KG Sami1937 — 2006

பொங்கல் வாழ்த்து - 1970

Signed KG SAMI


புதுமைச்  சித்தர்  தத்துவஞானி  உலகச்  சமுதாய  சேவா  சங்கத்தலைவர்  தவத்திரு  வேதாத்திரி  சுவாமிகள்  அவர்கட்கு  அன்னாரின்  மாணாக்கருள்  ஒருவனான  காரைக்கால் க. கோவிந்தசாமி  சமர்ப்பிக்கும்

மெய்ப்பொரு  ளாகிநின்  மேன்மை  யுணர்ந்ததால்,

மெய்ப்பொரு  ளாக்கியெம்  மேன்மை  யுணர்த்திட,

மெய்விளக்  கத்தவ  மன்றங்  கண்டனை!

நெய்விளக்  கன்னவெம்  நெற்றிச்  சுடர்பெற

நிகழ்த்தினை  யற்புதம்!  நின்னிரு  திருப்பதப்

புகழ்த்திறம்  பாடநான்  புண்ணியம்  செய்ததென்!

ஆற்றுநற்  றொண்டெலாம்  அதிகமில்  கடனென

புகழைப்  பேணா  பெற்றியோய்!  பெண்மையை

இகழாக்  கொள்கை  இயற்றிய  ஏந்தலே!

காமக்  குரோத  லோப  மோக

மாமத  வஞ்சமாய்  மயங்கிய  அறிவினைத்

துலக்கி  விளக்கித்  தூய்மையை  மீட்டு

விளைவறிந்  தாற்றும்  விழிப்பினைத்  தந்தாய்!

துன்ப  விருளே  தோன்றெனா  அருண!

அன்பையும்  இன்பையும்  அறத்தோ  டிணைத்துநல்

லமைதியை  அவனியில்  அமைத்திட  நினைத்தனை!

எண்ணிய  எண்ணியாங்  கெய்துவர்  திண்ணியர்

திண்ணிய!  நீயும்  எண்ணிய  தியன்று

வரலா  றாகும்  வளமிகு  காலம்

வருவிதம்  விளக்கி  வைத்தனை,  வாழ்க!

வாழ்கநின்  றிருவடி!  வாழ்கநின்  ளருட்கரம்!

வாழ்கநின்  வண்புகழ்!  வாழ்கநின்  அருட்குழு!

வளர்கநின்  தொண்டிவ்  வுலகுள  வரையிலென்

றென்றும்  வாழ்த்தினேன்;  என்றும்  வாழ்த்துவேன்;

இன்றும்  வாழ்த்தினேன்  இன்பப்  பொங்கல்

பொங்கிச்  சரிதல்போல்  இன்றைய  வாழ்த்தும்

பொங்கிச்  சரிந்ததென்  உள்ளம்விட்  டேட்டில்!

ஓங்குக  ஒழுக்கம்!  ஒளிர்க  அறச்சுடர்!

நீங்குக  மிடிநோய்!  நிலைக்கநீ  ளமைதி!

நின்று  நிலவுக  அந்தமில்  லின்பம்!

குன்றும்  தொளியெனத்  துலங்குக  ஞானம்!




Keep reading

More from the archive

KG Sami

தவம் – 30

எண்ணெய் எங்க வீட்டில் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. பெரும்பாலும் வீட்டில் எள் எண்ணெய் தான் இருக்கும். அதை நல்லெண்ணெய் என்று சொல்வார்கள். அந்த…

Granthaalayam

நீங்களும் சித்தராகலாம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த…

Granthaalayam

இன்சொல்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!உலக மக்கள் எல்லோரும் மன…

KG Sami

தவம் – 16

அந்த Negative-ஐ Affirmative ஆக்கிப் பார்த்தால் அங்கே வெளி இருக்கிறது. சுத்தவெளி இருக்கிறது. அங்கே அரூபமான ஒரு தத்துவம் ஒன்று இருக்கிறது அதற்கு உருவம்…

Kannimuthu

அறம் + தவம் = அருள்

அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது, அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன?…

KG Sami

தவம் – 8

(3) தலையில் பேன் ஊறுவது போல் இருக்கும், எவ்வளவு நேரம் கிண்டிப் பார்த்தாலும் ஒரு பேனும் அகப்படாது. இந்த நிகழ்ச்சி எதைக் குறிக்கிறது? ஒட்டு மொத்தமாக…