு போக வேண்டும். மறுபடி கையை எடுத்த பின் காணோமே என்று தேடுவார்.

இந்த difference ஏற்படுத்தியபின் கண்களை லேசாகத் திறக்கச் சொல்லி, அவ்வாறு சொல்லும்போது கை அங்கே இருக்க வேண்டும். கண்களை லேசாகத் திறக்கச் சொல்லி விட்டு இவர் கையை வேறு எங்காவது வைத்திருப்பார். அப்போ சுற்றிலும் முற்றிலும் பார்க்க ஆரம்பித்து விடுவார். கையைக் கிட்ட கொண்டு போய் நெற்றியின் பக்க வைத்துக் கொண்டு கண்களைத் திறந்து பார்க்கச் சொல்லி என் கை மூலம் வழங்கும் சக்தி தான் உங்கள் உயிர்ச் சக்திக்கு ஊக்கம் கொடுத்து கை கிட்ட வரும் போது அதிக சக்தியும், கை எட்டப் போகும்போது குறைந்த சக்தியும், கை கிட்ட போகும் போது அதிக அழுத்தமும் கை எட்டப் போகும்போது குறைந்த சக்தியும், கை கிட்ட போகும் போது அதிக அழுத்தமும் கை எட்ட போகும்போதும் குறைந்த அழுத்தமும் வரும். இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

Keep reading

More from the archive

KG Sami

தவம்-14

புதுப் பொண்ணு மாப்பிள்ளை வந்தா ஆரத்தி எடுக்கறாங்க பாருங்க, மஞ்சள் தண்ணீர் கலந்து தாம்பாளத்தில் அதை எப்படி சுத்துவது. மெதுவாக தந்திரமாக தண்ணீர்…

KG Sami

தவம் - 49

கடைசி வரைக்கும் சுழல் தெரியாது. அழுத்தம் அதிகமாகி நிலை கொண்டுவிடும். Concentration ஆகிவிடும்.உட்கார்ந்து கொடுப்பதா, நின்று கொண்டு கொடுப்பதா. உங்கள்…

KG Sami

தவம்-9

நமக்கு மூன்று விதமான பதிவுகள் உண்டல்லவா? அதில் முதலாவது ஆகாம்ய கர்ம பதிவுகள். இவை புறமனத்தால் பதியும் என்று சொல்லுவார்கள். ஆக்கினைச் சக்கரத் தவம்…

Granthaalayam

இன்சொல்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!உலக மக்கள் எல்லோரும் மன…

Kanniyappan

வெட்டவெளிக்குமூலம்?

எல்லாபொருட்களுக்கும்மூலம்சுத்தவெளிஎன்றுநாம்சொல்லுகின்றபோது, அந்தச்சுத்தவெளிக்குமூலம்எது, என்றுகேட்கின்றனர். அதாவது,…

KG Sami

தவம்-13

ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஐயோ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட வில்லையா ? நீங்கள் தவம் செய்யவில்லை…