பெரிய உருவத்தை யார் எடுத்தார்கள். கடவுளால்தான் முடியும். கண்ணன் எடுத்தார் ‘விஸ்வ ரூபம்’ அப்படி எடுக்கும் போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும் அங்கே அந்த விஸ்வரூபத்தில் இருந்தன. அதை நமது சித்திரக்காரனிடம் கொடுத்தால் எப்படி வரைவான்? அவன் கற்பனைப்படி எழுதுவான். நாக்கை துருத்திக் கொண்டு ஒன்று – நெருப்பைக் கக்கிக் கொண்டு ஒன்று. விஸ்வ ரூப தரிசனம் பார்த்திருக்கீங்க இல்ல. நீங்க உங்க கற்பனையைச் செலுத்துங்க.
ஒரு வேடிக்கை காசக்காரனூர் மன்றத்தில் அகத்தாய்வு நான்காம் நிலை நடத்திக் கொண்டிருக்கும்போது நம்ம பூமி கிட்ட உள்ள கிரகம் எது? என்று கேட்டேன். ஜனங்களைப் பார்த்து எல்லோரும் சுக்கிரன், புதன், அது, இது என்கிறார்கள். சூரியன் கிட்ட உள்ள கிரகம் எது என்று கேட்டால் அது புதன். பூமி கிட்ட உள்ள கிரகம் எது சந்திரன்.
அந்த விதமாக நாம் உலகத்தைப் பார்க்க வேண்டும். பிரபஞ்சத்தைப் பார்க்க வேண்டும். நமக்கு வெளியில் இருந்து கொண்டு பிரபஞ்சத்தைப் பார்த்தோமானால் நமது வடிவம் பிரபஞ்சத்தின் வடிவம்.
நமது வடிவம் 4 சதுர கனமீட்டர் இருக்குமா? பிரபஞ்சத்தின் வடிவம் எவ்வளவு? Diameter மட்டும் 2000 கோடி ஒளியாண்டு. அப்போ Formula apply பண்ணி Volume கண்டுபிடிங்க. அவ்வளவு பெரிய வடிவம். நமது பிரபஞ்சம். நமது வடிவம், நமது விஷயம், இவ்வளவும் எங்கே இருக்கிறது? என்னிடம் இருக்கிறது. அப்போ என்னோட சொத்து மதிப்பு என்ன? சொல்லுங்க பார்ப்போம். இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லலாமா? எல்லாம் இருக்கிறது வேண்டும் போது கிடைக்கும்.
ஆகவே சக்தி களம் என்பது மிகப் பெரியது. அந்த வடிவம் எடுத்தாலே சாமியிடம் போன மாதிரி தான் என்பது மகரிஷிகள் கணக்கு. துவாதசாங்க தவத்தை வகுத்தார்கள். அதன் பிறகு சாமியிடம் போன மாதிரி தான் ஆகிறது. சாமியான மாதிரி இல்லையே. சாமி எங்கே இருக்கிறது? முதலில் சொன்னோம் அரூபம். சுத்தவெளி.
இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது. எதிலே இருக்கிறது. Emptyness-ல் இருக்கிறது. அப்போ இதைவிட அது பெரிது. இறைவனுடைய தன்மையை பலவிதமாக சொல்வார்கள். அதில் அவன் மிகப் பெரியவன் என்று சொல்வார்கள். பரன், பரம் என்று சொல்வார்கள். பரன் என்றால் பெரிது. பரமன் என்றால் பெரியவன்.
இஸ்லாம் மதத்தில் காலையில் ஒரு தொழுகை செய்வார்கள். கோபுரத்தில் ஏறி தொழுகை வாக்கியம் இரண்டு. அது Loud Speaker வைத்து சொல்வார்கள். “அல்லாஹூ அக்பர்” “God is Great” கடவுள் மிகப் பெரியவன். மிக மிகப் பெரியவன். அதோ ஒருவன் பெரியவன் என்றால் அவனை விட இன்னொருவன் பெரியவனாக இருந்தால், என்ன செய்வது இதற்கு மேல் பெரியவன் என்று இல்லாமல் Superlation – ல் பெரியவன்.
