KG Sami1937 — 2006

மதி

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு

எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

மதின்னா என்ன? மதியென்றால் சந்திரன் என்று ஒரு அர்த்தம் உண்டு. மனம் என்று கூட மதி என்ற வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. மதிப்பு என்பதைக் கூட நாம் மதி என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது மதித்தல் என்பதனுடைய பகுதி மதி. மனம் தான் அறிவா இருக்கு, அறிவு தான் மனமா இருக்கு, இரண்டும் வேறு வேறு இல்லை. இருக்கக் கூடிய சிறப்பை வைத்து அதற்கு பெயர் மாற்றப்படுகிறது. அறிவிலேயே ஒரு சிறந்த அறிவு இருக்கிறது. அது என்னன்னா, அறிவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளக் கூடிய அறிவு. மதியைக் கொண்டு தவம் செய்யணும், அறம் செய்யணும் இந்த தவமாகப்பட்டது பழைய பாவம் (நாம் பரம்பரையாக செய்தவை) எல்லாம் போக்கும். பாவத்தை முற்றிலுமாக போக்குவதை நிர்மூலம் என்று சொல்வார்கள். அதாவது மொட்டையா சொன்னா பழைய பாவத்தை எல்லாம் கழிப்பது. அந்த நிர்மூலத்தை நாம் பக்தி மார்க்க நெறியிலே சரணாகதி மூலம் அடையலாம் என்று சொல்வார்கள். இந்தக் காலத்துல இறைவனை சரணாகதி அடையற அளவுக்கு பக்தி, பூஜை, புனஸ்காரம் செய்வதற்கு சொல்லிக்கொடுக்கவும் ஆளில்லை, செய்யவதற்கும் ஆளில்லை, அதற்கு நேரமும் இல்லை. ஆனால் சரணாகதிக்கு பதிலாக வேறொரு வழியிருக்கு... அதுதான் தவம். தவம்னா இறைவனோடு சேர்ந்திருப்பது. அதுக்கு ஒரு கதை சொன்னாங்க பாருங்க... மார்க்கண்டேயனுக்கு வயசு பதினாறானப்ப, எமன் பாசக் கயித்தை எடுத்துட்டு வந்துட்டாரு. சின்னப்பையன் மார்கண்டேயன் பயத்துல சிவலிங்கத்தை கட்டிபிடிச்சுட்டான். எமன் ரெண்டையும் சேர்த்து பாச கயித்தைப் போட்டுட்டாரு. இழுக்க முடியுமா? இழுக்க முடியலை. இதிலிருந்து என்ன தெரியுது? இறைவனோடே சேர்ந்து இருந்தா பதிவு வேலை பண்ணாது, அதுதான் தவம். இறைவனோடு சேர்ந்தே இருப்பதுதான் தவம். துரியாதீதத்தைத் தெரிந்துகொண்டு, நல்ல விதமாக செய்து, அதிலேயே ஆழ்ந்து, லயித்து இறைவனோடே சேர்ந்து தவம் செய்தபடியே இருக்கணும். ஆனால் எப்பவுமே இறைவனோடேயே இருந்து கொண்டிருக்கணும், அப்பத்தான் பாசக் கயிறு கூட உங்க மேலே விழாது. அது தான் தவம். ஆனால் எல்லாத்துக்கும் அறமும்* துணை செய்யணும். அறத்தினுடைய துணை இருந்தால் மட்டுமே தவம் செய்யமுடியும். பாவம் செஞ்சுட்டு தவம் பண்ணி தப்பிச்சுக்கலாம் என நினைக்க வேண்டாம், அறம் செய்தால்தான் தவமே செய்யமுடியும். அறத்தினுடைய துணை இல்லாமல் தவம் வேலை பண்ணாது. எதை செய்தாலும் அறத்தினுடைய துணை இல்லையென்றால், தவம் கைகொடுக்காது. இதையே திருமூலர்,

திளைக்கும் வினைக்கடல் தீர் வுறு தோணி

இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு;

கிளைக்குந் தனக்கும் அக் கேடில் புகழோன்

விளைக்குந் தவம் அறம் மேற்றுணை யாமே.

என்று திருமந்திரத்தில் கூறுகிறார். கம்பராமாயணத்தில் இராவணனைப்பற்றி எவ்வளவு தவம் செஞ்சே நீ! எத்தனை ஆயிரம் வருஷம் தவம் செஞ்சே! ஒரு தவம் கூட உனக்கு உயிரை காபந்து பண்ணி (காப்பாத்தி) கொடுக்கலையே! னு மண்டோதரி சொல்லி அழுகிறமாதிரி ஒரு வாக்கியம் வரும்னு சொல்லுவாங்க. அவ்வளவு தவமும் நல்ல புத்தியை(அறம் செய்ய) கொடுத்திருந்தா தவம் துணையா நின்றிருக்கும். அறம் தான் தவத்தை விட வலிது. ஏனென்றால், தவம் செய்தாலும் அறம் இல்லையென்றால் தவம் பயனற்று போகும். ஆக நல்ல வாழ்வு வேணும்னா, இன்பமான வாழ்வு வேணும்னா, தவமும் அறமும் துணை நிற்க வேண்டும். வாழ்க்கையிலே வெற்றி வேணுமா? இன்பம் வேணுமா? அறம் செய்யுங்க - அறம் செய்தால் தவம் கிட்டும். தவம் கிட்டினால் இறைவன் உங்களோடேயே எப்போதும் இருப்பான். வெற்றி மேல் வெற்றி பெறலாம். இதற்காக உங்களது அறிவை - மதியை பயன்படுத்தலாமே..!

*விளக்கம்: அறம்

1) பிறருக்கு துன்பம் தராமல் இருத்தல் 2) தினசரி நன்றி பாராட்டி வாழ்தல் 3) எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுதல்.

- நினைவில் உங்களோடு kgs.

Keep reading

More from the archive

KG Sami

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத்…

Kannappa

மனிதரில்மட்டும்ஏன்வேறுபாடு?

ஜன்னல்ஓரம்உட்கார்ந்துஇட்லிதின்பதுஎனதுவழக்கம். ஒருநாள்வெளிப்பக்கம்ஒருகாக்கைபறப்பதும்ஜன்னலில்வந்துஉட்கருவதுமாகத்தவித்துக்கொண்டிருந்தது.…

KG Sami

தவம் – 2

முற்காலத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த முறை பிராணாயாமம். பிராணன் என்றால் இரண்டு பொருள். ஒன்று காற்று. இரண்டு உயிர். (தமிழிலும் அப்படி ஒரு வார்த்தை…

KG Sami

தவம் – 31

எத்தனை முறை விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது, விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது என்றால் மூன்று முறை. ஆமாம் அதற்கு மேல் போக வேண்டாம். இன்று…

KG Sami

நீங்களும் சித்தராகலாம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த…

KG Sami

எல்லோரிடமும் இணக்கம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…