காற்றாலே, புவியாலே: சுகன்மத னாலே”
கனலாலே, புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலெ பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே.
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன்! விரைந்தளித்தான் எனக்கே!
ஏற்றாலே இழிவென்நீர் நினையாதீர்! உலகீர்!
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
-அருட்பிரகாச வள்ளார்
1.புவியாலே=மண்ணாலே
2.ககனமதனாலே=விண்ணாலே
3.கனலாலே=நெருப்பாலே
4.புனலாலே=நீரினாலே
5.கதிராதியாலே=சூரியன் முதலிய9கிரகங்களாலே
6.கூற்றாலே=எமனாலே(மரணத்தாலே)
7.கோளாலே=புற்ங்கூறுதலாலே
8.பிற இயற்றும்= மற்றும் செய்யக்கூடிய
9.வேற்றாலே=வேறுகாரணங்களாலே
10.ஏற்றாலே=ஏற்றுக் கொள்வதனால்,இறைவன் கொடுக்க நாம் வாங்கிக்கொண்டால்.