KG Sami1937 — 2006

தவம் - 49

Signed KG Sami

கடைசி வரைக்கும் சுழல் தெரியாது. அழுத்தம் அதிகமாகி நிலை கொண்டுவிடும். Concentration ஆகிவிடும்.

உட்கார்ந்து கொடுப்பதா, நின்று கொண்டு கொடுப்பதா. உங்கள் Common sense கெட்டிக்காரத் தனத்தை வைத்து சொல்லுங்கள். வேதாத்திரி மகரிஷி நின்று கொண்டு கொடுக்கச் சொல்லித்தான் எங்களுக்கு ஆசிரியர் பயிற்சியில் சொல்லிக் கொடுத்தார்.

நீங்கள் உங்கள் அறிவைக் கொண்டு ஆராயுங்கள். ஒரே வேதாத்திரி மகரிஷி இரண்டு விதமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்போ நான்கைந்து பேர் இருப்போம். இப்போ ஹால் முழுவதும் அடைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். So, உட்கார்ந்து எழுந்தரிச்சு, உட்கார்ந்து எழுந்தரிச்சு முழங்கால் வலி வந்து விடும். 8 அடி தூரம்தான் இருக்கவேண்டும் என்பார்கள். உங்கள் பார்வை கீழ் சாய்ந்த பார்வையாக இருக்க வேண்டும்.

நீங்கள் காது கொடுத்துக் கேளுங்கள். அதற்குள்ளாக தத்துவத்தை தெரிந்து கொண்டால் தகராறு கிடையாது. முதலில் ஆக்கினைச் சக்கரத்தில்  ‘டச்’ கொடுத்து தவம் செய்யச் சொல்ல வேண்டும். எவ்வளவு தூரம் ஆக்கினைச் சக்கரத்திலே தவம் பூரிக்குதோ அவ்வளவு துரிய தவம் நன்கு வரும்.

ஆசிரியராகப் பட்டவர் தன்னை ‘Charge’ செய்து கொள்ள வேண்டும். காலையில் தவம் செய்தாரோ இல்லயோ, ஒரு சில நேரங்களில் தவம் செய்யாமலிருக்கலாம். அன்று துரியம் கொடுக்க வேண்டி இருக்கும். எவ்வளவு நேரம் தவம் செய்தாரோ, தவம் நன்றாக வந்ததோ, இல்லையோ, எனவே Charge  பண்ணிக்கொள்ள வேண்டும்.

கண்களில் ஆற்றலைக் கொண்டு வரவேண்டும். அப்போ உச்சியிலே தவம் செய்திருந்தாரென்றால் கண்களில் ஆற்றல் வரும். கண்கள் வழியாகக் கொடுக்கப்படும் ஆற்றல் உச்சிக்குப் போகும். அதற்கப்புறம் சீடனைப் பார்த்து லேசாகக் கண்களைத் திறந்து என்னைப் பாருங்க. உற்றுப் பாருங்க எனது கண்களையே பாருங்க என்று சொல்லி நீங்கள் அவருடைய வலது கண்ணை உற்றும், தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் கண்களில் இருந்து அருள் சக்தி பாய்வதாக நினைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். அது மட்டும் போதாது. அவருக்கு அந்த Conscious வேண்டும். தெய்வீக சக்தி எனது கண்கள் வழியாக உங்கள் கண்களிலே பாய்கிறது. ஒரு கண்ணை மட்டும் பார்த்துக் கொண்டு கொடுத்தாலும், மற்றொரு கண் தானாக இழுத்துக் கொள்ளும்.

இரண்டு tank ஐ ‘interconnect’ பண்ணிக் கொண்டு ஒரு tank – ல் மட்டும் நீர் ஊற்றினால் தானாக இரண்டு tank க்கும் போவது போல் ஒரு கண்ணை மட்டும் பார்த்துக் கொண்டு கொடுத்தாலும் இரண்டு கண்களுக்கும் பாயும். அதில் தடங்கலோ, தயக்கமோ இருக்காது.

