KG Sami1937 — 2006

தவம் – 16

Signed KG Sami

அந்த Negative-ஐ Affirmative ஆக்கிப் பார்த்தால் அங்கே வெளி இருக்கிறது. சுத்தவெளி இருக்கிறது. அங்கே அரூபமான ஒரு தத்துவம் ஒன்று இருக்கிறது அதற்கு உருவம் கிடையாது. எவ்வளவு தொலைவு இருக்கிறது. போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். எதனால் போறது? அறிவால் தான் போக முடியும். அறிவு தானே அங்கு இருக்குது. அறிவு போய் அங்கே சேர்ந்தால் என்ன ஆகும்? ஜலம் தானே சமுத்திரத்தில் இருக்கிறது. ஜலம் தானே காவேரியாக ஓடுகிறது. ஜலம் போய் ஜலத்தில் சேர்ந்த பிற்பாடு காவேரி எங்கே? கடல் எங்கே? சொல்ல முடியுமா?

அந்த மாதிரி அறிவு அங்கே போகும் போது Off ஆகும். அதாவது இயக்கத்தை நிறுத்தி விடும். அறிவு என்ற தத்துவம் இருக்கிறது. அதனால் எல்லை கண்டுபிடிக்க இயலாது. அப்படி ஒன்று இருக்கிறது. மிகப் பெரிய எல்லையை உடையதாக இருக்கிறது. அதற்கு எல்லை கிடையாது என்ற விளக்கங்களை விஞ்ஞானத்தின் வழியாக கற்றுக் கொண்டார்கள் நமது அருள் தந்தையவர்கள்.

அவ்வளவுதானே. நாம் வந்து பிரபஞ்சத்தையே நினைத்து தவம் செய்யலாமா? செய்யலாமே. மனம் எதை நினைத்தாலும் அதுவாக மாறிவிடும். பிரபஞ்சமாக மாறிவிடும். Contemplation ரொம்ப ஜோராக இருக்கும்.

நேத்து ராத்திரி யாராவது வானத்தைப் பார்த்தீர்களா? நட்சத்திரங்கள் எல்லாம் பூத்துக் குலுங்கின. காலையில் சுக்கிரன் ஜெகஜ்ஜோதியாக இருந்ததௌ. ஏனென்றால் காற்றில் தூசி, மற்ற எதுவும் இல்லாமல் மேகமும் இல்லாமல் வானம் பளிச்சென்று இருந்தது.

அந்த மாதிரி நட்சத்திரங்கள் இருக்கின்றன பிரபஞ்சத்தில். அதுதான் பிரபஞ்சம். நட்சத்திரங்களை நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் சாமார்த்தியம். நினைத்துக் கொண்டீர்களா? நன்றாக நினைத்துக் கொண்டீர்களா? உங்களுக்கு என்ன மார்க்  போடலாம்? 100 மார்க் போடலாமா? இல்லை 10 மார்க் போடலாமா?

எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக நீங்கள் நினைச்சுக்கிட்டீங்களோ, எவ்வளவு துல்லியமாக நினைச்சுக்கிட்டீங்களோ – நட்சத்திரங்களைத் தான். உங்க ஊரில் தெரியற மாதிரி நினைச்சுக் கிட்டீங்களா? இல்லை, நேத்து ராத்திரி ஆழியாரில் தெரிந்த மாதிரி நினைச்சுக்கிட்டீங்களா?

ஸ்சொஸ்டமாக நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து அலை எப்படி இருக்கின்றன. கவிழ்த்து வைத்த கிண்ணம் மாதிரி இருக்கிறது. அந்தக் கிண்ணத்துக்குள் நீங்கள் இருக்கிற மாதிரி இருக்குது கிண்ணத்தின் Roof-ல் முத்துக்கல் பதித்த மாதிரி இருக்குது.

ஆனா பாதி வானம் தான் தெரியும். மீதி 6 மாதம் கழித்துத் தான் தெரியும். பாதியும், பாதியும் ஒன்று. 6 மாதம்  முன்பு பார்த்தோமே அது. வித்தியாசம் இருக்கும் நட்சத்திரங்கள் இருக்கும் வசம். இன்றைக்குப் பார்த்தோமே அது எல்லாம்.

