KG Sami1937 — 2006

தவம் – 18

Signed KG Sami

மேலே தூக்கி விட்ட உடனே ‘ஆக்கினைச் சக்கரத் தவம்’ வந்து விடும் யாருக்கும். அப்பவே தெரியும். தீட்சை எடுத்த அன்றே ‘ஆக்கினைச் சக்கரம்’ தெரியும். ஆனால் துரியாதீதம் அப்படி தெரியாது. அதனால் என்ன செய்வார்கள் நமது அன்பர்கள்.

’துரியாதீதம்’ தீட்சை வாங்கிவிட்டு வீட்டுக்குச் செல்வார்கள். செய்து பார்ப்பார்கள். வருமா? என்ன? அவ்வளவு சுலபமாக வராது. அங்கேயிருந்து நேரே மன்றத்துக்கு வந்து பொறுப்பசிரியரிடம் சென்று “எனக்கு துரியாதீத தவம் வரமாட்டேங்குது” என்று புகார் சொல்வார்கள். நீங்கள் என்ன சொல்லி அனுப்பினீர்கள். “உட்கார்ந்து தவம் செய்யுங்கள் வரும் என்று சொல்லி அனுப்பியிருப்பீர்கள்” “அங்கேயே துரியம் அழுத்தமா செய்தால் துரியாதீதம் வரும்” அப்படியெல்லாம் சொல்லி அனுப்புவீர்கள்.

மறுபடியும் கொஞ்ச நாட்கள் கழித்து வந்து நிற்பார். எனக்கு துரியாதீத தவம் வரவில்லை என்று சொல்வார். என்னப்பா நீ ஆறுமாதம் ஆகும். துரியாதீத தவம் எடுத்து இன்னும் வரவில்லை என்கிறாயே. நீ துரியாதீதம் செய்யும் போது உன்னுடைய அனுபவத்தைச் சொல்லு. என்னங்க “ஒண்ணுமே தெரிய மாட்டேங்குதா ஒண்ணுமே தெரியலையா? நிஜமா ஒண்ணுமே தெரியலையா? ஆமாங்க தெரியலை”

இருட்டா எதுவாவது தெரிஞ்சதா. ஆமாம் ஆரம்பத்தில் தெரிந்து கொண்டிருந்தது. இப்ப அதுவும் தெரியவில்லை. அது தான் துரியாதீதம் என்று சொல்லி அனுப்புவார்.

ஆகவே உணர்வற்ற ஒரு நிலை வந்தது என்றால் அது துரியாதீதம். நான் தவம் செய்து  கொண்டிருக்கிறேன். துரியாதீத தவம் ரொம்ப நல்லா தவம் வருகிறது என்ற நினைவு வரவில்லை என்றால் அது தான் துரியாதீதம்.

நான் தவம் செய்கிறேன். துரியாதீத தவம் செய்கிறேன். ஆஹா என்ன அருமையாக துரியாதீத தவம் வருகிறது. இன்றைக்குத் தான் மாட்டி இருக்கிறது. அது இல்லை.

எந்த விதமான சிந்தனையோ, உணர்வோ இல்லாமல் English –ல் Off என்ற ஒரு வார்த்தை இருக்கிறது பாருங்கள் நீங்கள் (Off) ஆகி விடுவீர்கள். இந்த மாதிரி சொன்ன உடன் மகரிஷிகளிடம் கேட்டேன். “அய்யய்யோ எனக்கு எழுந்தரிக்கவோ தோணாதே”. நான் தான் Off ஆகி விட்டேனே. அரை மணி நேரம் ஆகியிருக்குமோ உட்கார்ந்து. வேலை கிடைக்குமே. எழுந்தரிக்க வேண்டாமா. மனைவி மக்கள் எல்லாம் இருக்கிறார்களே. சம்பாதித்து போட வேண்டாமா. என்ன சாமி இப்படி சொல்லிட்டீங்களே நீங்க.

உடலில் இரத்த ஓட்டம் Slow down ஆகும். Slow down ஆகி evacuate ஆகிற நிலை வந்து விடாது. உடலில் ஒர் tension ஏற்படும். ஒரு விகிர்த்தனம் வரும். உடலில் ஆங்காங்கு வலிக்கும். அது உங்களை எழுப்பி விட்டு விடும். “ரொம்ப நேரமா துரியாதீத தவம் செய்கிறாய். நிலை மறந்த நிலை வந்து எழுந்திரிக்க மறந்து விடப் போகிறாய் எழுந்திரு, எழுந்திரு” என்று இயற்கை நம்மை எழுப்பி விடும்.

Keep reading

More from the archive

Arulnithi Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

KG Sami

தவம்-6

மேலேற்றப்பட்ட குண்டலினி சக்தி ஆக்கினையில் பல காலம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தால் மனக்கட்டுப்பாட்டை மீறி, உடலுக்கும், மனதுக்கும் பல தொந்தரவுகளை…

KG Sami

தவம் - 32 – ஏ

அதனால் தான் நமக்கு ஜீவ காந்தப் பெருக்கம் ஏற்படுகிறது. இது ஒரு தந்திரமான டெக்னிக். கண்ணாடிப் பயிற்சியில் அதிகமாக ஜீவகாந்தம் ‘மளமள’ வென ஏறுகிறது.…

KG Sami

தவம் – 43

ஒரு செயலைத் தெரிந்து செய்யும் போது ஒரு பலன் ஏற்படும். தெரியாமல் செய்யும் போது வேறு பலன் ஏற்படும். காரியம் ஒன்று தான். பென்சில் சீவுகிறோம் என்று…

KG Sami

தவம் – 24

அந்த அறியாமையை நிவேத்தனமாக கொடுத்து விடுகிறேன். எடுத்துக் கொள். வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. அவருக்கு கை இருக்கலாம். கால் இருக்கலாம். கையிலே…