தெய்வீக சக்தி எனது கண்கள் மூலமாகத் தங்கள் கண்களுக்குப் பாய்கிறது தொடர்ந்து ‘maintain’ பண்ணுவதற்காக வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். அருட் பேராற்றல் என் கண்கள் வழியாக தங்கள் கண்களுக்கு பாய்கிறது. குண்டலினி சக்தி வேறு, தெய்வீக சக்தி வேறு, அருட்பேராற்றல் வேறு இல்லை. இந்த சக்தி மேலும் பெருகிக் கொண்டே இருக்குமாக. கண்கள் இமைக்காமல் பார்க்க வேண்டும்.

இதில் சில அனுபவங்கள் வரும். அதை நீங்கள் அருள் நிதியர் திறன் ஊக்கப்பயிற்சியால் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கண்கள் எரியும். ஏன் கண் எரிகிறது என்றால் 2 காரணங்கள் இருக்குது. தவமே செய்வதில்லை. இந்த ஆள் துரியம் கொடுப்பது என்கிற experienceக்காக வந்திருக்கிறார். அந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டி வந்து உட்கார்ந்து இருக்கிறார் ‘charge’ போதவில்லை. receptivity இல்லாததால் கண்கள் எரிகிறது.

இன்னொரு காரணம் உங்களிடமே charge இல்லை. அவர் கேட்கிறார். கொடு, கொடு என்று. நல்லா receptivity இருக்கும். கண்ணிமைக்காமல் பாரு என்று சொன்னோம். நீங்களும் அப்படித் தான் கொடுக்க வேண்டும். கண்களை அழுத்தி, நிறுத்தி  ‘relax’ பண்ணிக் கொள்ள வேண்டியது தான்.

இப்போ தெரியுதா. ஆசிரியராக, அருள் நிதியாக இருக்கக் கூடியவர்கள் எதற்குத் தினமும் தவம் செய்ய வேண்டும். ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி செய்ய வேண்டும். இப்போ தெரிகிறது உங்களுக்கு. இப்போ கொடுக்கறீங்க தெய்வீக சக்தி பாய்கிறது. அருட் பேராற்றல் பாய்கிறது. பாய்ந்து நிரம்புகிறது என்று சொல்ல வேண்டும். இந்த சக்தி குண்டலினியோடி கலந்து துரியம் செல்லட்டும். என்று சொல்ல வேண்டும்.

இப்பொழுது தான் ஒரு வேலை வருகிறது. தண்ணி தவித்தால் ஒரு விரலைக் காட்டுவோமே. எந்த விரல்? Thumbs up. கட்டை விரல். கட்டை விரலைக் கொண்டு போய் ஆக்கினைச் சக்கரத்திலே வைத்து ஆற்றலைப் பாய்ச்சி அப்படியே உச்சிக்கு கொண்டு போய் கட்டை விரலை எடுத்து விட்டு ஆள் காட்டி விரலால் உச்சியிலே சுற்ற வேண்டும். சிறிய சுற்றாக ஆரம்பித்து பெரிய சுற்றாக மண்டை முழுவதும் சுற்றி விட வேண்டும். அப்புறம் உச்சியிலே கை வைக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு தத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள். அப்படியே சுற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. சுழல விட்டு நிலை கொள்ள வேண்டும். சுழற்சியும் கொடுத்து. உச்சியுலும் கை வைத்து அவருக்கு இந்த இரண்டு அனுபவத்தையும் கொடுக்க வேண்டும்.

போதும் ரொம்ப புத்திசாலிகள் சிலபேர் இருக்கிரார்கள். எதைச் செய்தாலும் வலச்சுழலாக 3 சுற்று செய்வது, பின் இடச் சுழலாக 3 சுற்று சுற்றி விடுவார்கள். இந்த மாதிரி கிறுக்குத்தனம் எல்லாம் பண்ணி விடாதீர்கள்.

இடச்சுழலாக சுற்றினால் Degmagnet ஆகி ஆள் discharge ஆகி ரொம்பக் கஷ்டப்படுவார்கள். இப்படி நெய்வேலியில் ஒரு அனுபவம் ஏற்பட்டது. எனக்கு இடச்சுழலாக சுழலுது. அவர் வலச் சுழல் என்கிறார். இவர் வலச் சுழல் என்கிறார். எனக்கு மட்டும் இடச் சுழலாகவே சுற்றுகிறது.

