KG Sami1937 — 2006

தவம் – 40

Signed KG Sami

பிரம்ம ஞானத்தைப் பெறுவதற்கு அந்தக் காலத்தில் குருவோடு கூடி இருக்க வேண்டும். குரு சிஷ்ய பரம்பரை என்று சொல்வார்கள். குருவுக்குத் தெரிந்ததெல்லாம் நமக்குத் தெரிய வேண்டும் என்றால் குருவோட Life முழுமைக்கும் நாம் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. கூடவே இருக்க வேண்டும். பிரம்ம ஞானத்தைத் திருமூலர் தனது குருவாகிய மௌன குருவிடம் எப்படிப் பெற்றார் என்றால் அதற்கு குரு காணிக்கை கொடுத்து பெற்றார். குரு காணிக்கையாக எதனைக் கொடுத்தார். தன்னுடைய உடல், பொருள், ஆவி மூன்றையும் நீர் ஊற்றித் தத்தம் பண்ணிக் கொடுத்தார். பிரம்ம ஞானத்தை பெறுவதற்காக advance ஆக கொடுக்கிறார். குரு காணிக்கையை.

பிரம்ம ஞானம் என்றால் நானூறு ரூபாய் கொடுத்து விட்டு முக்கால் அடிக்கு அரை அடி தாள் ஒன்று வாங்கி வந்து விடுகிறோம். நாங்கள் அந்தக் காலத்தில் இதைப் பற்றித் தான் சொல்லுவோம்.

அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் என்னிடம் விதை நிறைய இருக்கிறது. உங்களிடம் குறைவாக இருந்ததென்றால் நீங்கள் தேடிப் பார்த்து, தண்ணீர் பார்த்து, பள்ளம் பார்த்து விதைக்கிறீர்கள். என்னிடம் விதை நிறைய இருக்கிறது. நான் வாரி இறைக்கிறேன். சேற்றில் விழுந்தால் அது முளைக்கிறது. கட்டாந்தரையில் விழுந்து விட்டால் எனக்கு என்ன நஷ்டம். மகரிஷிகளுடைய அணுகுமுறை இது.

முற்காலத்து அணுகுமுறை பக்குவம் பார்த்துக் கொடுப்பது. இரண்டையும் wave பண்ணிப் பாருங்கள். நான் பாண்டிச்சேரியில் நிறைய அருள்நிதிகளை உருவாக்கினேன். அதை நான் பெருமையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. Numbers தான் அதிகம்.

அதில் ஒரு அருள்நிதி வீட்டுக்கு நான் போகும் போது அவருடைய மனைவி என்னைப் பார்த்து சிரிக்கும். எளக்காரமாகச் சிரிக்கும். பெரிய வாத்தியார் வர்ரார்ய்யா என்று சிரிக்கும். என்ன அர்த்தம் என்றால் ஆம்படையான் குடிக்கிறான். இந்தக் குடிகாரனை திருத்தாமல் அவனுக்கு அருள்நிதி பட்டம் வாங்கிக் கொடுத்த வாத்தியார் வருகிற என்று சிரிக்கும்.

அவருடைய நண்பர் இன்னொரு அருள்நிதி. பொண்டாட்டியைப் போட்டு அடிக்கிறார் என்று புகார் சொல்வார். புகார் சொல்வது குடிகார அருள்நிதி. “பொண்டாட்டிய போட்டு அடிக்கிறான். ஊரெல்லாம் திட்டுறாங்க இவனைப் போய் ஆழியார் அழைச்சிகிட்டுப்போய் ஆசிரியராக்கி இருகிறீர்கள்.”

Keep reading

More from the archive

KG Sami

தவம்-6

மேலேற்றப்பட்ட குண்டலினி சக்தி ஆக்கினையில் பல காலம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தால் மனக்கட்டுப்பாட்டை மீறி, உடலுக்கும், மனதுக்கும் பல தொந்தரவுகளை…

KG Sami

வான் காந்தம், ஜீவ காந்தம்

வான் காந்தம், ஜீவகாந்தம் எவ்வளவு மகிமையான வஸ்துக்களாக இருந்து கொண்டு எவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் செய்து கொண்டு இருப்பது தெரியாமல் இருக்கிறது.…

KG Sami

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…

Kannimuthu

வியப்பு

மனவள்க்கலையில் நமது ஆசான் அருள் தந்தை அவர்கள் வகுத்தருளியுள்ள பஞ்சபூத நவகிரக தவக் கருத்துக்களோடு மேற்காணுகின்ற வள்ளார் அவர்களுடைய பாடலை ஒத்துப்…

Kanniyappan

வெட்டவெளிக்குமூலம்?

எல்லாபொருட்களுக்கும்மூலம்சுத்தவெளிஎன்றுநாம்சொல்லுகின்றபோது, அந்தச்சுத்தவெளிக்குமூலம்எது, என்றுகேட்கின்றனர். அதாவது,…

KG Sami

தவம்-14

புதுப் பொண்ணு மாப்பிள்ளை வந்தா ஆரத்தி எடுக்கறாங்க பாருங்க, மஞ்சள் தண்ணீர் கலந்து தாம்பாளத்தில் அதை எப்படி சுத்துவது. மெதுவாக தந்திரமாக தண்ணீர்…