KG Sami1937 — 2006

நயத்தக்க நாகரீகம்

Signed Arulnithi Muthappan

1976 இன் இறுதியில் ஒரு நாள் மகரிஷிகள் பாண்டிச்சேரிக்கு வர இருக்கிறார். அது ஒரு வெள்ளிக் கிழமை பகல் 12 மணி போல் அவர் வந்து சேர வேண்டும். பாண்டிச்சேரிக்காரர்களாகிய நாங்கள் ‘எந்த பஸ்ஸில் வந்து சேர வேண்டும்’ என்று விவரம் சொல்லி, சென்னையிலிருந்து முன் பதிவு செய்து கொண்டு வரும்படியாக மகரிஷிகளுக்குத் தகவல் சொல்லியிருந்தோம். நாங்கள் எதிர்பார்த்த பஸ்ஸில் அவர்கள் வரவில்லை. வரவேற்று அழைத்துச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றிருந்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

     கொஞ்ச நேரத்தில் ஓர் ஆள் வந்து என் தோளில் தொட்டார். திரும்பிப்ப் பார்த்தேன். அவர் பெயர் கொஞ்சம் விநோதமாக இருக்கும். மன்னன் கணியன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ‘மகரிஷிகள் வரவில்லையா?’ என்று ஏமாற்றத்தோடு கேட்டேன். ‘வந்திருக்கிறார். அதோ!’ என்று சிறிது தூரத்தில் நின்ற மகரிஷிகளைக் காட்டினார். மகரிஷிகள் சோர்ந்து போயிருப்பது தெரிய வந்தது. அவர் நிற்கும் இடத்திற்கு ஓடினேன். ‘சார், வாருங்கள் போகலாம்’ என்ற அவர், ‘ஒரு ஆட்டோ பிடியுங்கள்’ என்றார்

     ஆட்டோவிற்கு அந்தக் காலத்தில் 7 ரூபாய் ஆகும். 5 கி.மீட்டரில் இருந்த அரியாங்குப்பம் பஸ்ஸில் போனால் டிக்கெட் 3/4 ரூபாய் தான். ஆகையினால், ‘பஸ்ஸில் போய் விடலாம் சாமி’ என்றேன். ‘போய் விடலாம்!’ ஆனால் இப்பொழுது நிலைமை சரியில்லை. நாம் ஆட்டோவிலேயே போய் விடலாம் என்று சொல்லி, ஒரு ஆட்டோவை அவரே கூப்பிட்டுப் பின் சீட்டில் கடைசியில் அவரே உட்கார்ந்து கொண்டார். பெட்டியை இரண்டையும் நடுவில் வைத்துக் கொண்டு நான் ஓரத்தில் உடகார்ந்து கொண்டேன்.

     மன்னன் கணியன் டிரைவர் பக்கத்தில் தொற்றிக் கொண்டார். அவருடைய ஸ்டைல் எல்லாம் விநோதமாக இருக்கும். ஆட்டோ கிளம்பிற்று. ‘ஏன் சாமி? எந்த பஸ்ஸில் வந்தீர்கள். நாங்கள் சொன்ன பஸ் திண்டிவனம் வழியாகவும், வேகமகவும், சீக்கிராமாகவும் வந்து விட்டிருக்குமே!’ என்றேன். அது அரசு பஸ். ‘மரக்காணம் வழியாக வாக்குடிய ஒரு தனியார் பஸ்ஸில் வந்தோம்’ என்றார் நமது மகரிஷிகள்.’ ஐய்யோ! அது சுற்று வழியாயிற்றே! நிறுத்தங்கள் அதிகமாயிற்றே! ரோடு மோசமாயிற்றே!’ என்று பதிறினேன். ‘அதற்கென்ன செய்வது? ஊர் வந்து சேர வேண்டுமே!’ இது மகரிஷியின் பதில்.