அப்புறம் விசாரித்து பார்த்ததில் அவருக்கு துரிய தீட்சை கொடுத்தது யார்? என்று விசாரித்துப் பார்த்ததில் அவர் தீட்சை கொடுக்கும் போதே இடச் சுழலாக 3 சுற்று, வலச்சுழலாக 3 சுற்று, மீண்டும் இடச் சுழலாக 3 சுற்று என்று கால் பயிற்சி செய்து போலக் கொடுத்து விட்டார். கடைசியாக இடச்சுழலாகக் கொடுத்த காரணத்தால் இவருக்கு இடச்சுழல் ஏற்பட்டு விட்டது. இவ்வாறெல்லாம் நிகழக்கூடாது. எனவே வலச் சுழற்சி மட்டும் தான் கொடுக்க வேண்டும்.

அதன் பின் சங்கற்பம். நான் எங்கு துரிய தீட்சைக் கொடுத்தாலும் வாய் வழியாகச் சொல்லி repeat பண்ணச்சொல்வேன். அவ்வளவு முக்கியமானது சங்கற்பம். தவம் செய்து விட்டு சங்கற்பம் சொல்லா விட்டால் தவத்தின் பயனே போய் விடும்.

பின்னர் வாழ்த்து அருட் பேராற்றப் கருணையினாலும், அருள் தந்தை யோகி ராஜ் வேதாத்திரி மகரிஷியின் ஆற்றலினாலும் குண்டலினி யோகத்தில் உங்களுக்கு இன்று ‘துரிய தவம்’ மனம் உவந்து கற்பித்து வைத்திருக்கிறேன். இதை நல்ல முறையிலே பயின்று வாழ்வில் வெற்றியும், மேன்மையும் அடைவீர்களாக’ என்று வாழ்த்தி தவத்தை வழக்கமாக முடிப்பது போல முடித்து விட வேண்டும்.

சங்கலபம் சொல்வதற்கு முன் கல்கண்டு கொடுக்க வேண்டும். கல்கண்டை வாயில் போட்டு சுவைக்கச் சொல்லி இந்த இனிப்புச் சுவையை உச்சியில் வைத்து உணர வேண்டும். இனிமேல் எந்த உணவை உண்டாலும் எந்த அனுபோகம் கொண்டாலும். மொத்தம் எத்தனை அனுபோகம் இருக்கிறது. சொல்லுங்கள். ஐந்து எது எது எதுக்கு அடையாளம். நாக்குசுவை, மூக்குவாசனை, கண்பார்வை, காதுஒலி, ஊறுணர்வுக்கு எது அடையாளம். Sex.

அப்போ எந்தெந்த அனுபோகம் கொண்டாலும் உச்சியிலே நினைவை வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அளவு முறை வரும். Number of times, number of places, number of duration இப்படி என்னென்னவோ இருக்கிறது. இதெல்லாம் இன்றைக்கு சமுதாயத்தில் ஒரு சாபக்கேடாக இருக்கிறது. இதைப்பற்றி சொல்லாமல் இருந்து விட்டால் கூட பரவாயில்லைங்க.

வீட்டுக்கு வீடு T.V என்று ஒரு சனி இருக்குதுங்க. சென்ஸார் போர்டு என்ற ஒன்று இருக்குதா இல்லையா. எங்க காலத்துல கை அக்குளுக்கு மேலே போய்விட்டாலே சென்ஸார் போர்டை கண்டிப்போம். இந்தக் காலத்திலே  T.V யைப் பார்த்தால் சென்ஸார் போர்டு என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஆண், பெண் சேர்ந்து நடிக்கும் சில காட்சிகளைப் பார்க்கும் போது என்னென்ன பண்றாங்க தெரியுமா. நாம் அதை கவனிக்க நாம் அந்த நிலைக்கு உணர்ச்சி வயப்பட்டு மனம் அந்த செயலுக்கு போய் விடுவோம்.  அந்த நினைவு வந்து விடும். அங்கே நடக்கக் கூடிய அந்தச் செயல் அந்த நினைவைத் தந்து நினைவு அந்த செயலுக்குப்போய் விடும். அப்போ துரிய தவம் செய்து என்ன பயன்? ஆக்கினைத் தவம் செய்து என்ன பயன்?

