வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!
போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!
தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,
நவயுகத்திற் கேற்றபடி நன்மைபல வும்சேர்த்தார்.
பவமறுக்கும் வழிசொன்னர், பூர்வீக நிலையான
சிவமிருக்கும் இடம்போகச் சுருக்குவழி சொல்லியுளார்! (வேதாத்திரி..)
அன்றாடம் தவமிருக்கச் சென்றோடும் துன்பமென்றார்.
நின்றாடும் இயற்கை இன்பம்.நீடித்த அமைதிவரும்.
வென்றாகும் மனம்ஆறு குணப்பேயை, மாட்சிவரும்.
குன்றாவீர் குணநலத்தில்! பேறடையப் புறப்படுவீர்! (வேதாத்திரி..)
வேதாந்த வீடுகண்டார். சித்தாந்தத் துள்புகுந்தார்.
நாதாந்தம் நவயுகத்துக் காகாத தறிவித்தார்.
‘யோகந்தம் ஒன்றேதான் மோகாந்தம் போக்கும்’ எனும்
வேதாத்திரி வழிபற்றி விரைவாக உய்ந்திடலாம்! (வேதாத்திரி..)
யோகத்தின் அருட்கையால் அன்புடனே உமைத்தொடுவார்.
தேகத்தின் மேல்கொள்ளும் மோகத்தை நீர்மறந்து.
வேகத்தின் நின்றொடுங்கி உய்ருணவீர்! பரமுணர்வீர்!
ஆகாத்தன் நிலையுணர்ந்து. ஆன்ந்து வீட்டைவீர் (வேதாத்திரி..)