ஏன் சாமி அரசு பஸ்ஸில் ரிசர்வேஷன் கிடைக்கவில்லையா?’ என்று கேட்டேன். ‘ரிசர்வேசனுக்குத்தான் முதல் நாளே நண்பரிடம் பணம் கொடுத்து அனுப்பினேன்.’ மகரிஷிகள் மன்னன் கணியனைக் காட்டினார். பணத்தை வாங்கி கொண்டு போனவர் நேரே வீட்டிற்கு போய் விட்டார். ‘ரிசர்வேஷன் எல்லாம் தேவையில்லை’ என்பது அவர் கருத்தாம். நானோ சொன்னபடி, இன்று கால 6 மணிக்கு சென்னை பஸ் நிலைத்தில் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு போய் நின்று கொண்டேன். குறித்த பஸ் போன பிறது நமது நண்பர் வந்து சேர்ந்தார். ‘பஸ் போய் விட்டதே. ரிசர்வ் பண்ணிய டிக்கெட் வீணாகப் போயிருக்குமே!’ என்று வருத்தப்பட்டேன். நண்பர் சொன்னார். ‘நான் என்ன ஏமாளியா? நான் ரிசர்வ் செய்யவில்லையே!/ என்று முகத்தை அவர் ஆனந்தமாக வைத்துக் கொண்டார்.

அத்தோடு, ‘பாண்டிச்சேரிக்குதானே? 100 பஸ்கள் போகின்றன. வாருங்கள் போகலாம்’ என்று கூறி, சென்னை பஸ் ஸ்டேண்டில் முன்னே நடந்தார். நான் என் பெட்டியை தூக்கிக் கொண்டு பின்னே சென்றேன். ஒரு பிரைவேட் பஸ் நின்று கொண்டிருந்தது. ‘அடுத்த பஸ்ஸில் போகலாம்’ என்றேன். நண்பரோ, மடமடவென்று ஏறி உட்கார்ந்து கொண்டார். டிரைவர் சீட்டிற்கு பின் சீட்டில் 2 இடம் இருந்தது. நடு இடத்தில் அவர் உட்கார்ந்து கொண்டார். கியர் ராடுக்கு பின்னால் எனக்கு இடம் கிடைத்தது. ‘வேண்டாம் இறங்கி விடுவோம். அடுத்த பஸ்ஸில் போகலாம்’ என்று சொன்னேன், நண்பரோ சாதாரணமாக, ஆனால் முகத்தில் கவலை தோன்ற, அடுத்த பஸ்ஸில் ஏறி, ‘பாண்டிச்சேரிக்கு போனால் மதிய உணவு நேரம் தாண்டி விடுமே!’ என்றார். ஆட்டோ ஓடிக் கொண்டிருந்தது. மகரிஷிகள் பொறுமையாக விவரமெல்லாம் சொன்னார்.

‘காலையில் எங்கே சாப்பிட்டீர்கள்’? என்று கேட்டேன் ‘ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஓர் டீக்கடையில் நிறுத்தினான். நண்பர் சாப்பிட்டார். எனக்கு மனங்கொள்ளவில்லை. பேசாமல் இருந்து விட்டேன்’ என்றார் மகரிஷிகள். ‘மணி ஒன்றரையை தாண்டுகிறதே, சாமி! இப்போது பசி அதிகமாக இருக்குமே!’ என்று நான் பதறினேன். ‘காலையிலிருந்தே வயிறு அதன் வேலையை செய்து கொண்டிருக்கிறது’ என்றார் அவர் சாதாரணமாக! அரியாங்குப்பம் வந்து விட்டோம்.

ஒரு தனவந்தர் வீட்டில் உணவு, தங்கள் ஏற்பாடாகியிருந்தது. சுமார் 2 மணிக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தோம் உணவு தயாராகவில்லை. ‘நல்லதாய் போயிற்று! பச்சைத் தண்ணீரில் ஒரு குளியல் போட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு இடுக்கில் நுழைந்து கொண்டார் நமது மகரிஷிகள்.

இடுக்கில் பாத்ரூம். 5 நிமிடத்தில் குளித்து விட்டு கட்டியிருந்த ஆடைகளை நனைத்துப் பிழிந்து கொண்டு வந்து காயப் போட்டார், மகரிஷிகள். அவர் முகம் இப்பொழுது கொஞ்சம் பார்க்கும் படியாக இருந்தது. ‘வழியெல்லாம் ரொம்ப வெயிலா சாமி? பயண் களைப்பு மிகவும் அதிகம் போல் தோன்றுகிறதே!’ என்றேன் நான். ‘பயணம் பயணந்தான், சித்திரை மாத வெயில் வெயில்தான் அதெல்லாம் அது அது மாதிரியேதான் இருந்தது!. ‘என் கஷ்டத்திற்குக் காரணம் அவையல்ல’ என்றார் மகரிஷிகள். நான் அதிசயமாக அவரிப் பார்த்து, ‘பிறகேது சாமி?’ என்றேன். ‘இஞ்சின் சூடு மொத்தமும் என்னைத் தழுவிக் கொண்டே வந்தது. கியர் ரட்டுக்குக் கீழே இருந்த மூடப்படாத பொத்தல் வழியாக டீசல் புகை கபகபவென்றே மேலே ஏறி எனக்கு பாத பூஜை செய்து கொண்டே வந்தது’. மகரிஷிகள் சாதாரணமாகச் சொன்னார்.

