K.G சாமி ஐயா அவர்கள் அவர்தம் நண்பர் பேராசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்களின் மகள் அருட்செல்வி அவர்களுக்கு எழுதிய மடல்.
அன்பு மகள் அருட்செல்விக்கு எழுதுவது நீயும் நுமரும் வாழ்க வளமுடன்
இன்று இப்போது மாலை 3 மணிக்கு அலுவலகத்தில் எழுதிய கடிதத்தை கீழே வடிக்கிறேன் பெரியம்மா பெரிதும் நலம்…….
அருமை மகளே அருளுடை செல்வி
ஆருயிர் நண்பரின் அன்புடை புதல்வி
உனது மடலின் உள்ளடக் கத்தை
எனது சிந்தையில் ஏற்று மகிழ்ந்தேன்
உடலோடு உளத்தை ஒருங்கே உயர்த்தும்
கடமையே காயகல்பம் கருத்தில் கொண்டு
உளத்தோடு உடலை ஒருங்கே உயர்த்தி
வளத்தைத் தரும் மனவளக்கலை இரண்டையும்
இணைத்தே ஆற்ற ஈரிரண்டாம் பயன்
குணத்தையைம் அறிவையும் குன்றெனக் கூட்டி
வாழ்வில் இனிமையை வைத்து மகிழவும்
ஊழ்வினை அகற்றவும் உற்ற வழியாய்
கடவுளைக் காணவும் கடமையில் சிறக்கவும்
கடவுளாய் அனைத்தையும் தன்னையும் காணவும்
காய கல்பம் குண்டலி யோகம்
ஆய கலை இரண்டும் அவசியம் வேண்டும்
கோடி பேரோ தேடியும் அடைந்திலர்
நாடி வந்தன நமை நன்மைகள் நல்க
கருத்தொடு பயின்றக் கலைகளில் தேற
அருத்த முடையதாய் ஆகும் வாழ்வே……….
மகளே இன்லேண்ட் லெட்டர் கிடைக்கவில்லை, 60 காசு கவரும் கைவசமில்லை ,
நாளைக் கடத்துதல் நல்லதில்லை என கார்டில் எழுதிய கடிதம் இதனை நோட்டில் நீயே படியெடுத்துப் படி
நேச மகற்கு தீபா வளியே / வாழ்க வளமுடன்