KG Sami1937 — 2006

சைவமும், அசைவமும்

Signed Puthiya Bharathi

சென்ற இதழில் வெளியான சைவமும், அசைவமும் என்ற விளக்கங்களைத் தொடர்ந்து

  • முட்டை சைவமா? அசைவமா?
  • பால் சைவமா? அசைவமா?

என்ற கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கான விளக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.

     ஒரு முட்டையிலிருந்து ஒரு கோழிதான் வரும். ஒரு கொட்டையிலிருந்து எத்தனை செடி வரும்? பல செடிகளைக் கொடுக்கின்ற கொட்டையைத் தின்பது பாவமில்லையென்றால், ஒரே ஒரு கோழியைத் தருகின்ற முட்டையைத் தின்பது எப்படிப் பாவம்? தாவரத்திற்கு நாம் சொன்ன ‘நரம்பு மண்டலம் – மூளை – துன்ப அலை – துன்ப அனுபோகம் – தத்துவம்’ முட்டைக்கும் பொருந்தும். இப்பொழுது, முட்டை நிணம் என்பார்கள். இருக்கட்டும், அல்லது இல்லாமலும் இருக்கட்டும், ’சைவமா? அசைவமா?’ என்பது தான் கேள்வி. ‘நிணமா? நிணமில்லையா?’ என்பது கேள்வியில்லை. தாய்ப்பால் நிணந்தானே? அதிலே தானே நமது உணவையே ஆரம்பித்தோம்.

     மாட்டுப்பால் சாப்பிடலாமா? அது நிணமில்லையா? அது புலாலில்லையா? பால் சைவமாகுமா? என்ற கேள்விகள் எழும். எப்படி முட்டை சைவமோ, அதே காரணத்தினால் பாலும் சைவம் தான். அது நிண வகையைச் சேர்ந்தது தான் என்றாலும் பாலை நாம் பெறுகின்ற வழியில் மாட்டுக்குத் துன்பம் விளைப்பதில்லை. உண்மையில் பாலைக் கறந்தால் மாட்டுக்குச் சுகமாகவே இருக்கும் என்கிறார்கள்.

’கன்றுக்குட்டிக்கு வைத்திருப்பதை நாம் கவர்ந்து கொள்கிறோம்” என்றொரு வாதம் சொல்லப்படும். இயற்கையின் ஒரு அதிசயம்! அது என்னவோ, கன்றுக்குட்டிக்குத் தேவைப்படும் பாலை விட அதிகமான பாலை மாடு சுரக்கிறது. கன்றுக்குட்டிக்கு வைத்து விட்டு மிகுதிப்பாலை நாம் கறந்து கொள்வதில் துன்பம் கன்றுக்கோ, மாட்டுக்கோ ஏற்படுவதில்லை.

உண்மையில் ஒரு மாட்டிடம் உள்ள எல்லாப் பாலையும் அதன் கன்று குடித்து விட்டால் வயிறு உப்பிச் செத்துப் போய்விடும் என்கிறார்கள்.

Keep reading

More from the archive

Puthiya Bharathi

ஆசான் நிகழ்த்திய அற்புத சாதனை

1976, ஜூன் மாதம், முன்பாதி. நமது ஆசான் அவர்கள் காரைக்காலில் 7 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி ஒன்றினை நடத்திக் கொடுத்து விட்டுக் கூடுவாஞ்சேரிப்…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

ஆன்மீகம் தோன்றிய காலத்திலிருந்தே அதற்கேற்ற உணவு எது என்பது பற்றி ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. ‘ஆன்மீகவாதிகள் புலால் உண்ணலாமா? உண்ணக்…

Kannimuthu

வள்ளார் வழி

காற்றாலே, புவியாலே: சுகன்மத னாலே”கனலாலே, புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலெ பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே.வேற்றாலே…

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும்,…

Granthaalayam

சௌக்கியம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!சௌக்கியம்னா என்னன்னு தெரியுமா?…

Puthiya Bharathi

அடைந்தே ஆக வேண்டும் வீடு பேறு

திருநெல்வேலிநெல்லை SKY டிரஸ்ட்அறிவுக்கூடத்திறப்புவிழாவுக்குச்சென்றிருந்தேன். மன்றஅன்பர்ஒருவர்வீட்டில்தங்கியிருந்தேன்அவர்கள்வீட்டுப்பையன்ஒருவன்பிரம்மஞா…