ஆகவே தான் சொல்லி விடுகிறோம். எந்தச் செயல் செய்தாலும் உச்சிக்கு நினைவைக்கொண்டு வந்து அந்தந்த அனுபோகத்தைக் கொள்ள வேண்டும்.

இதை இன்றைக்கு ஆரம்பிக்கிறோம். அடிக்கடி வரக்கூடிய சுவை உணர்வு, எப்பொழுதும் வரக்கூடிய Sex உணர்விலும் இருக்க வேண்டும். அவரவர்களுடைய வயதுக்கு தக்கவாறு நளினமாக, நாசூக்காகச் சொல்லி விட வேண்டும். இந்த கல்கண்டை வாங்கிச்சுவைங்க. இந்த இனிப்புச் சுவையை நீங்கள் உச்சியிலே இருந்து அனுபவிக்க வேண்டும். இன்று முதல் நீங்க என்ன உணவு உண்டாலும், வேறு எந்த அனுபோக கொண்டாலும், உச்சியிலே நினைத்து அந்தந்த அனுபோகங்களையும் கொள்ள வேண்டும். கொஞ்ச காலம் நினைவாகச் செய்து விட்டால் பின்னர் தன்னில் தானாக வந்து விடும். சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டும். என்று தோன்றுகிறது பாருங்கள். அது மாதிரி வாழ்க்கையில் நாம் ஏமாந்து போகாமலும், அழிந்து போகாமல் இருப்பதற்கும் இந்த துரிய தவம் உதவியாக இருக்கும் என்று கூறி நிறைவு செய்து விடலாம்.

அருள் நிதியர் திறன் ஊக்கம் என்பது பயிற்சியின் நோக்கம் நீங்கள் பிறக்கும் போது குறிப்பிட்ட குணத்தைப் பெற்றிருப்பீர்கள். அது வம்சா வழி வரக் கூடியதாகவும் இருக்கும். ஆனாலும் அதிசயமான உண்மை என்னவென்றால் எனக்குத் தெரிந்த இடத்தில் பேரக்குழந்தைகள் இருவர் இருக்கின்றனர்.

ஒன்று ஆண். இன்னொன்று பெண். ஒன்று மூத்தது. இனிமையான முகம், சிரித்துக்கொண்டே இருக்கும். துஷ்டத்தனம் பண்ணாது. தம்பி ஒருவன் அதுக்கு. அவனைப் பார்த்தாலே கோபமாக, கடுகடுப்பாக இருப்பான். யாரையும் Insult பண்ணுபவனாக முகத்தோற்றம் இருக்கும். அடாவடி பண்ணுவான். அக்காவைப்போட்டு அடிப்பான். அக்கா அடி வாங்கிக்கும்.

துடைப்பம் ஒன்று எங்க வீட்டு வாசலில் வைத்திருப்பார்கள். துடைப்பம் என்றால் தெரிகிறதா. விளக்குமாறு அதிலுள்ள குச்சிகளை உறுவி மதிலுக்கு அந்தாண்டை வீசிடுவான். ‘குச்சியை உருவாதடா உருவாதடா’ என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டான்.

இரண்டு பேரும் ஒரே அம்மா, அப்பாவுக்கு பிறந்தவர்கள் தான் ஒரே தாத்தா, பாட்டி தான் ஆகவே பிறக்கும் போதே வம்சா வழியில் இருந்த ஏதோ ஒண்ணு Pick up ஆகி வந்திருக்கும். பையன் ஏதோ ஒரு தாத்தாவைப் போல இருப்பான் போலிருக்கு தாத்தா என்றால் 2 தலைமுறை, 3 தலைமுறை தாண்டி கூட இருக்கலாம். பெண் ஏதோ ஒரு பாட்டியைப் போலவும் இருக்கலாம். முந்தின தலைமுறை பாட்டியாகவும் இருக்கலாம்.

