KG Sami1937 — 2006

இன்சொல்

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு

எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

உலக மக்கள் எல்லோரும் மன அமைதியோடும், மன நிறைவோடும் வாழணும். வாழ்கையில பெற வேண்டிய நல்லதெல்லாம் பெற்று மனித குலத்துக்கு தொண்டாற்றி வாழணும். ஒவ்வொருத்தரும் அவங்கவங்க கதையை முடிச்சுட்டு செத்து போயிடக்கூடாது. நாம் தனியா வாழலை, உலகத்தாரோடு சேர்ந்து வாழறோம். தனியா வாழற மாதிரி தோணும், ஆனால் இல்லை. நாம் எல்லோரும் இந்த சமுதாயத்தோடு பின்னப்பட்டிருக்கிறோம், ஒட்டப்பட்டிருக்கிறோம், கட்டப்பட்டிருக்கிறோம். சமுதாயத்தில் இருக்கக்கூடிய நிலைகள் நமக்கு நன்மை, தீமை இரண்டையும் செய்யும். ஆகவே சமுதாயத்தைப் பற்றிய பொறுப்புணர்ச்சியை நாம் எடுத்துக் கொண்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். ஏன்னா எதிர்காலத்துல நமது சந்ததியினர் இந்த சமுதாயத்துலதான் வாழப் போறாங்க. ‘எனக்கென்ன? சமுதாயமாவது, ஒண்ணாவது? நான் என் வேலையைப் பாக்கறேன்’ அப்படின்னு சொல்லக் கூடாது. பிறர் பாதிக்கப்படும் போது அது நம்மையும் பாதிக்கும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வரணும். பொதுவா இப்பல்லாம் யாரும் பிறரைப் பற்றி சிந்திப்பது இல்லை. அதுக்கு காரணம் இனிய மனம் இல்லாததுதான்.

அன்பர்களே!

கொஞ்ச நாள் முன்னால நான் ஒரு நாலு அடுக்கு மாடி வீட்டுல குடியிருந்தேன். அந்த குடியிருப்புல மேல் வீட்டுல இருக்கறவங்க ஜன்னலோரம் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. சாப்பிட்டுட்டு அங்கயே உக்காந்து தட்டுலயே கையை கழுவுவாங்க. கை கழுவிட்டு அந்த சாப்பாட்டு தட்டை ரொம்ப சிரமப்பட்டு ஜன்னல் வழியா வெளிய கொண்டு வந்து ஊத்துவாங்க. அது சுவரெல்லாம் ஒழுகி நாத்தம் எடுக்கும். “அதுல நோய்க் கிருமிகள் உற்பத்தி ஆகுமே! காத்தடிச்சா அந்த தண்ணி குப்புன்னு கீழ் மாடி வீட்டுக்குள்ள போய் விழுகுமே!”ங்கறதை பத்தி எல்லாம் கவலையே படமாட்டாங்க. இது ஒரு உதாரணம் தான். இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாம். இந்த ரப்பர் பேன்ட் பார்த்திருக்கீங்களா? விரிவா அப்புறம் ஒரு சுழி, விரிவா அப்புறம் ஒரு சுழியா இருக்கும். போட்டு போட்டு இழுத்தா விரிவடையும் தெரியுமா? அப்படி விரிவடைஞ்சு, விரிவடைஞ்சு கடைசில லூஸா போயிரும், பார்த்திருக்கீங்களா?. எங்க வீட்டுல ஒரு ஷெட் போட்டிருக்குது பாத்ரூம்ல. அதுல தண்ணி பட்டு ஷாக் அடிக்கும். அதுக்கு ஒரு பிளாஸ்டிக் தளம் வெச்சு அடிச்சு ஒரு சின்ன ரப்பர் பேன்டை இழுத்து வெச்சு போட்டு விட்டோம். ஒரு நாள் கை பட்டு ரப்பர் பேன்ட் கீழே விழுந்துச்சு. பார்த்தா முதல்ல சின்னதா இருந்த ரப்பர் பேன்ட் ரொம்ப பெருசா ஆயிருந்துச்சு. ரப்பருக்கு சுருங்கும் தன்மை இருந்தாலும் கால ஓட்டத்துல சுருங்காத தன்மையும் வந்துரும். அதே மாதிரி தான் மனசும். மனசுல அமைதியும் வரும், பரபரப்பும் வரும், கொந்தளிப்பும் வரும். ஆனா கால ஓdடத்துல மனசுல அமைதி வராது, அது கொந்தளிப்பிலேயே நிக்கும். அப்படியொரு இயல்பு மனதுக்கு இருக்கிறது. ஏனென்றால் மனம் என்பது ஒரு அலையளவு. எப்படி கடலினுடைய அசைவு நீரலையாக இருக்கின்றதோ அதே மாதிரி உயிரினுடைய அசைவு மன அலையாக இருக்கின்றது. அது பரவத்தான் பார்க்குமே ஒழிய சுருங்காது. எங்கேயாச்சும் அலை குதிச்சுட்டு உள்ளே போறதை பார்த்திருக்கீங்களா? அன்பர்களே! பல பேருக்கு கோபம் அடிக்கடி வரும். எப்பவும் கோபத்திலேயே இருப்பாங்க, பார்த்திருக்கீங்களா நீங்க? ஏன்னா, மனம் என்பது உயிரினுடைய அலை. மனதோட இயல்பு என்னன்னா அது விரிந்து கொண்டே இருக்குமே தவிர சுருங்காது. அதுக்கு யாரையும் நொந்து பிரயோஜனம் இல்லை. நமக்கே அந்த நிலை வந்தா கூட நாம நொந்து பயனில்லை. நாம திருந்தணும்.

