ஒரு செயலைத் தெரிந்து செய்யும் போது ஒரு பலன் ஏற்படும். தெரியாமல் செய்யும் போது வேறு பலன் ஏற்படும். காரியம் ஒன்று தான். பென்சில் சீவுகிறோம் என்று தெரிந்து பென்சில் சீவினால் “led” வெளியில் வரும். பென்சில் சீவுகிறோம் என்று தெரியாமல் சீவினால் “blood” வெளியில் வரும். அவ்வளவு தான் வித்தியாசம்.
எந்த ஒரு காரியத்திலும் மனம் பொருந்தி செய்ய வேண்டும். எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் அந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வோடு செய்ய வேண்டும். Two Wheeler ல் போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து செல்ல வேண்டும். நாம் roadல் நடந்து சென்று கொண்டிருக்கிறோம், road-ஐ cross பண்ணுகிறோம் என்று தெரிந்து செய்ய வேண்டும். அவ்வளவு தான் அந்தச் செயலிலே பரிமளிப்பு வந்து விடும். அந்தச் செயலிலே பாதகம் வராது.
நாம் தீட்சை கொடுக்கிறோம். நாம் தீட்சை கொடுக்கிறோம் என்ற உணர்வோடு தீட்சை கொடுக்க வேண்டும். இறைநிலையிலே இருந்து தீட்சை கொடுக்க வேண்டும். இந்த ஜீவன் உய்ய வேண்டும். இந்த ஜீவன் உய்வதற்காக இப்பொழுது நான் தீட்சை கொடுக்கிறேன். அன்பர்களே வேறு எதற்காக தீட்சை கொடுப்பீர்கள்.
இன்றைக்கு நான் தீட்சை கொடுப்பது 103வது கேஸ். இந்த record-ஐ maintain பண்ணுவதற்காக சிலர் தீட்சை கொடுக்கலாம் அல்லவா, ஒரு பழக்கமாக இருக்கிறது. இது 175-வது படம். அப்புறம் அவர்கள் எப்படி நடிக்கிறார்கள். எத்தனை படம் நடிக்கிறோம் என்பது தான் அவர்கள் கணக்கு. எத்தனை பேர் அவர்கள் படத்தைப் பார்த்து நல்லவர்களாக மாறினார்கள் என்ற கணக்கே அவர்களிடம் கிடையாது.
நாம் தீட்சை கொடுக்கும் போது இந்த ஜீவன் உய்ய வேண்டும் என்ற உணர்வோடு கொடுக்கிறோம். இந்த வார்த்தை மகரிஷிகளுடைய வார்த்தை இந்த ஜீவன் உய்வதற்காக நான் தீட்சை கொடுக்கிறேன். ‘யுவது’ என்றால் என்ன? இறைநிலையை மறந்து இருக்கக் கூடிய ஜீவன் இறைநிலையை உணர்ந்து இருக்க வேண்டும். இறைநிலையை நினைந்தவாறே இருக்க வேண்டும். அதன் காரணமாக தவறிழைக்காமல் வாழ வேண்டும். ‘தவறு’ என்றால் என்ன? துன்பம் இழைக்காமல் வாழ வேண்டும். அதன் காரணமாக துன்புறாமல் வாழ வேண்டும்.
Ultimate ஆக நோக்கம் என்ன வருகிறது பாருங்கள். துன்பம் இல்லாத வாழ்வை இந்த ஜீவன் அடைய வேண்டும் என்பதற்காக நாம் தீட்சை கொடுக்க வேண்டும். இந்த உணர்வை இருக்க வேண்டும்.
அன்பர்களே நமது மகரிஷிகள் சொல்வார்கள். ஒரு செயலிலே ஒரு விளைவு வரும் என்று எதிர் பார்க்காதீர்கள். வேறு விளைவு வரலாம். அந்தச் செயலுக்குச் சம்மந்தம் இல்லாத விளைவும் வரலாம். காரணம் என்னவென்றால் நோக்கம் என்ன? திறமை என்ன? எவ்வளவு திறமையாக நீங்கள் கொடுக்கிறீர்கள். எந்த நோக்கத்திற்காக நீங்கள் கொடுக்கிறீர்கள். அதற்குத் தக்கவாறும் விளைவு வேறுபடும். ஆராய்ச்சியோடு இருக்க வேண்டும்.
ஒரு வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்கள். அவர்கள் சாப்பாடு போடுவார்கள். என்ன நோக்கத்தோடு சாப்பாடு போடுவார்கள். ‘தம்பி வெயிலில் வந்திருக்கிறதே, பாவம் பசிக்குமே என்ற உணர்வோடு போடுகிறார்களா. அந்த உணவு அரை மணி நேரத்தில் செரித்துப் போய் விடும். சரி! போட்டுத் தொலைப்போம் என்ற உணர்வில் போட்டார்கள் என்றால் 3 நாட்கள் ஆனாலும் செரிமானம் ஆகாது. வயிற்றுவலி வரும். இதெல்லாம் எங்கு கவனிக்கிறோம்.
செரிமானம் செய்தாலும் என்ன செய்கிறது என்று தெரிந்து செய்தல் வேண்டும். செரிமானம் ஆகிக் கொண்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டும். ஏன் இன்று செரிமானம் சீக்கிரமாக இருக்கிறது. ஏன் இன்று டல்லாக இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால் சாப்படு போட்டவர்களுடைய நோக்கம் புலப்பட்டு விடும்.
அன்பர்களே! எதற்காக தீட்சை கொடுக்க வேண்டும் என்பதை மகரிஷிகள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த ஜீவன் உய்ய வேண்டும் என்று அந்த மனப்பான்மை நமக்கு இருக்கும் விதமாக தொடர்ந்து இருக்கும் விதமாக நமது திறமையை ஊக்கிக் கொள்ள வேண்டும். அந்த மனப்பான்மை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த உலகம் உய்ய வேண்டும். உலகம் துன்புறுகிறது. உலக சமாதானம் வேண்டும். ’தாரக மந்திரம்’ என்று சொல்வார்கள். இந்த மாதிரி இருந்தால் ஆக்கினை சீக்கிரம் புலப்பட்டு விடும். திறமை கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். அதையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது தான் இரண்டிலும் நோக்கம் ரொம்ப முக்கியம்.
அன்பர்களே! நெப்போலியனைப் பற்றிய கதை ஒன்று சொல்வார்கள். அது எவ்வளவு தூரம் கதை, எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. நெப்போலியன் அடிக்கடி இரவில் வந்து சோதனைக்கு வருவாராம். படைகள் சோதனைகள் வருவாராம் அவை முகாமில் இருக்கும் போது.
அவர் வரும்போத காவலுக்கு நிற்கிற படைவீரர்கள் துப்பாக்கியை இப்படி வைத்து அப்படி வைத்து படார் என்று ஒரு அடி அடிக்க வேண்டுமாம். அது இராணுவ முறை, ஒரு சிப்பாய் கொஞ்சம் தூங்கி விட்டான். அடடே நம்ம தலைவர் வருகிறார்.