அப்படி நீங்கள் பிறக்கும் போது ஏதோ இயல்பான குணாதிசியத்தைப் பெற்று இருக்கலாம். உயர்வாக இருக்கும் என்று சொல்ல முடியாது உயர்வு என்றே வைத்துக் கொள்ளுங்கள். நான் சொன்ன மாதிரி பேத்திப் பெண்ணாகவே இருந்தீங்க என்று வச்சுக்குங்க. நடுவிலே சகவாச தோசத்திலே, சந்தர்ப்ப சூழ்நிலையிலே, பழக்க வழக்கத்திலே வேறுபட்ட மாதிரிப் போய் விடும்.

குணாதிசியம் பிறக்கும் போது ஒன்றாகவும், பின்னர் awkward ஆகவும் மாறிப்போய் விடலாம். பிறக்கும் போது ஒன்றாகவும், பின்னர் ஏதோ ஒரு Shape லே நீங்கள் இருக்கலாம். அது தான் character. அது மாற வேண்டும். நலமாக வேண்டும். அதை நீங்கள் பெற வேண்டும். மாற்றத்தை, மேம்பாட்டை நீங்கள் பெற வேண்டும். அவசரப்பட முடியாது. அவசரப் படவும் கூடாது.

நேற்று ஒரு சேதி கேள்விப்பட்டேன். இரண்டு பேரு அருள் நிதி. இருவரும் கணவன், மனைவி, என்ன அருள் நிதி, அருள்நிதியாக இருந்து கொண்டு இப்படி போறங்களே! வர்ராங்கனே என்று இருவரும் புருஷனப் பற்றி பெண்டாட்டியும், பெண்டாடியைப் பற்றி புருஷனும் புகார் கூறினார்கள்.

ஆனால் உண்மை என்ன வென்றால் இரண்டு பேரிடமும் மாற்றம் நடந்து கொண்டு தானிருக்கிறது. ஆனால் அது இவர்களுக்குப் போதவில்லை. அடுத்தவர் திருத்தவேண்டுமென்று அவசரப்படுகிறார். தானும் திருத்த வேண்டுமென்றுவரவில்லை. என்று வச்சுக்குங்க. Expectation, எதிர்பார்ப்பு என்று சொல்வார்கள். மற்றவர்களும் சிறப்பாக வரவேண்டும் என்பதில் என்ன தப்பு. அதற்கு நம்மால் எதாவது செய்ய முடியுமானு பாத்து உதவி செய்யலாம்.

நாமும் மற்றவகளிடத்தில் எதிர்பார்க்கிற மாதிரி உயர்ந்திருக்கிறோமோ, குணத்தில் மாற்றமடைந்திருக்கிறோமோ என்று பார்க்க வேண்டும். அந்த உயர்வைத் தரக் கூடியது தான் தவமும், தற்சோதனையும். தற்சோதனை செய்ய வேண்டும். தவமும் செய்ய வேண்டும். அருள்நிதியர்கள் விடாமல் செய்ய வேண்டும்.

அடிக்கடித் தவம் செய்ய வேண்டும் வீட்டில் ஊருக்குப் போய் இருகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் ஹோட்டலில் சாப்பிட்டு வந்து கூட இரண்டு வேளை தவம் செய்ய வேண்டியது தானே. சாப்பிட்டு, சாப்பிட்டு தவம் செய்ய வேண்டியது தானே. குடும்பக் கடமைகள் இல்லை. குழந்தை, குட்டிகள் இல்லை.