மகரிஷிகள் பெற்ற தொல்லைகளையும், துன்பத்தையும் நினத்து உருகிய எனது வருத்தம் அவருடைய நகைச்சுவை உணர்வில் மறைந்து போயிற்று. ‘ஏன் சாமி இறங்கி அடுத்த பஸ்ஸில் வர வேண்டியது தானே!? பதில்; ’வரலாம். ஆனால் நண்பரை விட்டு விட்டுத்தான் வர வேண்டும்’. நான்: ‘அவரையும் இறக்கி அழைத்துக் கொண்டு வர வேண்டியது தானே?’ பதில்: அவர் தான் சாப்பாடு போய் விடும் என்று பயம் காட்டுகிறாரே!

இந்த இடத்தில் மன்னன் கணியனைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். ‘அவர் ஓர் அதிசயமான பேர்வழி. இரண்டு பேண்ட், ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் போட்டிருப்பார். இரண்டு ஷர்ட், ஒன்றின் உள் ஒன்றாகப் போட்டிருப்பார். போக வேண்டிய ஊருக்குப் போனவுடன் புறத்தே இருக்கும் ஷர்ட், பேண்ட், இரண்டையும் கழட்டி வைத்து விட்டு, உள்ளே இருக்கக் கூடிய பேண்ட், ஷர்ட்டோடு இருப்பார், படுப்பார். காலையில் முகம் கழுவிக் கொள்வார். குளியல் கிடையாது. ஊருக்குக் போகும் போது கழட்டி வைத்த புறச் சட்டைகளை மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.

 அவர் மகரிஷிக்கு வழித் துணையாக தானாகவே வந்து சேர்ந்து கொள்வார். ‘வேண்டாம் போ! போ!’ என்று நமது அருள் தந்தையா துரத்துவார்? ஒவ்வொரு ஊர்போய்த் திரும்புகின்ற போதும், எல்லாச் செலவையும் நமது அருள் தந்தையவர்களே செய்து விடுவார். நண்பர் கையில் ஜிப் வைத்த ஒரு சிறிய பேக் இருக்கும். அதில் அதி நவீனமான ஒரு போட்டோ கேமரா இருக்கும். போகின்ற இடமெல்லாம் சந்திக்கின்ற நண்பர்களை வத்து தனித் தனியாக

Keep reading

More from the archive

KG Sami

தவம்-9

நமக்கு மூன்று விதமான பதிவுகள் உண்டல்லவா? அதில் முதலாவது ஆகாம்ய கர்ம பதிவுகள். இவை புறமனத்தால் பதியும் என்று சொல்லுவார்கள். ஆக்கினைச் சக்கரத் தவம்…

Arulnithi Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

KG Sami

தவம் – 23

தவம் செய்வதற்கு ஒரே தெய்வத்தை (பிரம்மாவை) வேண்டி தவம் செய்தார்கள். அவன் என்ன கேட்டான் என்றால், ‘நித்திய தத்துவம்’ தத்துவம் என்றால் இந்த இடத்தில்…

Kannimuthu

வள்ளார் வழி

காற்றாலே, புவியாலே: சுகன்மத னாலே”கனலாலே, புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலெ பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே.வேற்றாலே…

KG Sami

தவம் – 21

அந்த ஆற்றல் புகையை மட்டும் இழுக்க முடியாது. புகையிடம் செல்லாது. இப்படி ஒரு பொருளிலிருந்து ஒரு முழ உயரம் தள்ளி உள்ள இடத்தில் ஏதோ ஒரு விசேஷம்…

KG Sami

தவம் – 28

இப்போ சுத்தவெளியினுடைய இருப்பு, அதனுடைய பெருமை எல்லாம் யாருடைய பெருமையாக நினைக்கிறீர்கள். நமது பெருமையாக நாம் என்றால் யார்? தெய்வம். தெய்வத்தின்…