பார்க்கலாமா, ராக்கெட்டில் ஏறிக் கொண்டு சந்திரன் வரை போவதற்கு எவ்வளவு ரூபாய்? எனக்கு ஞாபகமில்லை. 50 மில்லியன் டாலர் என்னமோ சொன்னார்கள். அந்த சமாச்சாரம் தெரியுமா? இத்தனை கோடி ரூபாய் செலுத்தினால் நம்மை ராக்கெட்டில் வைத்து Satellite -ல் வைத்து ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டு விட்டு விடுவார்கள். அந்தக் காலத்தில் விமானத்தில் ஏறி மீனம்பாக்கத்தை ஒரு  சுத்து சுத்திக் காண்பித்து காசு வாங்குவார்கள். இப்போ அந்த திட்டம் இல்லை போல் இருக்கிறது.

அந்த மாதிரி ஒரு ராக்கெட்டில் அல்லது Sattelite-ல் ஏறிப் போய்ப் பார்த்தால்தான் முழு வானம் தெரியும். அதுவும் ராக்கெட் அல்லது Sattelite மறைப்பது போக மிச்சம். மற்றபடி முழு வானத்தையும் யாராலும் ஒரே சமயத்தில் பார்க்க முடியாது.

ஏன் முடியாது? கற்பனையில் பார்க்கறீங்க. மனம் எப்படிப்பட்டது என்று நினைக்கிறீங்க? எதை எதை வேண்டுமானாலும் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும்.

சாக்லெட் இல்ல சாக்லெட் அதைக் கொஞ்சம் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். நாக்கில் வைத்து சப்பிக் கொண்டிருப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். இனிக்கிறதாகவும் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். என்னமா சாக்லெட் ஊறுகாய் காரம் போயிடுச்சா. இப்போ நாக்கு எரியவில்லை அல்லவா.

அன்பர்களே! ஆகவே நமது அருள் தந்தையவர்கள் ‘பிரபஞ்சத்தை’ Universe-ஐ கற்பனையிலே கொண்டு வந்தார்கள். Energy தான் அங்கு தான் இருக்குது. Energy Particles தான். ஆகாசமாகவோ அல்லது காற்று, நெருப்பு, நீர், நிலமாகவோ நட்சத்திர மண்டலங்களாகவோ மாறி இருக்கிறது.

சக்தி களம் என்று பெயர் வைத்தார்கள். முதலில் நட்சத்திர மண்டலம் என்றுதான் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

இந்த ‘சக்தி கள’ தவத்தை நாம் செய்யும் போது ’எவ்வளவு பெரியதாக இருக்கும்’ ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். மனம் எதை நினைத்தாலும் அதுவாக மாறும். எவ்வளவு பெரியதாக இருக்கிறீங்க? 2000 கோடி ஒளியாண்டு Diameter. அவ்வளவு பெரியவர்கள் நீங்கள். நீங்கள் நினைத்தால் அவ்வளவு பெரிய வடிவத்தை எடுக்க முடியும். ‘விஸ்வ ரூபம்’ – பெரிய வடிவம் என்றால் ஜனங்களுக்குத் தெரியவில்லை. ‘விஸ்வ ரூபம்’ என்றால் தெரியும். பெரிய உருவம் என்று அர்த்தம்.

Keep reading

More from the archive

KG Sami

தவம்-4

நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக்…

Puthiya Bharathi

ஜீவ காந்தப் பெருக்கப் பயிற்சி – எச்சரிக்கையும், பாதுகாப்பும்

’வான் காந்தம்’ – ‘ஜீவ காந்தம்’ என, காந்தமானது இரண்டு வகைப்படும். எது அண்டவெளியிலே வான் காந்தமாக இருக்கிறதோ, அதுவே நமது உடலிலே, ஜீவ காந்தமாக…

KG Sami

தவம் – 17

பெரிய உருவத்தை யார் எடுத்தார்கள். கடவுளால்தான் முடியும். கண்ணன் எடுத்தார் ‘விஸ்வ ரூபம்’ அப்படி எடுக்கும் போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும்…

Kannimuthu

பிறவித் தொடர் தத்துவதில் செய்த புரட்சி

வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,நவயுகத்திற்…

KG Sami

தவம் – 42

இயற்கை உட்பாதத்தை அனுப்பி நமக்கெல்லாம் தண்டனை கொடுத்து கடமையைச் செய்யும் விதமாக இறைவன் வருகிறான். இந்த மாதிரி வேலையை அவனுக்கு வைக்கக் கூடாது. இந்த…