கல்யாணம் மண்டபத்தில் போய் உட்கார்ந்திருப்பீர்கள். அது உலக சம்பிரதாயம். மொய் கொடுக்கணுமே, பரிசு கொடுக்கணுமே அதற்காகத் தான் உட்கார்ந்து இர்ப்பார்கள். நல்ல நேரம் வரவில்லை என்று ஐயர் சிலசமயம் நேரத்தைக் கடத்தி விடுவார். போரடிக்கும். அக்கத்திலே இருக்கிற ஐயாவிடம் அரசியல்கதை, சினிமாகதை இல்லேன்னா, இப்போ சுனாமிகதை பேசிக் கொண்டிருப்போம். ‘சள சள’ என்று பேசிக் கொண்டிருப்போம். ஐயர் சொல்கிற மந்திரம் காதில் விழாது. உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு புறம் பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்களும் நேர்ந்து. பேசிக் கொண்டிருப்பார்கள்.

அருமையான நேரமாச்சே ஒரு மணிநேரம். நல்லது செய்வதற்கு எப்பவெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ அப்பவெல்லாம் செய்யலாம். அவ்வாறு நீங்கள் தற்சோதனையும் செய்துவரணும். மௌனம் போட்டால் தான் தற்சோதனை என்றில்லாமல் மௌனம் போடாமலே தற்சோதனை செய்யலாம். வசதியான நேரத்தைப் பார்த்து தேர்வு செய்து கொள்ள வேண்டும். மௌனம் ஒரு நாள் முழுவதும் இருப்பது ஆரம்ப நிலைப் பயிற்சியாளர்களுக்குத் தான்.

ஆனால் தற்சோதனை செய்வதற்கு இவ்வளவு நேரம் தேவை, மௌனம் தேவை என்றெல்லாம் இல்லை. கொஞ்ச நேரம் நாம் நினைத்துப் பார்த்தால் கூட தற்சோதனை தான். எல்லோரும் தற்சோதனை செய்கிறார்கள். தற்சோதனை செய்கிறோம் என்று தெரியாமலே தற்சோதனை  செய்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்கக் கூடாது. என்று நினைக்கிறார்களா இல்லையா. மனைவி கோபித்துக் கொண்டு போய்ட்டாங்க. அவங்க குடுபத்த பற்றி பேசி, மாமனாரை இழுத்து, மாமியாரை இழுத்துப்பேசியதால் கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள். அப்போ நினைக்கிறார். என்ன இருந்தாலும் அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்கக் கூடாது என்று. தற்சோதனை தான் அது.

இறை நிலையில் இருந்து கொண்டு நாம் செய்தோமேயானால் அதை நாம் தற்சோதனை என்று சொல்கிறோம். ஆகவே தவமும், தற்சோதனையும் இணைந்தது. ஒன்றை இழுத்தால் இன்னொன்று தானாக வரும். நீங்கள் தற்சோதனை  செய்து பார்த்தீர்களென்றால் தவம் மாதிரியே இருக்கும் concentration வரும்.  ஆனால் தவம் தான்.

தவம் செய்யும் போது பெரிய தொந்தரவு வரும். எவ்வளவு காலம் தவம் செய்பவராக இருந்தாலும் கூட எண்ணங்கள் வரும். நல்ல எண்ணமாகவும் இருக்கலாம். கெட்ட எண்ணமாகவும் இருக்கலாம். ஒன்றுமில்லாத எண்ணமாகவும் இருக்கலாம், அர்த்தமில்லாத எண்ணமாகவும் இருக்கலாம்.

ஏனென்றால் மகரிஷி கேட்டாங்க. accelerator ல் இருந்த கால எடுத்தவுடன் வண்டி நின்று விடுமா என்ன?

Keep reading

More from the archive

Kannimuthu

வியப்பு

மனவள்க்கலையில் நமது ஆசான் அருள் தந்தை அவர்கள் வகுத்தருளியுள்ள பஞ்சபூத நவகிரக தவக் கருத்துக்களோடு மேற்காணுகின்ற வள்ளார் அவர்களுடைய பாடலை ஒத்துப்…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…

KG Sami

வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா

15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களால்…

Granthaalayam

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு…

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும்,…

KG Sami

தவம்-11

துவாத சாங்கம் என்று நாம் செய்கின்ற தவம் துரியாதீத தவத்தில் வருகிறது. துவாத சாங்கம் போய் சென்று பின் துரியம் போய் இறங்கி வந்து வாழ்த்துவதும் உண்டு.…