அன்பர்களே!

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உயிரிலிருந்து புறப்பட்டு வெளியேறுகின்ற அலையே மனம். அது கண்ணுக்கு தெரியாத துகள். ஒவ்வொரு துகளுனுடைய அலையும் பிரபஞ்சம் முழுவதும் நிறையக் கூடியது. ஆகவே மனம் என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பிக் கொண்டிருக்கின்றது. பிரபஞ்சத்திடம் போகும் போது அதனுடைய அழுத்தம் ரொம்பக் கம்மி. நம்மிடத்தில் கொஞ்சம் அதிகம், ஆனாலும் வெளியே செல்லக் கூடியது. சிறிய வட்டம், பெரிய வட்டம், அதை விட பெரிய வட்டம் என விரிந்து செல்லக் கூடியது. திரும்பி வராதது. அதுதான் அங்க ரகசியம். ஆகவே இந்த மனதினுடைய இயக்க வேகத்தை சாதாரணமா எல்லோராலும் குறைக்க முடியாது. தவம் செய்தால் மட்டுமே அது சாத்தியம். தவம் என்றால் என்ன? வெளியே செல்லும் மனதை தடுத்து இனிமே வெளியே போக முடியாதபடி எங்கிருந்து பிறக்கிறதோ அதிலயே விட்டுவிடுவது தான் தவம். இந்த ரகசியந்தான் உலகத்துல ஒருத்தருக்கும் தெரிய மாட்டேங்குது. உலகத்துல விதவிதமான தியானம் உண்டு தெரியுமா உங்களுக்கு? பலப் பல தியானங்கள். உயிர் மேல் மனம் வைத்து தியானம் பண்ணும் போது மன இயக்க வேகம் குறைந்து, மன இயக்கம் துரியம் கடந்த அதீதத்தை அடையும் போது மனம் நின்றே விடும். இப்போது மனம் என்கிற விஷயமே கிடையாது. பரபரப்பு கிடையாது, கொந்தளிப்பு கிடையாது. அமைதி நிலை மட்டும்தான். இது நமது வாழ்க்கையை எவ்வளவு மேம்படுத்தும், நினைச்சு பாருங்க? தவம் செய்ய, தவம் செய்ய மனதுக்கு ஆற்றல் கூடும். தவம் செய்வதன் பலனாக நாம் மனம் திருந்தி இன்முகம், இன்சொல் காக்க வேண்டும். தவம் செய்து, தவம் செய்து ஆற்றல் கூடிய மனம் நினைத்ததை நினைத்த மாதிரி சாதிப்பதற்கான ஆற்றலை பெற்று விடும்.

அன்பர்களே!

நாம் தவம் செய்ததுனால பெற்ற மன உறுதியைக் கொண்டு, நல்லா கவனிங்க, மன தூய்மையை கொண்டுன்னு சொல்லலை, மன உறுதியைக் கொண்டுன்னு சொன்னேன் முதலில் வீட்டில் இனிமையை காத்துக் கொள்ள வேண்டும். ஒரு ரகசியம் தெரியுமா உங்களுக்கு? எதை நாம் அடிக்கடி செய்து வருகிறோமோ அது நமக்கு பழக்கமாகி விடும்.  எனவே இனிய சொற்களையே பேசிப்பேசி முதலில் நம்மை பழக்கப்படுத்திக் கொள்வோம். பிறகு அதுவே பழக்கமாகிவிடும் அல்லவா?..

- நினைவில் உங்களோடு kgs.

Keep reading

More from the archive

Kannimuthu

அறம் + தவம் = அருள்

அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது, அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன?…

KG Sami

தவம் - 46

உடலுக்கு நோய், மனதுக்கு பைத்தியம், வாழ்க்கையே முடிந்து போனவனும் உண்டு. சரியான வழி, சுலபமான வழி முறை தெரியாது. இப்போ நாம் இவ்வளவு சுலபமான வழிமுறை…

Granthaalayam

எல்லோரிடமும் இணக்கம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…

Granthaalayam

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலையை புலன்களால் உணர்ந்து…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…

KG SAMI

பொங்கல் வாழ்த்து - 1970

புதுமைச் சித்தர் தத்துவஞானி உலகச் சமுதாய சேவா சங்கத்தலைவர் தவத்திரு வேதாத்திரி சுவாமிகள் அவர்கட்கு அன்னாரின் மாணாக்கருள் ஒருவனான காரைக்கால் க.…