KG Sami1937 — 2006

தவம்-15

Signed KG Sami

வேதாந்திகள் சொன்னது என்ன? அறிவே தெய்வம். சித்தாந்திகள் சொன்னதற்கும், வேதாந்திகள் சொன்னதற்கும் வித்தியாசம் இருக்குதா? இவர்கள் சுத்தவெளிதான் தெய்வம் என்கிறார்கள். அது வேறு. ஆக மொத்தம் இரண்டு தெய்வமா! அறிவும், சுத்தவெளியும் ஒன்றுதான்.

சுத்தவெளி தெய்வம் என்று வைத்துக் கொள்ளுங்கள். சுத்தவெளிக்கு உருவம் இல்லை. அப்போ அறிவு தெய்வம் என்றால் அறிவுக்கு என்ன உருவம்? அறிவுக்கு உருவம் கிடையாது. அப்போ அவர்களும் மறைமுகமாக சுத்தவெளியைத் தான் தெய்வம் என்று சொல்கிறார்கள். சரி, சுத்தவெளியைத் தான் தெய்வம் என்று தெரிந்து கொண்டுவிட்டோம்.

துரியாதீதம் செய்வதற்கு சுத்தவெளியை நினைத்தால் மனம் எதை நினைக்கிறதோ அதுவாக மாறும் என்ற கருத்தில் மனம் சுத்தவெளியாக மாறிவிடும் என்று கணக்குப் போட்டார்கள் நமது அருள் தந்தையவர்கள்.

ஆனால் சுத்தவெளி எங்கே இருக்குது? அதைத் தெரிந்தால் அல்லவா அதை நினைப்பதற்கு!

நமது அருள் தந்தையவர்களிடத்தில் உள்ள தனிச் சிறப்பு என்னவென்றால் தத்துவ ஞானிகள் முற்காலங்களில் விஞ்ஞானத்தை பிரஷ்டம் பண்ணி வைத்திருந்தார்கள். இது மிலேச்சர்களுடைய ஞானம் என்று கருதி விஞ்ஞானத்தைச் சேர்க்க மாட்டார்கள். அதைத் தாழ்வு என்று நினைப்பார்கள். நமது அருள்தந்தை அவர்கள் அப்படிப்பட்ட வறட்டுத்தனத்தைக் கொள்ளவில்லை. அதையும் சேர்த்துக் கொண்டார்கள். விஞ்ஞானத்தில் பல விஷயங்கள் சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கு விஞ்ஞானம் பயன்படுகிறது.

இன்றைக்கு கம்ப்யூட்டர் காலத்தில் என்ன சுலபமாகப் போய்விட்டது பாருங்கள். ரயில்வேயில் “ரிசர்வேஷன்” என்ற ஒன்று இருக்கிறது. அந்தக் கலத்தில் கையாலே எழுதுவார்கள். நான் 1978-ல் டெல்லிக்குப் போக வேண்டி இருந்தது. ரிசர்வேஷன் பண்ணி இருந்தேன். அன்றைக்குப் போய் பிளாட்பாரம்-ல் நின்று பார்த்தால் இடம் இல்லை. நான் டிக்கெட்டைக் காட்டி என்ன பிரயோஜனம்? “இடம் இல்லை – Unreserved-ல் ஏறிப் போப்பா” என்கிறார்.

எனக்குத் தெரிந்த நண்பர்கள் அங்குமிங்கும் ஓடி விசாரிக்கிறார்கள். அப்புறம் விசாரித்ததில் பாண்டிச்சேரி கோட்டாவில் இரண்டு டிக்கெட் தனியாக இருக்கிறது. அந்தக் கோட்டாவில் ரிசர்வ் பண்ணி இருக்கிறார்கள். அது இல்லாமல் ஜெனரல் கோட்டாவில் போய்ப் பெயரைப் பார்த்து “K.G. சாமி பெயர் இல்லை” என்று வந்துவிட்டார்கள். எவ்வளவு பிரச்சினைகள் இந்த ரிசர்வேஷனில்!

