KG Sami1937 — 2006

தவம் – 39

Signed KG Sami

ஆசிரியர் பயிற்சி மனவளக்கலையை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறு குனிய வேண்டும், எவ்வாறு தொட வேண்டும், எவ்வாறு தீட்சை கொடுக்க வேண்டும் என்பனவற்றையெல்லாம் கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் உணர்ந்து கொண்ட தத்துவத்தை இன்னொருவருக்கு உணர்த்துவது என்பது ஒரு சாமர்த்தியம். அது எல்லோருக்கும் வராது.

சாதாரணமாக நீங்கள் சினிமாவுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். Ticket கிடைக்கவில்லை என்று திரும்பி வந்து விட்டீர்கள். மறு நாள் ஆர்வத்தின் காரணமாக சினிமா பார்த்து விட்டு வந்து இரண்டு பேரிடம் கதை கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவரும் கதையைத் தெளிவாக சொல்வார்களா?

ஒரு சிலர் சீன் by சீன் அந்த tempo குலையாமல் கதை சொல்வார்கள். சிலபேர் முன்சீனை பின்னாகவும் பின்னாடி வரும் சீனை நடுவிலும் சொல்லிக் கதையைக் குழப்பி விடுவார்கள். நீங்கள் இந்தக் கதையே எனக்கு வேண்டாம்  என்று போய் விடுவீர்கள். தனக்குத் தெரிந்ததையே கூட மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது ஒரு சாமர்த்திம். தனக்கு நன்றாகத் தெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது ஒரு சாமர்த்தியம். தனக்கு அரைகுறையாகத் தெரிந்ததை, தனக்கு தெரியவே தெரியாததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்குத் தனித் திறமை வேண்டும்.

ஒரு அன்பர். ஒரு அருள்நிதி என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுது பேசினாலும், எங்கே பேசினாலும் ஒன்றேதான் பேசுவாராம். கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். ஒரு தடவை பேசியதைக் கேட்டீர்கள் என்றால் அவர் பிரமாதமாக பேசிவிட்டார் என்று தோன்றும். படபடவென்று அலங்காரமாக இருக்கும். பிரமாதமாக இருக்கும். சில சேதிகளும் இருக்கும்.

மறுநாள் பேசச் சொன்னாலும் அதே தான் பேசுவார். இன்னொரு நாள் பேசச் சொன்னாலும் அதையே தான் பேசுவார். வேறு என்ன தெரியும். நான் 7 செசன் (வகுப்பு) கேட்டு விட்டேன். 7 செசனிலும் ஒரே மாதிரி தான் பேசினார். தத்துவம் தெரிந்தவர் தான் என்றாலும் தனக்குத் தெரிந்த தத்துவத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. இன்னொரு செய்தி அவர் என்னிடம் தத்துவம் கற்றவர். என்னுடைய admirer என்னை முன் மாதிரியாக வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்று பிரியப்படுவர். என்னிடம் ஒப்புக் கொண்டு சொல்லி இருக்கிறார். உங்களால் தான் எனக்கு தத்துவம் தெரிந்தது. உங்களை மாதிரியே பேசவேண்டும் என்று எனக்கு ஆசை என்று சொன்னார். இப்படி ஒரு பெயரை எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

Keep reading

More from the archive

Kannimuthu

அவனிக்கோர்அறிவுக்கோவில்

1. தேனாறும்சோலைபலதோன்றும்குன்றம்.திரண்டெல்லாபுறங்களிலும்சூழ்ந்தஆறு. வானூறும்தண்ணமுதம்வாகாய்ப்பாயும்விதமாககீழ்மேலும்ஓடும்ஆறு.…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…

KG Sami

தவம்-4

நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக்…

KG Sami

தவம் - 32 – ஏ

அதனால் தான் நமக்கு ஜீவ காந்தப் பெருக்கம் ஏற்படுகிறது. இது ஒரு தந்திரமான டெக்னிக். கண்ணாடிப் பயிற்சியில் அதிகமாக ஜீவகாந்தம் ‘மளமள’ வென ஏறுகிறது.…

KG Sami

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…

Granthaalayam

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலையை புலன்களால் உணர்ந்து…