பெரும்பாலும் ஆசிரமங்களிலும், மடங்களிலும் தான் இந்த தவம் செய்யப்பட்டது. சமுதாய விரிவாக அந்த காலத்தில் வரவில்லை. ஆசிரமங்களிலும், மடங்களிலும் செய்யும் பொழுது அந்த மடத்து தலைவருக்கு துரியாதீத தவம் தெரிந்திருக்கலாம். தெரிந்திருக்கனும். தெரியும். அவருக்கு வயது அறுவது, எழுபது இருக்கும். இந்த தவத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லி தர வேண்டும். சொல்லிக் கொடுத்துவிட்டுத்தான் போக வேண்டும் என்று இருப்பார். யாருக்கு ? Assistant – மடத்து தலைவர் அதாவது Next to மடத்து தலைவர். அவருக்குத்தான் சொல்லித் தருவார். அவரை தகுதி ஆக்கிக் கொண்டே வருவார். சொல்லி கொடுக்க வேண்டும் (இளைய பட்டம்) என்று நினைத்து கொண்டே இருப்பார். அது எமனுக்குத் தெரியாது எமன் ஒரு நாள் இரவு வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவார். எப்படி இளையபட்டம் இந்த புதிய தவத்தினை தெரிந்து கொள்வார்? இப்படியாக மறைந்த பல விஷயங்களில் இந்த ‘துரியாதீத தவமும்’ ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
சரி ! போனது போகட்டும். நாம் அதை ஒரு ஆராய்ச்சி பண்ணி எவ்வாறு தான் அந்த தவத்தை செய்திருப்பார்கள் என்று அனுமானம் பண்ணிவிட்டால் போகிறது. துரியாதீத தவத்தை ‘புணருத்தாரனம்’ (Reconstruct) செய்துவிட்டால் போகிறது என்று அருட்தந்தை அவர்கள் அவர்களுடைய ஞானத்தின் மூலம் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள்.
துரியம் என்பது உச்சியில் செய்வது. ‘அதீதம்’ என்றால் ஜாஸ்தி துரியம் மிக அதிகமாகப் போய் விட்டால் துரியாதீதம் இப்படி வைத்துக் கொண்டார்கள் சில பேர் ஆ! ‘துரியாதீத தவம்’ என்றெல்லாம் தனியாக கிடையாது. துரியத்தையே நன்றாக செய்து வந்தால் அது தானாக துரியாதீதமாக மாறிவிடும். அதற்கு தனியாக ‘Procedure’ எல்லாம் கிடையாது என்று வதம் செய்தவர்கள் சில பேர்.
அப்படித்தான் வைத்துக் கொள்வோம். அது சரியாக இருக்குமா என்று ஆராய்ச்சி பண்ணிப் பார்ப்போம்.
ஒரு மடம். இருபது அல்லது இருபத்து ஐந்து பேர் நன்றாக துரியம் செய்பவர்கள். உட்கார்ந்து துரிய தவம் செய்ய தானாக துரியாதீத தவமாக மாறிவிடும். 10 பேர் நன்றாக உட்கார்ந்து தவம் செய்தனர். அவர்களுக்கு தானாக துரியாதீதம் வந்து விட்டது. ஆனால் தனக்கு வந்தது என்ன? என்று அவர்களால் கொண்டு கொள்ள முடிய வில்லை. Identification (அடையாளம்) இல்லையே! நமக்கு துரியாதீத தவம் வந்து விட்டது என்று தெரியாமலே துரியம் செய்வதாக நினைத்துக் கொள்வர்.
இன்னொரு 10 பேர் உட்கார்ந்து தவம் செய்தனர். ஆனால் கொஞ்சம் அவசரக்காரர்கள். நன்றாக உட்கார்ந்து துரிய தவம் செய்தனர். அவர்களுக்கு நன்றாக துரியம் வந்தது. Top கழண்டு போனது போல் தவம் நன்றாக வந்தது. துரியத்தில் உச்ச நிலை அடைந்தனர். ஆனால் அவர்கள் அடடே! துரியாதீதம் நமக்கு வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டார்கள். எதை துரியாதீதம் என்று நினைத்துக் கொண்டார்கள். நல்ல சிறந்த துரியத்தையே துரியாதீதம் என நினைத்துக் கொண்டார்கள்.
ஒரு சாராருக்கு துரியாதீத நிலை வந்து துரியாதீத நிலை வரவில்லை துரியத்தின் அதீத நிலை என்று நினைத்துக் கொண்டார்கள். இன்னொரு சாரார் வராத துரியாதீத தவத்தை வந்து விட்டதாக எண்ணி ஏமாந்து போய் விட்டார்கள். ஆக துரியாதீதம் போச்சு. இது தான் முந்தைய நிலை.
மகரிஷிகள் இதை காணுகிறார்கள் அப்போ துரியாதீதம் என்றால் என்ன?
தவம் என்றாலே ஒரு அர்த்தம் இருக்குது. கோவிலுக்குப் போகணும் ஒரு காய் வாங்கி வா என்றால் பையன் என்ன கொய்யாக் காயா வாங்கி வருவான். தேங்காய் தான் வாங்கி வருவான். ‘டேய் விருந்தாளி வந்து விட்டனர். போய் நாலு இலை வாங்கி வா’ என்றால் வெற்றிலையா வாங்கி வருவான். ஒரே வார்த்தை பொருள் சிறப்பானது. அதுபோல தவம் என்றாலே துரியாதீதம் தான்.
பூ என்றால் தாமரை – வழக்கில் இல்லை. இலக்கியத்தில் இருக்கிறது. பூ மகள் என்றால் தாமரையில் தோன்றியவள். தவம் என்றாலே துரியாதீதம் என்றால், நாம் இது வரை செய்தது தவம் அல்ல. நீங்களும் நானும் அல்ல. சாமியார்கள் மடத்தில் உட்கார்ந்து செய்தார்கள் அல்லவா? அவர்கள்.
ஆன்மீகம் என்பது போலித்தனமாக ஏமாற்று வேலையாக ஆகி விட்டது. வார்த்தை தானே ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு வேறொன்றைக் கொடுத்தால் அது ஏமாற்று வேலை தானே ! இந்த அவல நிலைக்குக் காரணம் துரியாதீத நிலை விட்டுப் போனது தான்.
நமது அருள் தந்தையவர்கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து சேர்த்து சிந்தனை செய்து பார்த்தார்கள். துரியாதீதம் என்பது என்ன நிலையாக இருக்கும். இறை நிலையாகத் தான் இருக்கும். இறைநிலையோடு மனம் கூட்டிக் கொள்ளும் நிலையாகத் தான் இருக்கும்.
மனம் என்பது செத்து தெய்வமாக ஆன நிலை. இதை அடைய முடியுமா? அடைய முடியும். என்பதை பல நூல்களிலும் பல இடங்களிலும் பல குறிப்புகள் இருக்கின்றன. ஆகவே மனதை தெய்வமாக மாற்றும் ஒரு தவமே துரியாதீதம் என்று நமது அருள் தந்தையவர்கள் எடுத்துக் கொண்டார்கள். மனதை தெய்வமாக மாற்ற முடியுமா? மனதுக்கு ஒரு வல்லமை என்னவென்றால் எதை நினைத்தாலும் அதுவாக மாறிப் போகும்.
குறைந்தபட்சம் மனதளவில் இதற்கு நிறைய மேற்கோள்கள் இருக்கின்றன. ஒரு கதை. நீங்கள் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா ? ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையா ? நீங்கள் தவம் செய்ய வில்லை போலிருக்கிறது.