T.T.R. இப்போது ஒரு வெள்ளைத் தாள் எடுத்து வருகிறார். அந்தக் காலத்தில் ஒரு புத்தகத்தை தூக்கி வருவார். கம்ப்யூட்டர் வந்ததால் எவ்வளவு சுலபமாகப் போய்விட்டது பாருங்கள். விஞ்ஞானம் வாழ்க்கையை எவ்வளவு சௌகர்யமாக்கி வசதியாக்கி துரிதமாக்கிக் கொடுக்கிறது பாருங்கள். அதைப் பிரஷ்டம் பண்ணலாமா? ஆகவே மகரிஷிகள் விஞ்ஞானத்தை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டால் தத்துவ ஞானிக்கு தத்துவ ஞானியாகவும், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாகவும் திகழ்ந்தார்கள்.

விஞ்ஞானத்தில் ‘Universe’ என்ற ஒன்று சொல்கிறோம். எல்லாம் சேர்ந்து ஒன்றாயிருப்பது என்று அதற்குப் பொருள். Uni-verse என்றால் ஊன்றுதல் என்று அர்த்தம். எல்லாம் சேர்ந்து ஒன்றாயிருக்கும். என்ன எல்லாம்? நம்ப பஞ்சபூதம் தான். ஐந்து பூதமும் ஒருங்கிணைந்திருக்கும். அதை ‘Universe’ என்று சொல்கிறார்கள்.

அவர்கள் (விஞ்ஞான) பாஷையில் சொல்லும் பொழுது 92 Elements Integrate ஆகி ஒன்றாயிருந்தால் அதை ‘Universe’ என்பார்கள். அந்த விளக்கங்கள் நமது மகரிஷிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை எடுத்து அவருடைய தத்துவ விளக்கத்தில் அந்தக் காலத்தில் மகரிஷிகள் நன்றாகப் பேசுவார்கள்.

அந்த விஞ்ஞானத்தில் ‘Universe’ என்பது 2000 கோடி ஒளியாண்டு Diameter விட்டம் உள்ளது என்று அளந்து பார்த்துச் சொல்கிறார்கள். அதில் கொஞ்சம் கூடுதல், குறைவு இருந்தால் என்ன செய்வது? அதனால் அவர்கள் Safer Side-ல் இருந்து கொண்டு அது வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று சொன்னார்கள். அப்புறம் யாராவது அளந்து பார்த்து 4 KM அதிகமாக இருக்கிறது என்று சொன்னால் என்ன பண்ணுவது? நான்தான் முன்பே சொன்னேனே வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் சொல்லி விடுவார்கள்.

2000 கோடி ஒளியாண்டு diameter என்றால் என்ன தெரியுமா? ஒளியாண்டு என்றால் என்ன? என்று தெரியுமா. சரி, விஞ்ஞானம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி, அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்றால் ஒன்றுமில்லை என்கிறார்கள். விஞ்ஞானிகள் என்ன இருக்கிறது என்றால் ‘Positive’ ஆக பதில் சொல்ல தெரிந்தால் சொல்வது. அது என்ன? ஒன்றுமில்லை.

Keep reading

More from the archive

KG Sami

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

Granthaalayam

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

KG Sami

தவம் – 20

நமது பிரபஞ்சத்தை Universe ஆக எடுத்துக் கொண்டு, அது 2000 கோடி ஒளியாண்டு diameter இருக்கிறது என்று சொல்லி, எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது.…

KG Sami

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை…

Meena Kumaran

’வாழ்க வளமுடன்!’ என்று கூறுவது தவறா? இலக்கணம் என்ன சொல்கிறது?

நமது இயக்கத்தில் வாழ்க வளமுடன் என்கின்ற ஒரு தாரக மந்திரத்தை நமது அருள் தந்தை அவர்கள் உருவாக்கிச் சேர்த்திருக்கிறார். இது மனவளக்கலைஞர்களாகிய நம்மால்…

Granthaalayam

இன்சொல்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!உலக மக்கள் எல்லோரும் மன…