அது சுத்தவெளித் தத்துவத்தில்தான் அடங்கும். அந்தச் ‘சுத்தவெளி’ எவ்வளவு தொலைவு வரை இருக்கிறது என்பது தெரியவில்லை. எதில் இருந்து எது வரைக்கும் இருக்கிறது என்பது தெரியவில்லை. ‘Linear Motion’ -லே தெரியவில்லை. Height எவ்வளவு? Depth எவ்வளவு தெரியவில்லை. ஆகவே பெரிய, பரம Great. அக்பர் என்பதெல்லாம் இந்த ஒரு வார்த்தையில் அடங்கும். அது ‘வெளி’.
’வெளி’ என்ற வார்த்தைக்கு சாதாரணமாக என்ன பொருள் சொல்வார்கள் என்றால் ‘Out’. இன்னும் ஏதாவது பொருள் இருக்கிறதா என்று பார்த்தால் ‘ஒன்றுமில்லை’ என்ற ஒரு பொருளும் இருக்கிறது.
சிங்கப்பூர் போய் வந்தார் ஒருவர். அங்கே போய் விட்டு கிராமத்துக்கு திரும்பி வருகிறார். பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டுக்கு நடந்து போகிறார். என்னங்க இது நம்ம ஊர் தானா, நான் இறங்கின ஸ்டாப் சரிதானா என்று கேட்கிறார். பஸ் ஸ்டாப்பில் இருந்து வீடு வரைக்கும் தோப்பு இருந்தது. அது அப்படியே காணோம். தோப்பு என்னவாச்சு. திறந்த வெளியாகி விட்டது. ஒன்றுமே இல்லை என்றால் அதை ‘வெளி’ என்ற வார்த்தையால் சொல்வது தமிழ். Outside என்பதை ‘வெளி’ என்ற வார்த்தையால் சொல்லுவது தமிழ். இந்த இரண்டுமே இறைவனுக்குப் பொருந்தும்.
அங்கே ஒன்றுமில்லை. இருந்தது எல்லாம் பிரபஞ்சத்துக்குள் விட்டுவிட்டு வந்து விட்டோம். ‘வெளியே’ அது. வெளியில் Outside-ல் இருக்கிறது. பிரபஞ்சத்துக்கு Outside-லும், மனதுக்கு Outside-லும் இருப்பதால் அதை ‘வெளி’ என்று சொன்னார்கள். அங்கே எதுவுமே இல்லை என்பதால் ‘வெளி’ என்று சொன்னார்கள். இதை நினைக்கணும்.
மனம் எதை நினைக்கிறதோ அதுவாக மாறும். ‘எதை’ சுத்தவெளியை அதாவது ‘தெய்வத்தை’ மனம் என்னவாகும். மனம் தெய்வமாக மாறும். ஒருவர் வீட்டிலிருந்து தவம் செய்கிறார். சமையல்கட்டில் சாம்பார் கொதிக்குது. வெங்காய வாடை ஜோராக இருக்கிறது யாருக்கு? தவம் செய்பவருக்கு தவமா? அது? இல்லை. ஆக்கினை கூட இல்லை. இந்தத் தொந்தரவுக்கு நடுவில் இருந்து நீங்கள் ‘Repeated’ ஆக தவம் செய்து தவம் செய்து வரும்போது ‘Undisturbed’ ஆக எந்தவித வாதனையும் இல்லாமல் நீங்கள் சுத்தவெளியை நினைக்கலாம்.
சுத்தவெளியை நினைப்பது ஆக்கினைச் சக்கரத்தை நினைப்பது மாதிரி அவ்வளவு சுலபமில்லை.